Thiruchchikkaaran's Blog

அன்னா ஹசாரேவை அமெரிக்கா ஆதரிப்பதாக, காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறதைப் பற்றி ….

Posted on: August 20, 2011


இன்றைக்கு மன்மோகன், ராகுல் காந்தி, அம்பிகா சோனி, ப.சி. கபில் சிபல் வகையறாக்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்திருப்பது அன்னா ஹசாறேவின் போராட்டங்கள் தான். பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் எதிரிகளை சமாளிப்பது கூட காங்கிரசுக்கு பெரிய பிரச்சினை இல்லை.

ஆனால் மக்களின் வரிப் பணத்தை வூழல் செய்து உடம்பையும், சுவிஸ் வங்கி கணக்கையும் உப்ப வைக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒரு அணியாகவும்தங்களின் பணத்தை வரியாக செலுத்தி விட்டு அது கொள்ளை அடிக்கப் படுவதைப் பார்த்து ஆவேசம் கொண்ட மக்கள் ஒரு அணியாகவும் பிரியும் நிலை உருவாக்கி விட்டது.

“தேசத்தை காக்கிறேன், தேசத்தை முன்னேற்றுகிறேன்”, என்று பான் கேக், பவுடர் மேக்கப் போட்டுக் கொள்ளாமலே  காங்கிரசும், பிற கட்சிகளும் பேசிய வசனங்கள் மக்கள் முன் ஈடுபடுவது கஷ்டம் என்று ஆகி விட்டது.

இதற்க்கு முன்னாலே,  உடலை   வளைத்து ஹட  யோகா செய்யும் கலையில் நிபுணரான ராம் தேவ் அரசாங்கத்துடன் மோதிப் பார்த்தார். ஆனால் அவரின் போராட்டத்தை காங்கிரஸ் அரசு எளிதாக பெண்டு எடுத்து விட்டது.  ராம் தேவுடன் கூடியிருந்தவர்களை நள்ளிரவில் அடித்து நொறுக்கி விரட்டி விட்டது. அதோடு ராம் தேவின் போராட்டம் வலிமை இழந்து விட்டது. ராம் தேவ் தொடர்ந்து போராடாதது ஏன் என தெரியவில்லை. இந்தியாவின் பிரபல ஆன்மீக வாதிகள், மத பிரச்சாரகர் போலவே ராம் தேவும் பல கோடிகளை தனது டிரஸ்ட்டுக்கு உடமையாக  வைத்துள்ளார். பணம் வைத்துள்ள யாரும், தங்கள் பணத்தை காக்க விரும்பினால், அதற்க்கு அரசாங்க இயந்திரத்தின்  உதவி தேவை, அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்பது மக்கள்  அறிந்ததே!

ராம் தேவை விரட்டி ஓட விட்டதில்  வெற்றி கண்ட  காங்கிரஸ் , அதே போல அன்னவையும் விரட்டி விடலாம் , ஆனால் கும்பல் கூடியவுடன் அடித்து விரட்டினால் பத்திரிக்கை கள் அதை பெரிய செய்தி ஆக்குகின்றன,  சுப்ரீம் கோர்ட் கூட அது ஏன் என கேக்கிறது என்பதால், இந்த முறை இன்னும் எளிதாக மேட்சை ஜெயிக்க விரும்பிய காங்கிரஸ் , இந்திராவின் டெக்னிக்கை கையில் எடுத்தது. அதாவது அரசியல் எதிரிகளை  நள்ளிரவில், விடியல் காலையில் வீட்டிலேயே கைது செய்து , ஜெயிலில் போட்டு முட்டிக்கு முட்டி தட்டுவதுதான் இந்திரா அம்மையாரின் ஸ்டைல் !

ஆனால் அண்ணாவின் போராட்டத்தை நசுக்குவதற்கு மக்களிடம் இவ்வளவு எதிர்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. நேருவின் குடும்பம் மாத்திரமே இந்தியாவை ஆள முடியும், நேருவின் வாரிசுகள் மட்டுமே இந்தியாவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு ஒத்து வூதி மக்களை சுரண்டுவதை செவ்வனே செய்து முடிப்போம் என்று செயல் படும் காங்கிரஸ் “நேத்தா”க்களுக்கு மக்களின் போராட்டம் அதிர்ச்சியைக் கொடுத்தது. மக்களின் போராட்டம் இப்படி இருக்க

இந்த நிலையிலே பாராளுமன்றத்திலே “மத அடிப்படைவாத” கட்சியான பி.ஜே.பி.யும், “போலி மதச்சார்பின்மை வாதி”களான கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாக சேர்ந்து, அன்னா ஹசாரேவை கைது செய்தது தவறு என்று போராட்டம் நடத்தியவுடன் காங்கிரஸ் தளைகள மூட் அவுட் ஆகி விட்டன.

இது என்னடா இது இவங்க ஒண்ணா கூடிக்கினாங்களே என்று கலங்கிய காங்கிரஸ் “அறிவுஜீவிகள்” பிரிட்டிஷ்காரரின் பிரித்தாளும் முறையை கடைப் பிடித்தனர்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு அமேரிக்கா என்றால் ஆகாது. சோவியத் காலத்தில் இருந்தே இந்திய கம்யூநிஸ்ட்டுகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு என்பது பேவரைட் சப்ஜெக்ட். மேலும் நாட்டிலே எந்த பிரச்சினை வந்தாலும் அதை “வெளி நாட்டு சதி” என்று சொல்லி சமாளிப்பது இந்திரா காந்தியின் வழக்கம். இதை எல்லாம் யோசித்தே, “அமேரிக்கா, அன்னா ஹசாரேவை தூக்கி விடுகிறது” என்று பிரச்சாரம் செய்தால் ஒரே நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகளை அன்னா ஹசாரேவுக்கு எதிராக திருப்புவதோடு, மக்களையும் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று மனப் பால் குடிக்கிறது இந்திரா குடும்பத்துக்கு ஜால்ரா போட்டு மகிழும் கும்பல். 

ஆனால் அன்னா ஹசாரேவுக்கு இவ்வளவு ஆதரவு வரக் காரணமே வூழலுக்கு  எதிரான மக்களின் கோவம் தான்.  வரி கட்டுவோரின் எண்ணிக்கை முன்பை விட இப்போது அதிகமாகி விட்டது. பெட்டிகடை வைத்திருப்பவர், ஆட்டோ ஓட்டுபவர்கள் இவர்கள் கூட வருமான வரி, வியாபார வரி, சொத்து வரி….  என பல வரிகளும் செலுத்த  வேண்டியதாக உள்ளது. 50,000ரூபாய் வங்கியில் டிபாசிட் பண்ண சென்றால்  என்றால் கூட பான் கார்ட் கேக்குரார்கள். 

“நாம  இவ்வளவு கஷ்டப் பட்டு வரி கட்டுறோம், இவனுங்க நம்ம பணத்தை கொள்ளை அடிச்சு வெளி நாட்டுல பதுக்கிரானுங்களே” என்று மக்கள் கோவமாக உள்ளனர். அதுதான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக வெளி வருகிறது. 

இதை புரிந்து கொள்ளாமல், ” ராகுல் காந்தி போன்ற நேரு குடும்ப வாரிசுகள் மட்டுமே இந்தியாவில் செல்வாக்கு உள்ள தலைவர்களாக இருக்க முடியும், அவர்களுக்கு ஜால்ரா போட்டு நாம குட்டி பதவிகளைப் பிடிப்போம், போராட்டங்களை நசுக்குவோம்… என்று மியூசியத்தில் வைக்க வேண்டிய சித்தாந்தங்களை விதித்துக் கொண்டு அழகு பார்க்கின்றனர்  காங்கிரஸ் “தலைவர்”கள்!

இந்த நிலையில் ‘அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கிறது என்பதி சுட்டிக் காட்டுகிறோம்” என்று ஆரம்பித்து, இந்தப் போராட்டாம் இந்திய நாட்டை நிலைகுலைய வைக்க வெளிநாட்டு சக்திகள் உருவாக்கிய சதி என்கிற ரீதியில் கொண்டு போய், வூழல் ராஜ்ஜியத்துக்கு எந்த பங்கமும்  வராத படிக்கு மக்களை திசை திருப்புவதில் வூழல் ஆதரவு சக்திகள் வெற்றி பெற முடியுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் அமேரிக்கா அடித்துப்  பிடித்துக் கொண்டு,  “நாங்க அன்னாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை” என சொல்லி இருக்கிறது.
 

ஆனால் அமேரிக்கா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் அன்னா பிரபலம் ஆகி விட்டார். சீனாவின் வலைத்  தளங்களில் , அன்னாவை இராண்டாம் காந்தி என்றும் அன்னா போல ஒருவர் சீனாவுக்கு கிடைப்பாரா என்றும் எழுதுவதாக சில நண்பர்கள் சொல்லுகின்றனர். 
அன்னாவுக்கு இவ்வளவு ஆதரவு பெருகக்  காரணம் இந்தியாவில் சாதாரண மக்களின் மனதில் வூழலுக்கு எதிரான கோவமும், அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராட முனையும் தைரியமுமே என்பதை முக்கியமாக சொல்லுகிறோம்!
Advertisements

1 Response to "அன்னா ஹசாரேவை அமெரிக்கா ஆதரிப்பதாக, காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறதைப் பற்றி …."

சத்யமேவ ஜெயதே
அண்ணாவுக்கு ஆதரவு கொடுப்போம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: