Thiruchchikkaaran's Blog

அற‌நெறியில் உயர்ந்தோன், பயமறியான் , அன்பரசன் குகன்!

Posted on: August 10, 2011


//ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கும் போதும், செல்வந்தராய் இருக்கும் போதும் பலரும் வந்து நட்பு பாராட்டுவர்.  அதே நபர் ஆட்சியை இழந்து  விட்டால் அற்ற நீர்க் குளத்தே அறு நீர்ப்பறவை   போல  விலகி சென்று விடுவது உலக நடப்பு.//

 அற‌நெறியில் உயர்ந்தோன், பயமறியான், அன்பரசன் குகன்!

வரலாறு பெரும்பாலும் அரசியலையும், சமூகங்களின் நாகரீகத்தைப் பற்றிய தாகவும் உள்ளது. எனவே வரலாறு பெரும்பாலும் மன்னர்கள், போர்  வீரர்கள்,  சாதனையாளர்கள் இவர்களைப் பற்றியே விவரிக்கிறது. அதில் சில  சமயங்களில் பொது மக்களை சார்ந்த சிலரும் தம் தனித்துவத்தை வெளிப்படுத்தி இடம் பெறுகின்றனர்.

அவ்வகையில், தன் நல்ல குணத்தால்,  கொள்கை உறுதியால், நெஞ்சுறுதியால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் மதிப்பிற்கும், மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குகன் .

இராமன் அயோத்தியை விட்டு காடு செல்லும் போது வழியிலே கங்கை கரையில் முதல் நாள் தங்க நேரிடுகிறது. குகன் அந்தப் பகுதில் வசிக்கும் மக்களின் தலைவன்.

ஆட்சியை விட்டு விலகி காட்டு வாழ்க்கையை மேற்கொண்ட இராமனை சந்தித்து அன்பு பாராட்டி இருக்கிறார் குகன்.  ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கும் போதும், செல்வந்தராய் இருக்கும் போதும் பலரும் வந்து நட்பு பாராட்டுவர்.  அதே நபர் ஆட்சியை இழந்து  விட்டால் அற்ற நீர்க் குளத்தே அறு நீர்ப்பறவை   போல  விலகி சென்று விடுவது உலக நடப்பு.

ஆனால் அன்பு  உள்ளமும், இரும்பு இதயமும் கொண்ட குகனோ,  ஆட்சியை விட்டு மரவுரி தரித்து வந்த இராமரிடம் முழு அன்பையும் செலுத்தி அவருக்கு ஒரு மொரேல் பூஸ்டர் ஆக இருந்திருக்கிறார். இராமன் 14  வருட வன வாச காலத்தையும் தங்களுடனே கழிக்கலாம் என்கிற அன்புக் கோரிக்கையையும் வைத்து இருக்கிறார். வன வாசம் நியதிப் படி சமுதாயத்தில் வாழக் கூடாது  என்கிற காரணத்தால் இராமன் குகனுக்கு நன்றி செலுத்தி விட்டு வனப் பகுதிக்கு செல்லுகிறான்.

இராமரிடத்தில் ஆட்சியை ஒப்படைக்க விரும்பிய பரதன், அயோத்தியில் இருந்து புறப்பட்டு இராமனைத் தேடி செல்லுகிறான்.  இராமரைத் தேட தனக்கு உதவியாக அயோத்தி இராச்சியத்தின் மாபெரும் படையை தன்னுடன் அழைத்து செல்லுகிறான்.  இராமனைத் தேடி வரும் போது, பரதனும் குகனை சந்திக்கிறான். இராமன் எந்த வழியில் சென்றான் என, குகனை பரதன் வினவுகிறான்.

பரதனோ மிகப் பெரிய நாட்டின் சக்கரவர்த்தி. அவனுடைய படையோ மிகப் பெரியது. அப்படிப்பட்டவன் தன்னிடத்திலோ இராமன் சென்ற வழியைக் கேட்டால், பொதுவாக  , “இதோ இந்த வழியா போனாருங்க, எங்க  ஆளு தான் அவர ஓடத்துல கொண்டு போய் கங்கையின் அக்கறைக்கு விட்டாருங்க. அதே ஓடக் காரனை உங்க கூட அனுப்பறேன் , இராமர் இறங்கின இடத்தைக் காட்டுவாங்க. அப்பால நீங்க பார்த்து போய்க்கிடுங்க”,  என்று சொல்லி இருக்க கூடும் .

ஆனால் அந்த நேரத்திலே குகன் சிந்திக்கிறான். இந்த பரதனின் அன்னையோ, இராமனிடம் இருந்து  ஆட்சியைப் பறித்ததோடு அவன் நாட்டிலே தங்கவும் விடாமல் காட்டுக்கு அனுப்பியவள். அவளின் மகனாகிய பரதன் எதற்காக இராமரைத் தேடி வந்து இருக்கிறான்?

ஒரு வேலை இராமனை ஒரே அடியாக ஒழித்துக் கட்டி, அயோத்தி இராச்சியம் எப்போதும் தனக்கே சொந்தமாக வேண்டும் என திட்டம் தீட்டி வந்து  இருக்கிறானா? அதற்காகத்தான் இப்படி ரத, கஜ, துரக, பாதாதி எனும் நால்வகை சேனையும் கூட வந்து இருக்கிறது போல இருக்கிறதோ, என்னும் ஐயம் குகனின் மனத்திலே உருவானது.

இந்த நேரத்திலே தன்னுடைய நெஞ்சுரத்தையும், முழு வீரத்தையும் வெளிப்படுத்துகிறார் குகனார். ”நீங்கள் இராமனைத் தேட  வேண்டிய அவசியம் என்ன?” என்று வெளிப்படையாகப் பரதனைக் கேட்கிறார் குகனார்.

தனக்கு எந்த  ஆபத்து நேர்ந்தாலும், இராமனுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் குகனார்.

இராமனைக் காக்க அவர் அயோத்தியின் பெரும் படையையும் எதிர் கொள்ள தயாராக இருந்திருக்கிறார்.

பரதன் வந்தது  இராமனைத் தாக்க அல்ல, இராமனுக்கு இராச்சியத்தை மீண்டும் அளிக்கவே, பரதனால் இராமனுக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை உறுதி செய்த பிறகே குகனார்  இராமன் சென்ற வழியை பரதனுக்கு கூறினார்.

முதலில் இராமனிடம் அன்பு பாராட்டிய போது அன்புக்கரசனாக திகழ்ந்த குகனார்,  பிறகு இராமரைக் காக்க அயோத்தியின் பெரும்படையும் தன்னை எதிர்த்தாலும் சரி,   இராமனுக்கு ஆபத்து வரக் கூடாது என்கிற விடயத்தில் தன நெஞ்சுறுதியை, அஞ்சா  நெஞ்சத்தை வெளிப்படுத்தி கொள்கைக் குன்றாக விளங்கியிருக்கிறார். 

காருள்ளளவும், கடல் நீருள்ளளவும், குகனும் மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்தவராகி விட்டார். 

இராமரின் கொள்கையை மனதில் நிறுத்துவோர், குகனாரின்  அன்பையும், நெஞ்சுறுதியையும்  தங்கள் மனதிலே நிலை நிறுத்தி தங்களை செம்மைப் படுத்திக் கொள்ள தவறக் கூடாது.

“ இன்று உன்னுடன் சேர்ந்து நாங்கள் சகோதரர்கள் ஐவரானோம்”, என இராமரின் சகோதரன் ஆன குகனாரையும், இராமருக்கு மரியாதை செலுத்துவதைப் போலவே குகனாருக்கு மரியாதை செலுத்துவது அவரின் கொள்கைகளை நினைவுறுத்த உதவும்.

Title: கொள்கைக் குன்று,  அஞ்சா நெஞ்சன், அன்பரசன் குகன்

Advertisements

5 Responses to "அற‌நெறியில் உயர்ந்தோன், பயமறியான் , அன்பரசன் குகன்!"

அருமையான பதிவு சகோ,
சில அடைமொழிகள் சிலரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டு, அந்த அடைமொழியே வில்லங்க‌மாகி விடுவதால், நல்லவர்களை குறிக்க அவ்வடைமொழிகளை பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகிறேன். ஆகவே அற‌நெறியில் உயர்ந்தோன், பயமறியான் குகன் என்றே பாராட்டுவோம்.
நன்றி.

Thanks Sir. We agree tothat and incorporated the same!

பரதனின் படையை தனி ஒருவன் எதிர்நோக்கியதால், குகன் தான் பின் பற்றும் தர்மத்தில் உறுதியாக இருந்ததினால். அந்த தர்மம எந்த வகையிலும் அதர்மமாக ஆகாது என்பதினால். குகனின் குணாதீயசத்தை பார்த்தால், இராமன் அவதாரம், கடவுள், மன்னன் என்பதினால் அவன் அவ்வாறு நடக்கவில்லை. எந்த ஒரு தனி மனிதனுக்கும் நேர்ந்திருந்தாலும் செய்திருப்பார் போல்.

சாதிப் பேயை பின்பற்றுபவர்கள், குகன் நிகழ்ச்சியிலிருந்து படிப்பினை கற்கட்டும்.

அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே.

அன்புக்குரிய திரு. நரேன்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. குகனின் சிறப்பை , தியாகத்தை மனவுறுதியை
வார்த்தைகளால விவரிக்க முடியாது. இராமரை வணங்குபவர்கள் இலக்குவனையும், சீதையையும், அனுமனையும் வணக்குவது போல குகனையும் , ஜடாயுவையும் , வீபிடனனையும், குமுதனையும், நளனையும், தாரனையும் ….. வணங்காவிட்டால் அவர்கள் இராமருக்கு செய்த மரியாதை முழுமையாகாது.

இந்த நேரத்திலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தசரதன், இலக்குவன், சீதை, சுமேந்திரர், குகன், , ஜடாயு, அனுமன், ….உள்ளிட்ட பலரும் இராமர் கடவுளா, கடவுளின் அவதாரமா, அவரின் அன்பை பெற்றால் நாம் சொர்கத்துக்கு போவாமா என்று எல்லாம் எண்ணவில்லை

இவ்வளவு நல்ல மனம் படைத்தவர், மற்றவரின் ஆசைக்காக தான் இன்னல் ஏற்க தயங்காதவர், மாவீராராக இருந்தும் பலவந்தமாக இராஜ்ஜியத்தை அடைய நினைக்காதவர், கொள்கை என்பதை இடுப்பில் கட்டும் வெறியாகவும் , பதவி என்பதை தோளில் போடும் துண்டாகவும் உண்மையிலே நடத்திக் காட்டிய அரசியல்வாதி இப்படிப்பட்டவருக்கு இவ்வளவு கஷ்டமா என்று எண்ணியே அவருடைய நல்ல மனசுக்காக அவரை அன்பு செய்தனர்.

குகன், அனுமன், விபீடணன் …. இவர்கள் எல்லோரும் அடிபடையில் மிக நல்ல குணம் படைத்த நல்லோர்கள். வைரத்தை போன்ற இவர்களின் நல்ல நெஞ்சத்திலே இராமரின் நல்ல கொள்கை எனும் ஒளி பாய் ந்து வைரத்தின் பட்டைகள வழியாக ஜொலித்தன.

இதே கூனியே, கைகேயியோ பரதனுக்கு பயந்து அந்தப் பக்கம் ஓடி போயிருந்தால், பரதன் வந்து விசாரிக்கும் போது குகன் அவர்களிடம் கேள்வி எதுவும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த ரெண்டு பொம்பளைங்களும் இந்த வழியாத்தான் போச்சு, போய் பார்த்துக்க என்று சொல்லி இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: