Thiruchchikkaaran's Blog

முற்போக்குவாதியாக வேண்டுமா, இந்தியாவை திட்டுங்கள், சுதந்திரத்தை இகழுங்கள் !

Posted on: August 15, 2011


இன்றைக்கு முற்போக்குவாதி என்று காட்டிக் கொள்ள வேண்டுமானால் இந்தியாவை இகழ வேண்டும், சுதந்திரத்தினால் பலன் இல்லை என்று சொல்ல  வேண்டும் என்பது போல ஒரு டிரென்ட் உள்ளது!

இந்தியாவில் இல்லாமல் இலங்கையிலோ, பாகிஸ்தானிலோ, வங்காள தேசத்திலோ , பர்மாவிலோ, தாய்வானிலோ, நேபாளிலோ, கம்போடியாவிலோ பிறந்து இருந்தால் இன்றைக்கு நாம் இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா என்று நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

பள்ளியில் இலவசக் கல்வி இல்லாமல் இருந்திருந்தால் நாம் படித்திருப்போமா,

ஸ்காலர்சிப் நமக்கு எந்த அளவுக்கு உதவியது!

அண்ணா பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகள் இவை நம்மை திறமைசாலியாக்கவில்லையா?

இப்போது அரசுப் பணியிலும், கார்ப்பரேட் நிருவனங்க்ளைளும், வெளி நாட்டிலும் பணி புரிந்து பொருள் ஈட்டி வாழ்கிறோம் என்றால் அதற்கு  இவை எல்லாம் காரணம் இல்லையா?

ஈழத்திலே, வன்னியிலே சீரும் துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில், கற்பழிக்கப்  படுவோமோ, கொல்லப் படுவோமா என அஞ்சி முள் வேலிக்குள் அடை பட்டு வாழ்பவரை சிந்தித்துத்ப் பார்த்தால்,

பாகிஸ்தானிலே பிறந்து வெளி நாட்டிலே வாழும் எக்ஸ்பாட்(exspat) பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை, அதே நாட்டிலே செட்டிலாக வேண்டும், இல்லை என்றால் பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ குடியுரிமை பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறானே, பொருளாதார, சமூக, அரசியல் நிலை பாகிஸ்தானில் மேலும் மேலும் பின்னைடவு அடைகிறதே, இதை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால்,

நேபாளத்திலோ, தாய்லாந்திலோ அடிக்கடி போராட்டம் நாடே ஸ்தம்பிக்கிறது,

தாய்வான் மக்கள் எந்த நேரம் சீனக் காரன் தங்களை விளுங்குவானோ என கத்தி தலைக்கு  மேல் தொங்கிய  நிலையில்!

வங்காளதேசத்திலும், பாகிஸ்தானிலும் பாதி நேரம் இராணவ ஆட்சி, மீதி நேரமும் ஜனநாயகம் என்ற பெயரில் இராணுவத்துக்கு கட்டுப் பட்ட ஆட்சி !

அமேரிக்கா, பிரிட்டன் அருமையான  ஜனநாயக நாடுகள், ஆனால் உங்கள் சம்பளத்தில் பாதியை வரியாக கட்டுங்கள், அந்த வரிப் பணத்தில் மிகப் பெரிய குண்டுகள் செய்யப் பட்டு உலகத்தில் வேறு மூலையில்  பல்லாயிரக் கணக்கான மக்கள தலையில் அந்த குண்டுகளை போடுவார்கள், உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, நீங்கள் பாரிலே இரண்டு பெக் அடித்து விட்டு டிஸ்கோதேவில் ஆடலாம், நீங்கள் வரியாக கட்டிய பணம் பல மக்களின் தலையில் குண்டுகளாக விழுந்து  உயிரைக் குடிப்பதை மறந்து விட இன்னொரு பெக் அடித்தல் போரும்.

கம்யூனிசம் என்ற பெயரில் சக காம்ரேடு முதல் தான் சந்தேகப் பட்ட எல்லோரையும் கொன்று குவித்த புரட்சி கம்யூனிசத்தை மக்கள் தலை  முழுகினாலும்,  வரலாறு நினைவுறுத்துகிறது!

இந்தியாவில் சாலைகளில் குப்பை கூளங்கள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தடுகிறது … ஆனாலும் லஞ்சம் வாங்குறவன் அப்பப்ப மாட்டுறான், ஜெயிலுக்கும் போகிறான்…

சாதி வேறுபாடுகளினால் பாதிப்பு… ஆனாலும் கடந்த நூறாண்டுகளில் கணிசமான மாற்றம் உள்ளது… இன்னும் மாறி முழுமையான சமத்துவம் உருவாகும்… நாம் தான் அதை செய்ய வேண்டும்….

எவ்வளவோ செய்ய முடியும், மாற்ற முடியும்,

ஆனால் தமன்னாவையும், கத்ரீனாவையும் ரசிப்பதற்கும்,

டெண்டுல்கர், டோனியை புகழ்வதற்கும்,

ரஜினி விஜய்க்கு கட் அவுட் வைத்து  பாலாபிசேகம் செய்வதற்கும்,

மத சகிப்புத் தன்மையை அழித்து தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற மத வெறிப் பிரச்சாரத்துக்கும்,

போலி ஆன்மீக வாதி காலி ல்  விழுவதற்கும்,

தன் சொந்த  ஜாதி சங்க தலைவரை பெரிய அரசியல் சக்தியாக்க திட்டம் தீட்டுவதற்கும்,

மக்கள் இயக்கம் என்று சொல்லி க் கொண்டு  கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்கும் ,

ஜனநாயகம் என்ற பேரிலே வாரிசு ஆட்சியைக் கொண்டு வர உழைத்து வாரிசுகளுக்கு வால் பிடித்து வாழ முயற்சி  செய்வதற்கும்

இதற்க்கேல்லாமே நேரம் பற்றவில்லை.

எனவே இன்ஸ்டன்ட் முற்போக்குவாதியாக மிகச் சிறந்த வழி, இந்தியாவைத் திட்டுவது, இந்தியர்களை வைவது, சுதந்திரத்தினால உபயோகம் இல்லை என்பது!

Advertisements

5 Responses to "முற்போக்குவாதியாக வேண்டுமா, இந்தியாவை திட்டுங்கள், சுதந்திரத்தை இகழுங்கள் !"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///எனவே இன்ஸ்டன்ட் முற்போக்குவாதியாக மிகச் சிறந்த வழி, இந்தியாவைத் திட்டுவது, இந்தியர்களை வைவது, சுதந்திரத்தினால உபயோகம் இல்லை என்பது!///

மிகச் சரியாகக் கூறினீர்கள்.மேலும் இந்துமதத்தை இகழ்வதும், கிருஸ்தவ,முக்கியமாக இஸ்லாமிய மதத்திற்கு சொம்பு தூக்குவதும் முற்ப்போக்குவாதியாகக் காட்டிக்கொள்வதற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

தனபால் சார் ,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

பல கருத்துக்களை ஏற்கிறேன் திருச்சிக்காரரே!
இந்து மதத்தை பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துவது,இந்தியாவை இகழ்வது,அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவூதி அரேபியாபில் நடப்பவற்றை கண்டுகொள்ளாமல் விடுவது தன்னை ஒரு முற்போக்குவாதியாக காட்டி கொள்ள உதவும். தனது இன மக்களை கொன்றுகுவித்த இலங்கை பயங்கரவாதியை தனது தலைவனாக ஏற்று கொண்டு இந்தியாவை இழிவு படுத்தினால் தமிழ் பற்றாளர் ஆக முடியும்.

Dear Samaathana Virumbi,

Thanks for your participation,

If a person knows Indias history , can understand and interpret the truthness of the common Indian, he will become a good Indian- whatever the religion he belongs to he become a true Indian like our respected Abdul Kalam sir.

அன்பு திருச்சிகாரரே

இங்கு முற்ப்போக்கு வாத்திய இல்லையா? என்பதற்கு எந்த ஒரு தம்பட்டமும், அதற்க்கு இந்தியாவை மட்டும் சொல்ல வேண்டும் என்பது இல்லை இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. தாய் நாட்டில் பிறந்த ஒருவன் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்ற ஒருவன் தாய்நாட்டின் சுதந்திரம் பற்றி பேசுகிறான் குறை சொல்லிக்கிறான் என்றால் அது அவனுக்காக அல்ல அவனை விட கீழே உள்ள அடித்தட்டு மக்களின் நிலைமையை எண்ணித்தான். நீங்கள் எடுத்துக்கட்டிர்க்கு சொன்ன நாடுகளைப் போல எந்நாளும் சொல்ல முடியும். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளில் நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எதுவும் இல்லை நம் நாடு ஏன் அதுபோல் இல்லை? . நூறுகோடி பேருக்கு மேல் இருக்கும் நாட்டில் தங்கப் பதக்கம் வாங்க ஒரு பத்து பேர் இல்லையா? இல்லை பலர் சொல்வது போல் இந்தியர்கள் திறமை சாலிகள் இல்லையா?

இந்தியாவின் புகழ்பெற்ற நகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஆகிய நகரங்களை முழுமையாக சுற்றி பாத்திருக்குரீர்களா? அங்கு எந்த குறையும் இல்லை என்று சொல்ல முடியமா? பன்றிகள் வாழுமிடத்தில் மனிதர்கள்? அதாவது சுதந்திர இந்தியாவின் பிரஜைகள், இந்நாட்டு மன்னர்கள்.

நீங்கள் பெருமையாக நினைக்கும் அளவிருக்கு இங்கு ஒன்றுமே நடந்துவிடவில்லை. அது நடந்த பின்புதான் சுதந்திரத்தைப் பற்றி பேச அதை அனுபவிக்க நாம் உரிமையானவர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: