Thiruchchikkaaran's Blog

ரமதான் நோன்பு அனுபவங்கள்- 3

Posted on: August 29, 2011


ரமதான் நோன்பு அனுபவங்கள்- 3

இஸ்லாமியர் ரமதான் நோன்பு நிகழ்வை சுமையாக எண்ணாமல் சுவையாக எண்ணி வரவேற்கின்றனர்.

கடவுளின் மீது மிகுந்த பயபக்தி வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். பயபக்தியோடு கடவுளின் மீதும் அன்பும் உடையவர்களாக இருக்கின்றனர். ரமதான் நோன்பு என்பது கடவுளுக்காக இருக்கப் படும் நோன்பாக அவர்கள்  அதை விருப்பத்துடனே   நோற்கின்றனர்.

என்னைக் கேட்டால் ரமதான் நோன்பின் முக்கிய பகுதி நீர் அருந்தாமல் இருப்பதுதான். உணவு அருந்தாமல் என்னால ஒரு நாள் கூட உண்ணாவிரதம்  இருக்க முடியும். ஆனால் நீர் அருந்தாமல் இருப்பது சிறிது கடினம் – சிறிது கடினம் மட்டுமல்ல- மிகவும் கடினம் ஆகும்.

நான்கு வருடங்களுக்கு முன்னாள் ஒரு ரமதான் மாதம் நெருங்கும் போது என்னுடைய நண்பர்கள நோன்புக்கு தயாரானார்கள். நீங்கள தான் மத நல்லிணக்கவாதி யாயிற்றே, எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்வதில் முனைப்பு கட்டுகிறீர்களே, நீங்கள் என் இராமதானில் நோன்பு இருக்கக் கூடாது என்றனர். count me in  என்றேன்.

எப்போது நோன்பு திறக்க் வேண்டுமோ அதற்க்கு 15 நிமிடங்கள்  முன்பாகவே எனக்கு போன் பண்ணி சொல்லி விடுங்கள் என்றேன். அதிகாலை போன் பண்ணி , சாரி நண்பா , நோன்பு திறந்தாகி விட்டது என்றான். அப்படினா…. அப்படினா இதுக்கு மேலே எதுவும் சாப்பிட குடிக்கக் கூடாது என்றான். கவுத்திட்டியேடா, என்று சொல்லி பல் விளக்கி, குளித்து உடை அணிந்து பணிக்கு சென்றேன்.

எட்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. எத்தனையோ நாள் சா[ப்பிடாமல் இருந்திருக்கிறோம், இன்றைக்கு எப்படி ஆனாலும்  நோன்பு இருப்பது என உறுதியாக இருந்தேன். பத்து மணிக்கு களைப்பாக இருந்தது. எனக்கு அப்போது கட்டுமானப் பிரிவில் பணி. வெய்யில் வேறு சுள் ளென்று   அடித்தது.

வெய்யில் வேறு சுள் ளென்று   அடித்தது.

ஒரு மணிக்கு தலை  சுற்றி நிஜமாகவே கண்ணைக் கட்டுவது போல இருந்தது.  சைட் ஆபீசுக்கு சென்று சேரிலே உட்கார்ந்தேன்.  ஆபீஸ் பாய் வந்து பெப்சி வைத்தான். வேண்டாம் என்று சொல்லி விட்டு, அரை நாள்  லீவு  போட்டு விட்டு  வண்டியை எடுத்து வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன்.

ஆறு மணிக்கு நண்பர்  போன் செய்து நோன்பு முடிந்து விட்டது ஜூஸ் குடிங்க. டேட்ஸ் சாப்பிடுங்க என்றார். பிரிட்ஜில் இருந்து ஜூசை எடுத்து குடித்து விட்டு உடுப்பி ஹோட்டலுக்கு சென்று இட்டில், மசால் தோசை அடித்தேன் (வீட்டில் தாயார் உட்பட அனைவரும் வெளியூர் சென்று இருந்தனர்) .

இரண்டாவது நாளும் விரதம் இருப்பது என்று முடிவு செய்து , அதற்க்கு முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன்.

(தொடரும்)

Advertisements

2 Responses to "ரமதான் நோன்பு அனுபவங்கள்- 3"

வணக்கம் சகோ
நல்ல பதிவு சகோ,
நிங்கள் பரவாயில்லை விரதம் எல்லம் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்.
ந்ம்மால் ஒரு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்.அதுவும் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.பசியை உணர்வது என்பது ஒரு மனித்னை பண் படுத்த்தும் என்பது உண்மைதான்.மதத்தின் இந்த உறுதியாக த்ன்னை வருத்தி பிரார்த்த்னை செய்வது என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஒரு விஷயம்.

நான் விரதம் இருந்தது பற்றி நினைவு கூர்ந்தால் நண்பர் ஒருவர் கூறியது போல் வாரம் ஒரு நாள் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுவது அதுவும் சமைக்காத‌ பழ வகைகள் மட்டுமே.அவ்ரோடு தங்கி இருந்த சுமார் ஒரு 6 மாதம் கடைபிடித்தேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு விட்டு விட்டேன்.அப்போது உடல மிக ஆரோக்கியமாக் ,வலிமையாக இருந்தது.எதை பற்றியும் யோசிக்காமல் எதையாவது கடித்துக் கொண்டே வேலைக்கு ஓட வேண்டியதுதன்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி

வணக்கம் சகோ. சார்வாகன் ,

விரதம் இருப்பது நல்லதுதான். இதில் மிக முக்கியமானது புலனடக்கமே.

சிகரெட் பிடிப்பவர் ஒருவர் படிப்படியாக முயற்சி செய்து அதை விட்டு விட்டால் அவர் தன்னை அறியாமலே ஆன்மீகத்தில் முன்னேறுகிறார் என்று அர்த்தம். அதைப் போல குடிப் பழக்கம் ,அதையும் விடுபவர் ஆன்மீகத்தில் முன்னேறுகிறார் என்றுதான் அர்த்தம்.. இப்படியாக மனிதன் படிப்படியாக தன்னை அடிமைப் படுத்தும் பற்று ஒவ்வொன்றையும் விட வேண்டும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை விட வேண்டும்.

தன மனைவியை தவிர வேறு எந்த பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவளைப் பார்த்தல் ஆசை வராமல் இருப்பவன் எவனோ அவனது ஆன்மீகம் மிக உயரிய ஆன்மீகம் ஆகும்.

எவ்வளவு விரதம் இருந்தாலும் ஒருவரின் மனதிலே வெறுப்புணர்ச்சி இருந்தால் அந்த விரத்தைனால் கிடைக்கும் நன்மைகள் இல்லாமல் போய் விடும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: