Thiruchchikkaaran's Blog

பிற மத தெய்வங்களை இகழ்வதில் மகிழ்ச்சி அடையும் போக்கை கை விடுங்கள்.

Posted on: August 30, 2011


//சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்கு உணர்த்தியாகவேண்டும்.//

மேலே காணப் படும் வசனமானது நமது தளத்துக்கு நன்கு அறிமுகமான சகோதரர் திரு. சில்சாம் அவருடைய தளத்தில் அவரே இட்ட ஒரு பின்னூட்டம்.

http://chillsam.activeboard.com/t43390588/topic-43390588/

http://chillsam.activeboard.com/t44684999/request-to-soulsolution/

சகோதரர் சில்சாமும், வேறு சில சகோதர சகோதரிகளும் பிற மதத்தவர்  வணக்கும் தெய்வங்களை இகழ்வதை நாம் நம் தளத்திலே கண்டிருக்கிறோம். இது இந்தியாவின் மத சகிப்புத் தன்மைக்கு, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது.

சகோதரர் திரு. சில்சாம் இந்த மத வெறிப் போக்கை கைவிட்டு நல்லிணக்க பாதைக்கு வர வேண்டும் என்று கோருகிறோம்.

முருகரை வழிபடுவரோ, கருமாரி அம்மனை, இராமரை, விநாயகரை… வழிபடுபவர்கள் பிற மத தெய்வங்களை இகழ்வது இல்லை, அப்படி இகழ வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதும் இல்லை. சகோ. சில்சாம் இதை எல்லாம் எண்ணி சமரச பாதைக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்!

Advertisements

58 Responses to "பிற மத தெய்வங்களை இகழ்வதில் மகிழ்ச்சி அடையும் போக்கை கை விடுங்கள்."

முருகரை வழிபடுவரோ, கருமாரி அம்மனை, இராமரை, விநாயகரை… வழிபடுபவர்கள் பிற மத தெய்வங்களை இகழ்வது இல்லை, அப்படி இகழ வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதும் இல்லை.//

அண்டப்புழுகு.

தமிழ் இந்து . காம் படியுங்கள். அவர்கள் எப்படி இயேசு, அல்லா, நபிகள் எல்லாரையும் இகழ்கிறார்கள் என்று தெரியும்.

அன்புக்குரிய நண்பர் uraikal ,

பிற மதத்தினரின் கடவுள்களை இகழ்வது அநாகரீகமான து, சமூக இணக்கத்துக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு இருக்கிறீர்களா இல்லையா என்பதை தயவு செய்து அறியத் தாருங்கள். ஏனெனில் உங்களின் முனைப்பு அவங்க திட்டுறாங்க என்று சுட்டிக் காட்டுவதிலே இருக்கிறது. இவங்களும் திட்டுறாங்க, அவங்களும் திட்டுறாங்க, நல்லாத் திட்டிக்கட்டும் என்று வேடிக்கை பார்ப்பதில் பலன இல்லை.

நீங்கள் உண்மை அறியாமல் பேசுகிறீர்கள்.

பெரும்பாலான மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். வேளாங்கண்ணி மாதக் கோவில் தலைமை பாதிரியார் பல மதத்தை சேர்ந்தவர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்கிறார். பல மதத்தை சேர்ந்தவர்கள் என்றால் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்கள் அல்லாது வேறு மதத்தை சேர்ந்தவர்கள் யாராவது கலந்து கொள்கிறார்களா என்றால் அதி இந்து மதத்தை செர்ந்தவர்கள தானே. புராடச்டண்டு பிரிவினர் கூட போவதில்லை.

இந்தியாவில் எந்த ஒரு இந்து மதத்தை சேர்ந்த தாயோ தகப்பனோ, தன்னுடைய பிள்ளைக்கு இதுதான் முருகர், நம்ப கடவுள் கும்பிட்டுக்கப்பா… என்று சொல்வார்களே அன்றி, வேறு தெய்வத்தை மரியாதை செய்யக் கூடாது ன்று சொல்லவதில்லை. இயேசு யாரும்மா என்று பையன் கேட்டால் அவர் கிரிஸ்துவங்களுக்கு சாமிப்பா எ ன்று தான் சொல்லித் தருவார்கள்.

வண்க்கம் சகோ
/இயேசு யாரும்மா என்று பையன் கேட்டால் அவர் கிரிஸ்துவங்களுக்கு சாமிப்பா எ ன்று தான் சொல்லித் தருவார்கள்./
நாம் கூட இவர் பற்றி எதுவும் சொலவது இல்லையே.
அருமை
நன்றி

வண்க்கம் சகோ சார்வாகன்.

இந்து மதத்தை சேர்ந்த பெரும்பாலான (மத நம்பிக்கையுள்ள )நண்பர்களும் சரி, வெறுப்புணர்ச்சி இல்லாத பகுத்தறிவாளர்களும் சரி- பிற மத தெய்வங்களை யோ, எந்த ஒரு தெய்வத்தையோ குறிப்பிட்டு இகழ்வதில் மகிழ்ச்சி அடைவதில்லை. ஆனால் இஸ்ரேலிலும் பிற மத்தியக் கிழக்கு பகுதிகளிலும் உருவாக்கப் பட்ட பிற மத சகிப்புத் தன்மை மறுப்பு, பிற மத தெய்வங்களை இகழ்ந்து கண்டிக்கும் , அவர்களுடைய வழிபாட்டு தளங்களை உடைக்கும் கோட்பாடுகளை கைக் கொண்டவர்கள் இன்று இந்தியாவில் அதை வெளிப்படுத்துகின்றனர்.
நன்றி

வணக்கம் சகோ,
இந்துமத தெய்வங்கள் எல்லாம் நம்து முன்னோர்கள்(அரசன்&தலைவன்) அவர்களை மேன்மைப் படுத்தும் வ‌ண்னமே வணங்கி இருக்க வேண்டும்.முற்கால்த்தில் தாய் வழி சமூகம் இருந்த போது தாய் வேட்டைக்கு தலைமை தாங்கி ஆய்தம் ஏந்தி வழி நட்த்தினால்.இதக் குறிக்கவே காளி போன்ற‌ பெண் தெய்வங்களின் கையில் ஆயுதம் வந்திருக்க வேண்டும்.
இந்து மதம் என்பது வாழ்வியல் நெறி என்பதை வெகு காலம் கடந்தே நான் புரிந்து கொண்டேன்.கால கணிக்கீட்டில் நமது பிரபஞ்சம் மிக பழமையானது என்று இந்து புராணங்கள் மட்டுமே கூறுகின்றன.இது ஒரு வியப்பான் செய்தி!. நம்பிக்கையில் உயர்வு தாழ்வு இல்லை.இம்மாதிரி விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது சிறப்பு
நன்றி

தொடருங்கள் சகோ

அன்புக்குரிய சகோதரர் சார்வாகன்,

வணக்கம்

காளி என்பவர் வேட்டைக்குத் தலைமை தாங்கிய தாக கருதுவதை விட காளி என்பவர் காமக் கொடூர எதேச்சதிகார அடக்குமுறை காரனுக்கு எதிராக சீறிக் கிளம்பிய பெண்ணியத்தின் ஆற்றல் என்று கருதுவதே மிகப் பொருத்தமானது. காளி ஒரு ஒரு முரட்டு மனிதனை தன காலில் மிதித்திக் கொண்டோ, அல்லது அவன் தலையைக் கொய்த நிலையிலே உள்ள படங்களைக் காணலாம்.

குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு கண்ணன், மருதத்துக்கு இந்திரன் , நெய்தலுக்கு வருணன், பாலைக்கு காலை -இவையே பண்டைய தமிழ் சமுதாய மக்கள் வலை பட்ட தெய்வங்கள். இவற்றை அரசனும் / தலைவனும் சேர்ந்து வழிபட்டு இருக்கலாம். இலக்கணம் என்பது மக்கள் சமூகத்திபின்பற்றிய பழக்கங்களைக் குறிப்பதாக வே கருதலாம்.

நண்பர் சாவர்கன்,

இந்து மதம் என்பதே ஏமாற்று வேலை.

பார்ப்பர்களை தான் இந்துக்கள் என்று சொல்ல வேண்டும்.

அப்படி பார்த்தால் ஒரே ஒரு பார்பான் கூட வேளாங்கண்ணி போயிருக்க மாட்டான்.மற்ற மதங்களை வெறுப்பவன் தான் அவன்.

அதனால் தான் மற்ற மக்கள் இந்துக்கள் என்று அழைக்கபட்டாலும் அவர்கள் பார்பனர்களை போல் தீவிரமாக இல்லை.

கிருத்துவ – இஸ்லாம் மக்கள் சிலரை தவிர மற்றவர்கள் தீவிரம் இல்லாதவர்களே. ராமகோபாலன் அன் கோ தான் எப்போதும் பொய் பிரச்சாரம் செய்யும் – இந்துக்களிடம் ஒத்துமை இல்லை என்று. ஆனா இட ஒதிக்கீடு என்று வந்து விட்டால் எதிர்பார்கள் (இட ஒதிக்கீடு இந்துவுக்கு தான போகுது.,அப்புறம் ஏன் எதிர்கிறார்கள் ?)

உங்கள் கட்டுரைகளை படித்து வியந்துள்ளேன்.

நீங்கள் பார்பன மாயையில் விழுந்து விடாதீர்கள் நண்பரே.

சகோதரர் பிரதீப்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இந்தியாவில் எந்த ஒரு இந்து மதத்தை சேர்ந்த தாயோ தகப்பனோ, தன்னுடைய பிள்ளைக்கு இதுதான் முருகர், நம்ப கடவுள் கும்பிட்டுக்கப்பா… என்று சொல்வார்களே அன்றி, வேறு தெய்வத்தை மரியாதை செய்யக் கூடாது ன்று சொல்லவதில்லை. இயேசு யாரும்மா என்று பையன் கேட்டால் அவர் கிரிஸ்துவங்களுக்கு சாமிப்பா எ ன்று தான் சொல்லித் தருவார்கள், பிற மதத்தினர் வழிபாடும் தெய்வங்கள் பொய்த் தெய்வங்கள், ஜீவனில்லாதவை என்று சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. .- இது எல்லா இந்துக் குடும்பங்களிலும் (அதாவது பார்ப்பனர் என சொல்லப் படுவோரின் குடும்பங்களிலு) நடைமுறை பழக்கமாக உள்ளது என்பதை தெளிவாகவும் மீண்டும் ஒரு முறை அறிவித்துக் கொள்கிறேன்.

//அப்படி பார்த்தால் ஒரே ஒரு பார்பான் கூட வேளாங்கண்ணி போயிருக்க மாட்டான்.மற்ற மதங்களை வெறுப்பவன் தான் அவன்.//

மேரி மாத முன்பு மண்டி இட்டு வழிபடத் தயங்காத (பார்ப்பனர் என அழைக்கப் படுவோர் பலரை எனக்குத் தெரியும்). ஒரு பேராசிரியை தன்னுடைய குடும்பத்தையே வேளாங்கண்ணிக்கும் , நாகூருக்கும் அழைத்து சென்று இருக்கிறார். இதற்க்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

நான் பள்ளியில் படித்தத் போது, அய்யங்கார் பிரிவை சேர்ந்த பள்ளித் தோழர்கள் , தோழிகள் பலர் பிரேயரில் தவறாமல் கலந்து கொள்வதோடு, முக்கியமான பரீட்சைகள் எழுத செல்லுமுன் மதரிடம் சொல்லி விட்டு செல்வர்கள், அவர் முன்னால் மண்டியிட்டு பிலசிங் வாங்கி செல்வார்கள். மாதர் அவர்களின் நெத்தியிலே அணிந்திருக்கும் குங்கும/ சாந்து பொட்டிலே சிலுவை போட்டு விடுவார்.

நீங்கள் பார்ப்பனர் என சொல்லப் படுவோருக்கு எதிராக சாதீய வெறுப்புணர்ச்சியை, கசப்புணர்ச்சியை தொடர்ந்து காட்டி வருவது நம் தல வாசகர்கள் அறிந்ததே.

நீங்கள் இந்து மதத்தின் மீதான சகிப்புத் தன்மையில்லாத அடாவடி மத வெறியை வெளிப்படுத்தி உள்ளதோடு , அதை மறக்க சாதி காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்த முயற்சிப்பதும் நன்கு தெரிகிறது.

பலரும் “பார்ப்பாங்க கெட்டவங்க என்று பார்ப்பனர்களை திட்டுகிற சாக்கில் இந்து மதத்தை மனம் போனபடி திட்டி, கடைசியில் என் மார்க்கத்துக்க வாங்க அண்ணே என்று” நூல் விடுவதையும் மக்கள் அறிந்தே உள்ளனர்,

//கிருத்துவ – இஸ்லாம் மக்கள் சிலரை தவிர மற்றவர்கள் தீவிரம் இல்லாதவர்களே.//

ஆனால் சில பல மத வெறிப் பிரச்சாரகர்கள் எல்லோரையும் சகிப்புத் தன்மையற்ற பாதைக்கு இழுக்கும் வகையில் செயல படுவதியே சுட்டிக் காட்டுகிறோம், அவர்களுக்கு அச்சாரமாக பிற மதக் கடவுள்கள் பொய்யானவை , அவைகள் ஜீவன் இல்லாதவை என்பது போன்ற கருத்துக்கள் அவர்களின் மத நூல்களில் உள்ளன என்பதையும் சொல்லுகிறோம்.

மற்றபடி சகோ. சார்வாகனின் இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களையும் நன்கு அறிந்தவர், எனவே அவர் சார்பாக நான பதில் அளிக்க தேவை இல்லை, விரும்பினால் அவரே பதில் அளிப்பார்.

ஆனால் சகோதரர் சார்வாகனுக்கு அடவைஸ் செய்வதாக சொல்லிக் கொண்டு சாதீய வெறுப்புணர்ச்சியை, மத வெறியை கக்கி யுள்ளதை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்கள் பின்னூட்டத்தை தடிப்பு எழுத்துக்களில் போட்டு இருக்கிறோம்!

நண்பர் பிரதீப்.வண்க்கம் சகோ
நாம் யார் மீதும்,எந்த கொள்கையின் மீதும் வெறுப்பு கிடையாது.அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளவே ஆவல்.கற்றுக் கொள்கிறோம்.இது நம் தேடல்.இந்தியாவில் போல் உலகெங்கும் பல‌ இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்தை ஒடுக்குவது வரலாறின் எல்லா பக்கங்களிலும் காண்லாம்.இதன் காரணம் பொருளாதாரம்,அதிகாரம் பெறுவது மட்டுமே.எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தை விட உயர்வாக் கருதும் எந்த கொள்கையுமே தூக்கி எறியப் படவேண்டியதே!!!!!.

நம் நாட்டில் இதன் பெயர் சாதி.இதன் உருவாக்கம் பற்றியும் ஒரு எந்த சார்ப்பற்ற ஒரு தொடர் எழுத வேண்டும் என்பது ஆசை.ஆனால் ஆதாரபூர்வமான விஷய்ம் கிடைப்பது இல்லை.சகோ ஜோதிஜி அடிமைகள் வரலாறு பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்.அதனை படிக்கும் போது நம் சாதிமுறைக்கும் அதற்கான் ஒப்பீடு பார்க்கும் போது இன ரீதியான‌ அடக்குமுறை உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்துள்ளது தெரியும்.
அவ்சியம் அந்த தொடர் படியுங்கள்.

இதற்கு பரிகாரமாக் பல பெரியவர்கள் முயற்சிகளை மேற்கொண்டதால் ஒருவர் முன்னேற சாதி மட்டும் தடையாக் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தாலும்,இன்னும் பல படிகள் கடக்க வேன்டியது உள்ளது.நாட்டின் வளங்கள்,வேலை வாய்ப்புகள் ப்யன் படுத்துவதில் போட்டிகள் இருப்பது இயல்பே.இன முரண்களை காட்டி அரசியல் இலாபம் தேடுவது முரண்களை வளர்க்கிறது.இதுவே உலக் முழுதும் உள்ள இன சிக்கல்களுக்கு காரணம்.

ஆக்க பூர்வமாக் அனைவருக்கும் வாழ்வாதாரம் கல்வி,சுகாதாரம் குறித்த‌
விழிப்புணர்வு வந்தால் அனைவருமே நல்மாக் இருக்கலாம்.இது முடியும். நான் உன்னைவிட பிறப்பாலோ,கொள்கையாலோஉயர்ந்தவன் என்ற பெருமிதம் யார் கொண்டாலும் தவறு.
நன்றி

நண்பர் சாவர்கன்,

இன முரண்கள் எல்லா நாட்டிலும் இருப்பது இயல்பு என்பதற்காக நாம் இங்கிருக்கும் பார்பனிய ஆதிக்கத்தை நியாயபடுத்த முடியாது.

இஸ்லாமிய -கிருத்துவ மதவாதிகள் அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் தூண்டி வெறுப்பு கருத்துக்களை பரப்புவது வெளிப்படையானது. அதே போன்றது தான் (எல்லா இஸ்லாமிய -கிருத்துவ மக்களை விரோதிகளாக சித்தரிப்பது) இந்துத்துவ கும்பல் செய்வதும். இந்த இந்துத்துவ கும்பலே பார்பனமயமானது என்பது அனைவரும் அறிந்ததே.

இஸ்லாம் -கிருத்துவ மத வெறியர்கள் எவ்வாறோ அதே போன்றோர் தான் இந்து மதத்தில் பார்பனர்கள். வந்தே மாதரம் பாட சொல்லுவது ,பாரத் மாதாவை வழிபட சொல்வது என்று இந்த கும்பலின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. மறுத்தால் தேச துரோகிகள். இவர்களது மத சகிப்புணர்வு எப்படிபட்டது என்பது தமிழ் நாட்டிற்கே தெரியும்.ஆயிரகணக்கான இனபடுகொலை செய்த மோடி, ராஜபக்சே, ரத யாத்திரை என்கிற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய அத்வானி இவர்களை ஆதரிப்பவர்கள் தான் நியாயம் பேசுகின்றனர்.

மற்றபடி நண்பர் திருசிகாரனின் கோபம் ஏன் கொப்பளிகிறது என்று அவரது கருத்துக்களை திரிபை சற்று உற்று நோக்கினால் வெளிப்படும்.

நன்றி.

தொடர்ந்து விவாதிப்பதற்கு நன்றி சகோ.பிரதீப்!

இந்துக்களின் தெய்வமாக வழிபாடும் முருகப் பெருமானை மிருகப் பெருமான் என்று இகழ்ந்தும், இன்னும் பல இகழ்ச்சிகளைக் கொட்டியும் எழுதியுள்ளதை பற்றி இது வரையில் நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை என்பதை வாசகர்கள் அனைவரும் அறிவர். மாறாக இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று எழுதி உங்களின் எண்ணப் போக்கை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்கள். எனவே உங்களின் மத சகிப்புத் தன்மை இன்மை, இந்து மதத்துக்கு எதிரான மத வெறி, சாதீய வெறுப்புணர்ச்சி ஆகியவை நன்றாகவே புலப்படுகின்றன. வந்தே மாதரம் பாட வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் சங்க பரிவார இயக்கங்கள் தான், நீங்கள் சங்க பரிவார இயக்கங்களின் கோட்பாடுகள், செயல் பாடுகளை எல்லாம் அப்படியே பார்ப்பனர் எனப் படுவோரின் மேல் சுமத்தி உங்களின் சாதீய வெறுப்புணர்ச்சியை நியாயப் படுத்தி, குறிப்பிட்ட சாதியினரை கருவறுக்க துடிக்கிறீர்கள்.

யார் வேண்டுமானாலும் என்னுடைய எழுத்துக்களை உன்னிப்பாக படித்துப் பார்க்கலாம். நம்முடைய தளம் பகுத்தறிவு, சமத்துவ சமூகம், நாகரீக சமுதாயம், மத சகிப்புத் தன்மை , மத நல்லிணக்கம்..போன்ற கோட்பாடுகளை உறுதியாக பின்பற்றி நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

மேலும் பார்ப்பனர் என அழைக்கப் படும் சமுதாயத்தினரோ, வேறு யாரோ… யாரையுமே கட்டம் கட்டி கருவறுக்க முயல்வது மனிதத்துவம் அற்ற செயல் . இன்றைக்கு பார்ப்பனர் என்று அழைக்கப் படும் சமுதாயத்தை சேர்ந்த பலர் சாதி உணர்வற்று உள்ளனர். இன்னும் சிலர் திருந்தாமல் இருக்கலாம். திருந்த வேண்டியதை எடுத்து சொல்லலாம். ஆனால் எந்த ஒருவரையும் இனத்தின் பெயரால், சாதியின் பெயரால் , மொழியின் பெயரால்… வெறுத்து கட்டம் கட்டி கருவறுக்க முயற்சி செய்வது அபாயகரமான அநீதியே. இதை நமது தளம் ஆதரிக்க வேண்டியதில்லை.

நான் முன்பே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல நீங்கள் மனிதர்களை சாதியின் அடிப்படையில் கட்டம் கட்ட முயற்சி செய்து அந்தக் கோட்பாட்டிற்கு ஆதரவு தேட முயற்சி செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. நீங்கள் ஒருவரிடம் சென்று … நாம எல்லாம் சேர்ந்து பார்ப்பார சாதியினரைக் கட்டம் கட்டி கருவறுப்போம் என்று சொல்லிப் பாருங்கள். அவர் முதலில் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார். இன்னைக்கு பார்ப்பானைக் கட்டம் கட்ட முயலுபவர் நாளைக்கு நம்மையும் கட்டம் கட்ட முயல மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்று அவர் மனதில் தோன்றும். சாதீய வெறுப்புணர்ச்சி செலுத்தி பிறரை கட்டம் கட்ட நினைப்பவரே தனிமைப் பட்டுப் போகும் நிலை உருவாகும்.

பார்ப்பனர் என்று அழைக்கப் படுவோரை மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு சமூகத்தினரை யாரும் கட்ட கட்ட முயன்றாலும் அதை நமது தளம் ஆதரிக்காது. அது நாகரீகமல்ல , அது தவறு, அபாயமாது என்பதை நாம் வலியுறுத்துவோம்!

மற்றபடி நம்முடைய தளமும் சரி, நம்முடைய தளத்தின் பெரும்பாலான வாசகர்களும் சரி, சங்க பரிவார இயக்கங்களின் கோட்பாடுகளை ஆதரிப்பவர்கள் அல்ல என்பது நம்முடைய தளத்தின் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

////இந்து மதம் என்பதே ஏமாற்று வேலை./////

பின்னர் எந்த மதம் ஏமாற்று இல்லாத வேலை? எந்த இயக்கம் ஏமாற்றாத இயக்கம். சகோ இங்கு ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேறு அள்ளி வீசுவது மட்டும் உண்மை நாத்திகம் இல்லை,(biased atheists ) எந்த இயக்கமும் யோக்கியமாக இல்லை என்பதே உண்மை!

இந்து மதத்தில் உள்ள ஏமாற்று காரர்களை காரி துப்ப எந்த இந்துவும் தயங்குவது இல்லை சகோ திருச்சி இதில் முதலிடம் வகிப்பவர்.ஆனால் தவறு செய்யும் எந்த ஒரு நாத்திகனை ஆவது அல்லது பிற மத மனிதர்களையாவது நடு நிலையுடன் சாடும் பிற நாத்திகர்கள் உண்டா? சகோ சார்வாகனை போன்றோரை (real atheist ) தவிர குறிப்பாக நீங்கள் என்றாவது செய்ததுண்டா? அவர்கள் இங்குள்ள நல்ல விசயங்களை பாராட்டவும் தயங்குவது இல்லை. சுருக்கமாக சொன்னால் யதன் மீதும் உண்மை நாத்திகனுக்கு விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. நடு நிலையில் அதன் நன்மை தீமைகளை நேரடியாக ஆராய்கிறார். நல்லதை ஏற்று பாராட்டுகிறார் கெட்டதை எதிர்த்து சாடுகிறார்!

சகோ சார்வாகன் ஒரு உண்மை நாத்திகர் நீங்கள் அவருக்கு மனதில் விஷ விதை விதைக்க முற்படாதீர்கள்

/////பார்ப்பர்களை தான் இந்துக்கள் என்று சொல்ல வேண்டும்.////////

பார்ப்பனர்கள் தான் இந்துக்கள் என்ற தங்கள் கருத்தை ஏற்கமுடியாது சகோ பிரதீப் அவர்களே.

பார்பனர் அல்லாத எங்களை போன்றோரும் இந்துக்களே. நீங்கள் சொல்லு இக்கருத்தை யாரும் தமிழகத்தில் ஏன் இந்தியாவில் ஏன் உலகில் யாவருமே ஏற்கமாட்டார்கள், சான்று இன்று பார்ப்பனர் அல்லாத எல்லோருமே பார்ப்பனரின் தலையீடு இன்றி வீடுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றனர், அடுத்து வரும் பல பண்டிகைகளும் வீடுதோறும் (பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதவர்) கொண்டாட படும்.

நான் பார்ப்பனர் அல்ல ஆனால் என்னை இந்து இல்லை என்று யாரும் சொல்லமுடியாது இந்திய அரசாங்கமும் சொல்லாது. எனக்கு சான்றிதழ் கூட இந்து என்று அரசிடம் இருந்து பெறமுடியும்.

////அதனால் தான் மற்ற மக்கள் இந்துக்கள் என்று அழைக்கபட்டாலும் அவர்கள் பார்பனர்களை போல் தீவிரமாக இல்லை////.

இங்கே அடிசிருக்கிங்க பாருங்க அந்தர் பல்டி. அழைக்கபட்டால் மட்டும் அல்ல அழைக்க படாவிட்டாலும் நாங்களும் இந்துக்களே,

////கிருத்துவ – இஸ்லாம் மக்கள் சிலரை தவிர மற்றவர்கள் தீவிரம் இல்லாதவர்களே.////

சுத்த பொய் சிலரை தவிர மற்றவர்கள் தீவிரம் மிக்கவர்கள் என்பதே சரி .

இந்துக்களையும் இந்துக்களின் வழிபாட்டையும் ஏளனம் செய்யும் இஸ்லாமிய கிறித்தவர்கள் ஏராளம் உண்டு, ஆனால் இஸ்லாமிய கிறித்தவ வழிபாட்டை கிண்டலடிக்கும் ஒரு இந்துவை உங்களால் காட்ட முடியாது.

நேற்று இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை நடத்திய மைதானத்தில் குளிர்பானம் மற்றும் உணவு பண்டங்கள் கொடுத்து ஒரு இந்து குடும்பத்தினர் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர் சமய நல்லிணக்கத்தை காட்டினார்கள்,தொலைக்காட்சி செய்தியில் நேற்று நீங்கள் கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மத தீவிரவாதம் எங்கு உள்ளது என்று உலகுக்கே தெரியும் அதனை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகின் கடைசி மனிதன் என் மதமாக மாறும் வரை எனக்கு புனித போர் கடமையாக்க பட்டுள்ளது என்று எந்த இந்துக்களும் சொல்வதில் அவர்களின் வேதமும் அப்படி சொல்வது இல்லை.
அதிகம். ஜைனுல் ஆபிதீனின் காணொளி பாருங்கள் அவர் என்னமாய் கோவை குண்டு வெடிப்பை நியாயபடுத்தி இருக்கிறார் என்று தெரியும்.

/////ராமகோபாலன் அன் கோ தான் எப்போதும் பொய் பிரச்சாரம் செய்யும் – இந்துக்களிடம் ஒத்துமை இல்லை என்று////
அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்து சமூகத்தினரிடம் ஒற்றுமை பேருக்கு கூட கிடையாது. இங்கு ராமகோபாலனை சப்போர்ட் செய்யவில்லை நான். ஒற்றுமையாய் இருப்பது தவறல்ல. மத வெறி பிடித்து இருப்பதுதான் தவறானது.
சகோ நீங்கள் ஒரு இரண்டு ஆண்டுகள் சவுதி க்வைத் சென்று வாழ்ந்து பாருங்கள் மத வெறி பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வு என்ன என்பது நேரடியாக உணர்வீர்கள்.

///நண்பர் பிரதீப்.வண்க்கம் சகோ
நாம் யார் மீதும்,எந்த கொள்கையின் மீதும் வெறுப்பு கிடையாது.அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளவே ஆவல்.கற்றுக் கொள்கிறோம்.இது நம் தேடல்.இந்தியாவில் போல் உலகெங்கும் பல‌ இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்தை ஒடுக்குவது வரலாறின் எல்லா பக்கங்களிலும் காண்லாம்.இதன் காரணம் பொருளாதாரம்,அதிகாரம் பெறுவது மட்டுமே.எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தை விட உயர்வாக் கருதும் எந்த கொள்கையுமே தூக்கி எறியப் படவேண்டியதே!!!!!./////

இதன் பெயர் தான் உண்மை நாத்திகம்.உண்மையான சமத்துவ சிந்தனை தெரிந்து கொள்ளுங்கள்
பாலையும் நீரையும் சேர்த்து வைத்தாலும் பிரித்து பாலை மட்டும் பருகும் பாலுன் குருகு தெரியுமா?

நண்பர் சிவனடியான்,
ஆபிரஹாமிய மதங்களை அவைகளின் வேதங்களின் வழியாகவே தோலுரித்ததால் அவர் எழுத்து இனிக்கிறது ,அதுவே அவர் பார்பனிய இந்து மதத்தையும் சேர்த்து எழுதி இருந்தால் இந்து மத விரோதி- தேச துரோகி ஆகியிருப்பார். உங்க நியாயம் தெரியாதா.???

நான் எழுதியதற்கு வலு சேர்த்த உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

சகோ. பிரதீப்,

எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாகஅணுகுகிறோம். எல்லா மதங்களில் உள்ள சிறந்த கோட்பாடுகளைப் பாராட்டி முன்னிலைப் படுத்த நாம் தயங்குவதில்லை. அவற்றில் உள்ள சிறந்த கோட்பாடுகள், செயல் பாடுகள் பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். அந்த மார்க்கத்து சகோதரர்களும் அவற்றைப் பார்ட்டி உள்ளனர். அதே நேரம் எந்த மதத்தின் பேராலும், பிற மதங்களுக்கெதிரான சகிப்புத் தன்மையற்ற கருத்துக்களோ, பிற மதத்தவரை தாக்க சொல்லும் கருத்துக்களோ, இன அழிப்புக் கருத்தோ பிரச்சாரம் செய்யப் படும் போது.. அவற்றை பாராட்ட இயலாது. அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டி அக்கருத்துக்களை விட்டு விடுங்கள் என்று கோருவது நமது கடமையாகிறது.

இந்தப் பணியிலே பலர் என்னை இவர் இந்து மதத்தை விட்டுப் போவதே நல்லது என்றும், இவர் உண்மையியே இந்துவா …சந்தேகமாக இருக்கிறது கிறிஸ்தவர் என்றும்… கிரிப்டோ கிறிஸ்தவர் என்றும் …இன்னும் பலவாறாகசொல்லியும், நாம் நம்முடைய கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்- அது உலக மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதால்!

ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்கும் போர்கருவிகள் கொடுக்கும் அரசில் அங்கம் வகிக்கும் உங்கள் திராவிட இயக்கத்தை கட்டி காப்பாற்றுகிறேன் என்று சொல்லிகொள்ளும் பெரியவர் தன் எம்பிக்களை வாபஸ் பெற்றுவிடுவேன் இலங்கை போருக்கு உதவி செய்ய கூடாது என்று நிர்பந்தித்து பார்த்திருக்கலாமே, குடும்ப உறுப்பினருக்கு பதவி பெற கொடுத்த பிரசரை தமிழ் மக்களை காப்பாற்ற கொடுக்க வேண்டியது தானே இதனை ஏன் மானமிகு வீரமணியார் கூட அந்த தானையிடம் கேட்கவில்லை.இலங்கை மக்கள் சாவு இங்கு அரசியல் வாதிகளுக்கு பிழைப்பு யாருக்கும் உண்மை அக்கறை இல்லை அதை கொண்டு அரசியல் செய்த யாரும் அதனை உண்மையாய் தடுக்க முயற்சிக்கவில்லை. அதனை தடுக்க வேண்டும் என்று உண்மையில் துடித்த பலரும் சரியாக அதனை முன்னெடுக்கும் நிலையில் இல்லை.ஆனால் பாவம் இறந்தவர்கள் கதி? இப்போது ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க போராட்டம் நடத்தி என்ன உபயோகம் தங்களுக்கு விளம்பரம் தேடும் செயலாக தான் தெரிகிறது. அன்று தெருவில் இறங்கி போராடி தமிழக அரசை நிர்பந்தித்து மத்திய அரசுடன் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்க செய்து காப்பாற்றி இருக்கலாம் எவ்வளவோ வழிகள் இருந்தும் வெறுமனே இருந்து விட்டு இப்போது என்ன குரல்?
இலங்கை தமிழர்களிடம் நேரடியாக பழகியவன் நான் அவர்கள் மிகவும் நம்பி இருந்தது தானை தலைவரை தான் ஆனால் கைவிடப்பட்டோம் என்று வருந்தியதுண்டு.
இலங்கையில் உள்ள சிங்களர்கள் எங்கள் எதிரிகள் என்றால் இலங்கையில் உள்ள இன்னொரு பிரிவினர் எங்கள் துரோகிகள் என்று கூறுவார் இலங்கை தமிழர்.
இதில் இன்னொரு குறிப்பிட வேண்டிய விசயம், இஸ்லாமிய இலங்கை தமிழ் நண்பர்கள் சிங்கள அரசின் பக்கமே நியாயம் இருப்பதாக கூறுவார்கள்

.////பார்பனிய இந்து மதத்தையும் சேர்த்து எழுதி இருந்தால் இந்து மத விரோதி- தேச துரோகி ஆகியிருப்பார். உங்க நியாயம் தெரியாதா.???/////

இல்லை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் பார்ப்பனிய இந்து மதம் என்ற ஒன்று எமக்கு ஏற்பில்லை.

இந்துமதத்தான் என்று சொல்லி கொண்டு அக்கிரமம் செய்து திரியும் நித்தி, போன்ற கயவர்களை எதிர்த்து எழுதிய கட்டுரைகளையும், குரு பக்தி என்ற பெயரில் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் சாமியாரை குளிப்பட்டுபவரை எதிர்த்தும் எழுதிய கட்டுரைகளை இங்கு சகோ திருச்சி வெளியிட்டிருக்கிறார்.

மூட நம்பிக்கையுள்ள ஆத்திகர்களை இருப்பதை விட நாத்திகர்களாக இருப்பதே மேல் என்ற கட்டுரை வந்தது தெரியுமா உங்களுக்கு?

என் நியாயம் எப்படிபட்டது என்று இத்தளத்தில் எழுதும் பிற மத நண்பர்களுக்கு கூட தெரியும்.. கார்பரேட் சாமிகளை இங்கே எதிர்க்கபடுகிறது, ராகு கேது சந்திர சூரியனை விழுங்குவதும் எதிர்க்க படுகிறது.

///நான் எழுதியதற்கு வலு சேர்த்த உங்கள் கருத்துக்களுக்கு நன்றி./////

நேரிடையாக பதில் கூறுங்கள்

அவர் இந்து மதத்தில் தவறுகள் வேதத்தில் இருப்பின் சுட்டி காட்டி எழுதட்டும், வரவேற்கிறோம் எனக்கு எம் வேதங்கள் பற்றி அறிவில்லை. ஆனால் அவர் நியாயமாக வேதத்தில் அப்படி உண்மையில் குறை இருப்பின் எழுதட்டும் அதனை தக்க தரவுகளுடன் கொடுக்கட்டும் அப்புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றிய விவரங்களுடன் கொடுக்கட்டும் தவறு இந்து மத வேதத்தில் இருப்பினும் அதனை நடு நிலையோடு ஆமோதிக்க தயார்.

இதே போல ஒரு பிற மதத்தார் ஏற்பாரா? ஏன் முதலில் நீங்கள் உங்கள் தலைவர்களின் மீதான உண்மை குற்றங்களை ஆமோதிப்பீர்களா?

எனக்கு மனிதத்தை விட மதம் ஒரு பெரிய விசயமல்ல. எங்கு இருப்பினும் நல்ல விசயங்களை யாம் ஏற்க மறுப்பதில்லை. தவறு எங்கு இருப்பினும் அவற்றை சாட நாம் தயங்குவதில்லை.

சகோ பிரதீப் அவர்களே,

பிஜெப்பிக்கும், இந்து முன்னணிக்கும் ராமகோபாலனுக்கும் ஆதரவு பெருகுவது உங்களை போல எழுதுபவர்களால்தான் ( இந்துமதம் என்பதே ஏமாற்று வேலை)!

யாரும் இங்கு அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கிடையாது நீங்களே அவர்களை வளர்த்து விடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

பிஜேபி வென்றது கோவையில் குண்டு வெடிப்பின் போது மட்டுமே அதற்கு முன்னோ பின்னோ அவர்கள் அங்கு வென்றதில்லை.
சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்காதீர்கள்.

தன் வேலையுண்டு தன் வழிபாடு உண்டு பிறரை வம்பிழுக்காமல் தன் வழியில் சென்று கொண்டிருக்கும் இந்துக்களே இந்நாட்டில் உள்ளனர் அவ்வாறு இன்றி மாறுபட்டிருப்போர் அரசியல் லாபம் தேடும் நபர்கள் அவர்களை பற்றி குறிப்பிட்டு திட்டி கொள்ளுங்கள் அவர்களின் அராஜகத்தை எழுதுங்கள். பொத்தாம் பொதுவாக இந்துக்கள் தவறானவர்கள் ஏமாற்று வேலை என்று எல்லாம் எழுதாதீர்கள் நண்பரே.

ஒரு சிலர் செய்யும் தவறுகளை அவர்களின் பெயரை குறிப்பிட்டு இந்த ஆள் இப்படி தவறு செய்தார் என்று எழுதுங்கள் அது விவாதத்துக்கு அழகு நண்பரே.

சகோ பிரதீப்,

ஒரு மகனுக்கு தன் தாய் தந்தையை பற்றி வெறுமனே குறை சொன்னால் என்ன வேதனை வருமோ அவ்வேதனை இந்து மதத்தை பற்றி நீங்கள் சொல்லும் போது வருகிறது. உண்மை தவறு மதத்தின் பெயரில் ஏதேனும் நடந்தால் சுட்டி காட்டுங்கள் அதிலுள்ள நியாயப்படி யோசிக்க தோன்றும். மீண்டும் சொல்கிறேன் தனி மனித தவறுகளை மதத்தோடு முடிச்சு போடாதீர்கள்.

ஏதோ சில இயக்கங்கள் நாங்கள் இந்து மத காவலர்கள் என்று சொல்லி கொண்டு எங்காவது தவறு செய்தால் அதற்கு எதிரான உங்கள் குரலுக்கு நானும் பின் நிற்பேன்.இப்போது புதிதாக மக்கள் மேல் திணிக்க நினைக்கும் இந்துயிசத்தை எதிர்த்து இங்கு கருத்துக்கள் பல பதிவு செய்தாகிவிட்டது.</strong>

அப்புறம் மதத்தின் வேத புத்தகங்கள் இருந்தாலும் அவற்றை விட மனித நேயமுள்ள வாழ்க்கை மற்றும் கடவுளின் மேலுள்ள ஈடுபாடு இவைதான் முக்கியம் இந்துமதத்தை பொறுத்தவரை வேதத்தை கண்ணால் கூட கண்டில்லாத பலரையும் தன்னுள் கொண்டுள்ளது.வேதம் படிக்காத நானும் இம்மதத்தின் ஒரு அங்கம், இது பிற மதத்தில் நீங்கள் காண முடியாது.

பார்பனர்களை தவிர எவருக்கும் வடமொழி – வேதம் தெரியாது. இந்து என்பது ஒரு பொதுவான பெயர் அவ்வளவே, யாரெல்லாம் முஸ்லிம் இல்லையோ,கிருத்துவர் இல்லையோ,பார்சி இல்லையோ அவரெல்லாம் இந்து. இதை தவிர வேறு ஏதும் விளக்கம் எதுவும் இந்து என்ற சொல்லுக்கு வேதத்திலோ, புராண இதிகாசத்திலோ,உபநிடததிலோ இல்லை.
மற்ற மதங்களை இகழ்ந்து தன் மதம் உயர்ந்தது என்பவர்கள் மூடர்கள்.

//வேதம் படிக்காத நானும் இம்மதத்தின் ஒரு அங்கம், இது பிற மதத்தில் நீங்கள் காண முடியாது.//
வேதம் தெரியாத முஸ்லிம்கள்,கிருத்துவர்களும் உண்டு. ஆனால் குறைந்தது அவர்கள் வீட்டில் ஒரு வேத நூலாவது இருக்கும்.அவர்களுக்கு என மதம் சார்ந்த கட்டுபாடுகள், தலைமை,வழிமுறைகள், என்று இருக்கும்.ஆனால் அப்படி எதுவும் இந்து மதத்திற்கு என்று குறிப்பிட்டு எதுவும் கிடையாது. ஏனெனில் இந்து மதம் என்பது இந்திய கண்டத்தில் பின்பற்றிய எல்லா மதங்களின் தொகுப்பாகவே உண்மையில் இருப்பதால்,மக்களிடம் இந்து என்கிற உணர்வு திணித்தால் மட்டுமே வர முடியும். இஸ்லாம்,யுதம் ,கிருத்துவம் மதங்களை ஒற்றை வார்த்தையில் ஆபிரகாமிய மதங்கள் என்று அழைப்பது போலவே இந்து என்கிற சொல் இந்தியாவில்.அவ்வளவே.

பிரதீப்,

உலகிலே இந்து மதம் என்று ஒன்று இல்லாமலே இருந்தால் இந்துக்கள் என்று யாருமே இல்லாம இருந்தால் உங்களுக்கு சந்தோசமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லையே.

நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்பவன் தான் கிறிஸ்தவன், அவன் வீட்டில் பைபிள் இருக்கா, இல்லை என்றால் அவன் கிறிஸ்தவன் இல்லை என்று யாரும் சொல்வது இல்லை. நீ கிறிஸ்தவன் இல்லையா, நீ முஸ்லீம் இல்லையா, நீ பார்சி இல்லையா அப்படியானால் நீ இந்துதான் என்று யாரும் ஒருவரை சொல்வதில்.

ஒருவன் தன்னைத் தானே இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இந்தியாவில் இருந்தால் இந்தியா முழுவது நடை பெரும் விநாயகர் விழாக்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கு கொள்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். உலகின் மிகப் பழைமையான மதமான இந்து மதம் இவ்வளவு உயிர்த் துடிப்புடனும், வலிமையுடனும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திதிருப்பீர்கள்.

நீங்கள் இந்துவிடம் சென்று நீ இந்து இல்லை, யாருமே இந்து இல்லை, இந்து மதமே இல்லை, உன் வீட்டில் வேதப் புத்தகம் இல்லை என்று எல்லாம் சொல்லலாம். ஆனால் இந்து ஒன்றும் சொல்ல மாட்டான், மத வெறிக் கோட்பாட்டில் மனம் சிக்கியவர்க்ளுடன் வாக்குவாதம் செய்வதை விட விலகி செல்வதே மேல் என சிரித்துக் கொண்டே சென்று விடுவான். இந்து மதம் வெறும் புத்தகத்தில் இல்லை, இந்து மதம் மக்களின் மனதில் இருக்கிறது.

இந்து மதம் வெறும் புத்தகத்தில் இல்லை, இந்து மதம் மக்களின் மனதில் இருக்கிறது.

பெரும்பாலான இந்துக்கள் இந்து மதம் சம்பந்தமான எந்த ஒரு நூலையும் படித்து தேர்ச்சி பெறுவதில்லை. தங்கள் மதத்திற்கு என்று ஒரு நூல், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அடி பணிய வேண்டும் … என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் எல்லாம் இந்து மதத்தில் இல்லை.

அப்ப எப்படித் தான் ஒரு இந்து, இந்து மத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். ஒரு இந்து தன் பெற்றோரிடம் இருந்து, தன் அண்ணன், அக்காளிடம் இருந்து உறவினர்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து தான் பெற்ற சிந்தனைகளால் இந்துவாக இருக்கிறான்.

இந்து மதத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத் கீதையில் சொல்லப் பட்ட ஒரு செய்யுளை இங்கே

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்தக் கருத்துக்களைப் பெரும்பாலான இந்துக்கள் படித்து தெரிந்து கொள்வது இல்லை, ஆனால் ஒரு இந்து படிக்காமலே , கேட்காமலே, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறான்.

மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.

இந்த சிந்தனைகளை ஒருவர் நூல்களைப் படிப்பதன் மூலம் மாத்திரமே பெற முடியும் என்று அவசியம் இல்லை.

//வேதம் படிக்காத நானும் இம்மதத்தின் ஒரு அங்கம், இது பிற மதத்தில் நீங்கள் காண முடியாது.//
வேதம் தெரியாத முஸ்லிம்கள்,கிருத்துவர்களும் உண்டு. ஆனால் குறைந்தது அவர்கள் வீட்டில் ஒரு வேத நூலாவது இருக்கும்.////
காடன் மாடன் முனி மதுரை வீரன் இவர்களை வழிபடும் மக்களுக்கு வேதம் இல்லை தேவையும் இல்லை இவர்கள் வாழ்ந்த சமுகத்திற்கு தொண்டாற்றிய முன்னோர்கலாகவே கருதபடுகின்றனர்.இவர்களின் தெய்வத்தின் வாழ்க்கை வரலாறு செவி வழியாக பாடல் வடிவிலோ கதையாகவோ உள்ளன. ஆபிரகாமிய வேதங்கள் எழுத்து வடிவில் உள்ளன நம்மவர் இப்போது சிலவற்றை அச்சேற்றி வருகின்றனர். சில வாய்வழியாக கூட தொடராமல் அழிந்து வருவதும் உண்டு.
இந்து தமிழ் வேதங்கள் ஆகிய தேவாரம் மற்றும் சைவ தமிழ் பெரியோரின் பெயர்கள் பலருக்கு பெயராக வைக்கபட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம் பலருக்கு சிவகுமார் கிருஷ்ணன் சிவராமன் செந்தில் சரவணன் கார்த்தி போன்ற பெயரே எல்லோருக்கும்
முன்னோர் வழிபாடு இந்து மதத்தில் மட்டும்தான் தடை செய்ய படாத விஷயம்.
///அவர்களுக்கு என மதம் சார்ந்த கட்டுபாடுகள், தலைமை,வழிமுறைகள், என்று இருக்கும்.ஆனால் அப்படி எதுவும் இந்து மதத்திற்கு என்று குறிப்பிட்டு எதுவும் கிடையாது.////
யார் சொன்னது எந்த இந்துவுக்கும் பொதுவான சில கட்டுபாடுகள் உண்டு மாலை வேலையில் விளகேற்றுவது எல்லா இந்துக்களும் ஜாதி வேறுபாடு இன்றி பின்பற்றும் பழக்கம் இங்கு அது கிட்ட தட்ட கடமை என எல்லோர்க்கும் ஊறிப்போனது எனவே அது கட்டுப்பாடு என்று இல்லை.
வாசல் தெளித்து கோலம் போடுவது. சில ஆண்டுகள் முன் வரை சூர்யா நமஸ்காரம் செய்த தாத்தா ஏராளம் உண்டு. இப்போது கூட கலைஞ்சர் தாத்தா ஞாயிறு போற்றுதும் என்ற பெயரில் அதனை சிறப்பிக்கிறார்.
//// ஏனெனில் இந்து மதம் என்பது இந்திய கண்டத்தில் பின்பற்றிய எல்லா மதங்களின் தொகுப்பாகவே உண்மையில் இருப்பதால்,////
இருக்கலாம்
////மக்களிடம் இந்து என்கிற உணர்வு திணித்தால் மட்டுமே வர முடியும்////
தவறு பல பழக்க வழக்கங்களையும் கொண்டு எல்லோர்க்கும் பொதுவான விசயமாக தான் ஒரு மதமானது இருக்கவேண்டும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வைத்து எழுதிய புத்தகமாக கட்டாயமாக திணிக்கபடாத நெறிமுறைகள் உள்ள அமைப்பாக உணர்ந்து பின்பற்ற அனுமதிக்க கூடிய ஒன்றாக உணரும் வரை அதனை ஆராய்ச்சி செய்ய அனுமதிக்க கூடிய சமுக அமைப்பே வேண்டும். திணித்து ஏற்படுத்தினால் அது ஆப்ரஹமிய மதத்தை போல ஆகிவிடும் அப்படி திணிப்பவன் இந்துத்துவ ஆப்ரஹமியவாதி
சுய தேர்வு தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ற தேர்வு தான் சிறந்தது இது இங்கு இருப்பதாக உணர்கிறேன்
உங்கள் பேச்சு இந்துத்துவ வாதிகளை ஒத்திருக்கிறது. ஏனென்றால் நீங்கள் சார்ந்த அமைப்பும் உணர்வை திணித்தே தன்னகத்தே உங்களை கொண்டிருக்கிறது
முன்பே சொன்னேன் தீபாவளியும் பொங்கலும் சித்திரைபிறப்பும் ஆடிமாத கூழ் வார்த்தாலும் எல்லா ஜாதியினரும் சுய விருப்பத்தால் யாருடைய திணித்தாலும் இன்றி பலர் கொண்டாட கூடாதென கூறும்போதும் கொண்டாடுவது தாம் இந்து என்ற உணர்வில் மட்டுமே.
////இஸ்லாம்,யுதம் ,கிருத்துவம் மதங்களை ஒற்றை வார்த்தையில் ஆபிரகாமிய மதங்கள் என்று அழைப்பது போலவே இந்து என்கிற சொல் இந்தியாவில்.அவ்வளவே.////
ஆபிரகாமிய மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் மளிக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் மேலே விளக்கப்பட்டுள்ளது. சுய தேர்வு புரியும் வரை அவகாசம் பிடிக்கவில்லை எனில் மறுக்கும் உரிமை இது எல்லாம் அங்கு நினைத்து கூட பார்க்க முடியாது

/////பார்பனர்களை தவிர எவருக்கும் வடமொழி – வேதம் தெரியாது/////
இல்லை பெரியார் படம் பாருங்கள் அதில் பெரியாரின் தந்தைக்கு வடமொழி சுலோகங்கள் தெரிந்திருக்கும்,
நம் முன்னோர்கள் வடமொழி ஓரளவு தெரிந்து வைத்திருந்திருக்கின்றனர். அவர்களின் வார்த்தை மற்றும் எழுத்துக்களில் அவற்றின் பிரதிபலிப்பை காணலாம்.
கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் எல்லா மக்களும் இன்று வடமொழி பாசை மட்டுமே பேசுகின்றனர்.

மேலும் மலையாளம் என்பது தூய தமிழும் வடமொழியும் கலந்த சொற்பிரயோகமே அன்றி வேறில்லை. அதன் ஒவ்வோர் வார்த்தையும் துய தமிழ் அல்லது வடமொழி என்பதை அறிந்து வியந்திருக்கிறேன் நான் .

முக்யமாக இக்கட்டுரையின் தலைப்பை விட்டு வெளியே போகாமல் கூறினால்
பிற தெய்வங்களை இகழும் போக்கை கைவிடுங்கள் என கேட்டு கொண்டது கடவுளை நம்பும் மக்களுக்கு
மதமோ கடவுளோ நம்பிக்கை இல்லாத நீங்கள் நாடு நிலையுடன் கூறவேண்டியது. எந்த மதத்தினர் பிற மதங்களின் தெய்வங்களை தங்களின் மத அடிப்படையில் இகழ்கின்றனர்? அவர்கள் மதமும் அதனை அனுமதிக்கிறது? என்பதுதான். இக்கட்டுரைக்கு பொருத்தமான கருத்து கூறுங்கள்.

குறிப்பு : இந்த கட்டுரைக்கான கருத்துக்களை நான் முன் வைக்கும் நோக்கோடு எழுதவில்லை, நண்பர் சாவர்கனுக்கு சில கருத்துக்களை முன்வைத்தேன் .அதற்க்கு மற்றவர்களிடம் வந்த மறுப்புகளுக்கே நான் என் மறுப்பாக வெளியிடுகிறேன்.
எனது கருத்துக்களை நேரடியாக ஆதாரத்துடன் மறுக்காமல் பொதுவான கருத்துக்களே பதிலாக வந்துள்ளது. ஆதலால் சில கேள்விகளை எடுத்து கொள்வோம்.
௧) ” இந்து ” என்றால் என்ன ? ஒரு குறிப்பிட மதமா.? இல்லை , மதங்களின் தொகுப்பாக வெள்ளையர்களால் அழைக்கப்பட்டதா.? அல்லது பொதுவான இந்திய பண்பாட்டை குறிப்பதா ? இந்திய அரசியல் சாசனப்படி அதன் விளக்கம் என்ன?
௨) இந்து என்கிற வார்த்தைகான ஆதாரங்கள் ,வேத,உபநிடதங்களில் இருந்தோ, புராண இதிகாச ,பகவத் கீதையில் இருந்தோ காட்ட முடியுமா.?
௩) இந்து மத புனிதங்களாக மேற்குறிப்பிட்டவைகள் இருக்கும் வட மொழி ஒட்டு மொத்த இந்தியர்களின் மொழியா ? ஆம் என்றால் எவ்வாறு.?
௪) இந்த வடமொழி நூல்கள் என்பவை இந்து மதத்தை சேர்ந்தவை என்பது அல்லது இந்த பெயர்களாவது இந்துக்கள் என்போருக்கு தெரியுமா? தெரியும் என்றால் எத்தனை சதவீதம் தெரியும் ,யாருக்கெல்லாம் தெரியும் ?

நீங்கள் எழுதும் மறு மொழிகளுக்கு அவ்வப் போது சரியாக உண்மைகளை விளக்கி பதில் அளித்து , மத வெறி கருத்துக்களை நீர்த்து போக செய்தே வருகிறோம். ஆனால் இந்து மதத்துக்கு எதிரான் வெறுப்புணர்ச்சி தீராததால் , ஒரு விளக்கமும் தரப் படாதது போல திரும்பவும் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் விடை அளிக்கப் படும்!

௧) ” இந்து ” என்றால் என்ன ? ஒரு குறிப்பிட மதமா.? இல்லை , மதங்களின் தொகுப்பாக வெள்ளையர்களால் அழைக்கப்பட்டதா.? அல்லது பொதுவான இந்திய பண்பாட்டை குறிப்பதா ? இந்திய அரசியல் சாசனப்படி அதன் விளக்கம் என்ன?

இந்து ” என்றால் என்ன ?

இதற்க்கு முன்பே பதில் அளித்து விட்டோம். அதை திரும்பவும் இங்கே தருகிறோம்

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.

//இந்திய அரசியல் சாசனப்படி அதன் விளக்கம் என்ன?//

இந்திய அரசியல் சாசனம் என்பது வெவ்வேறு மொழிகளை ( 18க்கும் மேற்பட்ட மொழிகளை) பேசும் பல மதங்களை சேர்ந்த மக்கள் சிந்தனை அடிப்படையில் ஒன்றாக மனப் பூர்வமாக ஒன்றிணந்து வாழும் உலகின் ஒரே நாடாக இருக்கும் இந்திய நாட்டுக்கான அரசியல் சாசனம் ஆகும். அது இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ வரையறுக்கவோ, விளக்கம் தரவோ உருவான சாசனம் அல்ல. நீங்க முதல்ல இந்திய அரசியல் சாசனத்தைப் படிங்க. அப்புறம் வந்து எழுதுங்க

//௨) இந்து என்கிற வார்த்தைகான ஆதாரங்கள் ,வேத,உபநிடதங்களில் இருந்தோ, புராண இதிகாச ,பகவத் கீதையில் இருந்தோ காட்ட முடியுமா.?//

இந்து என்ற பெயர் வேத, உபநிடத, பகவத்கீத, இதிகாச புராணங்களில் இல்லை, இது எங்களுக்கு நன்றாகத் தெரியுமே, இதனால் என்ன குடி முழுகி விட்டது? இப்போது இந்து என்ற பெயரில் இந்த மதத்தை சொல்லுகிறோம், நாளைக்கு இருப்பவர்கள் வேறு பெயரை வேண்டுமானால் வைத்துக் கொள்ளாலாம். புதிய பெயரில் அழைத்ததற்காக தேவ தூசனம் சொன்னான என்று சட்டையைக் கிழித்துக் கொண்டு அலற வேண்டியதில்லை. சிவாஜி ராவ் கெயிக்வாட் என்றாலும், ரஜினி காந்த் என்றாலும் ஒரே மனிதர்தான். பீம்ராவ் ராம்ஜி என்றாலும் அண்ணல் அம்பேத்கார் என்றாலும் அவர் ஒருவரே.

//௩) இந்து மத புனிதங்களாக மேற்குறிப்பிட்டவைகள் இருக்கும் வட மொழி ஒட்டு மொத்த இந்தியர்களின் மொழியா ? ஆம் என்றால் எவ்வாறு.?//

இந்து மதத்தில் மத நூல்களை புனித நூல்…. என்று சொல்லி இந்த நூல் தான் புனிதம்… இதை அப்படியே ஒத்துகிட்டு , எந்தக் கேள்வியும் கேட்காமா பின்பற்றனும் என்பது போன்ற கோட்பாடு எதுவும் கிடையாது. இந்து மதத்தில் ஒரு நூல் எந்த அளவுக்கு ஒருவரின் அறியாமையை நீக்கி அவரை உண்மையை நோக்கி செலுத்துகிறதோ அந்த அளவுக்கு அதற்க்கு முக்கியத்துவம் தருவார்கள் . அந்த அளவில் பகவத் கீதை உபநிடதங்கள் ஆகியவை முக்கியமான நூலகளாக கருதப் படுகின்றன என்பது சரியே. அதே நேரம் எல்லா மொழிகளிலும் மிகச் சிறப்பான இந்து மத ஆன்மிக நூல்கள் உள்ளன. தமிழில் பழமையான சித்தர் பாடல்கள மிகவும் சிறப்பானவை , அவை அப்படியே உப நிடதங்களின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.

https://thiruchchikkaaran.wordpress.com/2011/08/11/alakanich-chiththar-8-1/

மற்ற படி இன்று வடமொழி இந்தியாவில் பேச்சு மொழியாக இல்லை. அது செம்மொழியாக பல்கலைக் கழகங்களில் சில மாணவர்களா ல் பயிலப் பட்டு வருகிறது, வேதம் படிப்பவர்களும் சமஸ்கிரதம் படிக்கிறார்கள். அவ்வளவுதான்.

௪) இந்த வடமொழி நூல்கள் என்பவை இந்து மதத்தை சேர்ந்தவை என்பது அல்லது இந்த பெயர்களாவது இந்துக்கள் என்போருக்கு தெரியுமா? தெரியும் என்றால் எத்தனை சதவீதம் தெரியும் ,யாருக்கெல்லாம் தெரியும் ?

ஒருவன் இந்துவாக இருக்க வேண்டும் என்றால் இந்த நூல்களை அறிந்து கொண்டு தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்து தன்னுடிய மதத்தின் முக்கியக் கருத்துக்களை படிக்காமலே கடைப் பிடித்து வருகிறான்.

ஒரு இந்து கடவுளை வணங்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட இல்லை. யாரையும் வெறுக்காமல், கருவறுக்க நினைக்காமல், தன்னுடைய மனைவிக்கு நல்ல கணவனாக, தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக….சமூகப் பொறுப்புள்ளவனாக தன்னுடைய செயல்களை சரியாக வும், திறமையாகவும் செய்து கொண்டு இருந்தாலே அவன் மிகச் சிறப்பாக இந்து மதத்தை பின்பற்றியவன் ஆகிறான்.

//நீங்கள் எழுதும் மறு மொழிகளுக்கு அவ்வப் போது சரியாக உண்மைகளை விளக்கி பதில் அளித்து , மத வெறி கருத்துக்களை நீர்த்து போக செய்தே வருகிறோம். ஆனால் இந்து மதத்துக்கு எதிரான் வெறுப்புணர்ச்சி தீராததால் , ஒரு விளக்கமும் தரப் படாதது போல திரும்பவும் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் விடை அளிக்கப் படும்!//
இதுதான் பெரிய காமெடி. நீங்களும், உங்களிடம் வாதாடும் கிருதுவர்கலுமே மதவெறியர்கள். பேசும் வார்த்தைகள்தான் வேறு.

//மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.//
இதுதான் பதிலா.??? நான் என்ன கேட்டு இருக்கிறேன் என்று மறுமுறை படிக்கவும். உங்க பாயின்ட் எல்லாம் யாரு கேட்டா?

//நீங்க முதல்ல இந்திய அரசியல் சாசனத்தைப் படிங்க. அப்புறம் வந்து எழுதுங்க//
மொதல்ல இந்துன்னா என்னான்னு சொல்லுங்க. உங்களுக்கு இதற்கான பதில் அங்கு கிடைக்கும்.

//இந்து என்ற பெயர் வேத, உபநிடத, பகவத்கீத, இதிகாச புராணங்களில் இல்லை, இது எங்களுக்கு நன்றாகத் தெரியுமே, இதனால் என்ன குடி முழுகி விட்டது?//
வேறு வழியல்ல ஒத்து கொண்டுதான் ஆகா வேண்டும். சரி, எப்படி அந்த பெயர் வந்தது, ஏன் வந்தது.? ரசினிகாந்த் பெயர் போல சும்மா வைத்து கொள்வதா ஒரு மதத்தின் பெயர்.?

//இப்போது இந்து என்ற பெயரில் இந்த மதத்தை சொல்லுகிறோம்//
அதாங்க எந்த மதத்தை.?

//தமிழில் பழமையான சித்தர் பாடல்கள மிகவும் சிறப்பானவை , அவை அப்படியே உப நிடதங்களின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.//
அப்படின்னா, ஏன் இந்த புரியாத வடமொழி மந்திரங்கள் மட்டுமே கோவில்களில் சொல்லபடுகிறது??

// வேதம் படிப்பவர்களும் சமஸ்கிரதம் படிக்கிறார்கள். அவ்வளவுதான்//
வேதமே வடமொழியில் தானே இருக்கு.. அப்புறம் என்ன வேதம் படிப்பவர்களும்.?

//ஒருவன் இந்துவாக இருக்க வேண்டும் என்றால் இந்த நூல்களை அறிந்து கொண்டு தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.//
இததான் நானும் , அப்படி ஒன்னு இருக்குன்னே எவருக்கும் தெரியாது , ஏனெனில் அதற்க்கும் இந்த அப்பாவிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பொதுவான விளக்கம் வாய்க்கு வந்தபடி எந்த மதத்துக்கும் சொல்லலாம் .அதையெல்லாம் நான் பேசவில்லை.

//இதுதான் பதிலா.??? நான் என்ன கேட்டு இருக்கிறேன் என்று மறுமுறை படிக்கவும். உங்க பாயின்ட் எல்லாம் யாரு கேட்டா?//

சகோ. பிரதீப்,

என்னுடைய பாயின்ட் ஆப் வியூ என்று சொன்னது ஒரு மரபுக்காக.

மற்றபடி நான் சொன்னது இந்து மதத்தின் மிக முக்கிய அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளுள் ஒன்று இல்லை என்பதை எந்த ஒரு இந்து மத அறிஞரும் மறுக்க முடியாது!

//வேறு வழியல்ல ஒத்து கொண்டுதான் ஆகா வேண்டும். சரி, எப்படி அந்த பெயர் வந்தது, ஏன் வந்தது.? ரசினிகாந்த் பெயர் போல சும்மா வைத்து கொள்வதா ஒரு மதத்தின் பெயர்.?//

கட்டுரைக்கான கருத்து:
மற்ற மதங்களை அல்லது மற்ற மக்களை வெறுக்கும் நாகரீகமற்ற போக்கு ஆபிரஹாமிய மதங்களில், பார்பனிய வேதங்களில் அதிகமாக இருக்கிறது. காரணம் அதன் வேத நூல்களில் அந்த வெறுப்பை நியாயபடுத்தும் கருத்துக்கள் நேரடியாகவே இருக்கின்றன. மற்றொரு காரணம், மதவாத தலைவர்கள் , அதன் இயக்கங்கள்.
பொதுவாக இந்துக்கள் என்போருக்கு அத்தகைய வெறுப்பு இல்லாததற்கு காரணம் அவர்களுக்கு அப்படி ஒரு வேத நூல் இருக்கு என்றே தெரியாது.ஆனால் பொதுவாக பார்பனர்களுக்கு இவைகள் ஓரளவுக்காவது தெரியும், அவர்களிடம் அந்த வெறுப்பு இருக்கவே செய்கிறது.இந்த வெறுப்பை எல்லா மக்களிடமும் பரப்பவே இந்துத்துவ இயக்கங்கள் நாம் எல்லோரும் இந்துக்கள் என்று பொய்ப்புரை செய்து வருகின்றனர். (ஆனால் இட ஒதிகீட்டை மட்டும் எதிர்ப்பர், இங்கு தான் இவர்கள் அம்பலபடுகின்றனர்)
அவர்களுடைய அந்த வெறுப்பினால்தான் இஸ்லாமும் ,கிருத்துவமும் வளர்ந்தது. “அத்வேஷ்டா குத்வேஷ்ட்டா ” என்று எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன.

சகோ. பிரதீப்,

வழக்கம் போலபொய்யையும் , வெறுப்புணர்ச்சியையும் கலந்து எழுதி இருக்கிறீர்கள்.

இந்து மத வேதங்களில் எதிலும் எந்த இடத்திலும் பிற மார்க்கத்தினருக்கோ, பிற மொழியினருக்கோ, பிற இனத்தினருக்கோ … எதிரான எந்த ஒரு வெறுப்புக் கருத்தும் கிடயாது.

வேதங்களில் மட்டும் அல்ல, எந்த ஒரு சமஸ்கிரத இலக்கியத்திலும் பிற மார்க்கத்தினருக்கு எதிரான் வெறுப்புணர்ச்சி கிடையாது. நமது தமிழ் மொழி இலக்கியம் எதிலும் பிற மதத்தினருக்கு, மொழியினருக்கு … எதிராக எந்த ஒரு வெறுப்புணர்ச்சியும் கிடையாது.

சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் பேசும் போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, தான் ஒரு இனத்தை மட்டும் வாழ வைப்பேன் என்று சொல்வது போன்ற கருத்துக்கள் எதையாவது வேதங்களில் இருந்து உங்களால காட்ட முடியுமா என்று சவால் விடுகிறேன் என்றார்.

எந்த ஒரு வேதத்திலும் வெறுப்புக் கருத்து இல்லை. நீங்கள் இந்து மதத்தின் மேல் கொண்ட வெறுப்புணர்ச்சியால் எப்படியாவத் இந்து மதமும் வெறுப்புணர்ச்சி யை சொல்லியது என்பது போல காட்டத் துடிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதும் அனைத்தும் பச்சை பொய்!

அத்வேஷ்டா என்றால் துவேஷம் இல்லாமல் இருப்பது, வெறுப்புணர்ச்சி, பகைமை உணர்ச்சி இல்லாத நிலையில் மனதை வைப்பது என்பதுதான். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் என்று “அத்வேஷ்டா குத்வேஷ்ட்டா ” குத்திக் கிளறுகிறீர்கள்.

வெறுப்புணர்ச்சி இல்லாமல் சினேக மனப் பான்மையை கொள்வது- அதை எல்லா மதங்களும் கைக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்

நல்ல கருத்து கெட்ட கருத்து என்று எல்லா மதங்களிலுமே இருக்கிறது. அதைதான் நான் சொல்கிறேன். வெறுப்பை கக்கும் எல்லோரும் விமர்சதிர்க்குரியவர்கள். ஆனா நம்மவாளா இருக்கா என்ற காரணத்துக்காக சப்பை கட்டு கட்டக்கூடாது.

////கட்டுரைக்கான கருத்து:
மற்ற மதங்களை அல்லது மற்ற மக்களை வெறுக்கும் நாகரீகமற்ற போக்கு ஆபிரஹாமிய மதங்களில், பார்பனிய வேதங்களில் அதிகமாக இருக்கிறது. காரணம் அதன் வேத நூல்களில் அந்த வெறுப்பை நியாயபடுத்தும் கருத்துக்கள் நேரடியாகவே இருக்கின்றன. மற்றொரு காரணம், மதவாத தலைவர்கள் , அதன் இயக்கங்கள்.
பொதுவாக இந்துக்கள் என்போருக்கு அத்தகைய வெறுப்பு இல்லாததற்கு காரணம் அவர்களுக்கு அப்படி ஒரு வேத நூல் இருக்கு என்றே தெரியாது.ஆனால் பொதுவாக பார்பனர்களுக்கு இவைகள் ஓரளவுக்காவது தெரியும், அவர்களிடம் அந்த வெறுப்பு இருக்கவே செய்கிறது/////

இது வாதம் வாங்கள் நண்பரே,

வந்து இப்போது இந்து மதத்தின் எந்த வேதத்தில் என்ன வெறுப்பு கருத்து இருக்கிறது என்று தக்க சான்றுகளோடு வரிகள் மற்றும் விளக்கங்களுடன் தாங்களால் தெரிவிக்கமுடியுமா? அப்படி முடியாவிட்டால் நீங்கள் சொல்வது இட்டு கட்டிய வெறுப்பு வாத பேச்சு மட்டுமே.

இங்கு பிற மதங்களின் வெறுப்பு கருத்துகள் அவர்களின் புனித நூல்கள் மூலமே தெரிவிக்கபட்டுள்ளது, நீங்கள் உண்மையாய் ஆராய்ந்து இந்து மத வேதத்தில் பிற மதங்கள் மீதான வெறுப்பு கருத்து இருக்கிறது என கண்டுபிடித்திருந்தால் உங்கள் மனத்தால் உண்மை என அறிந்த சரிபார்க்க பட்ட கருத்துக்களை கொண்டு நேர்மையான வாதம் செயபவரானால். தகுந்த ஆதாரங்களை வெளியிடுங்கள்.

உண்மையாய் இருப்பின் நானும் தெரிந்து கொள்வேன்.

/////பொதுவாக பார்பனர்களுக்கு இவைகள் ஓரளவுக்காவது தெரியும், அவர்களிடம் அந்த வெறுப்பு இருக்கவே செய்கிறது.///

எந்த கோயிலின் அர்ச்சகரும் பிற மத தெய்வங்களை இகழ்ந்து பேசி நான் கேட்டதில்லை.அப்படி இருப்பின் அவர்கள் தங்கள் வழிபாட்டு தளங்களில் போதிப்பது போல கோயிலிலும் அர்ச்சகர்கள் பிற தெய்வங்களை தரம் குறைத்து கூறி பிற மதங்கள் மேல் வெறுப்பு உண்டாக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளலாமே? எந்த கோயிலிலும் இப்படி நடப்பதில்லையே. இருந்தால் சான்றுடன் குறிப்பிடுங்கள் நண்பரே.தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

//////இந்த வெறுப்பை எல்லா மக்களிடமும் பரப்பவே இந்துத்துவ இயக்கங்கள் நாம் எல்லோரும் இந்துக்கள் என்று பொய்ப்புரை செய்து வருகின்றனர். (ஆனால் இட ஒதிகீட்டை மட்டும் எதிர்ப்பர், இங்கு தான் இவர்கள் அம்பலபடுகின்றனர்)///

இஸ்லாமியர் கிறித்தவர்களின் இட ஒதுக்கீட்டை தடை செய்வதால் இவர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ன லாபம்?

/////அவர்களுடைய அந்த வெறுப்பினால்தான் இஸ்லாமும் ,கிருத்துவமும் வளர்ந்தது. “அத்வேஷ்டா குத்வேஷ்ட்டா ” என்று எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன.//////
இந்துக்களின் நூலில் அட்வேஷ்ட்டா என்றாவது உள்ளது குத்வேஷ்ட்டா என்பது பிற மதங்களில் மட்டும்தான் உள்ளது.
என்னே ஒரு கற்பனை நண்பா? யார் மத ரீதியான வெறுப்பினை கக்குபவர்கள் என்று உலகுக்கே தெரியும்

//எந்த கோயிலின் அர்ச்சகரும் பிற மத தெய்வங்களை இகழ்ந்து பேசி நான் கேட்டதில்லை//
அர்ச்சகர்கள் மட்டும் தான் பார்பனர்களா ? அவ்வாறு அவர்கள் கோவில்களில் செய்தால் கல்லா கட்டமுடியுமா.!
இந்துத்துவ இயக்கங்கள் வெறுப்பை பரப்புவதில்லையா? அவர்கள் பெரும்பாலும் பார்பனர்கள் தானே.அவர்களக்கு தார்மீக ரீதியாகவும், நிதி உதவியாகவும்,சட்ட ரீதியாகவும் யார் ஆதரவு தெரிவிக்கிறார்,பார்பனர்கள் தானே.

//இஸ்லாமியர் கிறித்தவர்களின் இட ஒதுக்கீட்டை தடை செய்வதால் இவர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ன லாபம்?//
இட ஒதிக்கீடு இஸ்லாமியர் கிருத்துவர்களுக்கு மட்டுமா.? இந்துக்கள் தானங்க அதிகமா இட ஓதிகீட்டில் வர்றாங்க . பிறகு ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள். ? என்பது தானே கேள்வி. நீங்க என்ன லாபம் என்று அவங்களைதான் கேக்கணும்.

//இந்துக்களின் நூலில் அட்வேஷ்ட்டா என்றாவது உள்ளது குத்வேஷ்ட்டா என்பது பிற மதங்களில் மட்டும்தான் உள்ளது.
என்னே ஒரு கற்பனை நண்பா? யார் மத ரீதியான வெறுப்பினை கக்குபவர்கள் என்று உலகுக்கே தெரியும்//
இததான ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிறீங்க.

//இந்துத்துவ இயக்கங்கள் வெறுப்பை பரப்புவதில்லையா? அவர்கள் பெரும்பாலும் பார்பனர்கள் தானே.அவர்களக்கு தார்மீக ரீதியாகவும், நிதி உதவியாகவும்,சட்ட ரீதியாகவும் யார் ஆதரவு தெரிவிக்கிறார்,பார்பனர்கள் தானே.//

இந்துத்துவ இயக்கங்கள் என்று நீங்கள் சொல்வது சங்க பரிவார இயக்கங்களை என்றால் , அவர்களின் செய்லபாடுக்ளில் ஒன்றாக இந்துக்கள மனதில் பிற மதங்களின் மேலான வெறுப்புணர்ச்சியை உருவாக்குவதும் ஒன்றாக இருக்கிறது என்பது சரியே. இதை நாங்கள் முழுமையாக எதிர்த்துக் கொண்டே , கண்டித்துக் கொண்டே தான் இருக்கிறோம். இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் இந்து மதக் கோட்பாட்டிலும் சரி, செயல் பாட்டிலும் சரி வெறுப்புணர்ச்சிக்கு எந்த இடமும் இல்லை என்பதே.

எனவே இந்து மதத்தை வெறுப்புணர்ச்சி பாதையில் செலுத்த யாராவது முயன்றால் அவர்களை எளிதில் பெரும்பாலான இந்துக்களுக்கு அடையாளம் காட்ட முடிவதோடு , அந்த பாதை சரியல்ல என்பதை புரிய வைக்கவும் முடியும்.

ஆனால் சில மார்க்கங்களில் பிற மதங்களுக்கு எதிரான சகிப்புத் தன்மை இன்மை யும் வெறுப்புணர்ச்சி யும் அவர்களது கோட்பாடுகளில் இருப்பதால் பல பிரச்சாரகர்கள் அதை முன்னிலைப் படுத்தி விடுகிறாகள். அந்தக் கோட்பாடுகளை மட்டும் விட்டு விட்டு அமைதியான ஆன்மீகத்தை பின்பற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மற்றபடி நான் பழகிய அளவில் பார்ப்பனர் என அழைக்கப் படும் பலரும் மதம், சாதி உணர்வு போன்றவற்றில் எந்த அக்கறையும் காட்டாதவராக பணம் சம்பாரிப்பது, சுற்றுலா செல்வது, டிரஸ்ஸிங், பர்சேசிங் .. போன்றவற்றிலே அதிக ஈடுபாடு காட்டுவதாக அறிகிறோம். நீங்கள் பார்ப்பனர் என சொல்லப் பாடுபவரின் மீது கசப்புணர்ச்சி , வெறுப்புணர்ச்சி கொண்டிருப்பதும், அதனால் அவர்களை கட்டம் கட்டி கர்வருக்க துடிப்பதையும் உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் எவருக்கும் தெரியுமே.

/////இந்துக்கள் என்போருக்கு அத்தகைய வெறுப்பு இல்லாததற்கு காரணம் அவர்களுக்கு அப்படி ஒரு வேத நூல் இருக்கு என்றே தெரியாது/////

சகோ பிரதாப், தாங்கள் கண்டுபிடித்த அந்த வெறுப்பு கருத்து மிக்க இந்துக்களின் வேத நூலை தாங்கள் எங்களுக்கு சுட்டி காட்டுவீர்கள் என எதிர்பார்ப்புடன் கார்த்திருக்கிறேன்.

ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப் பாடல்கள் ‘இந்திரனே இங்கே வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும், எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்.’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552.

‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’

எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’. (அத்தியாயம்: சம்ஹாரம்)

‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’

‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’

‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’

‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’

‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.

‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’

‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’

‘இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு.’

மிக்க நன்றி சகோ. பிரதீப் அவர்களே,

வேதங்களை இங்கே கோட் செய்து நீங்களே அவற்றில் எந்த வெறுப்புக் கருத்தும் இல்லை என்பதை தெளிவாக்கி விட்டீர்கள்.

தன்னுடைய பசு மாடுகளை இம்சித்தவனரை தான் கொல்லுங்கள் என வேண்டி இருக்கிறார்,

வேறு மார்க்கத்தவன் , வேறு இனத்தவன், வேறு மொழி பேசுபவன் ஆகிய காரணத்துக்காக வெறுப்புணர்ச்சி பாராட்டவில்லை.

காரணம் இல்லாமல் பகைமை கொள்ளவில்லை.

தன்னுடைய வாழ்வாதாரமாகிய பசுக் கூட்டத்தை களவாடிக் கொண்டு போய் தன வாழ்க்கையை அழித்தவனை, நீ நல்ல வாழுப்பா, என்னுடைய பசு மாட்டில இருந்து பால் கறந்து குடிச்சுக்கோ, என்னிடம் இருந்து திருடிய பசுக்களிடம் இருந்து பால கறந்து விற்று பெரிய பணக்காரன் ஆகி விடு, நானும் என் குடும்பமும் பிச்சை எடுத்துக்கிறோம் என்று எவனாவது வேண்டுவானா?

நன்றி திருச்சிக்காரன்.
நீங்கள் சொல்லும் இந்த சப்பைகட்டைதான் ஒவ்வொரு மதத்தவரும் செய்கிறார்கள். மேல் குறிப்பிட்ட வேத வாக்கியங்கள் வெறுப்பு கருத்தா இல்லையா.?
அங்கு பசுவை துன்புரிதியவன் மீது சொல்ல படுவது ஒரு வரியே. மற்றவை எதிரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி சகோ. பிரதீப்

சப்பைக் கட்டு இல்லை, தெள்ளத் தெளிவான ஆதாரம் …. பிற மார்க்கங்களை, மார்ககத்தவரை பிற பிற மொழிகளை , பிற மொழி பேசுவோரை … வெறுப்புணர்ச்சியைக் கக்குவது இந்து மதத்தில் இல்லவே இல்லை.

//அங்கு பசுவை துன்புரிதியவன் மீது சொல்ல படுவது ஒரு வரியே. மற்றவை எதிரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.//

இந்து மதத்தின் மீதான் வெறுப்புணர்ச்சியால், கசப்புணர்ச்சியால் எவ்வளவு அப்பட்டமான பச்சைப் பொய்யை எடுத்து விடுகிறீர்கள் என்று நீங்களே எண்ணிப் பாருங்கள்.

நீங்களே எழுதியவற்றை நீங்களே நன்றாக புரிந்து கொள்ளும் படிக்கு தடித்து எழுத்துகளை போட்டு இருந்தோமே

‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’

இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.

சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’

இப்படி யாவது அறிவு நாணயம் இல்லாமல் பச்சை பொய்யை எழுத வேண்டிய அளவுக்கு மத வெறியா மேட்?

பிற மத அல்லது இன மக்களை அல்லது இந்து தெய்வங்களை வணங்காதவர்களை கொலை செய்ய அல்லது துன்புறுத்த சொல்லி வரிகள் இருப்பின் குறிப்பிடவும்,
தங்களை பற்றி தாங்களே வந்து வெளிபடுத்திய்மைக்கு நன்றி நன்றி நன்றி,

உங்கள் எழுத்துக்களின் மூலம் தாங்கள் இந்துக்களை வேதங்களை எப்படியாயினும் குற்றபடுத்த வேண்டும் என்ற முன் முடிவுடன் ஆதாரம் தேடி அங்காளைப்பது தவிப்பது தெளிவாக தெரிய படுத்தி விட்டீர்கள்.

நன்றி நன்றி நன்றி

தன எதிரியை அழிய இறைவனை வணங்குவதும், தன்னை வணங்காதவனை அழித்து விடுமாறு தன பக்தனுக்கு ஒரு கடவுள் கட்டளை இடுவதும் கூட வேறுபாடு தெரியாத அளவு உங்கள் கண்ணை மறைப்பது இந்து மதத்தின் மீதான துவேசம்.
காரணம் ஆப்ரஹாமிய வேதத்திற்கும் உங்கள் நாத்திக வேதத்திற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை, அங்கு உருவ வழிபாட்டாலனை அழிக்க சொல்வது போல உங்களின் தலைவர் இந்துக்களை அழிக்க சொல்லி இட்ட கட்டளைகள் அதிகம்

நன்றி திரு.சிவனடியான்,

எதிரிகளை அழிக்குமாறு சொல்லுவது என்றால் எதிரிகள் யார் , தன்னை இம்சிப்பவன், தன பசுவை இம்சிப்பவன், தன் பசுக்களை களவு செய்பவன் … இவன் தான் எதிரி.

சாதாரண இந்தியன் உலகிலே காரணம் இல்லாமல் யாரையும் எதிரி என்று கருதுவது கிடயாது, யாரையும் வெறுப்பதும் இல்லை.

சமீபத்தில் சைனாவில் இருந்து 40 பேர் கொண்ட பத்திரிகையாளர் குழு வந்து இந்தியாவை சுற்றிப் பார்த்தது. சீன இராணுவம் அவ்வப் பொது இந்தியாவை மிரட்டுவதால் இந்தியர்கள் சீனர்களை வெறுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்தார்களாம். போகும் போது இந்தியர்கள் சீனர்களை வெறுக்கவில்லை, இந்தியர்கள் வெரி பிரண்ட்லி பீப்பிள் என்று சொல்லி சென்று விட்டனர்.

எதிரி என்பவர் ஒரே இனத்திலும் இருக்கலாம் தானே?

ஒரு நாத்திகர் மற்றோர் நாத்திகரோடு கருத்து வேறுபட்டு எதிரியாக ஆவது கூட நடப்பதுதானே?
ஆகவே எதிரி என்பது வேறு பிற மதத்தினர் என்பது வேறு. ஒரு மதத்துக்குள்ளேயே மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு வேறு பல காரணங்களால் எதிரி ஆகிவிடுவது வேறு.

இது பகுத்தறிவாளர்களுக்கு புரிந்தும் புரியாதிருப்பது போல நடந்து கொள்வது ஏனென்றுதான் எனக்கு புரியவில்லை.

இந்து மத வெறுப்பு அந்தளவு கண்ணை மறைக்கிறது.

உங்கள் நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவதால் உங்கள் கண்களுக்கு வெறுப்பு கருத்துக்கள் என்பது மற்ற மதங்களில் மட்டுமே தெரிகிறது. கொஞ்சம் நிதானத்துடன் சிந்தித்தால் புரியும். இந்த வேத வெறுப்பு கருத்துக்கள் இஸ்லாமை -கிருத்துவத்தை ஏன் குறிப்பிட வில்லை என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். எதிரிகள் என்பது, ராட்சதர்கள் என்பதெல்லாம் யார்.? உங்களது இந்த சப்பைகட்டும் சிந்தனைதான் -மேற்கண்ட வேத வரிகள் தான் , செத்த பசு மாட்டை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. இந்துத்துவ வாதிகள் பசு வதை தடை சட்டம் கேட்பதும் அதற்காகத்தான். எல்லா மதமும் மோசம் என்று சொல்லும் நான் மத வெறியனா.? இல்லை, வெறுப்பு கருத்துக்களை காட்டிய பின்பும் அது இல்லை என்று மூணு கால் கதை பேசும் நீங்கள் மத வெறியர்களா.? உங்களுக்கே வெளிச்சம்.

ஐயா,

வெறுப்புணர்ச்சி என்பது தன்னுடைய மதம், இனம், மொழி அல்லாத பிற மதம் இனம் மொழி மீது உருவாவது. மனிதர்கள் மீதும் காரணமில்லாமல் பலர் வெறுப்பு பாராட்டுகின்றனர்.

ஐயா,

வெறுப்புணர்ச்சி என்பது தன்னுடைய மதம், இனம், மொழி அல்லாத பிற மதம் இனம் மொழி மீது உருவாவது.

மனிதர்கள் மீதும் காரணமில்லாமல் பலர் வெறுப்பு பாராட்டுகின்றனர்.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் தன்னுடைய பசுவை இம்சிப்பவர், தன மீது துவேசம் கொண்டோர், சபிப்ப்போர், தன்னை இம்சிப்போர் ஆகியோர் பற்றியது. அவனுடைய பசுவை ஒருவன் இம்சிக்கா விட்டால் அவன் மீது விரோதம் காட்டப் போவது இல்லை.

ஆனால் ஒருவன் யாரையுமே இம்சிக்காவிட்டாளும் அவன் தன்னுடைய மாறக்கத்தை சேராதவன் என்பதால் அவனை வெறுப்பது, அவன் வழிபாட்டை வெறுப்பது…

இதுதான் வெறுப்புணர்ச்சி!

இந்து மதத்தில் வெறுப்புணர்ச்சி இல்லை,

ஆனால் அதை ஒத்துக் கொள்ள உங்களால இயலவில்லை,

அதனால பசுவை திருடிக் கொண்டு போன குற்றவாளியை தண்டிக்க விரும்புவதை வெறுப்புணர்ச்சி என்று சாதிக்க நினைக்கிறீர்கள்.

அவன் பசுவைத் திருடாவிட்டால் அவன் மீது பகைமை இல்லை. ஆனால் நான் எந்த ஒரு பொருளையும் திருடாவிட்டாலும், யாரையும் இம்சிக்காவிடாளும் காபிர் என்கிற காரணத்தால் தாக்கப் படக் கூடும்-இதுதான் வெறுப்புணர்ச்சி!

பசு வதை தடுப்பு என்பது ஒரு கான்செப்டே. அதை யார் மீதும் வலியுறுத்தி திணிக்க இயலாது. வள்ளுவர் கூட கொல்லாமையை, புலால் உண்ணாமையை வலியுறுத்தி குறள் எழுதியுள்ளார். அதே நேரம் பசு வதை தடுப்பு என்பது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று அல்ல. ஒரு முறை ஒரு முக்கியஸ்தர் சுவாமி விவேகானந்தரை சந்திக்க சென்றார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சுவாமி விவேகானந்தர் ஏழைகள், ஒடுக்கப் பட்டோர் ஆகியோருக்கு கல்வி அளிப்பது, அவர்களை முன்னேற்றம் பெற செய்வது ஆகியவற்றை பற்றி பேசினார்.

ஆனால் வந்த முக்கியஸ்தரோ பசுக்களை கொல்லாமல் காப்பது பற்றியே பேசி, சுவாமி விவேகானந்தரும் பசுப் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.

சுவாமி அந்த முக்கியஸ்தரிடம் ஏழைகள் முன்னேற்றத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். முக்கியசதர் அவர்கள் தலைவிதி, அவர்கள் கஷ்டப் படுகின்றனர் நாம என்ன செய்ய முடியும் என்றார். சுவாமி உடனே பதிலடியாக அதே போல பசுக்களின் தலைவிதி அவை கசாப்புக்கு போக வேண்டும் என்று இருந்தால் அதற்க்கு நான் என்ன செய்ய முடியும் என்றார்.

//////எல்லா மதமும் மோசம் என்று சொல்லும் நான் மத வெறியனா.?//////

இப்போதுதான் கிவீரமனியார் அரசு படிவங்களில் மதம் என்று கேட்கும் இடங்களில் நாத்திகம் என்று குறிப்பிடுங்கள் என்று தன் சகாக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாரே.
நாத்திகம் என்பது தமிழ் நாட்டில் ஒரு மதமாகத்தான் இருக்கிறது. அதன் ஒரு கடவுள் அல்லது தூதராக தான் இன்றைய தலைவர் செயலாற்றுகிறார்.
அந்த மதத்தின் வெறிதான் உங்களுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒப்புகொள்ளமாட்டீர்களோ?
/////வெறுப்பு கருத்துக்களை காட்டிய பின்பும் அது இல்லை என்று மூணு கால் கதை பேசும் நீங்கள் மத வெறியர்களா.? உங்களுக்கே வெளிச்சம்////
எது ஐயா வெறுப்பு கருத்து மஞ்சக்காமாலை கண்ணுக்குத்தான் எல்லாமே மஞ்சளாக தெரியும் அதுபோல உள்ளது உங்கள் பேச்சு.

உங்களுடன் வாதிப்பதில் அர்த்தமில்லை.
உச்ச கட்ட பெசிமிசம் இப்படித்தான் ஆகும்.

/////இஸ்லாமை -கிருத்துவத்தை ஏன் குறிப்பிட வில்லை என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். எதிரிகள் என்பது, ராட்சதர்கள் என்பதெல்லாம் யார்.? ///////

எதிரி என்றால் மாற்று மதத்தினர் என்று திரும்பி திரும்பி சொல்லாதீர்கள்,
இஸ்லாமிய கிறித்தவர்கள் எமக்கு மாற்று மதத்தினர் அவ்வளவே அவர் வழிபாட்டு தளங்களுக்கும் தகுந்த மரியாதை தரவும், அவர்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளவுமே தயார் என்ற வரிகளை நீங்கள் பலமுறை தளத்தில் வெளியிட்டும் படிக்க வில்லை போலிருக்கிறது.
ராட்சதன் அசுரன் என்று நாத்திகர்கள் உங்கள் பெயருக்கு பின்னால் போடுவதை பார்த்திருக்கிறேன். அசுர ராட்சதகர்களாக இந்து நம்பிக்கையில் கூறபடுபவர் யார் என்று யோசித்து பாரும், பகுத்தறிவை கொஞ்சம் இந்து விளக்கபடியும் நாடு நிலையோடும் யோசித்துபாருங்கள்.

இந்து நம்பிக்கைபடி ராவணன் ஒரு ராட்சதன் அவன் பிறன் மனைவியை கவரும் கயமை குணமுள்ளவன். உங்கள் வார்த்தையில் கூறுவதென்றால் அவன் ஒரு பார்பன குடியில் பிறந்ததால் பார்ப்பனர். ஆனாலும் அவனை அவனின் கெட்ட நடத்தை மற்றும் குணங்களால் அசுரன் ராட்சதன் என்றே உங்களால் பார்ப்பனர் என்று அழைக்கப்படும் இனத்தாரும் அழைக்கின்றனர்.
ஏன் அவர்கள் தன் குளத்தில் பிறந்தவன் என்பதற்காக அவனை நல்லவன் என்று கூறாமல் அவனின் குணங்களுக்காக அவனை ராட்சதன் என்று கூறுகின்றனர்.
இந்து மக்கள் அசுரராய் கருதும் எவரும் அவரின் தீய குணங்களின் பொருட்டே அவ்வாறு அழைக்கபடுகின்றனர், மாறாக இந்து தெய்வத்தை வணங்காததாலோ அல்லது எதிர்த்ததாலோ அல்ல.
எதிரிகள் தன் குழுவுக்குலேயே இருக்க கூடாது என்று நிருபிக்க போராடுகிறீர்.பிற மதத்தினர் அல்ல எதிரியும் ராட்சதரும்.
இந்து குடும்பத்திலேயே பிறந்து இந்து கடவுளையே வணங்கி தவம் இருந்து வரம் பெற்று உலகை ஆட்டி வைத்து காட்டாட்சி நடத்திய நீதி நேரிய தவறியோரே அசுர அல்லது ராட்சச குணமுள்ள ராட்சசர் என கருத படுகின்றனர்.
ராட்சதன் எவரும் இந்து மத கடவுளையே வணங்கினர் என்பதே இங்கு வரலாறாக இருக்கும் பொது அவர்கள் எப்படி ஐயா பிற மதத்தினர் என்று கூறுகிறீர்கள்

/////உங்களது இந்த சப்பைகட்டும் சிந்தனைதான் -மேற்கண்ட வேத வரிகள் தான் , செத்த பசு மாட்டை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. இந்துத்துவ வாதிகள் பசு வதை தடை சட்டம் கேட்பதும் அதற்காகத்தான்/////

எப்படி ஐயா இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது. அப்படி எல்லாம் பார்ப்பனர்கள் இருந்திருப்பின் இங்கு எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக நீங்கள் கருதும் பார்ப்பனர்கள் தன் கொள்கையாக இப்படி நடந்து கொண்டிருந்தாள் இந்நேரம் பலர் உயிருடன் இருக்க முடியாது, ஒவ்வொரு நாளும் பல பசுக்கள் கொன்று தின்ன பட்டுதான் வருகின்றன. ஏதோ செத்த மாட்டை உரித்தவர்களை கொன்றார்களாம் ஏன் அவர்கள் செத்த மாட்டை உரிப்பவரை கொள்ள வேண்டும் உண்மையாய் இருப்பின் தினம் தினம் உயிருள்ள பசுவை கொள்ளும் எத்தனயோ பேருடன் போய் சண்டையிட்டு கொள்ளவேண்டியதுதானே,
இப்பவும் சொல்கிறேன் பசுவை உரித்ததற்காக அவரை கொல் என்ற கட்டளை இந்து வேதத்தில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட வில்லை, மாறாக அவர்களை தண்டிக்க வேண்டி தம் இறைவனிடம் வேண்டும் வரிகளையே குறிப்பிட்டுள்ளீர்.

எந்த இந்துவும் மதத்தின் பெயரை சொல்லி இறந்த பசு உரித்தொரை கொன்றதாக நீங்கள் கூறுவது உண்மை எனும் பட்சத்தில் எந்த இந்துவும் இங்கு ஆதரிக்க மாட்டார், நான் மட்டும் அல்ல எல்லா இந்துக்களும் அந்த கொலையை எதிர்த்தே குரல் கொடுப்பார்.

தெருவுக்கு தெரு பாவிகளே என கூவும் மதவெறுப்பு அம்மதத்தின் வேதத்தினை தெரிந்தோர் தினம் செய்யும் செயல்.
நேற்று வரை குண்டு வைத்து 18 பேரை கொன்றது இணை வைப்போரை கொன்றால் சுவர்க்கம் எனும் வேதத்தின் சொந்தக்காரர்கள்.
இப்படி இந்துமதத்தில் எங்கேனும் குறிப்பிட பட்டு மக்களை கொலவோர் இந்துக்களில் யாரேனும் உள்ளனரா? அப்படி இருப்பின் அவர்களை எதிர்த்துதான் நம் குரல் இருக்குமே அல்லாது ஒருபோதும் ஆதரித்தது அல்ல.
பசு வதையை சட்டமாக்க வேண்டுவோர் மீது இவ்வளவு வெறுப்பு? எந்த மிருகத்தையும் கொல்லகூடாது என்று போராடும் ப்ளுக்ராஸ் தெரியுமா?
அசைவத்தை விட்டு சைவத்தை மட்டும் உண்ணும் பல அமெரிக்கர்கள் அசைவ உணவையும் உயிர்கொலையையும் எதிர்கின்றனர்.(இது மதத்துக்கு அப்பாற்பட்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்),
ஒரு நாத்திகவாதியான அலிசினாவும் சைவ உணவினர்.
திருவள்ளுவரின் புலால் மறுப்பு அதிகாரத்துக்கு தங்களின் பதில்.
யாருக்கும் எந்த கருத்தையும் வெளியிட உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படியில் தான் உங்களை போன்றோரின் வெறுப்பு கருத்துகளும் இங்கு வளம் வருகிறது.
உங்களுக்கு வேண்டுமானால் பசுவதையை தடுக்கும் சட்டத்தை எதிர்த்து போராடுங்கள். உங்களுக்கும் அந்த உரிமை இருக்கிறதுதானே?

முற்காலத்தில் பசு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. ஏன் பத்தாண்டுகள் முன் வரை கூட கிராமங்களில் மக்கள் சொல்வது குடும்பத்திற்கு ஒரு பசு ஒரு தென்னை மரம் ஒரு காணி விவாசய நிலம் இருந்தால் அக்குடும்பம் கஷ்டமின்றி காலம் ஓட்டும் என்று கூறுவார்கள்.

இன்னும் முற்காலங்களில் பசுவின் பாலே, பல தாயில்ல குழந்தைகட்கு தாய்பாலை இருந்து உயிர் காத்தது, அப்போது பிரசவம் என்பது மறு பிறவி என்று சித்தரிக்கப்பட்டது, இப்போதுபோல அறுவை சிகிச்சை வசதி இல்லாமையால் பல தாய்மார்கள் பிரசவத்தின் போது இறந்து போவதுண்டு.

மன்னர்களின் செல்வமாக போற்றப்பட்டது பசு அதனை கவர்ந்து செல்வது தான் எதிரி நாட்டு மன்னன் (அவனும் சத்தியமாய் இந்துதான்) சண்டைக்கு அழைக்கும் சவால். இதனை ஆநிரை கவர்தல் என்று இலக்கியங்கள் கூறுகின்றன, அந்த மன்னனை எதிர்த்து சண்டையிட்டு தன் பசுகூட்டத்தை மீட்டு வருவது ஆநிரை மீட்டல் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு சொத்து மற்றும் வாழ்வாதாரம் என கருத படும் கால்நடைகளை திருடுபவன் அல்லது துன்புறுத்துவதன் மூலம் இழப்பு ஏற்படுத்துபவன் எதிரியாக கருதபடுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

மேலும் மனித உடலுக்கு தேவையான மிருக புரதம் பிற மிருகங்களை கொல்லாமல் அவற்றின் பால் மூலம் வெண்ணை தயிர் பாலாடை போன்று தொடர்ந்து நல்கும், மேலும் இயந்திரங்கள் இல்லாத அக்காலங்களில் கடின வேலைகளை செய்ய வண்டி இழுக்க நிலத்தை உழ என உழவர்களின் உற்ற தோழனாக உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சமுகம் இது. அதனை அழித்து விடாமல் காப்பாற்ற அதனை கோமாதா என்று தெய்வத்தின் லெவலுக்கு உயர்த்தி வைத்திருந்தான்.
முக்ய விஷயம் என்னவென்றால் பசு மாமிசம் உண்ணும் பலர் இந்து தெய்வங்களை வழிபடும் இந்துக்களாக இன்றும் உள்ளனர்.

இன்னோர் நாத்திகவாதி எங்கோ யாகத்திற்காக பசுக்கள் பார்ப்பனர்களால் கொன்று பலியிடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். உங்கள் இருவரில் யாரை நம்புவது

1.யார் பார்ப்பனன் ?
“பார்ப்பனன்” எங்கேயோ கேட்ட வார்த்தை
என்று பார்க்கிறீர்களா ?
தேர்தல் வந்து விட்டாலோ
தோல்விகள் அடைந்து விட்டாலோ
செய்த தவறுகளுக்காக
விமர்சிக்கப் படும்போதோ
தமிழினத் தலைவர்கள்
கூச்சமில்லாமல் கூவும் வார்த்தை
“பார்ப்பனன்” …
இருபத்தேழு வயதான எனக்கே
இப்போது தான் புரிந்தது இதன் அர்த்தம் – அதுவும்
அகராதியைப் பார்த்து தான்
அடடா, நாம் தான் உலகமே தெரியாமல்
வளர்ந்து விட்டோமா என நினைத்து
தேடினேன் என் வேட்கையை
பக்கத்து வீட்டு பத்து வயது
பத்மாவைக் கேட்டேன்
“பார்ப்பனன்” என்றால் தெரியுமா என்று
“எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா,
ஒரு தம்பி பாப்பா”- பதில் வந்தது
புரிந்து கொண்டேன் அவளுக்கு தெரிந்தது
“பாப்பா”னர்கள் தான்
பத்தாவது தவறிய அம்மாவிடம் கேட்டேன்
உனக்கு தெரியுமா யார் “பார்ப்பனன்” என்று ?
”பார்வை இருப்பவர்கள் பார்ப்பவர்கள்”
பதில் வந்தது
மனதில் திருப்தி கிடைத்தது எனக்கு
எண்ணிக் கொண்டேன்
தமிழ்நாட்டிலிருக்கும் நாற்பதுகள் வரை
இதே பதில் தான் கிடைக்கலாம்

ஏன் இந்த “பார்ப்பனன்” ?

ஒரு சில கட்சிகளின் தோற்றத்திற்கு
இந்த சொல்லே மூல காரணம்
ஒரு சில கட்சிகள்
ஆட்சியை பிடிப்பதற்கு
இதுவே “மூலதனம்”
ஆம் …
ஆரியன் நம்மை
அடிமை ஆக்கியிருக்கிறான்
நாம் அடிமைகளாயிருக்கிறோம்
இந்த ஆரிய ஆக்கிரமிப்பிலிருந்து
தேவை மீண்டும் ஒரு விடுதலை
திராவிடரை திராவிடர் தான் ஆள வேண்டும்
ஒலித்தன விடுதலையின் குரல்கள்
அமைந்தது “திராவிடர்” ஆட்சி

யார் திராவிடன் ?

இரண்டு ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்
எகிப்து, சுமேரிய, மெசபடோமியா
இந்த உயர்ந்த பல
நாகரிகங்களிலும் சிறப்பானது
ஒரே நாகரிகம்
அது தான் திராவிட நாகரிகம்
ஆடு மேய்க்க வந்த ஆரியம்
திராவிடத்தை மேய்ந்தது
இது தான் வரலாறு.
தமிழ்நாடு, ஆந்திரம்
கேரளா, கர்நாடகம்
இவர்கள் எல்லாருடைய ஆதியும்
திராவிடம்
ஆனால்
தமிழனுக்கு மட்டும் தான்
கூடவே பிறந்ததா
தன்மான திராவிடம் ?

நான் திராவிடன் அல்ல தமிழன் !

திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில்
தமிழனைத் தவிர எந்த திராவிடனும்
பெருமை அடைவதில்லை
தெலுங்கன், மலையாளி, கன்னடன்
இப்படி அழைப்பது தான்
அந்த திராவிடர்களுக்கெல்லம் பெருமை
ஆனால் இங்கு …
தமிழன் எனச் சொல்வதை
யாருமே ஊக்குவிப்பதில்லை
காரணம்
”திராவிட”க் கட்சிகளின்
தலைவர்கள் யாருமே பிறப்பால்
தமிழர்கள் அல்ல – ஆனால்
திராவிடர்களாம்
தமிழா …
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்
இது தான் நம் தலையெழுத்து
நாமே எழுதிக்கொண்டது !

இனி
திராவிடன், பார்ப்பனன்
பாயிரம் பாடியே நம்மை
பாழாக்கியவர்களை பின் தள்ளுவோம்
“தமிழன்” என்பதில் நாம்
தலை நிமிர்வோம்.

எழுதியவர் நாஞ்சில் ஜெபா http://ujiladevi.blogspot.com/p/forums.html#nabble-td4787565
இத்தளத்தில் உள்ள இக்கருத்து நன்றாய் இருக்கிறது.
நானும்தமிழன் மட்டுமே திராவிடன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.

2.நண்பர் சார்வாகனின் கிழுள்ள இவ்வரிகளும் மிகவும் பிடித்துள்ளது.எங்கும் உள்ள நல்ல விசயங்களை ஏற்பதும் தீயதை சாடுவதும் திருத்த முயல்வதும் சிறந்த விஷயம் தானே.மேலும் சம நோக்கு பார்வைக்காக நண்பரை மிகவும் பாராட்டுகிறேன், நண்பரின் வரிகள்
http://saarvaakan.blogspot.com/2011/09/blog-post_02.html
///நண்பரே
இந்த பகுத்தறிவுவாதி என்பதை விட மத விமர்சகன் என்ற பெயரையே விரும்புகிறேன்.அனைவருக்கும் பகுத்து அறியும் அறிவு உண்டு.திராவிட பாணி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் பட்டம் எனக்கு தேவையில்லை.நான் எந்த மதத்திலும்,நாட்டிலும் உள்ள‌ மனித விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவன்.இந்து மதத்தில் பொருள்முதல் வாதம் சார்வாகம் என்று அழைக்கப் படுகிறது.சமண மதத்தில் கடவுள் இல்லை.இப்போது கெள்விகள்&பதில்கள்./////////

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: