Thiruchchikkaaran's Blog

இந்துக்கள் எலியை வணங்குகிறார்களே………!

Posted on: August 29, 2011


//இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆறு, மலை, மரம், மயில், கருடன், எலி, குரங்கு….. என்று கண்ணில் பட்டதை  எல்லாம் வணங்கும் வெகுளித் தன்மை  உள்ள அப்பாவி மக்களாக உள்ளனர்.//

File:Lalbaughcha raja.jpg

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆறு, மலை, மரம், மயில், கருடன், எலி, குரங்கு….. என்று கண்ணில் பட்டதை  எல்லாம் வணங்கும் வெகுளித் தன்மை  உள்ள அப்பாவி மக்களாக உள்ளனர்.

Lord Hanuman's Statue - Vasan, Gujarat

இன்றைக்கு உலகில் வாழும் யாருமே பார்க்காத , உணராத ஒன்றைத் தானே, இருக்கிறாதா இல்லையா என்று யாருக்குமே தெரியாத ஒன்றைத்தானே   கடவுள் எனக் கருத முடியும் ?

கடவுள் என்ற ஒருவர் தனியாக இருக்கிறார் என்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய ஆதாரம் எதையும் யாரும் தராத போதிலும் , அப்படி ஒருவர் இருப்பதாக  நீ நம்பித்தான் ஆக வேண்டும், இந்தா அவர் போட்ட கட்டளைகளாக சொல்லி நாங்கள் தருவதைப் பிடி, நம்ப மறுத்தால், கட்டளைகளுக்கு அடி பணிய மறுத்தால் நரகம் தான் என்று சொல்லுவதுதானே சிறந்த மார்க்கம்?

இந்த இந்துக்கள் இப்படி எலியையும், பன்றியையும், சிங்கத்தையும், குரங்கையும், மரத்தையும், மலையையு ம….. இப்படி பலதையும் வணங்குவதால் வெளி நாட்டினர் இந்தியர்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

இதனால் இந்த எதையும் வணங்காத சில இந்திய சகோதரர்களுக்கு சங்ககடமாக , அவமானமாக உள்ளது. இதைப் பற்றி நம்முடைய அன்பு சகோதரர் சுவனப் பிரியன் ஒரு பின்னூட்டம் அனுப்பி இருக்கிறார்.

//எனது அரபி நண்பர் ஒரு நாள் என்னிடம் அரபு தினசரி ஒன்றை கொண்டுவந்து காண்பித்தார்அதில் 

ஒரு இந்து நண்பர் எலியின் சிலையை மிகவும்பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்ததை காண்பித்து 

உங்கள் நாட்டைகாப்பாற்றும் கடவுள் இவர்தானா?’ என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லிஅவனை சமாளிக்க 

வேண்டியதாகி விட்டது.//

இந்த விடயத்தில் சகோதரர் சுவனப் பிரியன் சமாளிக்க கஷ்டப்படுவதால் , இந்துக்களிடம் விளக்கம் கேட்டு அவற்றை பதிவாக இடுகிறோம்.

சுவனப் பிரியன் ,

நமது அன்புக்குரிய அரேபிய சகோதரரிடம் என் சார்பாக ஒரு விளக்கத்தை அளிக்குமாறு கோருகிறேன். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள், இந்தியாவில் எலியைக் கும்பிடுகிறார்கள், பறவைகளைக் கும்பிடுகிறார்கள், குரங்குகளைக் கும்பிடுகிறார்கள் என்று சொல்லுங்கள். அவர் சிரிப்பார் .

அப்போது அவரிடம் சொல்லுங்கள்.

எந்த விதக் காரணமும் இல்லாமல் ஒருவனைக் குருடனாகவும் , ஏழையாகவும் இன்னொருவனை பணக்காரனாகவும் சௌந்தர்யவானாகவும் படைக்கும் நியாயமற்றவராக கடவுளை சித்தரிக்கும் கோட்பாடை வைத்துக் கொண்டிருக்கும் போது,

இந்த உலகத்தில் இத்தனை பாதகங்கள் நடை பெறும்போதுவானுலகில் இருந்து அவற்றை வேடிக்கை 

பார்த்துக்கொண்டிருப்பவராக கடவுளை சித்தரிக்கும் கோட்பாடை வைத்துக்கொண்டிருக்கும் போது,

அப்பாவியான ஒரு பெண்ணை ஏமாற்றித் தூக்கி சென்ற ஒரு காமக்கொடூர சர்வாதிகாரியிடம் இருந்து 

அவளை விடுவிக்கஎந்த விதபிரதிபலனும் எதிரபாராமல்சுயநலமற்று போராடி அவளின் துன்பம் 

துடைக்க உதவுவதற்காக கடவுள் குரங்கு வடிவில்பறவை வடிவில்வந்ததாக கடவுள் கோட்பாடை 

வைத்துக் கொள்வது மிகச் சிறந்தகோட்பாடே என இந்தியர்கள் சொல்லுகிறார்கள் என சொல்லுங்கள்.

File:Ravi Varma-Ravana Sita Jathayu.jpg

உங்கள் அரேபிய நண்பருக்கு என் அன்பையும் ஸலாமையும்சொல்லுங்கள்.

உங்களுக்கு என் நன்றி.

(மார்ச் மாதம் வெளியிட்ட பதிவை மீள் பதிவாக தருகிறோம். )

Advertisements

3 Responses to "இந்துக்கள் எலியை வணங்குகிறார்களே………!"

வணக்கம் சகோ,
இயற்கையை பாழ்பத்டுதாமல் பிற உயிரினங்கலையும் மதிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வழிபாட்டு முறைகள் வந்திருக வேண்டும் என எண்ணுகிறேன்.
மனிதர்களில் மட்டுமல்ல நம்பிக்கையிலும் உயர்வு தாழ்வு இலை.
நம்பிக்கயாளருக்கு நிரூபணம் அவசியம் இல்லை.நிரூபணத்தின் மீதான் அங்கு ப்க்தி எல்லைக்கு உட்பட்டதாகி விடும்.ஆன்மீகம் ,வாழ்வியல் நடைமுறைகள் இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்வதே முக்கியம்.இரண்டையும் குழப்பினால் சிக்கல்தான்.
நன்றி

Fantastic explanation

Dear Brothers Saarvaakan & Rajan,

Thanks for your opinion!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: