Thiruchchikkaaran's Blog

பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்!

Posted on: August 12, 2011


 

பூணூல் அணிவது இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும்.   இலக்கியங்களில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பூணூலை பலரும் அணிகிறார்கள். ஆனால் பூணூல் என்பது பிராமணர்கள் என சொல்லப்படுபவர் மாத்திரம் அணியும் ஒன்றாக பலரும் நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் செட்டியார்,  ஆச்சாரி (தச்சர்,  கொல்லர்) என சொல்லப்படுபவர்களும் பூணூல் அணிகின்றனர்.  வட இந்தியாவில் பலர் பூணூல் அணிகின்றனர்.

இந்த பூணூல் அணிவது ஏன், அதன் உபயோகம் என்ன? எல்லோரும் பூணூல் அணிவது எப்படி சமத்துவத்துக்கு உதவும்    இவற்றை பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

பூணூல் என்பது ஆன்மீக முன்னேற்றம், மனக் கட்டுப்பாடு, ஒழுக்கம்  ஆகியவற்றை நினைவு படுத்தும் சின்னமாக அணியப் படுகிறது.

பூணூலை மார்பின் குறுக்காக அணிகின்றனர். உடலோடு ஒட்டிய ஒன்றாக பூணூல் இருக்கிறது.  பூணூல்  அணிந்தால் தான் மனக் கட்டுபாடா என்றால், பூணூல் அணியாமலும் மனக் கட்டுப்பாட்டுடன் பலர் இருக்கின்றனர். இந்து மதத்திலே துறவிகள் பூணூல்  அணிவது இல்லை. எனவே பூணூல் தங்களுக்கு நியமத்தை உணர்த்துகிறது என்று கருதுபவர்கள் பூணூலை அணிந்து கொள்ளாலாம். அவசியம் விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். விருப்பம், அவசியம்  இல்லாதவர்கள் அணிய வேண்டியதில்லை.

பூணூல் எவ்வாறு சமத்துவத்துக்கு உதவும்? 

  ”பூணூல் அணிபவர்கள் என்றால் பிராமண சமுதாயம் என சொல்லப் படுபவர்கள் மட்டும் தான் அணிய முடியும் என்கிறார்களே’” என்று தமிழ் நாட்டில் பலரும் நினைக்கிறார்கள்.

‘”அவர்கள மட்டும் தான் பூணூலை அணிய முடியும், அது சாதீய அடையாளமாக இருக்கிறது, உயர் சாதி என்பதைக் காட்டும் விதமாக பூணூல்

போட்டுக் கொள்கிறார்கள்” என்று சிலர் கருதுகின்றனர். அப்படியானால் எல்லோரும் ஏன் பூணூல்  போட்டுக் கொள்ள கூடாது,  எல்லோருமே ஒரே சாதிதான், சமத்துவம்  என்று ஆகுமே! அவன் பூணூல் போட்டுக் கொள்கிறானே என்றால், நீங்களும் பூணூல்  போட்டுக் கொள்ளுங்கள் அப்போது வேறுபாடு எப்படி வரும்?

 பூணூலை அணிந்து கொள்வது மிக எளிதான விடயம்.  

 ரங்கநாதன் தெரு, மாம்பலம் ரயில் நிலையம் அருகில் பத்து ரூபாய்க்கு பூணூல் கிடைக்கும். பூணூலை போட்டுக் கொள்ளும் போது அவர்கள் சொல்லும் மந்திரங்கள் கேசட்டாக கிடைக்கிறது. அந்த மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன என்பது பற்றிய புத்தகங்கள்  கிடைக்கிறது. புரோகிதர் கூட தேவை இல்லை. மந்திரங்களின் அர்த்தம் என்ன என்பதை படித்து பார்க்கலாம். அவற்றால ஆன்மீக முன்னேற்றம், அறிவு தேடல் கிடைக்கும் என்றால் அந்த மந்திரங்களை கேட்டுக் கொண்டே பூணூலை போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்!

 வெற்று மார்பிலே பூணூலை போட்டுக் கொண்டு, வேஷ்டி துண்டுடன் கோவிலுக்கு சொல்லுங்கள், தெருவிலே அங்கும் இங்கும்  செல்லுங்கள், யாரும் நம்மை தடுக்க முடியாது. எல்லோரும் ஒன்றுதான் , சமத்துவம் தான். 

இது சமத்துவத்தின் ஆரம்பமே, முழுமையான சமத்துவம், நாம் அனைவரும் நாகரிக மனிதராக, பிறருக்கு தொல்லை கொடுக்காமல் , பிறரை மதிக்கும் பண்புள்ளவராக முன்னேறும் போதுதான். அதற்கும் பூணூல் அணிவது உதவியாக இருக்குமா என்பது பற்றி பற்றி, பூணூலை அணிந்து கொண்டு செய்யப்படும் நியமங்கள் பற்றி, அவை நாகரிக முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்குமா என்பது பற்றி எல்லாம் தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும்)

Title: பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.

Advertisements

8 Responses to "பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்!"

//பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்// பூணூலை அணிந்திருப்பவர்கள் அதை கழற்றி விட்டாலும் சமுத்துவம் ஏற்படும்!

சகோ. திரு, ராபின் அவர்களே,

தளத்துக்கு வந்து கட்டுரையைப் படித்தற்கு நன்றி.

பூணூல் அணிவதோ, அங்கி அணிவதோ, தொப்பி அணிவதோ, பனியன் அணிவதோ ஒரு தனிப் பட்ட மனிதரின் விருப்பம். நீ தொப்பி அணியாதே, பனியன் அணியாதே, பூணூல் அணியாதே என்று ஒருவரை பலவந்தப் படுத்த நாகரிக சமுதாயத்தில் இயலாது.

இந்து மதம் சமத்துவப் பாதையில் வேகமாக செல்கிறதே, இன்னும் எல்லோரும் பூணூலை அணிந்து
கொண்டு விட்டால் எந்தக் காரணத்தை சொல்லி இந்து மதத்தை இகழ்வது என்கிற கவலையிலும் ஆவேசத்திலும் எழுதியது போல உள்ளதே.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் 🙂

தெரியாத விஷயங்கள் எல்லாம் கூறுகிறீர்கள் சகோ அருமை.
இறை மறுப்பாள‌ன் இப்படி அனைவரும் ஏன் பூணூல் அணியக் கூடாது என்றால் மதவாதிகள் கண்டு கொள்ளாமல் இந்த நாத்திகப் பயலுகளுக்கு வேறு வேலை இல்லை என்று செல்வர்.ஆனால் திராவிட நாத்திகர்கள் செய்வது சிலர் அணிவதையோ,அணிபவர்களையோ எதிர்ப்பதை,கிண்டல் செய்வதை தாண்டி எதுவும் செய்வது இல்லை.

பாரதியார் ஒரு பூணூல் அணியாத இன சிறுவனுக்கு அணிவித்தார் என்றும் அத்னால் பல சமுதாய ஒடுக்குதல்களை சந்தித்தார் என்றும் படித்திருக்கிறேன். மதத்தின் உள்ளிருந்து ,நடைமுறைக் கருத்துகளை மாற்ற முயல்வது மிகவும் கடினம். நாத்திகர்களை விட பாரதியார்,திருச்சிக்காரன் போன்ற‌வர்கள் மதவாதிகளால் அதிக எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.இந்து மதத்தில் ஃபத்வா மாதிரி இருந்தால் நிச்சயம் உங்களுக்கு கிடைத்திருக்கும்.சில பதிவு விவாதங்களிலும் வேறு மாதிரி விலக்குதல் கிடைத்து பார்த்திருக்கிறேன்.
நியாயமாக் பேசினால் பலருக்கு பிடிக்காது.

அதை விடுங்க சகோ!!!!!!!!.

நெடு நாளாய் ஒரு சந்தேகம்.பூணூல் அணிந்திருப்பவர்கள் நிறுநீர் கழிக்கும் போது ,பூணூலை காதில் சுற்றுவது ஏன்?.என் நண்பர்களிடம் கேட்டால்.தெரியவில்லை, சொல்லிக்கொடுத்ததை செய்கிறோம் என்கிறார்கள்.
விடை அளிக்க வேண்டுகிறேன்.

பதிவுக்கு வாழ்த்துகள்.
நன்றி

எங்க ஊர் ஆசாரி, பூசாரி, மற்றும் வணிக குடியில் பிறந்தோர் மற்றும் ஸௌராஷ்டிர மொழி பேசும் குடும்பத்தினர் போன்றோரும் பூணுலை ஆவணி அவிட்டம் அன்று அணிகின்றனர்.
சமத்துவம் மனதில்தான் வரவேண்டும் எல்லார்க்கும் வேண்டும். பூணுலை பெரிய விசயமாக நினைத்தால் அதனை எல்லோரும் அணியலாம் அதனால் சமத்துவம் உண்டாகும் என்பது ஒரு வித சிந்தனை (திருச்சியார்) . எல்லோரும் கழட்டி விட்டாலும் சமத்துவம் என்பது ஒரு வித சிந்தனை.(ரோபின்).
ஒரு நூலுக்கு போய் இவ்வளவு முக்யத்துவம் கொடுக்க வேண்டுமா? விரும்புபவர் எல்லோருமே சாதி மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டு போடட்டும் விரும்பாதவர் விட்டுவிட்டு போகட்டும் என்பது என் கருத்து. மனிதனுக்கு இல்லாத சிறப்பு ஒரு நூலுக்கு வருமா என்ன?மேலும் சட்டையை போட்டு மறைக்க போகிறோம். .

சகோ.
பூணூல் ஒரு சாதிய அடையாளம். பூணூல் போடுவதே தங்களுடைய சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்ததான். பிராமணர்களை தவிர வேறு சில சாதி மக்களும் அணிவதை பார்த்திருக்கிறேன்.

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் வேற்று சாதிகாரர்கள் பூணூலை அணிவதை யாரும் தடுக்க முடியாது ஆனால் பிராமணர்கள் வேற்று சாதிகாரர்களுகு பூணூல் போடுவதற்கும் ஆதரிப்பதற்கும் எதிர்ப்பு உண்டு. நம் அடையாளத்தை தெரியாத வேறு ஊரில் எல்லோரும் பூணூல் அணிவது சாதி அடையாளத்தை மறைக்கும், ஆனால் உள்ளூரில் சாத்தியப்படாது. ஒருவர் பூணூல் அணிவதால் அவரின் சாதி உயர்ந்து, மற்றவர்களால் அங்கீகாரம் பெறுவார் என்பது பகல் கனவு.

மேலும் பிராமணர்களின் சாதிப் பற்று வேலை செய்யும் இடங்களில் மற்றும் கோயில் கருவறையில் சுருங்கி விட்டது. அவர்களின் இடத்தை நவீன பிராமணர்களான “இந்து சாதிகள்” பிடித்து விட்டன. அதனால் பூணூலின் அடையாள அவசியம் சுருங்கி விட்டது.

நீங்கள் சொல்வதைப் போல் செய்தால் சமத்துவம் அடைவது சிரமம்தான். ஆனால் பூணூலின் அணிவதின் முக்கியத்துவம், அவசியம், நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றை தகர்க்க உதவும். பூணூல் வெறும் சம்பிரதாயம் எல்லோரும் அணியலாம் என்ற அளவில் நிற்கும்.

இதற்கு ஒரே மருந்து மன மாற்றம் தான். ஒவ்வொரு மனிதனும் அதை மாற்ற போராட வேண்டும். மதம் சார்ந்ததாக இருப்பின் இந்து மதத்தின் சாதி எதிர்ப்பு அறநெறிகளை பிரச்சாரம் செய்வது நல்லது.

நண்பர் சார்வாகன் கேள்விக்கு:

நடைமுறை சிக்கல் தான், குனிந்து அல்லது நின்று கழிக்கும் போது சிறுநீர் பட்டு பூணூலுக்கு தீட்டு!!!!! பட்டுவிடும் என்பதற்காக கடவுளால் படைக்கப்பட்ட stand காது. அதற்கு ஒரு மந்திரம் செய்து சம்பிரதாயம் ஆக்கிவிட்டார்கள் போலும்.

பதிவுக்கு நன்றி

நண்பர்கள் சார்வாகன், சிவனடியான், நரேன்,

அனைவரின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

சார்வாகனின் கேள்விக்கு நண்பர் நரேன் பதில் அளித்து விட்டார்.

நரேன்,

//ஆனால் பூணூலின் அணிவதின் முக்கியத்துவம், அவசியம், நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றை தகர்க்க உதவும். பூணூல் வெறும் சம்பிரதாயம் எல்லோரும் அணியலாம் என்ற அளவில் நிற்கும். //

நீங்கள் சொல்வது மிக சரி, வெறுமனே பூணூலை அணிந்து கொண்டால் அது தோளில் துண்டு போட்டுக் கொள்வது போன்றதாகத்தான் இருக்கும். கட்டுரையின் கடைசி பாராவில் ……இது சமத்துவத்தின் ஆரம்பமே, முழுமையான சமத்துவம், நாம் அனைவரும் நாகரிக மனிதராக, பிறருக்கு தொல்லை கொடுக்காமல் , பிறரை மதிக்கும் பண்புள்ளவராக முன்னேறும் போதுதான். அதற்கும் பூணூல் அணிவது உதவியாக இருக்குமா என்பது பற்றி பற்றி, பூணூலை அணிந்து கொண்டு செய்யப்படும் நியமங்கள் பற்றி, அவை நாகரிக முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்குமா என்பது பற்றி எல்லாம் தொடர்ந்து ஆராய்வோம்.

//பிராமணர்களின் சாதிப் பற்று வேலை செய்யும் இடங்களில் மற்றும் கோயில் கருவறையில் சுருங்கி விட்டது. அவர்களின் இடத்தை நவீன பிராமணர்களான “இந்து சாதிகள்” பிடித்து விட்டன. அதனால் பூணூலின் அடையாள அவசியம் சுருங்கி விட்டது.

நீங்கள் சொல்வதைப் போல் செய்தால் சமத்துவம் அடைவது சிரமம்தான்//.

இப்போது பெருங்கனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே ஒதுக்கப் பட்ட மக்கள் அனைவரும் பூணூல் போட்டுக் கொண்டு தினமும் மாலை சந்தியாவந்தனம் செய்கிறார்கள், பணம் , காசு விசயத்தில் நியாயமாக நடந்து கொள்கிறார்கள், சிகரெட், மது குடிப்பதில்லை, தங்களுக்குள் பிரச்சினை வந்தால் பிரச்சினைகளை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள் தங்களை திட்டினாலும் தாங்கள் பதிலுக்கு தங்கள் எதிர்ப்பை கண்ணியமான வார்த்தைகளில் தெரிவிகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்படி பத்து வருடங்கள் செயல் பாட்டால் அவர்களை பார்த்து சாதி இந்துக்கள் இழிவாக கருத முடியாது. அட இவங்களைப் பாருய்யா … என்று உள்ளுக்குள் அல்சர் பட்டாலும் அவர்களின் மனதில் இவர்களைக் குறை சொல்ல முடியாது என்பது தெரிந்து இருக்கும்.

இவர்களின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு இணையாக தாங்களும் வர வேண்டுமானால், அவர்களும் கண்ணியத்துடன் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுவார்கள்.

அதாவது ஒதுக்கப் பட்ட மக்கள் சாதி இந்துக்களை ஆன்மீகத்தில் ஓவர் டேக் செய்ய வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். அப்போது சமத்துவம் நிச்சயம் உருவாகும்.

பூணூல் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதற்க்கு மதிப்புக் குடுப்பதும் குடுக்காததும் அவரவர் மனசாட்சியைப் பொறுத்தது. அப்பா வைப் பார்த்தால் சிகரெட் பிடிக்க கூடாது என்றால், சிகரெட்டை மறைப்பான், அப்பா வின் பார்வையில் அடிக்கடி படும்படியான சூழ்நிலை இருந்தால் சிகரெட் பிடிப்பது குறைந்து விடும். அப்பன் கிடக்கிறான் என்று அவர் முன்னே சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விடால அந்த இல்லாமல் போய் விட்டது என்றுதான் அர்த்தம்.

poonool vittil endham morrigalil anivathu endrum potttiruthal migavum arumai irukkum .thangalin blog migavum siranthathu, samathuvam peruga bharathiyarin idu pondra puratchiigal udhvum madham maruvadhum nasthigam pesuvadhum kolai thanam.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: