Thiruchchikkaaran's Blog

ஏ ரசிக்கும் சீமானே வா, ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் !

Posted on: August 24, 2011


//போலீசால் தேடப் பட்டு வந்த மிகப் பிரபல மாமா சிக்கினான். அவன் டைரியில்

இருந்தநடிகைகள் மற்றும் வி.ஐ.பி. க்களின் லிஸ்டை பாத்து போலீசாரே

அதிர்ச்சி அடைந்தனர்.அவனை தூண்டி துருவி விசாரித்த   போது, பல செய்திகள் கிடைத்தன. பெங்களூரில்

உள்ள ஒரு மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் தன்னுடைய கிளயன்ட்டை என்டர்டெயின்  செய்ய விரும்பி இந்த காமத் தரக்கனை அணுகியதாம் …… “//

என்பது போன்ற செய்திகளை வெளியிடுவது  தமிழ் பத்திரிகைகளுக்கு

அல்வா தின்பது போன்றது !

இது விடயமாக திரைப் படத் துறையினரின் மாபெரும் போராட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது பலருக்கு நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினி, “வயிற்றுப் பிழைப்புக்காக … இரண்டு வேளை உணவுக்காக …. தானே அப்படி செய்கிறார்கள்” என்று மனம் உருகும் ரீதியில் பேசி அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.  சத்யராஜ் , விவேக் , சூர்யா போன்றவர்கள் எல்லாம் ரொம்ப வீராவேசமாக பேசினார்கள்

வயிற்றுக்கு சோறில்லாத கஷ்டம் என்றால் கட்டிடப் பணிக்கு கூட தமிழ் நாட்டில் ஆள் கிடைக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆள் வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்த  பட்சம் 250 ரூபாய் கிடைக்கிறதே , அதிலே இரண்டு வேளை உணவு கிடைக்காதா  என்று யாரும் கேட்டு விடக் கூடாது, அப்படிக் கேட்டால் “சட்டம்” அவர்கள் மேல் பாய்ந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

இவை போன்ற செய்திகள் பரபரப்பை உண்டு பண்ணுகின்றன. பலர் இவற்றை படிக்கவும் செய்கின்றனர். இவை பற்றிய செய்திகளுக்கு சில நண்பர்கள மிகவும் உல்லாசமான பின்னூட்டங்களை இட்டு மகிழ்வார்கள்.

சில நண்பர்கள் “அடப் போயா, நாட்டுல எவ்வளவோ அநியாயம் நடக்குது, எத்தனையோ கொள்ளை அடிக்கிறாங்க, பயங்க ர வாதி குண்டு வெடிக்கிறான் … இதை எல்லாம் விட்டு விட்டு … இந்த விடயத்துல இவ்வளவு பெரிய ரெய்டு எதுக்கு?

அவன் கிட்ட கோடிக் கணக்கில சொத்து இருக்கு, அவ கிட்ட அழகு இருக்கு, அவளுக்கு பணம் தேவை, அவனுக்கு அழகான பொண்ணு தேவை, இரண்டு பெரும் அக்ரீ பண்ணி செய்யுறாங்க. சிங்கபூர் மாதிரி இங்கயும் செக்ஸ் தொழிலை லீகளைஸ் செஞ்சுடலாம்”  என்ற வகையில்  கூட  கருத்து தெரிவிக்கின்றனர்.

நாம் இந்தக் கட்டுரையின் மூலமாக முக்கியமாக சொல்ல வருவது  என்னவென்றால் செக்ஸ் தொழிலானது  இளம் சிறுமிகளை எவ்வளவு பயங்கர நரகத்தில் தள்ளக் கூடியது என்பதையே.

புகையிலை , மது போன்ற சமூக  விரோத தொழில்களை விட சமூகத்துக்கு மிக ஆபத்து விளைவிக்கக் கூடியது விபச்சாரத் தொழிலே என்பதை நாம் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்!சமீபத்தில் கேராளவில் ஒரு அப்பாவி இளம் சிறுமி விபச்சாரத்தில் தள்ளப் பட்டு பலரால் சீரழிக்கப்  பலர் செய்திதாள்களில் படித்திருக்கக் கூடும். தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட தன்னுடைய காம நாய்த் தனத்தை காட்டி அந்த சிறுமியை சீரழித்து இருக்கிறான். 

   File:Hogarth-Harlot-1 crop.png

விபச்சாரத் தொழில் -அது மேல் மட்டத்தில் ஒரு இரவுக்கு இருபது லட்சம் என்று எல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்களே, அந்த விபச்சாரமாக இருந்தாலும் சரி , அல்லது ஆர்டினரி லாட்ஜில் இருநூறுக்கு ம முன்னூறுக்கும் நடப்பதாக சொல்லப் படுவதாக  இருந்தாலும் சரி – மொத்தத்தில் எந்த விபச்சாரம் இல்லாமல் போக வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லுகிறோம் நண்பர்களே !

நமக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் விபச்சாரத் தொழில் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும் என்று சொல்லுவது சரிதானே நண்பர்களே. விபச்சாரத் தொழில் சீரும் சிறப்புமாக வளர்ந்தால் சிறுமிகள் கட்டயாமாக விபச்சாரத் தொழிலில் புகுத்தப் பட்டு நரக வாழ்க்கை வாழ்வது தொடர்ந்து கொண்டே இருக்கும்!

விபச்சாரத் தொழில் இருக்கும் வரை காமத் தரகன் (மாமா) / தரகி இருந்து கொண்டு, புதியதாக உருவாகிக் கொண்டுதான் இருப்பான். அவன் /அவள் தன்னுடைய தொழிலுக்காக சிறுமிகளை விபச்சாரத் தொழிலில் ஈடு படுத்திக் கொண்டே தான் இருப்பான்.  இந்த ஆபத்து எந்த ஒரு சிறுமிக்கும் நேரிடலாம் என்பதை மறந்து விடக் கூடாது!

File:Étienne Jeaurat 001.jpg

(தொடரும்)

Advertisements

2 Responses to "ஏ ரசிக்கும் சீமானே வா, ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் !"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///நாம் இந்தக் கட்டுரையின் மூலமாக முக்கியமாக சொல்ல வருவது என்னவென்றால் செக்ஸ் தொழிலானது இளம் சிறுமிகளை எவ்வளவு பயங்கர நரகத்தில் தள்ளக் கூடியது என்பதையே.///

100 க்கு 1000 % சதவிதம் உண்மையான வார்த்தைகள்.உண்மையைச் சொல்வதென்றால் பல இளம் பிள்ளைகள் விபச்சாரத்தில் தள்ளுவதற்காகவே கடத்தப்படுகிறார்கள்.பல அழகான வாலிபர்களை வைத்து பெண்களை காதல் வலையில் விழவைத்து விபச்சார விடுதிகளில் தள்ளப்படுகிறார்கள்.

இந்த கேடுகெட்ட போலி முற்ப்போக்கு வாதிகள் விபச்சாரத்த்தை ஆதரிக்கிறார்கள்.ஏனென்றால் முர்ப்போக்குவாதியாக வேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டுவதும்,இஸ்லாத்தை கொண்டாடுவதும்,இந்துமதத்தை இகழ்வதும்,மட்டுமல்ல,விபச்சாரத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பதுவுமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: