Thiruchchikkaaran's Blog

கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக்கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!

Posted on: August 20, 2011


பிரமிப்பு – கிரிஷ்ணரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு தோன்றுவது  இதுவே.

தன்னைக்  கடவுள் என்று அறிவித்துக் கொண்டே ஒரே ஒருவராக அவர் இருந்திருக்கிறார்.  தான் கடவுளே என்றும், உலகம் உட்பட எல்லா அண்டங்களும் தன்னிலே இருப்பதாகவும், தான் எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பதாகவும், தான் மனித வடிவில் வந்திருப்பதாகவும்  அத்தாரிட்டியுடன் சொன்னவராக இருந்திருக்கிறார் கிருஷ்ணர்.

மனிதன், மனிதனின் வாழ்க்கை, மனிதனின் உயிரின் தன்மை , மனிதன் அடையக் கூடிய உச்ச கட்ட நிலைமை ஆகியவற்றை பற்றிய ஆழமான கருத்துக்களை விளக்கி இருக்கிறார்.

உலகத்திலே உள்ள பல மதங்களையும் நாம் ஆக்க பூர்வமாக அணுகி,   அவற்றில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து இருக்கிறோம். பல்வேறு   மத நூல்களிலும் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை  அளிக்கக் கூடிய  கருத்துக்கள் இருப்பதையும் நாம் கண்டு இருக்கிறோம்.  நான்  படித்த ஆன்மீக நூல்களில்   மிகவும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாக, பிரமிக்க வைக்கும் சிந்தனைகளின் தொகுப்பாக கிருஷ்ணர் சொன்ன பகவத் கீதை உள்ளது.

 

பிற மார்க்கங்களின் மீது எந்த ஒரு சிறிய வெறுப்புக் கருத்தையும் கிரிஷ்ணரின் கருத்துக்களில் காண இயலவில்லை. இனவாத கருத்துக்களோ  , மொழி வாத கருத்துக்களோ கீதையில் இல்லை. சமோஹம் சர்வேஷு , நான் எல்லோரிடமும் சமமாக இருக்கிறேன், யாருக்கும் எனக்கு வேண்டாதவர் இல்லை என்று சொல்கிறார். 

 

உலகத்திலே பல மதங்கள் நம்பிக்கையின் (faith) அடிப்படையிலே அமைக்கப் பட்டு உள்ளன. புத்த மதம் போன்ற சில  மதங்கள் , மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் பகுத்தறிவு அடிப்படியிலே அமைக்கப் பட்டு உள்ளது.

பகுத்தறிவு  அடிப்படையிலே ஆன்மீகத்தை அணுக விரும்புவோரும் சரி, நம்பிக்கை அடிப்படையிலே ஆன்மீகத்தை அணுக விரும்புபவராக இருந்தாலும் சரி, இருவருக்குமே பொருத்தமான ஆன்மீக முறைகளை கிருஷ்ணர் கீதையில் வழங்கி இருக்கிறார்.

பகுத்தறிவு அடிப்படையிலே வாழ்க்கையை ஆராய்பவருக்கு ஆரம்ப பாடமாக இந்திதிரியார்த்தேஷு வைராக்கிய மன அஹங்கார  ஏவ ச, ஜன்ம மிருத்யு ஜரா வியாதி சுக துக்க அனுதர்ஷன – பிறப்பு, இறப்பு மூப்பு, சாக்காடு உள்ளிட்ட வாழ்க்கையின் இன்ப துன்பங்களை ஆராய்ந்து, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு  ஆன்மீக வாழ்க்கையிலே முன்னேற விரும்புகிறவன் ஞானி என்று ஆன்மீக ஆரய்ச்சியாளனைக்  குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட ஆன்மீக உணர்வாளன் தன்னை தானே ஆன்மீக ரீதியாக உயர்த்திக் கொண்டு, அமைதியான மன நிலையை அடைந்து, இன்பத்தில் நாட்டமில்லாத, துன்பத்தில்  துடியாத உறுதியான மன நிலையை அடைய முடியும், ஆன்மீக முயற்சிகளை மேற்கொண்டு, அவன் வாழும் காலத்திலேயே அவன் அடையக் கூடிய உச்ச கட்ட மனவலிமையை, எல்லா  உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் நிலையை,  அடைய முடியும் என்கிறார்.  முயற்சி செய்து பாருங்கள், நீங்களே உணர்வீர்கள என்று பகுத்தறிவுக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய ஆன்மீக முறையை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

ஆன்மீகத்தில் முழு வெற்றி பெரும் மனிதன் என் நிலையை அடைந்து  விடுகிறான் என்று சொல்லியதன் மூலம்  மனிதன் கடவுளாக முடியும் என்கிற ஆச்சரியக் கோட்பாட்டை சொல்லி இருக்கிறார்.

அதே நேரம் இந்த உலகின் ஆசாபாசங்களில் சிக்கி தவிக்கும் மக்களையும் கை விடாமல், நானே கடவுள் உங்களை நான் காப்பாற்றுவேன் என்று சொல்லி, நம்பிக்கை யோடு  தன்னை வணங்கினால் காப்பாற்றுவேன் என்று அபயம் தருகிறான்.

என்னுடைய பக்தன் தீய வழியில் சென்றாலும் விரைவில்  நல்ல  வழிக்கு வந்து விடுவான் என்கிறார்.

கீதையில் சொல்லப் பட்டு இருக்கிற கருத்துக்களை , சிந்தனைகளை விளக்குவது எளிதான காரியம் அல்ல.

ஆதி சங்கரர், இராமானுஜர், மாதவர் போன்ற மிக சிறந்த தத்துவ அறிஞ்கர் களே, கீதைக்கு உரை எழுதி விளக்கி உள்ளனர்.

கிருஷ்ணர் சொன்ன கீதை என்பது ஒரு மிகச் சிறந்த ஒளி போன்றதுதாகவும் , வெவ்வேறு வூடகங்கள் அந்த ஒளியை தம்முள் வாங்கி பிரதிபலித்திருப்பதாக கருதலாம்.

என்னால் முடிந்த அளவுக்கு கீதையை, கிரிஷ்ணரை  நான் புரிதல் செய்த வகையை விளக்குகிறேன்.

(தொடரும்)

Ref: (Title: கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக்கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!)

Advertisements

2 Responses to "கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக்கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!"

நண்பரே
please continue.

krishna is the supreme Godhead and Krishna is the Paramathma,
All others are atma (people, siva, ganesa, prahma, indira,)
பகவத்கீதாவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் ‘நானே எல்லோரின் தந்தை’ (14 – 4 ).
இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன்
‘என்னை வரவேற்பவர்கள் எந்தனை பேரோ அவர்கள் எல்லாம் கடவுளின் திருக்குமரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்’ (யோவான் 11 -12 ).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: