Thiruchchikkaaran's Blog

ஏன்னா,இந்த பத்திரிகைகாரா ஆச்சாரியாளை கிரிடிசைஸ் பண்ணி எழுதறாளே, இது சரியா ?

Posted on: August 28, 2011


காட்சி 1:

(அங்கத்தினர்கள் : ராம கிருஷ்ணன், அவர் மனைவி அம்புஜம், இராமகிரிஷ்ணரின் நண்பர் சுரேசின் மகன் ராகேஷ்.)

(ராமகிருஷ்ணன் வீட்டுக்கு அவரது நண்பரின் மகன் ராகேஷ் வருகிறான் )

ராகேஷ்: ஹாய் அங்கிள்!

ராம கிருஷ்ணன்: வாப்பா, அப்பா எப்படியிருக்கார்?

ராகேஷ்: பைன் அங்கிள், அண்ணா அமேரிக்கவில இருந்து வந்தான். உங்களுக்கு இந்த ஆப்பிள் ஐ போனை கிப்டா குடுக்க சொல்லி அப்பா சொன்னார், அதை குடுக்கத்தான் வந்தேன்!

(ஐ போனை எடுத்து குடுக்கிறான்)

ராம கிருஷ்ணன் (வாங்கிக் கொண்டே) :தேங்க்ஸ் பா, உங்க அப்பா கிட்ட நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு!

ராகேஷ் : ஓகே. அங்கிள் , பை!

ராம கிருஷ்ணன்: இருப்ப, காலங் கார்த்தால வந்திருக்க, காபி  சாப்பிட்டு போ!

பங்கஜம், ராகேஷ்க்கு காபி போடு,அப்படியே எனக்கும் ஒரு கப் காபி கொடு!

பங்கஜம்: வா ராகேஷ், ஹவ் டூ யு டூ?

ராகேஷ்: பைன் ஆண்டி!

(அப்போது வீட்டு வாசலில் அன்றைய செய்தித் தாளை வீசி விட்டு செல்கிறார் . ராமகிருஷ்ணன் செய்தித்தாளை எடுத்துப் படிக்கிறார்.

பங்கஜம் பின்னால் நின்று தலைப்பு செய்திகளைப் பார்வையிடுகிறார்.)

அம்புஜம்: ஏன்னா,இந்த பத்திரிகைகாரா ஆச்சாரியாளை கிரிடிசைஸ் பண்ணி எழுதறாளே, இது சரியா,  இதுதான் மேன்ர்சா ?

ராகேஷ்: ஆன்டி ஸல் ஐ சே சம்திங்?

அம்புஜம்: சொல்லுப்பா!

ராகேஷ்: இதுக்கு முன்னாடி பத்திரிக்கைகள் ஆச்சாரியாளைப் பத்தி புகழந்து எழுதின போது, அதை யாரும் அப்ஜெக்ட் பண்ணினாங்களா ?

அம்புஜம்: இல்லை!

ராகேஷ்: ஆனா விமரிசிக்கும் போது மட்டும் உங்களுக்கு கோவம் வருதே, ஆச்சாரியாள்கள் எல்லாம் இவ்வளவு பிரபலமாக காரணம் பத்திரிகைகள்  தானே, நடமாடும் தெய்வம்… அப்படி இப்படின்னு எத்தனை ஹைப் குடுத்தாங்க…

அம்புஜம்: ராகேஷ் , அப்ப எழுதினது உண்மை, இப்ப எழுதறது எல்லாம் வெறும் புரளிகள்….

ராகேஷ்: ஆன்டி, நீங்க பேசறது அரசியல் கட்சி தொண்டர்கள் பேசற மாதிரி இருக்கு, அவங்க  தான் தன தலைவரைப் பத்தி நல்லதா எழுதும் போது சந்தோசப் படுவாங்க, விமரிசிக்கும் போது ஸ்ட்ராங்கா ரியாக்ட் பண்ணுவாங்க !

அம்புஜம்: ராகேஷ் ஒனக்காக நான் பர்ஸ்ட் டிகாசன் காபி போண்டுட்டு இருக்கேன், நீ இப்படி சொல்றியே !

ராம கிருஷ்ணன்: நீ செத்த சும்மா இருடி ! ராகேஷ், யூ ஆர் ஆன் யங் பாய் , ஒனக்கு  பல விசயங்கள் தெரியாது , இந்து விரோத சக்திகள் இந்து மதத்தை அழிக்க செய்கிற சதிதான் இதெல்லாம்!

ராகேஷ்: அங்கிள் காவல் துறை அரசாங்கத்தின் கீழே வருது, காவல் துறை ஏன் சதி செய்யணும் ?

ராம கிருஷ்ணன்: அதான் நான் முன்னாலேயே சொன்னேன், நீங்க எல்லாம் யங் பாய்ஸ் என்று. காவல் துறையை திசை திருப்பி  இந்து விரோத சக்திகள் சதி செய்கின்றன அப்படின்னு தான் இந்து பாதுகாப்ப இயக்கங்கள் எல்லாம் சொல்கின்றன!

ராகேஷ்: இதனால இந்து மதத்துக்கு எப்படி பாதிப்பு வருதுன்னு சொல்றீங்க?அது எப்படி அங்கிள் , இந்து மதம் ஒன்னும் இல்லாம போகும், இந்துக்கள் கோவிலுக்குப் போகிறாங்க, சபரி  மலைக்கு மாலை போட்டுக்கிறாங்க , முருகன் கோவிலுக்கு காவடி எடுக்கிறாங்க, கோவிலில்  கும்பலுக்கு குறைவு  இல்லை. என்னவோ நீங்க தான் இந்து மதத்தை தாங்கற மாதிரி இல்ல இருக்கு ஒங்க பேச்சு !

(தொடரும் )Advertisements

4 Responses to "ஏன்னா,இந்த பத்திரிகைகாரா ஆச்சாரியாளை கிரிடிசைஸ் பண்ணி எழுதறாளே, இது சரியா ?"

வணக்கம் சகோ
பதிவு படித்தேன் .கொஞ்சம் குழப்பமாக் இருக்கு அடுத்த அத்தியாயம் படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.சரி பொதுவாக சொல்கிறேன்.ஒரு வழக்கு நடக்கும் போது ஏதேனும் புதிய அத்தாட்சி ஏதேனும் கிடைத்தால் நீதிமன்றம் அத்னை ஏற்று தண்டனை வழங்கினால் அத்னை பத்திரிக்கைகள் செய்தியாக் வெளியிட்லாம்.அதற்கு முன் ஊகங்கள் ,கதைகள் எல்லாம் வெளியிடுவது பொறுபற்ற தனம்.
நன்றி

சகோ.சார்வாகன் ,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

இந்தக் கட்டுரையிலே உங்களுக்கு எந்த கருத்து குழப்பத்தை அளிக்கிறது என்று சுட்டிக் கட்டினால் நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மற்றபடி ஒரு வழக்கு நடைபெறுகிறது , அதில் சிலர் மேல் குற்றம் சாட்டப் பட்டு நீதி மனறத்தில் வழக்கு நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னார் மேல் குற்றம் சாட்டப் பட்டுள்ளது என்று பத்திரிகைகள் எழுதலாமா கூடாதா?

பத்திரிக்கைகள் சொல்வதில் எத்தனை உண்மை, எத்தனை கப்சா என்று சொல் ல இயலாது. ஆனால் அதற்க்கு முன்பே பத்திரிகைகள் தவறாக எழுதுகின்றன என்றால், மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தால், கணிசமாக தொகையை அவர்களிடம் கேட்டுப் பெற்றால் அடுத்த முறை அப்படி எழுத தயங்குவார்கள்.

வணக்கம் சகோ
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது ச்ஸ்பென்ஸ் ஆக இருக்கிறது அவ்வளவுதான்.ஒருவர் தண்டிக்கப் படும் வரை ந்ம் நட்டில் குற்றவாளி இல்லை.வழக்கு நடக்கும் போது அது குறித்த தகவல்களை ஆதாரபூர்வமாக படசபாதமின்றி வெளியிடுவது மட்டுமே ஊடகங்களின் வேலை.பெரிய ஆட்கள் யாரிடமாவது நடந்து கொண்டிருக்கும் எந்த வழக்கு பற்றி கருத்து கேட்டால் அது நீதிமன்றத்தில் உள்ளது என்று மட்டும் கூறிவிடுவர்.
விமர்சனம் எழுதட்ட்டும் யாரும் விதிவிலக்கு அல்ல.அதில் ஒரு கட்டுப்பாடு அவசியம்.அட்சி மாற்றம் என்றவுடல் நேற்றைய நாயகன் வில்லன் அவதும்.வில்லன் நாய‌கர் ஆவதும் சக்ஜம்தானே!!!!!!.

மக்களுக்கு தகவல்களை கொடுக்க வேண்டிய வை வூடகங்களே. உதரணத்துக்கு போபர்ஸ் பீரங்கி விவகாரத்தில் இன்று வரை யாரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் படவில்லை , அது சம்பந்தமாக எந்த நீதி மன்றத்திலாவது வழக்கு நடந்ததா என்பது எனக்கு தெரியாது, அப்படியானால் அது பற்றி பத்திரிக்கைகள எழுதி இருக்கவே கூடாது என்று ஆகுமே ! வூடகங்கள் எந்த அளவுக்கு கச்சிதமாக தகவலகளை தருகின்றன என்பது வேறுபடுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: