Thiruchchikkaaran's Blog

நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ!

Posted on: August 22, 2011


காரணமில்லாமல் யாரயுமே வெறுக்க வேண்டியதில்லை, எந்த ஒரு கோட்பாட்டையும் வெறுக்க வேண்டியதில்லை. எந்த ஒரு கோட்பாட்டையும் ஆராய்ச்சி செய்கிறோம், மக்களுக்கு நன்மை இருந்தால் எடுத்துக் கொள்கிறோம், பிரச்சினை என்றால் அதை விலக்குகிறோம். இது நல்ல செயல் பாடுதானே.

கம்யூனிசத்திலும் மக்கள் நனமைக்கான கோட்பாடுகள் உள்ளன. கேபிடலிசத்தாலும் நன்மைகள் உண்டு இரண்டிலும் உள்ள நல்ல கோட்பாடுகளை எடுத்துக் கொள்வோம்.

இதிலே கடவுள் நம்பிக்கையில் முக்கிய கவனம் செலுத்தும் கோட்பாடாளர்களும் உள்ளனர்.

வெளிப்படையாக சொன்னால் இன்றைக்கு உலகிலே யாரும் கடவுளை பார்த்ததும் இல்லை. கடவுள் இருப்பிற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் எதையும் யாரும் தரவில்லை. ஆனாலும் யாரவது அமைதியான முறையிலே கடவுளை வணங்கிக்  கொண்டால் அதிலே நாம் ஆட்சேபிக்க ஒன்றும் இல்லை.

ஏதோ மனக் கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் என்று நம்பிக்கையை உருவாக்கும் விதமாக பலர் வழிபாட்டு தளத்திற்கு செல்லுகின்றனர். சில பேர் கடமையாக எண்ணி வழிபாடு செய்கின்றனர். எப்படி இருந்தாலும் சரி, அவர்களை  நாம் இகழவில்லை. அவர்கள் வணங்கும் கடவுளையும் நாம் இகழவில்லை. கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ – நாம் ஏன் வெறுக்க வேண்டும்? நாம் வெறுக்கவில்லை, அதனால் எல்லோர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுகிறோம்.

நல்லிணக்க அடிப்படையிலே இந்த உலகில் உள்ள எல்லா மதத்தவரின் விழாக்களிலும்,  வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம். ஏனெனில் இது மத சகிப்புத் தன்மையை வளர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஆகும்.

அவர்கள் வழிபாடு நடத்தும் போது நாம் கண்ணை மூடி, மற்ற எல்லாவற்றையும் மறந்து மனக் குவிப்பு செய்கிறோம். அப்படி செய்வது மனதில் அமைதியை உருவாக்குகிறது. சர்ச்சைப் பார்த்தால்   இயேசுவின் கொள்கையை நினைவு கூர்கிறோம்,  கோவிலைப் பார்த்தால் இராமரின் கொள்கையை நினைவு கூர்கிறோம். மசூதியைப் பார்த்தால் முகமது  நபியின் கொள்கையை நினைவு கூர்கிறோம், காந்தி சிலையைப் பார்த்தால் காந்தியின் கொள்கையை  நினைவு கூர்கிறோம், பெரியாரின் சிலையைப் பார்த்தால் பெரியாரின்  கருத்துக்களை நினைவு கூர்கிறோம்.

பகுத்தறிவுவாதிகளான நமக்கு எந்த ஒரு கோட்பாட்டையும் பகுத்தறிவு ரீதியிலே ஆக்க பூர்வமாக அணுக தயக்கம் இல்லை. பகுத்தறிவுக்கு ஒப்புக் கொள்ளக் கூடியவற்றை ஒப்புக் கொள்கிறோம். பகுத்தறிவால் ஆராயப் பட்டு  நிரூபணம் ஆகாதவை வெறும் நம்பிக்கையாக  மாத்திரமே உள்ளது, எல்லா நம்பிக்கையும் உண்மை என்று ஆகி விட முடியாது, நிரூபிக்கப் பட்டால் அன்றி.

ஆனால் நம்பிக்கை கோட்பாட்டு சகோதரர்கள் நாம் இவ்வளவு நல்லிணக்கம் காட்டியும் திருப்தி அடைவது இல்லை. அவர்கள் சொல்வதை வார்த்தைக்கு வார்த்தை மறு பேச்சின்றி ஒத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்கு கடவுள் என்கிற ஒருவரை  நிலை  நிறுத்த வேண்டும். ஆனால் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் (verfiable proof)எதுவும் அவர்களிடம் இல்லை.

ஆனாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. உலகத்திலே மனிதர்கள் கண்டு பிடித்த எல்லாவற்றையும் அவர்கள் ஒன்று திரட்டுவார்கள்.  வெப்பவியல் கோட்பாடு,  ஆற்றல் மாறாக் கோட்பாடு, ஐன்ஸ்டீன்  பார்முலா, இருதயம் எப்படி இயங்குகிறது ….. இப்படி ஸ்கூலில் , கல்லூரியில் படித்த பாடங்களை எழுதுவார்கள். எல்லாவற்றையும் எழுதி முடித்து கடைசியில் ஒரே ஒரு வார்த்தை, இவ்வளவு நேர்த்தியாக இந்த உலகம் இயங்குவதில் இருந்தே இவை எல்லாம் கடவுளால் படைக்கப் பட்டவை என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரே ஒரு வாக்கியத்தை சேருங்கள் . கடவுளை நிரூபணம் செய்தாகி விட்டது என்று நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

சரி அப்பவும் ஒத்துக் கொள்ளவில்லையா,  பிரச்சினை இல்லை,  மின் காந்த விதிகளை எடுத்துக் காட்டலாம். மூளை எப்படி இயங்குகிறது, கண் எப்படி பார்க்கிறது…. பார்த்தீர்களா கடவுள் எவ்வளவு கவனமாகப் படைத்து இருக்கிறார்….. !

சரி இப்பவும் ஒத்துக் கொள்ளவில்லையா?  அடுத்து வேதியல் விதிகளை எடுத்துக் கொள்வோம், கிட்னியை எடுத்துக் கொள்வோம்…. இப்படியே போகும்.

என்ன ஐயா, இவை எல்லாம் மனிதன் தானே கண்டு பிடித்தான், இதை அப்படியே கடவுள்  பேருக்கு மாற்றிக் கொள்கிறீர்களே, இது சரியா, இது அறிவு நாணயமா?

“தம்பி இதை எல்லாம் கண்டு பிடித்தது மனிதன், ஆனால் படைத்தது கடவுள் ….. புரியுதா?” என்பார்கள்.

“சரிங்க, அந்தக் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் எங்கே ?”

“… அதுதாங்க இது …  ” என்று செந்தில் போலக் கலக்குவார்கள்!

“கடவுள் இருப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுக்கவே இல்லை. அம்மை நோய்க்கு தடுப்பு, பெனிசிலின்  மருந்து … இப்படி பல நோய்களுக்கும்  மருந்தை மனிதன் கஷ்டப்பட்டு  தேடிக் கண்டு பிடித்து இருக்கிறான். இவற்றை எந்த மதப் புத்தகத்திலாவது கண்டு பிடித்து கொடுத்தார்களா?

மனிதன் பகுத்தறிவை உபயோகித்து கண்டு பிடித்து இருக்கிறான். எப்படிக் கண்டு பிடித்தான் என்று படிப்படியாக நிலைகளையும்  சொல்லியும் இருக்கிறான்.

இப்படி மனிதன் எல்லாவற்றையும் கண்டு பிடித்து இருப்பதை நீங்கள் எடுத்துப் போட்டு எல்லாம் கடவுளுக்கு மகிமை என்று சொல்கிறீர்களே, இதில் கொஞ்சமாவது உண்மை,  நியாயம் இருக்கா?

கடவுள் இருப்பதற்கான ஆதாரத்தை தரப் போவதாக சொல்லி விட்டு, மனிதர்கள் இங்கே இருப்பவற்றைப் பற்றிக் கண்டு பிடித்ததைக் காட்டுகிறார்கள்!”

“எல்லாம் ஓக்கே தான் தம்பி, கடவுள் இருப்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். இனி எங்களுக்கு அடுத்த வேலை இருக்கிறது,  இப்ப இன்னும் சில பார்ட்டிகள், அவர்களும் கடவுள் இருப்பதை நிரூபித்து விட்டதா சொல்லுராங்க, அவங்க நிரூபணம் பொய், நாங்க நிரூபித்ததுதான் உண்மை என்பதை அவர்களுக்கு காட்டப் போகிறோம், நேருக்கு நேர் வாக்குவாதம் இருக்கு … அதனால் நாங்க இப்ப  கொஞ்சம் பிசியாக இருக்கிறோம், அப்புறம் பாக்கலாமா? நன்றி.”

“அண்ணே, கடவுளுக்கான நிரூபணம் கொடுக்கப் பட்டு விடவில்லை, ஆனாலும்   நான் உங்களுடன் இணக்கத்தையே விரும்புகிறோம். உங்கள் மத விழாக்களில் பண்டிகைகளில் கலந்து கொள்ளத் தயார்,உங்கள் வழிபாட்டு முறைகளை உங்களோடு சேர்ந்து கடை பிடிக்க தயார்! “

“தம்பி, அதைத்தான்  ஆரம்பத்திலேந்தே  சொல்லுறீங்களே,  ஆனால் எங்க வழிபாட்டு முறைகளை மட்டுமே கடைப் பிடிக்க வேண்டும், சரியா?”

“ஏன் அண்ணே, எல்லோரோடையும் இணக்கமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை அண்ணே.”

“அடடா…., சரி நீங்க அடுத்த வாரம் வாங்க, பேசுவோம்…”

“அடுத்த வாரம் என்ன அண்ணே?”

“லண்டன்ல புதுசா விண்வெளி  பற்றி   ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளி இட்டு இருக்காங்க, அதை பிரதி எடுத்து வைப்போம்…!”

(This article is originally published in our blog on January and republished here)

Advertisements

5 Responses to "நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ!"

அருமையான் பதிவு,
அதாவது கடவுளை எதார்த்த வாழ்வில் உணர முடியாது.ஒன்று பிரபஞ்ச தோற்றம் குறித்து பெசுவார்கள் ,இல்லையேல் குவாண்டம் மெக்கானிக்ஸ் ப‌ரிணாம எதிர்ப்பு என்று விள‌க்குவார்கள்.
இன்னும் கொஞ்சம் போனால் அறிவியல் ஏற்கெனவே மதத்தில் கூறப்பட்டு இருக்கிறது என்பார்கள்.இவ‌ர்களை கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது.
______________

பல மதங்கள் மறுமை வாழ்வு குறித்து பல விதமாக் கூறுகின்றன.அவை உண்மையா என்று நம்மால் அறிய முடியாது.ஆகவே “கண்டவர் வின்டிலர்,விண்டவர் கண்டிலர் “மாதிரி மதம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது.நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்.பிடித்தல் பின்பற்றலாம். கட்டாயம் இருக்க வேண்டியது இல்லை. இதனை ஏற்காத மனிதர்களால் மதசார்பற்றவர்கள் ஆக இருக்க முடியாது.
__________________
ஆனால் ஒரு நாட்டில் பல இன,மத,மொழி மனிதர்கள் வாழும் போது ஒன்று பட்டு இருக்க வேண்டிய அவசியம் உருவாகிறது.என் மதம்,கோட்பாடு மட்டுமே சரி அத்னை அனைவரையும் மாற்றி ஏதாவது ஒரு வழியில் கொண்டு வருவதே இலட்சியம் என்பவர் பிரச்சினைக்கே வித்திடுகிறார். இன்னும் சிலர் சிறுபானமையினராக இருந்தால் மத சார்பின்மை வேண்டும் என்றும் , பெரும்பானமையினர் ஆனால் மத ஆட்சி என்றும் இரட்டை வேடம் போடுவது
மதச்சார்பின்மையின் விள்க்கத்தையே கேள்விக்கு உரியதாக்குகிறது.

____________________
இந்தியாவில் மதசார்பின்மை நீடிக்குமா? என்பதே இப்போதைய கேள்வி

நண்பரே,
மத நம்பிக்கை வைப்பது என்பது ஒரு தனிமனிதனின் உரிமை. கவனமாக வார்த்தையை பார்க்கவேண்டு. “faith” என்றுதான் கூறுகிறார்கள்.
நான் இப்பொழுது உலகை தட்டை என்று நம்புகிறேன். அதில் யாருக்கும் பிரச்சனையில்லை. என் நம்பிக்கை அதுதான் என்று சொல்வதிலும் பிரச்சனையில்லை (loose பையன் என்பார்கள்).
ஆனால் அந்த நம்பிக்கை தான் உண்மை (fact) என்று கூறும்போது, பல பிரச்சனைகள் வரும். எதிர் கேள்விகள் வரும். பதில் சொல்லி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

மதங்கள் மனிதனுக்கு moral virtuous வாழ்க்கை வாழ்வதற்கான கருத்துகள் தருகின்றன, அது அந்த அந்த காலதிற்கும் மாறும். ஆனால் மாறாத அடிப்படை மனித உரிமைகள் இருக்கத்தான் செய்கின்றன. மதங்கள் எந்த காரணதிற்காக வந்தன அதன் செயல்பாடுகள் தற்போதுள்ளா உலக வாழ்க்கையில் எந்த நிலையில் வைக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கவேண்டும்.

இதை விட்டு விட்டு, எங்கள் மதம்தான் சிறந்தது மற்றவர்களுடன் ஒத்து போக மாட்டோம் என்று தங்களின் சீடர்களை உசுப்பேத்தினால் எல்லாவிதத்திலும் சமூக பிரச்சனைகள் தான் நேரிடும்.

அருமையான பதிவு….மிக்க நன்றி.

Brothers Saarvaakan, Naren

Many thanks for your valuable opinions!

அருமையான பதிவு.
“… அதுதாங்க இது … ” என்று செந்தில் போலக் கலக்குவார்கள்!
உண்மையிலேயே செந்திலின் நகைசுவை காட்சிகள் பார்ப்பது போலவே இருக்கும்.

Brother Smaathaana Virumbi,

Thanks for your visit and comments!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: