Thiruchchikkaaran's Blog

ஜே.பி.Vs இந்திரா காந்தி , வி.பி. சிங் Vs ராஜீவ் காந்தி, ஹசாரே Vs ராகுல் காந்தி! – Part- 1

Posted on: August 26, 2011


//வளைந்து நெளிந்து கூனிக் குறுகி பல்லைக்காட்டி சலாம் போடுபவர்களை சந்தித்தே பழக்கப் பட்ட ராகுல் காந்தி இன்றைக்கு மக்களின் போராட்டத்தைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்.//

எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல கோவம் கொப்பளிக்கிறது அருமை அண்ணன் ராகுல் காந்தி முகத்தில். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயலும் போது சிடுசிடுக்கிறார்.  ஹசாரேவின் போராட்டம், ராகுல் காந்திக்கு எதிராக் நடத்தப் படும் போராட்டம் அல்ல. அது வூழல் செய்வது தங்கள் உரிமை என எண்ணி மக்கள பணத்தில் உப்பி உல்லாச வாழ்க்கை நடத்தும் எல்லா வூழல் வாதிகளுக்கும் எதிரானது. ஆனால் முற்புதர் மேல் கால் வைத்தது போல ரியாக்ட் குடுக்கிறார் ராகுல் காந்தி.

அப்பா, பாட்டி, கொள்ளுத் தத்தா என பல அரசியல்வாதிகளின்   செயல்பாடுகளையும் அறிந்தவர் ராகுல் காந்தி . அண்மையில் :உலகின் “மாபெரும்” ஆங்கில நாளேடான தி ஹிந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பிரதமராக ராகுலே வர வேண்டும் எனப் பலர் விரும்புவதாக “கருத்துக் கணிப்பு” வெளியிட்டு இருந்தனர். வெறும் எம்.பி. பதவியில் இருந்து கொண்டே மிகப் பெரிய அரசியல் அதிகாரத்தை தன கையில் வைத்திருந்தது சோனியா குடும்பம் . நல்ல பேர் வந்தா நமக்கு, கெட்ட பேர் வந்தா அது கேபினெட் அமைச்சர்களுக்கு என்கிற அட்வான்டேஜ் வைத்து இருந்தனர். இன்னும் சொல்லப் போனால் ராகுல் காந்தியும் அவ்வப்  போது “மக்களின் உரிமைகளுக்காக ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட்டம்” நடத்தி இருக்கிறார் – அதாவது அவரது கட்சி மத்தியில்  ஆட்சியில் இருக்கும் போதே.

இந்தியாவை  நேரு  குடும்பத்தை சேர்ந்தவர்கள்  தான் ஆள முடியும் , ” ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) இந்தியனுக்கு” nநம்மை விட்டா வேறு யாரு தலைமை தாங்க முடியும் என்று நேரு குடும்பத்தினர் எண்ணியிருந்தால் அதில்  வியப்பில்லை. வெகுளியான இந்திய மக்கள் வெளுத்ததெல்லாம் பால் என எண்ணக் கூடியவர்கள்.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவருக்கு நேரடியாக கிடைத்த அரசியல் அனுபவங்கள் என்ன? குறைந்த எண்ணிக்கையில் எம்.பி.களை வைத்துக் கொண்டே எப்படி வெற்றி கரமாக ஆட்சி நடத்துவது, கூட்டணிகளை எப்படி அமைப்பது , பாராளு மனறத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அதை எப்படி ” சமாளிப்பது”…. இத்யாதி வகையாரா வை தனது தாயார் சோனியா கடந்த 8 வருடங்களாக செவ்வனே செய்து வருவதை ராகுல் காந்தி பார்த்திக் கொண்டுதான் இருக்கிறார். இதோடு பதவி கேட்டு அலையும் தன்னுடைய சொந்தக் கட்சிக் காரகளை அடக்கி வை ப்பது, அதை சமாளிக்க சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது என அனைத்து அரசியல் சித்து விளையாட்டுகளையும் நன்கு கற்று இருக்கிறார் ராகுல். எனவே இந்த  நம்பிக்கை இல்லா தீர்மானம், கூட்டணி பிரச்சினைகள், உள் கட்சி வேலைகள் .. இதுதான் தான் சமாளிக்க வேண்டிய விவகாரம், லைப் ஈஸ் ஸோ சிம்பிள் என்கிற ரேஞ்சில் இருந்தது – பத்து நாட்களுக்கு முன் வரை !

இன்னும் சொல்லப் போனால் இதே ராம் லீலா மைதானத்தில் இரண்டு  மாதங்களுக்கு முன் கட யோக குரு  ராம் தேவும் அவரது ஆதரவாளர்களும் அடித்து விரட்டப் பட்டனர். ராம் தேவ சுடிதார் அணிந்து கொண்டு தப்பை ஓட முயன்ற போது விடாமல் விரட்டிப் பிடித்து அவரைக் கைது செய்து டில்லிக்கு வெளியே கொண்டு போய் விட்டனர். பிலியன் கணக்கில் சொத்து வைத்திருக்கும் ராம் தேவும், அப்படியே புலமபலோடு முடித்து விட்டார். இத்தனைக்கும் ஆறு மதங்களுக்கு முன்பு வரை யோக குரு ராம்தேவ் , இந்தியாவிலும் வெளி நாட்டிலும் பலராலும் அறியப் பட்டவர் , அன்னா ஹசாறேவை விட அவர் பிரபலமாக இருந்தார்.

இந்த நிலையில் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையும் போலீஸ் கைது, அரசியல் சித்து விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் முடித்து விடலாம், அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா…என்று நினைத்திருந்த னர்  காங்கிரெசின் தின்க் டேன்க் குகளான பிராணாப், அம்பிகா  சோனி, கபில் சிபல் , ப,சி… உள்ளிட்டோர். எனவே இந்த ஜுஜூபி போராட்டங்களை எல்லாம் நம்ப பசங்களே பாத்துவுக்குவாங்க, என்று ராகுல் நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை.

ஆனால் போராட்டம் தீவிரம் அடைந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள வெள்ளமென திரண்டு தெருவுக்கு வந்து போராடும் நிலையில் அதை சமாளிக்க கபில், சிபல், அம்பிகா சோனி வகையாராக்களிடம் திட்டம் எதுவும் இல்லை அவர்கள் இவ்வளவு தூரம் போகும் எதிர் பார்க்கவும் இல்லை.

இப்போது விடயத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது ராகுலும், மன் மோகன் சிங்கும் தாம். தன்னுடைய தம்பிக்கு உதவும் வகையில் பிரியங்காவும் ” ஸ்டேட் மென்ட்” விட்டு கை கொடுக்கிறார்.

பெயரில் மட்டுமே காந்தி என்னும் அடை மொழியை வைத்திருக்கும் திருவாளர் ராகுல் காந்தி தன்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக காந்தீய போராட்டம் என்றால் என்ன என்பதை நேருக்கு நேர் பார்க்கிறார். காந்தியின் கோட்பாடுகளில் இருந்து காங்கிரெஸ் முற்றிலுமாக விலகி பல வருடம் ஆகி விட்டது. இன்றைக்கு பல காங்கரஸ் புள்ளிகளின் சித்தாந்தம் என்வென்றால், தங்கள் கட்சியை ஆட்சியில் வைத்திருக்க கூடிய அளவுக்கு மக்கள செல்வாக்கு படைத்தவர்கள் நேரு குடும்பத்தினர் மாத்திரமே, நாம் அவங்களுக்கு சலாம் போட்டு துண்டு துக்கட பதவிகளைப் பெற்றுக் கொள்வோம் என்பதுதான். இப்படி வளைந்து நெளிந்து கூனிக் குறுகி பல்லைக்காட்டி சலாம் போடுபவர்களை சந்தித்தே பழக்கப் பட்ட ராகுல் காந்தி இன்றைக்கு மக்களின் போராட்டத்தைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்.

அவருடைய அன்னை சோனியா காந்தியோ உடல் நலம் இன்றி இருக்கிறார் . இந்த இக்கட்டான நிலையில் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும், இதற்க்கு முன் அவருடைய பாட்டி இந்திரா காந்தி ஜெய பிரகாஷ் நாராயணனை எப்படி சமாளித்தார், அவருடைய தந்தை ராஜீவ் காந்தி வி.பி.சிங்கை எப்படி சமாளித்தார்… இப்போது நடக்கும் போராட்டமும் அதே போன்றதா என்பதை அடுத்த கட்டுரையில்  தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும் )

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: