Thiruchchikkaaran's Blog

அறிவை தரும் ஒளியைக் கோரும் காயத்ரி மந்திரம்! (எல்லோரும் பூணூல் அணியலாம் – பகுதி 2)

Posted on: August 13, 2011


காயத்ரி மந்திரம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு செய்யுள். இந்த காயத்ரி மந்திரமானது தற்போது பல்வேறு பாடகர்களால் பாடப்பட்டு காசெட்டுகளாகவும், சி.டிக்களாகவும் இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் பல்வேறு வீடுகளில் கேட்கப் பட்டு வருகிறது.

இந்த மந்திரத்தின் பொருள் என்ன, அதன் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்குகிறோம். இந்த கட்டுரையை “எல்லோரும் பூணூல் அணியலாம்” என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக வெளியிடுகிறோம் என்பதைக் குறிப்பிடுகிறோம். ஏனெனில் பூணூல் அணிந்த பின், ஆன்மீக முயற்சிக்கு உதவும் முறைகளில் காயத்ரி மந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது.

ஆன்மீகம் என்பது மனிதன், விடுதலை  அடைந்த நிலையை, துன்பம், இன்பம் இரண்டையும் கடந்த அமைதி நிலையை அடைவது என்பதாக முன்பே சொல்லி இருக்கிறோம்.

 இப்போதைய நிலையில் நாம்  சூழ்நிலையின் தாக்கத்தால் இயற்கையின் விதியால் கட்டுண்டு இருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும் அவ்வப்போது அடி வாங்கி , இறுதியில் மாபெரும் அடியை- மரண அடியை பெறுகிறோம்.   எந்தக் கோமானாக இருந்தாலும் இதற்க்கு  விதிவிலக்கல்ல.

முதலில் சிறு குழந்தையாக இருக்கிறோம், பிறகு சிறுவனாக, பிறகு வாலிபனாக, பிறகு முதியவனாக …இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் நான் யார்?  சாகும் போது உடலுடன் சேர்ந்து நானும் அழிகிறேனா, அல்லது உயிர் என்ற ஒன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறதா?இதற்க்கு விடை என்ன? உண்மை என்ன?  இனி என்ன நடக்கப் போகிறது, இன்னும் எத்தனை கஷ்டங்கள், வரவுகள், செலவுகள், எதுவுமே தெரியாமல் இருட்டாக இருக்கிறதே. எதுவுமே தெரியவில்லை. கும்மிருட்டு.

எந்த ஒரு கருத்தானது இத்தகைய இருளில் இருந்து ஒளிக்கு இட்டு செல்லக்  கூடுமோ,  எந்த ஒரு நிலையானது   அழியும் நிலையில் இருந்து அழியாத  நிலைக்கு இட்டு செல்லுமோ, அந்த உண்மையை ஒருவன் தானே உணரும்போது, அவன் விடுதலை  பெறுகிறான். அந்த ஒளி யை அடைவதே என் குறிக்கோள், அந்த ஒளியை நான் வாழ்த்துகிறேன், எந்த ஒளி எல்லா உண்மைகளையும் தன்னகத்தே உடையதாக இருக்கிறதோ அந்த ஒளி என் அறிவை தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும் என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள் சாரம் எல்லாம்.

எவ்வளவு உயர்ந்த நோக்கம்! உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது- எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு ! 

//“ஓம்

பூர் புவ ஸ்வஹ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ  யோ ந பிரசோதயாத்” //

ஓம்:

பூர் :  எல்லா சக்திகளின் ஆதர சக்தியாக 

 புவ : துன்பங்களை அழிப்பதாக, 

ஸ்வஹ :நிலையான ஆனந்தத்தை தருவதாக   உள்ள

 தத் :அந்த

ஸவிதுர் : ஒளி

வரேண்யம் : மிகச் சிறந்த (ஒளியானது)

 பர்கோ : கவலையை அழிப்பதுமான

தேவஸ்ய: மேலான (ஒளியை)

 தீமஹி: தியானிக்கிறேன்

 தியோ: அறிவை

 யோ : எது

ந : நமது

பிரசோதயாத் :   தூண்டுகிறதோ,   உண்மையை உணரச்செய்கிறதோ 

“நமது அறிவைத் தூண்டி உண்மையை அறிய செய்யும் மேலான ஒளியை நான் உணருமாறு தியானிக்கிறேன்”

 உண்மையை உணர்த்தும் படிக்கான   அறிவைத் தூண்டும் ஒளியைஅடைய விரும்பி, தன்னுடைய சொத்து, பத்து, புகழ், கவலை, லாப, நஷ்டம் எல்லாவற்றையும் பற்றிய கவலையை விட்டு, முழு விடுதலையை  நோக்கமாக கொண்டு அந்த நோக்கத்தையே செய்யுளாக்கி மனக் குவிப்பு செய்து தியானப் பயற்சியில் ஈடுபடுவதுதான், காயத்ரி மந்திரம் சொல்லும் முறையாகும். 

அமைதியான இடத்திலே தனிமையிலே மனத்தைக் குவித்து உண்மையை நோக்கிய பயணத்தை துவக்குகிறான், காயத்ரி உபாசகன்.

ஒளி என்பது பற்றி ஜனகரும் ,  யான்க்வல்ஞரும் செய்த விவாதத்தை இங்கே தருகிறேன்.

“எப்போதும் ஒருவனுக்கு ஒளி தரக் கூடியது எது?”

“சூரியன் …”

“ஆனால் சூரியன் ஒளி இரவில் இல்லை”

“அப்படியானால் விளக்கு , அது எப்போதும் ஒளி தரும், …”

“ஆனால் விளக்கு எண்ணெய்  இருக்கும் வரைதான் ஒளி தரும்…”

“அப்படியானால் ஒருவனுக்கு எப்போது ஒளி தரக் கூடியது எது?”

“ஒருவனின்  அறிவை  ஒளி பெறச் செய்யும் ஒளியே எப்போதும் அவனுக்கு உதவும் மேலாம் ஒளி!”

இருளில் வாழும் உலக மக்கள் அனைவரின் அறிவிலும் ஒளியை பெற வேண்டும் என்கிற சிந்தனையை உருவாக்கி அவர்களை ஒளியை நோக்கி இட்டு செல்லும் மிக சிறந்த சிந்தனையாக  காயத்ரி மந்திரம் உள்ளது.   இது உலக மக்கள் அனைவருக்கும் உரிய து.  இதை அவசரம் அவசரமாக ஒப்புக்குப் பாடாமல் , அதிகாலையில் அமைதியான நேரத்தில் பொறுமையாக கவலை எல்லாம் விட்டு முழுமையான மனக் குவிப்புடன் உண்மையை அறிந்து விடுதலை பெற வேண்டும்  என்கிற தீவிரமான நோக்குடன் பயிற்சி செய்வது, ஒருவரின் மன நிலையை, மனக் கட்டுப்பாட்டை உயர்த்தினால் அதில் ஆச்சரியம் இல்லை!

Title; அறிவை தரும் ஒளியைக்  கோரும் காயத்ரி மந்திரம்! (எல்லோரும்  பூணூல் அணியலாம் – பகுதி 2)

Advertisements

5 Responses to "அறிவை தரும் ஒளியைக் கோரும் காயத்ரி மந்திரம்! (எல்லோரும் பூணூல் அணியலாம் – பகுதி 2)"

வணக்கம் சகோ,
கருத்துக்களை அனைவருக்கும் சொல்வது த்வறில்லை.காயத்ரி மந்திரத்தை பற்றி சில குறிப்புகள்.
**********
காயத்ரி மந்திரம் என்பது ரிக் வேதம் (3.62.10) உள்ள ஒரு செய்யுள் ஆகும் .இது விஸ்வாமித்திரர் கூறியதாக நம்ப படுகிறது.யார் கூறினால் என்ன?சொல்லும் கருத்து நல்லதாக் இருந்தால்,நடைமுறையில் பயன்படுத்தும் வண்ணம் இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம்.சரியில்லை என்று பட்டால் ஒதுக்கி விடலாம்.

இறைவனை ஒளியாக கருதுவது பல் மதங்க்ளிலும் உள்ள வழக்கம்.இருளாகிய துன்பத்தை நீகும் என்ற உருவகத்தில் கூறப்படுகிறதா என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.இது குறித்து இன்னும் த்கவல்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும்.
http://en.wikipedia.org/wiki/Gayatri_Mantra
பதிவுக்கு நன்றி

வணக்கம் சார்வாகன்,

கருத்துப் பதிவிற்கு மிக்க நன்றி.

காயத்ரி மந்திரத்திற்கு பொருள் சொல்ல முயலும் பலரும், அதை கடவுள் வழிபாட்டு மந்திரமாக காட்ட முயற்சி செய்கிறார்கள். அதை நான் குறை சொல்லவில்லை. அனால் என்னுடைய பார்வையிலே அது பகுத்தறிவு அடிப்படையிலான மந்திரமாகவே கருதுகிறேன். ஒளி என்பது இருளை நீக்கி உண்மையை அறியத் தருகிறது, இதையே அசத்தோமா சத்கமய, தமசோமா ஜ்யோதிர்கமைய என்று பிரஹா தாரண்யா உபநிடதத்தில் சொல்லி உள்ளானர்.

எனவே காயத்ரி மந்திரமானது கடவுள் ஒளி வடிவத்தில் இருப்பதாக சொல்லுகிறது என்று சொல்லுகிற கோட்பாடு என்று கருதுவோர் இருக்க , ஒருவரின் அறிவைத் தூண்டும் ஒளியை அடைய விரும்புவதாக, தியானிப்பதாக கருதுவது சரியான மிகச் சரியான கோட்பாடாகவே நான் கருதுகிறேன்.

தன்னை பயமற்ற, கருணை உடைய, சுதந்திர நிலைக்கு உயர்த்தும் அறிவை யே கடவுளாக சொல்லும் கோட்பாடு “பிரக்ஞானம் பிரம்மம்” என்பதும் வேதத்தில் உள்ளதே.

சில மதங்களில் சொல்லப் படும் ஒளி இன்னொருவர் மூலமாக மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்து புத்த சமண மதங்களில் சொல்லப் படும் ஒளி ஒரு மனிதன் தன்னுடைய புலனடக்கம், நற்செயல்கள்,தியாகம், தியானம், தவம் போன்றவற்றின் மூலமாக தானே தன் முயற்சியால் தன் மனதில் உள்ள அறியாமையை நீக்கி உண்மையை உணரும் ஒளியை ஏற்றுவது ஆகும்.

gayathri mandhirathin thelivana villakkathai umadhu katturai padithu elimaiyaga purindhu konden sagotharare ungal pani sirapaga ullathu melum valaratum

சகோ. அருமையான மொழிப்பெயர்ப்பு நன்றி.
மனிதனை மேம்படுத்தும் இந்த ஆன்மிக சிந்தனையை இத்தனை காலம், மக்களிடம் பரப்பாமல் ஒரு குறுகிய வட்டம் தன்னகத்தே வைத்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.

உளவியல் ரீதியாக positve எண்ணங்கள் ஏற்படுத்த அருமையான பயிற்சியாக இருக்கும்.

காயத்தி மந்திரமும் சூர்ய நம்ஸ்காரமும் ஒன்று என நினைத்திருந்தேன், ஒன்றா இல்லை வேறு வேறா????

நன்றி.

நன்றி நண்பர் நரேன் அவர்களே,

சூரிய நமஸ்காரம் என்று பலராலும் சொல்லப் படுவது யோகா செய்யும் போது உடலை வளைத்து செய்யப் படுவதை குறிக்கிறது.

சந்தியாவந்தனத்தின் போது சூரிய வணக்கம் என்பது விரல்களின் இடுக்கு வழியாக சூரியனை பார்த்து வணங்க்குகிராகள், அதுவும் சூரிய நமஸ்காரம் எனக் கருதப் படலாம்.

காயத்ரி மந்திரத்தின் போது தியானிக்கப் படும் ஒளியானது சூரியன் என்று ஒரு கருத்தும் , சூரிய நாராயணர் என்ற ஒரு கருத்தும் உள்ளது. இவை நம்பிக்கை அடிப்படையிலானவை. அப்படி நம்பிக்கையின் அடிப்படையில் காயத்ரி மந்திரம் சொல்பவர்கள் பலர். மொத்தத்தில் அறிவைத் தூண்டும் ஒளி என்பது மந்திரத்தில் சொல்லப் பட்டு உள்ளது. நமக்கு மனதில் உண்மையை, மிகப் பெரிய உண்மையை , எந்த உண்மையை அறிவதால் நமக்கு துன்பம் இல்லாமல் இருக்குமோ அந்த உண்மையை விளங்க வைக்கும் நிலையையே ஒளி என் நான் இண்டர்பிரடேசன் செய்து கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: