Thiruchchikkaaran's Blog

சோனியா காந்தி நலம் பெற வாழ்த்துகிறோம்.

Posted on: August 5, 2011


 
 
 
 
சோனியா காந்தி நலம் பெற வாழ்த்துகிறோம். 
 
சோனியா காந்தி சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் 
பட்டதாக செய்திகள் வருகின்றன. 
 
அவர் விரைவில் குணம் பெற வாழ்த்துகிறோம்.
 
நோய்க்கான சிகிச்சை முறைகள்,அவருக்கு அதிக கஷ்டத்தைக் 
கொடுக்காமல்  இதமாக அமையும்  படியாக  இருக்கட்டும் எனவும் வாழ்த்துகிறோம்.
 
 
 
Advertisements

9 Responses to "சோனியா காந்தி நலம் பெற வாழ்த்துகிறோம்."

(edited)உங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை.

சிவனடியான்,

இக்கால மருத்துவ சிகிச்சை முறைகள் நவீனமாக இருந்தாலும், அவையும் வலியையும் , குமட்டல், .. இன்னும் பல, இடையூறுகளையும் அளிக்கின்றன. சில நோய்களில் சிக்கியவர்கள் எதிரிக்கு கூட அந்த நோய் வரக் கூடாது என்று பீல் பண்ணும்படி, வாய் விட்டு சொல்லும் அளவுக்கு அந்த நோய் அவ்வளவு துயரத்தை தருகிறது.

என்னைப் பொறுத்தவரையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் எவரையும், அவர் யாராக இருந்தாலும் சரி, அவர் விரைவில் குணமாக வேண்டும் என்றும், அவருடிய சிகிச்சை கடுமையானதாக இருக்கக் கூடாது என்றும் வாழ்த்தும் அளவுக்கு நானே சில சிகிச்சைகளை சந்தித்து விட்டேன்.

நீங்கள் இளைஞர் உங்களுக்கு எந்த நோயும வரக் கூடாது என்று என்றே நான் வாழ்த்துகிறேன், நீங்கள் இன்னும் மன முதிர்ச்சி அடையும் போது உங்களின் எண்ணம் மாறக் கூடும்.

எனக்கு நோய் வரக்கூடாது என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி, நன்றிகள்.எனக்கும் உங்களுக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் சோனியாவையும் வாழ்த்தும் போது உங்கள் சகிப்புத்தன்மையின் உச்சம் புரிகிறது,கீழுள்ள நேற்றைய இந்த பதிவு மேல் தாங்கள் கொண்ட ஆழ்ந்த ஈடுபாடோ என நினைக்கிறேன். என்னால் இதெல்லாம் இந்த விசயத்தில் இப்ப முடியாது சார்
//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானாம் மைத்ர (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )
கருண ஏவ ச (கருணையே உடையவனாக, கருணை மட்டுமே உடையவனாக)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை உடையவனாய் )
க்ஷமீ (பிறர் தனக்கு இழைக்கும் இன்னல்களை பொறுத்து மன்னிப்பவனாக )
ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)
யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )
ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

கண்ணனுக்கு என் மேல் பிரியம் வராமல் போனாலும் பரவாயில்லை. கண்ணா என்னை மன்னிச்சுடு

வணக்கம் சகோ,
நலம் பெற வாழ்த்தலாம்.நலம் பெற்று அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றால் இன்னும் வாழ்த்தலாம்.
நன்றி

சகோ. சார்வாகன்,

வணக்கம்!

வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி

எனக்கும் சோனியாவின் அரசியல் கோட்பாடுகள் மீது கடுமையான விமரிசனம் உண்டு. . ஆனால் அவர்
உடல் நலம் குன்றி சர்ஜரி செய்யப்பாட்டார் என்னும் போது நமக்கு தெரிவது சர்ஜரிக்கு உள்ளாகும் ஒரு
மனிதர் படும் அவதிகளும், வலியும். அந்த முறையிலே நோக்குகிறோம்.

வெளிப்படையாக சொன்னால் நானே சில மாதங்களுக்கு முன் சர்ஜரி செய்யப் பட்டு இன்னல்களை அனுபவித்தேன். அந்த எபக்ட் என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. இன்னும் ஒரு சர்ஜரி கூட செய்யப் படக் கூடும்

அவர் விரைவில் நல்ல நிம்மதி அடையவேண்டும்.

வணக்கம் தமிழன் ,வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.

சோனியா காந்தி நலம் பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: