Thiruchchikkaaran's Blog

இந்துத்துவம் என்பது என்ன?

Posted on: August 8, 2011


//நாம் லண்டனில் இருந்தபொழுது ஒரு ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், ‘இந்துக்களாகிய  நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்லவில்லையே!’ என்று கேட்டாள். //

(‘நம் முன் உள்ள பணி’ என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் பகுதியை கட்டுரையில் குறிப்பிட்டு, பிறகு அதை  ஒட்டிய நம்முடைய கருத்தை தருகிறோம்)

        File:Swami Vivekananda Jaipur.jpg

நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்பதற்காக வெளியே செல்லவில்லை. நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை கவனிக்கவில்லை. இந்திய மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது.
 
இதை நீங்கள் கடந்த நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்க மாட்டீர்கள்.

நீங்கள் வாழவேண்டுமானால் கட்டாயம் விரிவு அடைய வேண்டும். நீங்கள் விரிவு அடையாமல் நிற்கின்ற அந்தக்கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது. ஆபத்து அருகில் வந்து விட்டது.  வாழவேண்டுமானால் ஒவ்வொரு நாடும், நிச்சியம் எதையாவது கொடுத்தே ஆகவேண்டும். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அது எப்படி?

நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளி உலகிற்கு எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் என்பது தான்.

மதம், தத்துவம், ஞானம், ஆன்மிகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை, எனவே நாம் கொடுத்தாக வேண்டி இருந்தது. நாம் லண்டனில் இருந்தபொழுது ஒரு ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், ‘இந்துக்களாகிய  நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்லவில்லையே!’ என்று கேட்டாள். வீரமும் தீரமும் உடைய க்ஷத்திரியர் ஆன ஆங்கிலேயர்களுக்கு இந்த கேள்வி சரிதான். ஒருவனை மற்றவன் வெல்வது தான் அவர்களை பொறுத்தவரை, பெருமைக்கு உரியது.இது அவர்களின் கண்ணோட்டத்தில் சரியானது.

ஆனால் நம் கண்ணோட்டம் இதற்கு மாறானது. இந்தியாவின் பெருமைக்கான காரணம் என்னவென்று என்னையே நான் கேட்டுகொண்டால் நாம் எப்போதும் யாரையும் வெல்லாததே என்று தான் பதில் சொல்வேன். அது தான் நமது பெருமை.

சில வேலைகளில் அரைகுறை ஆசான்கள் சிலர் நமது மதத்தை பற்றி, அது  பிறரை வெல்கின்ற மதமாக இல்லை என்று குறை கூறுவதை நீங்கள் தினமும் கேட்கிறீர்கள்! 

அவர்கள் கூறுகிற குறை தான் என்னை பொறுத்தவரையில் நமது நிறை. நமது மதம் பிற மதங்களை விட உண்மையாக இருப்பதற்கான காரணம் அது எப்போதும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை. அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை. அதன் உதடுகளிலிருந்து வாழ்த்து சொற்களே,  அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்த்தைகளே எப்போதும் வந்தன.

இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்பு தன்மை பற்றிய இலட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்பு தன்மை அனுதாபம் முதலியவை செயல் படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில் தான் இருக்கின்றன.

இங்கு, இங்கு மட்டும் தான் இந்துக்கள் முகமதியர்களுக்கு மசூதிகளையும், கிறிஸ்தவர்களுக்கு சர்சுகளும் கட்டுகிறார்கள்.

 
*******************
 
(இதை ஒட்டிய  நமது தள கருத்து கீழ்   வருமாறு:)

இதுதான் (சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான்) அச்சு அசலான , உண்மையான,  இந்துத்துவம்,  இந்து தன்மை, இந்து மனப்பாங்கு!

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களும், அந்த இடிப்பை ஆதரிப்பவர்களும், சுவாமி சொன்னதை நன்கு கவனிக்க வேண்டும். நீங்கள் உருவத்தில் இடித்தது பாப்ரி மசூதியை. உண்மையில் இடித்தது இந்து மதத்தை.

இன்று சுவாமி விவேகானந்தர் நம்முடன் இருந்திருந்தால் பாப்ரி மஸ்ஜித்தை இந்துக்கள இடித்தார்கள் என்று கேள்விப் பட்டவுடன் மிக்க வருத்தம் அடைந்தது மட்டுமல்லாமல் மிக்க கோவமும் அடைந்து இருப்பார்.

சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர் இவர்கள்  எல்லாம் மிக முக்கியமாக நடத்திக் காட்டிய – (இவர்கள் மட்டுமல்ல- நான்கு வேதங்களும் அத்ரி பிருகு முதலான எல்லா ரிஷிகளும் ஒரு இடத்தில் கூட பிற மதங்களின் மீது ஒரு இடத்தில் கூட வெறுப்பைக் காட்டவில்லை – நல்ல கருத்துக்கள எங்கிருந்தும் வரலாம் என்றனர்)  மத நல்லிணக்கத்தை அழிப்பது இந்து மதத்தை அழிப்பது போலத்தான் என்பதை நினைவு படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டுவது இந்து தன்மையை இழப்பதாகவே இருக்கிறது என்பதியே நாம் சுவாமியின் கருத்துக்களில் இருந்து அறிகிறோம்

இனிமேலாவது  பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி பாராட்டுவதை விட்டு விட்டு, இந்து மதத்தின் அசலான அமைதியான ஆன்மீகப் பாதைக்கு  , சகிப்புத் தன்மைக்கு, அனுதாபத்திற்கு இடம் கொடுங்கள் .

இந்துக்கள தங்கள் சம உரிமைக்காக , தங்கள் கோவில் நிலங்களுக்காக போராடுவது என்பது ஒரு விடயம், அதை செய்யும்போது பிற மதத்தவருக்கு எவ்விதத்திலும்  மனம் புண்படும்படியோ, அநியாயமாக நடந்ததாக கருதும்படியோ செய்வது சரி அல்ல.

பிற மதத்தினர் இந்து மதத்தை,  தெய்வங்களை இகழ்வு படுத்தும் போது, அதற்க்கு தக்க பதில் அளித்து அவர்களை நாகரீகப் பாதைக்கு கொண்டு வர வேண்டுமேயல்லாது, நாமும் அவர்களைப் போல காட்டு மிராண்டித் தனத்தில் இறங்கி அவர்களின் தெய்வங்களை இகழ்வது சரியான  இந்துத்துவம் ஆகுமா?

(மீள் பதிவு)

Advertisements

12 Responses to "இந்துத்துவம் என்பது என்ன?"

நண்பரே ,

http://western-hindu.org/2011/08/06/should-we-respect-all-religions/

இதை படியுங்கள். படித்துவிட்டு கருத்து எழுதுங்கள்.

நண்பர் தமிழன்,

நீங்கள் சுட்டிய கட்டுரையைப் படித்தேன், அந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களில் நீங்கள் இங்கே
குறிப்பிட விரும்புவது என்ன? அந்தக் கட்டுரையும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதாகவே உள்ளது.

//that virtuous followers should be respected and all religions respected for what truth they contain.//

இந்துக்கள் சகிப்புதன்மை, அனுதாபம் என்றால், இது மற்ற மதத்தினர்க்கு சகிப்புதன்மை அனுதாபம் இல்லை என்ற கூற்றிலிருந்து வருகிறது அல்லவா??. அதைத் தான் நணபர் தமிழன் சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்

விவேகானந்தர் கூறும் கருத்து மனிதனின் அடிப்படை values. அதை மேலும் வளர்த்தால் human rights ஆக முடியும். ஒரு மனிதன் கொண்ட கொள்கையால் அந்த மனிதனை நிந்திக்க கூடாது. ஆனால் அந்த கொள்கை இன்னொரு மனிதனை நிந்திக்கும் கொள்கையாக இருக்க கூடாது. விவேகானந்தர் கூறிய அந்த அடிப்படை மனித நெறிகள், உரிமைகள் இந்துத்தவம்.(இப்பொழுது அது ஒரு கெட்ட வார்த்தை அதனால் வேறு வார்த்தைகளை பயன்படுத்தவும்)

ஆனால் எனக்கு ஒரு ஐயம்,
இந்துத்தவம், அது வேற்று மதத்தினரிடம் தான் செயல்படுத்த் முடிந்தது, ஆனால் இந்து சமுதாயத்தினரிடையே செயல் படுத்த முடியவில்லையா? ஏன் ஜாதி வேற்றுமைகள் கொடுமைகள். சூத்திரர்கள் தான் அந்த இந்துத்வத்தை கடைப்பிடித்து பொறுமையாக இக்கிறார்கள். மற்றவர்கள் அதை பின்பற்ற முடியவில்லையே ஏன். இந்துத்தவம் இந்து மதத்தில் செயல் படுத்த பின்பற்ற முடியாத ஒன்றா அல்லது விவேகானந்தர் சொன்னது இந்துத்வம் இல்லையா???

வணக்கம் சகோ,
நல்ல பதிவு என்றாலும்,பலர் இதனை கடைப்பிடிக்கும் நிலையில் இல்லை. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்பது போல், பிற மதங்களின் பெருமித மத பிரச்சாரத்தின் தாக்கம் அதே மாதிரி ஆட்களை இந்துத்வத்திலும் தோற்றுவித்துள்ளது.
மத மாற்றத்திற்கு எதிராக இவர்களும் தாய் மதத்திற்கு திருப்புதல்,பிரச்சாரத்திற்கு எதிர் பிரச்சாரம் என்று இறங்கி விட்டார்கள். பல இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்து மதமே பெரும்பான்மையாக நீடித்தால்தான் நமக்கும், நம் ஜன்நாயகம், மதச்சார்பின்மைக்கும் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்து பல் நாள்களாகிறது.
என்னமோ சொல்றீங்க , நல்ல விஷயம்தான். உங்க பாணியில் சொல்லிட்டு போங்க சகோ.
நன்றி.

/////மத மாற்றத்திற்கு எதிராக இவர்களும் தாய் மதத்திற்கு திருப்புதல்,பிரச்சாரத்திற்கு எதிர் பிரச்சாரம் என்று இறங்கி விட்டார்கள். பல இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்து மதமே பெரும்பான்மையாக நீடித்தால்தான் நமக்கும், நம் ஜன்நாயகம், மதச்சார்பின்மைக்கும் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்து பல் நாள்களாகிறது//////
சகோ சார்வாகன்,
நீங்கள் இதனை தவறு என்று நினைக்கிறீர்களா?
வரும் காலத்தில் எல்லோரும் பாதுகாப்புடன் வாழ பிற இன மத வெறுப்பு கருத்துக்கள் பரவாமல் இருக்க வேண்டியது அவசியம். இந்து மதம் என்று பெரும்பான்மை இழந்தாலும் அது அன்று ஜனநாயகத்துக்கு நிச்சயம் பெரும் ஆப்பாக ஆகும்.
////நல்ல பதிவு என்றாலும்,பலர் இதனை கடைப்பிடிக்கும் நிலையில் இல்லை. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்பது போல், பிற மதங்களின் பெருமித மத பிரச்சாரத்தின் தாக்கம் அதே மாதிரி ஆட்களை இந்துத்வத்திலும் தோற்றுவித்துள்ளது./////
கேள்வியும் கேட்டு பதிலும் கொடுத்துவிட்டீர்கள்

Dear Bro. Sivandaiyan,

//சகோ சார்வாகன்,
நீங்கள் இதனை தவறு என்று நினைக்கிறீர்களா//

I think Bro. Saavaakan is endorsing his points, he dont say it is wrong, further he supports the point!

சகோ சிவனடியான்,
மதமாற்றம் நிகழும்போது அத‌ன் எதிர்வினையான தாய் மதத்திற்கு திருப்புபுதல் என்பதும் தவிர்க்க இயலாது என்பதையே குறிப்பிட்டேன்.மதமாற்றம் என்பது தேவையற்றது என்பது என் கருத்து.மதம் ஆன்மீக நம்பிக்கைக்கு வழி காட்டி மட்டுமே ,அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.ஆனால் ஆபிரஹாமிய மதங்கள் இதனை ஏற்பது இல்லை.இறைவனின் அரசை பூமியில் அமைப்போம் என்பதே அவர்களின் கொள்கை.
*********************
ஒரு மதம் மட்டுமே சரியானது,பிற மதங்கள் அனைத்துமே தவறு என்பது மிகவும் ஆபத்தான கொள்கை. இந்துமதம் ஒரு பல தெய்வ வழிபாட்டு, வாழ்வியல் முறை.,இந்துக்கள் என்பவர்களை கிறித்தவ ,இஸ்லாமியரல்லாத இறை நம்பிக்கை கொண்டவர்கள் என்ற கோணத்திலேயே அணுகுகிறேன்.

இந்த மதத்தில் பல் வேறுபாடுகள் இருந்தாலும்,உள் பிரச்சினைகள் இருப்பதையும் சரி செய்ய முயற்சிகள் செய்ய வேண்டியுள்ளதை பெரும்பாலான இந்துக்கள் ஏற்கின்றனர்.இப்பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ய இன்னும் பல காலங்கள் பிடிக்கும்.
அதனால்தான் இந்துக்களிடையே கூட‌ ஜனநாயகம், சம்த்துவம்,அனைத்து தெய்வங்களையும் , வழிபாட்டு முறைகளையும் சம்மாக் ஏற்றல் என்பதே சரியாக இருக்கும்.இதற்கே பல படிகள் கடக்க வேண்டி உள்ளது.ஆகவேதான் இந்துக்கள் பெரும்பானமையாக வாழ்ந்தாலும் மதசார்பின்மைக்கு இன்றுவரை சோதனை வரவில்லை.
***********
இச்சூழ்நிலையில் ஆபிரஹாமிய மதங்கள் போல் இந்து மதம் அரசியலமைப்பாக மாற்றப்படுவது மிக கடினம்.
இதற்கும் முயற்சி நடைபெருகிறது. இந்துத்வா(சுவாமி விவேகானந்தர் மன்னிக்கவும்) அமைப்பினர் இந்து மதத்தையும் ஆபிரஹாமிய மதங்கள் போல் மாற்ற முயற்சிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நன்றி

சகோ. சார்வாகன் அவர்களே,

இந்துத்துவம் என்கிற வார்த்தையை பதத்தை உபயோகப் படுத்தியதாக தெரியவில்லை. இந்து மதம் எப்படிப் பட்டது , இந்துக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை சுவாமி விவேகானந்தர் சொல்லியதையே நான் மேற்கோள் காட்டினேன். இதுதான் இந்து மதம், இதுதான் இந்து தன்மை, இதுதான் சரியான இந்துத்துவம் என்கிறதை உணர்த்தும் வண்ணம், கட்டுரைக்கு இந்துத்துவம் என்பது என்ன என்று நானே பெயர் வைத்தேன்.

மற்றபடி நீங்கள் சொல்வது போல இந்து மதத்தையும் அறிந்தோ அறியாமலோ ஆபிரகாமிய மார்க்கங்களின் ஸ்டைலுக்கு கொண்டு வர பார்க்கின்றனர் என்பது சரியே. இதை சொன்னால் இந்து மதத்தைக் காக்க இதுதான் ஒரே வழி என்று சொல்கிறார்கள்.

அப்பர், சங்கராச்சாரியார், இராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், துளசிதாசர்,சைதன்யர், தியாகராஜ சுவாமிகள் , இராமதாசர், சுவாமி விவேகானந்தர் …போன்ற அஹிம்சா மூர்த்திகளால் வழி நடத்தி செல்லப் பட்ட இந்து மதமானது கழுத்திலே காவித் துணியைக் கட்டிக் கொண்டு , கடைகளை உடைப்பவர்களின் கட்டுப் பாட்டிற்கு சென்று விடுமோ என்கிற அக்கறையை முன் வைக்கிறோம்.

இன்றைக்கு இந்த காவித் துண்டு போட்ட வீரர்களை ஆதரிப்பவர்கள், நாளைக்கு அந்த வீரர்களே, இவரக்ளைப் பார்த்து சும்மா போவியா… என்று மிரட்டினால் இவர்களால் என்ன செய்ய இயலும்!

சகோ சார்வாகன்,
///இச்சூழ்நிலையில் ஆபிரஹாமிய மதங்கள் போல் இந்து மதம் அரசியலமைப்பாக மாற்றப்படுவது மிக கடினம்.
இதற்கும் முயற்சி நடைபெருகிறது. /////
அது கடினமே,இம்முயற்சிகள் வெற்றி பெறுவது என்பது சாத்தியம் இல்லாதது.
///இந்துத்வா(சுவாமி விவேகானந்தர் மன்னிக்கவும்) அமைப்பினர் இந்து மதத்தையும் ஆபிரஹாமிய மதங்கள் போல் மாற்ற முயற்சிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.///
விவேகானந்தரை போய் இவர்களுடன் ஒப்பிடாதீர்கள் ப்ளீஸ்,

சர்வாகம் பற்றி உங்கள் கட்டுரை இருந்தால் சுட்டியை தெரிவிக்கவும். அதனை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
சகோ திருச்சி,
வைசேசிகம், மீமாம்சம், ஆர்யா சமாஜம் இவர்களின் கருத்துகளை இந்தியாவில் இவற்றின் தாக்கம் பற்றிய கட்டுரை வெளியிட முடியுமா?
நன்றி
சிவனடியான்.

இச்சூழ்நிலையில் ஆபிரஹாமிய மதங்கள் போல் இந்து மதம் அரசியலமைப்பாக மாற்றப்படுவது மிக கடினம்.
இதற்கும் முயற்சி நடைபெருகிறது. இந்துத்வா(சுவாமி விவேகானந்தர் மன்னிக்கவும்) அமைப்பினர் இந்து மதத்தையும் ஆபிரஹாமிய மதங்கள் போல் மாற்ற முயற்சிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தவறு. நண்பர்களே. ஆர.எஸ்.எஸ். இயக்கம், ஹிந்து முன்னணி போன்றவை தேசபக்தியுடன், சமூக தொண்டு புரிந்து வருகின்றன. எந்த ஆர்எஸ்எஸ் காரன் கிறிஸ்தவனையும் முஸ்லிமையும் என் மதத்துக்கு வந்து விடு என்று மிரட்டிக்கொண்டு இருக்கிறான் அல்லது பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறான். இந்துவாக இருப்பவர்களை பாதுகாப்பதே நமது நோக்கமே அன்றி அவர்கள் வழியில் நாம் செல்லவில்லை. குஜராத் புகம்பத்தின்போதும், மோர்வி அணைக்கட்டு உடைந்த போதும் பிற இயற்கை பேரழிவுகளின் போதும் ஜாதி , மதம் பாராமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறார்கள். நம்மை தற்காத்துக்கொள்வதற்காக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பில் இந்துக்கள் கொல்லப்பட்டதால்தானே கலவரம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து ஊடகங்களும் முஸ்லீம்களின் அடாவடிததனத்தை பார்க்காமல் இந்து அமைப்புகளை குறைகூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஹஸ்ரத்பால் மசுதியில் முகமது நபியின் முடி காணாமல் போய்விட்டதென்று வன்முறையில் ஈடுபட்டு இந்துக்களைக் கொன்றனர். நாம் பெரும்பான்மையாக இருப்பதால் தான் அடங்கி இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

திரு . இராஜா அவர்களே,

நான் எந்த சங்க பரிவார அமைப்பிலும் உறுப்பினராக இருந்தது இல்லை, எந்த தொடர்பும் கிடயாது.

சிறுவனாக இருக்கும் போது ஆர். எஸ். எஸ் நடத்தும் சாகாக்களை வேடிக்கை பார்த்து இருக்கிறேன்.
ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, இப்போது இருப்பவர்களுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக கருதுகிறேன் (பலரும் அப்படிக் கருதுகிரர்கள்), அரசியல கட்சி “செயல் வீரர்”களைப் போல அவர்கள் இருக்கிறார்கள் என்றே பலரும் கருக்கினறனர். மேலும் இந்த இயக்கங்கள் பணக்கார ஆன்மீக வாதிகளை காப்பாற்று வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. இப்படியே போனால் தத்துவ அடிப்படையில் இந்து மதத்தின் அடிப்படைக் கருத்துக்களை சொல்வதற்கு கூட அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. ஏய் , எல்லாம், தெரியும், நீ மூடிகிட்டு போ என்கிற ரீதியில் விரட்டப் படும் வாய்ப்புகள் உள்ளன, இப்போதே கிட்டத் தட்ட அந்த நிலைக்கு வந்து விட்டதாக கருதலாமா?

மத வெறிப் பிரசாரகர்கள் , இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை அழிக்கும் படியான வகையில், பிற மதங்களின் தெய்வங்களை இகழ்ந்து தன மதம் மாத்திரமே உண்மை என்று சொல்லும் போக்கு ஆபத்தானது என்பதி சுட்டிக் காட்ட நாம் தயங்க்வதில்லை. அதே நேரம் எந்த ஒரு மதத்தையோ, கோட்பாட்டையோ (கம்யூனிசம், கேபிடலிசம்….) ஒட்டு மொத்தமாக வெறுப்பது, காரணம் இல்லாமல் விமரிசிப்பது … ஆகியவை இந்து மதத்திற்கு ஒப்பானது அல்ல என்பதே நமது கருத்து.

இந்து மதம் எல்லா மதங்களையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வரும் அளவுக்கு சிறப்பான கோட்பாடுகளை
உடையது, அதி செயல் படுத்திக் காட்டக் கூடியது என்பதே நமது கருத்து.

//ஹஸ்ரத்பால் மசுதியில் முகமது நபியின் முடி காணாமல் போய்விட்டதென்று வன்முறையில் ஈடுபட்டு இந்துக்களைக் கொன்றனர். நாம் பெரும்பான்மையாக இருப்பதால் தான் அடங்கி இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.//

சரி, அதற்கு இப்பொது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? வர்களை கோட்பாட்டளவில் எதிர் நோக்கி, மத சகிப்புத் தன்மை இன்மை என்பது காட்டு மிராண்டித் தனத்தை விட பிற்போக்கானது, காட்டு மிராண்டியாவது கலவி அறிவு இல்லாத காலத்தில் காட்டு மிராண்டித் தனம் செய்தான், இப்போது இவ்வளவு படித்தும் பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி பாராட்டி அவற்றை அழித்து, தன மார்க்கத்தை மட்டுமே இந்த உலகில் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என ஆவேசப் படுவது, அதற்க்கான முயற்சிகளில் வலுக்காட்டயமாக ஈடுபடுவது இவை காட்டு மிராண்டித் தனத்தை விட மோசமானது என்பதை உணர்த்துவதை தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

நண்பரே
தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இந்துக்கள் எந்த ஒரு அமைப்பாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்கள். காரணம் எதையும் ஆராய்ந்து பார்ப்பது தான். ஆர்எஸ்எஸ் காரர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எந்த ஹிந்துவும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை.

மத சகிப்புத்தன்மை உள்ளவன் இந்து தான் என்று பெருமையாக நம்மால் மட்டுமே கூற முடியும். அவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். நம்மை பலஹீனர்களாகக் கருதுகிறார்கள். நாமும் பலம் உடையவர்கள்தான் என்று தற்காப்பாகத்தான் இந்து அமைப்புகள் செயல்படுகின்றன. நீங்கள் அதையும் தவறு என்கிறீர்கள். இஸ்ரேல் தன்னைக் காத்துக்கொள்ள பதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்றோ அழிந்து போயிருக்கும்.

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களின் திருவிழாக்கள் நடக்கும்போது எந்த இந்துவும் அதை சிறப்பாக நடைபெற விடாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அவ்விழாக்களில் பங்குகொண்டு சிறப்பாக நடைபெற உதவுகிறான். பணத்தையும் வாரி வழங்குகிறான். அவர்களின் விழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பே
தேவையில்லை. ஆனால் ஹிந்து திருவிழாக்களுக்குத் தான் அதிகம் பாதுகாப்பு தேவைப்படுகிறது. சிறுபான்மையாக இருக்கும்போதே மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: