Thiruchchikkaaran's Blog

சொர்க்கம் மதுவிலே, சொக்கும் அழகிலே …..!

Posted on: August 24, 2011


பணி விசயமாக ஒருவர்  வேறு நகரில் சில காலம் தங்கி இருக்கும் நிலை உருவாகிறது. அங்கே கிடைத்த கூட்டாளிகள்  மாலையில் சரக்கு (மது)அடிக்குமாறு அழைத்து செல்கின்றனர்,  சரக்கு அடித்தபிறகு பக்கத்திலேயே ஒரு நல்ல பிகர் இருக்கிறது, போய் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்கிறார்கள். அங்கேயும் போகிறார் . இரவு ஒரு மணிக்கு ரூமுக்கு வந்து படுக்கிறார். காலையில் எழுந்தால் மனதில் அமைதி இருக்குமாஇதே போல தொடர்ந்து செய்தால் மன வலிமை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் குன்றி விடும் வாய்ப்பு உள்ளது!

 

வேறு கூட்டாளிகள்  அவரை  இராம கிருஷ்ண மடத்துக்கு இட்டு செல்கிறார்கள், தியான மண்டபத்தில் சிறிது நேரம் மனதை கட்டுப் படுத்தி  தியானம் செய்கிறார்.மனதில் அமைதி உருவாகிறது. அப்படியே சுவாமி விவேகானந்தரின்  ஆன்மீக நூல்களை வாங்கி வந்தால் இரவில் அதைப் படித்து விட்டு, ஒரு கிளாஸ் சூடான பால் குடித்து விட்டு உறங்கி விட்டால் காலையில் எழுந்திருக்கும் போது புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கிறார் !

இப்போது இந்த மனிதரின் போக்கிற்கு காரணம் யார்- அவருடைய கூட்டாளிகள்!

ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நண்பர்களின் கூட்டம் மிக முக்கியமானது. நல்ல நட்பு நல்லதை தரும், மயங்கிய நிலையில் இருப்பவரின் நட்பு மயக்கத்திலே கொண்டு போய் விடும்!

ஒரு மனிதன் எந்த அளவுக்கு தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறானோ அந்த அளவுக்கு அவனால் அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாத நிலை உருவாகிறது.

தன் மனதை கட்டுப் படுத்த இயலாத மனிதன் தறி கெட்டு ஓடும் வண்டியைப் போன்ற நிலையை அடைந்து விடுகிறான். அந்த வண்டி யார் மேல் மோதி எங்கே போய் விழும் என்று சொல்ல இயலாது.

எந்த ஒரு  மனிதனும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் வலிமை உடையவன், சூழ்நிலை, நண்பர்கள் கூட்டம் இவைகள் ஒருவரின் போக்கை மாற்றும் தன்மை உடையவனாக உள்ளன.

ஒரு மனித எப்போதும் நல்லவர்களுடனே கூடி இருக்க வேண்டும். எப்போதும் என்பது முக்கியமானது. சிறிது நேரம் மயக்க சிந்தனையில் உள்ளவர்களோடு சேர்ந்தாலும் அவன் மனம் பேதலிக்கும் நிலை தோன்றி விடக் கூடும்.

எப்போதும் நல்லவர்களோடு கூடி இரு.. அதனால் நீ மயக்கத்தில் இருந்து விடுபடுவாய்   என்கிறார் சங்கராச்சாரியார் !

//எப்போதும் நல்லவர்களுடன் சேர்ந்து இரு, அப்படி

எப்போதும் இருந்தால் உன் மனதில் ஆசையும், குழப்பமும் , மயக்கமும் இல்லாமல் போகும்

ஆசையும்,  மயக்கமும் , குழப்பமும் நீங்கிய மனம் உறுதியான மனம் ஆகும்

உறுதியான மனம் உடையவனின் உயிர் விடுதலை அடைகிறது !//

 

சத் சங்கத்வே நித் சங்கத்வம் 

நித் சங்கத்வே நிர் மோஹத்வம்  

நிர் மோஹத்வே  நித்சல தத்வம்

நித்சல தத்வம் ஜீவன் முக்தி 

( பஜ கோவிந்தம், சங்கராச்சாரியார் )

மயக்கம் என்பது தண்ணி போடுவதால் உருவாவது மட்டும் அல்ல, மோஹம் என்பது பெண்களின் மேல் உருவாகும் ஆசையை மட்டும் குறிக்காது. பெண்கள், பணம், ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு…. இவை எல்லாம் நமக்கு மகிழ்ச்சியை தரக் கூடியவை , நாம் இந்த உலகத்தில் இன்னும் இன்னும் சந்தோசமாக , சௌக்கியமாக , நிலயாக வாழ்வோம் என்று தப்புக் கணக்குப் போடுவதுதான் மனம் உண்மையை அறியாத மயக்க நிலையில் , மோஹ நிலையில் இருப்பது ஆகும். மயக்கம் நீங்கியவன் உண்மையை உணர்ந்து துன்பத்தில் இருந்து விடுதலை பெருகிறான்!

 

( குறிப்பு: இந்தக் கட்டுரையில் சிவப்பு நிற எழுத்துக்களில் உள்ளவை சங்கராச்சாரியாரின் (ஆதி சங்கரரின்) கருத்துக்கள ஆகும். )

Advertisements

1 Response to "சொர்க்கம் மதுவிலே, சொக்கும் அழகிலே …..!"

நல்ல பதிவு சகோ .
பூரண மதுவிலக்கு என்பதை ஆள்பவர்கள் மறந்து பல் நாட்கள் ஆகிவிட்டது.குடிப்பது பள்ளிமானவர்களுக்கு கூட தொர்றிவிட்டது கவலைக்குறிய
விஷயம்
நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: