Thiruchchikkaaran's Blog

இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?

Posted on: August 5, 2011


(முன்பு வெளியிட்ட கட்டுரையின்  மீள் பதிவு)

இப்போது இந்தியாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ள் அல்ல‌ என்றும், அவ‌ர்க‌ள் கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ ம‌த்திய‌ ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு  வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்றும் கூற‌ப் ப‌டுகிற‌து அல்ல‌வா?

ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,

அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், எப்படி ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி (ஆரிய) நாகரீகம் என்றோ, வோல்கா நதி (ஆரிய) நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?

உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி  – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?

என‌வே இந்தியர்க‌ள்  இந்தியாவின் அச்சு அசலான ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.

Advertisements

5 Responses to "இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?"

டேய் இங்கு இந்தியர்கள் என்று ஹிந்தியர்களை சொல்றாயா சொம்பு தூக்கி?

//உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?//

You have a valid point there!

திரு திருச்சிகாரன் அவர்களே
ஒரு வரலாறு மிக்க பதிவைபோடும்போது நிறைய நூல்களை கற்று அதில் இருக்கும் சான்றுகளை மேற்கோளாக காட்டினால்தான் சிறப்பாக இருக்கும். தங்களின் பதிவு சிறுபிள்ளைதனமாக உள்ளது ஏன்றால் தங்களின் தலைப்பே மிக தவறானது \*இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?*\

இந்தியா என்கின்ற வார்த்தையே ஆங்கிலேயேர்கள் வந்தபின்புதான் பரவலாக பரவியது,
அதற்கு முன்பு அனைவருமே பல நாடாக பல இனமாகதான் வந்தார்கள்.

/*அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே, */
இப்படி ஒன்றை எந்த நூலிலும் குறிப்பிடவில்லை.
ஆரியர்கள் ஒரு நாடோடி கூட்டமாகவே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு பல சான்று உண்டு,
ஆரிய வேதங்களே அதற்கு சான்று

“ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.” -எச். ஜி. வெல்ஸ்

ஆரியர்கள் சமற்கிருத மொழிக்கு எழுத்துவடிவம் கூட தமிழர்களிடம் இருந்துதான் பெற்றார்கள்.

ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது
ஏன் என்று கேள்வியை எழுப்பினால் விடை தெரியும், வேல்வியை எழுப்பினால் புகைதான் வரும்.

அந்நியர்களாகிய ஆரியர்களின் வரவால் தமிழர்களின் சிந்துசமவளி சிதைந்தது
பின்பு பல இனத்தவரின் படைஎடுப்பால் ஆரியர்களின் சிறப்புமிக்க மொழி சமற்கிருதமும் முற்றிலுமாக சிதைந்தது.

இன்று அந்த ஆரிய கூட்டத்துக்கு இந்தியா என்கின்ற நாடும் தமிழ் போன்ற வரிசெலுத்தும் அடிமைகள் இருக்கின்றன
அதனால் இந்தி, சமற்கிருத்தை வளர்க்க பன் மடங்கு பணம் விரயமாக்கபடுகிண்றன,
தமிழ்மொழி தனிநாடு இல்லாமல் அல்லோல்பட்டு கொண்டுயிருக்கிறது.

தமிழர்களின் இன்றைய இந்து மதம், அதன் சடங்குகள் எல்லாம் இறக்குமதியானவைதான்,
தமிழனின் வாழ்கை நெறியில் மதம் இருந்ததேயில்லை, இயற்கையை மட்டுமே வணக்கி வந்தார்கள்.
இராமயணம், மகாபராதம் பகவத் கீதை இது எல்லாம் ஆரியர்கள் அவர்கள் மொழியில் எழுதி பரப்பிவிட்ட ஒரு கட்டுகதைகள்,
இந்த கட்டுகதைகளை அந்த மக்கள் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவர்களின் விருப்பம் ஆனால்
தமிழன் இவைகளை நம்பி கடவுள் என தொழுவது வேதனைக்குரியது.

அன்புக்குரிய நண்பர்கள் திருவாளர்கள் நிரஞ்சன்,நவன் , பரணி,

வணக்கம், வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

திரு.நிரஞ்சன்,

நான் இந்தியர்கள் என்று சொல்வது இந்திய நாட்டில் நான் இந்தியனாக வாழ்கிறேன் என்று நினைப்பவர்களை.

திரு.நவன்,

நன்றி!

திரு.பரணி,

விரிவான கருத்தாய்வுக்கு மிக்க நன்றி திரு. பரணி அவர்களே!

நாம் அனைவருமே பல வரலாற்று நூல்களை படித்து இருக்கிறோம் என்றே எண்ணுகிறேன். மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என எழுதி இருப்பது நாம் அறிந்தது தானே. அதற்கு எந்த சான்றும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. இதைத் தான் கட்டுரையில் விளக்கி இருக்கிறோம்.

/*அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே, */
இப்படி ஒன்றை எந்த நூலிலும் குறிப்பிடவில்லை.//

மேலை நாட்டி வரலாற்று ஆசிரியர்கள் தான் “சிந்து சமவெளி நாகரீகம் வேறு, ஆரிய நாகரீகம் வேறு, சிந்து சமவெளியில் இருந்த மக்களை விரட்டி விட்டு ஆரியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்” என்றெலாம்
சொல்கின்றனர், அப்படியானால் அவர்கள ஒரு சமூகமாகவே குடி பெயர்ந்து இருப்பதாகத் தானே அர்த்தம்.

கைபர் போலன் வழியாக ஆரியர்கள் வந்தார்கள் என்றால், சிந்து சமவெளி மக்களை வென்றார்கள் என்றால்
அதற்கு முன்பு ஆரியர்கள் சமூகமாக வாழ்ந்து தானே அப்படிப்பட்ட போர் வீரர்களை உருவாக்கி இருக்க முடியும்? , கத்தி, ஈட்டி முதலிய ஆயுதங்களை செய்து கொண்டு , அதற்கு தேவையான கொல்லர், கூடாரம் தயாரிப்போர், சமையல் பணியாளர் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்க வேண்டும் அல்லவா?

இல்லை என்றால் கடவுள் அப்படியே வானத்தில் திடீரென ஆயுதம் தாங்கிய ஆரியப் போர் வீரர்களைப் படைத்து அப்படியே அவர்களை சிந்து நதிக்கரையில் ஏர் டிராப் செய்து விட்டாரா?

//ஆரியர்கள் ஒரு நாடோடி கூட்டமாகவே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு பல சான்று உண்டு,
ஆரிய வேதங்களே அதற்கு சான்று//
என்ன சான்று, எப்படி சான்று என்று சொல்லுங்கள். எந்த வேதத்திலும் நாடோடி வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இல்லை. எனக்கு தெரிந்த அளவில் இல்லை.

//“ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.” -எச். ஜி. வெல்ஸ்//

இது எச். ஜி. வெல்ஸ்க்கு எப்படி தெரியும்? ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வரும்போது, கூடவே இவர் பரணி பாடிக் கொண்டு கூட வந்தாரா, இல்லை டயம் மெசினில் உட்கார்ந்து காலத்தை பின்னோக்கி சென்று பார்த்தாரா. மேலை நாட்டவர்கள் ஆப்பிரிக்கா, அமேரிக்கா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் புகுந்து காலனியாக்கி வாழ்ந்ததைப் பார்த்த வெல்ஸ் உலகில் எல்லோரும் அப்படித்தான் அடுத்தவர்களை அளித்து வாழ்வார்கள் என எண்ணி விட்டார். தான் இருந்த இடத்திலேயே ஒரு சமுதாயம் நாகரீகமாக வாழ முடியும் என்கிற சிந்தனை கூட வேல்ஸு கோ, மற்றவருக்கோ இல்லை.

எச். ஜி. வெல்ஸ் எழுதியது எல்லாம் ஒரு யூகம் மாத்திரமே. எச். ஜி. வெல்ஸ் எழுதியது எல்லாம் வெப்பவியல் விதிகள், மின்னூட்ட விதிகளைப் போல நிரூபிக்கப் பட்டவையோ, சரி பார்த்துக் கொள்ளக் கூடியவையோ அல்ல. Neither proved, nor verified.

//தமிழர்களின் இன்றைய இந்து மதம், அதன் சடங்குகள் எல்லாம் இறக்குமதியானவைதான்,
தமிழனின் வாழ்கை நெறியில் மதம் இருந்ததேயில்லை, இயற்கையை மட்டுமே வணக்கி வந்தார்கள்//

நீங்கள் எழுதுவது உண்மைக்கு மாறாக இருக்கிறது.

வட நாட்டில் வசித்தவர்தான் சூரியன், , வாயு, வருணன் (நீர்) ….. போன்ற இயற்கைகளை வணக்கிக் கொண்டு இருந்தனர். தமிழர்கள் முருகன், திருமால் போன்ற கடவுள்களை வணக்கிக் கொண்டு இருந்தனர். தமிழ் மொழியில் இருப்பதிலேயே மிகப் பழமையான தொல்காப்பியத்திலே முருகன் வழிபாடு, மாலவன் வழிபாடு பற்றி குறிப்புகள் உள்ளன. பழனி மலையிலே போகர் என்னும் சித்தர்
மூலிகைகளால் செய்து வணக்கிய முருகர் சிலை இன்று மிகப் பாப்புலரான பழனி கோவிலாகி இருக்கிறது. வட இந்தியாவில் அக்காலத்தில் மார்க்கண்டேயன் , பிரஹலாதன் போன்றோர் உருவ வழிபாடு இது இருந்தாலும் அவர்கள் இயற்கையையே பெரிதும் வழிபட்டு வந்தனர்.

இந்து மத்தில் உருவ வழிபாட்டை, கடவுள் வழிபாட்டை முக்கிய வழிபாடாக ஆக்கியது தமிழர்களே. உண்மையில் இன்றைக்கு இந்தியாவிலும் உலகெங்கிலும் பினபற்றப் படும் இந்து மதமானது அச்சு அசலான தமிழர்களின் மதமாகும்.

//இந்தியா என்கின்ற வார்த்தையே ஆங்கிலேயேர்கள் வந்தபின்புதான் பரவலாக பரவியது//

இந்தியன் என இப்போதுதான் கூப்பிடுகிறார்கள் என்றால், அதனால் என்ன, சிவாஜி ராவ் கெயிக் வாட் என்றாலம், ரஜினி காந்த் என்றாலும் ஒரே நபர்தான். மற்றவர் வேறு பேர் சொல்லி அலைகிறார் கள் என்பதால் அந்த மனிதர் அதே மனிதர்தான் !

//இந்த கட்டுகதைகளை அந்த மக்கள் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவர்களின் விருப்பம் ஆனால்
தமிழன் இவைகளை நம்பி கடவுள் என தொழுவது வேதனைக்குரியது.//

உலகிலேயே பிற மதங்களின் இனங்களின் மொழிகளின் மீது எந்த விதமான வெறுப்புணர்ச்சியையும் கொடுக்காத மதமாக தமிழர்க்ளின் மதம் உள்ளது. கருமாரி அம்மனையோ, முருகனையோ கும்பிட்டு வருபவன், தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எனக் கும்பிட்டு மன நிறைவுடன் வருகிறான். அவன் நான் கும்பிட்ட கடவுள் மாத்திரமே உண்மையான தேவன், மற்ற மதத்தினர் கும்பிடும் தெய்வங்கள் போய்த் தெய்வங்கள் என்று ஒரு போதும் எண்ணியது கிடையாது, அவன் வணக்கும் கடவுளும் என்னைத் தவிர வேறு தெய்வத்தை கும்பிட்டால் உன்னை நரகத்தில் நெருப்பில் போட்டு வதக்குவேன் என்றோ, நீ இன்னொரு மத்தவனைக் கொன்றால் உனக்கு சொரக்கத்தில் இடம் தருவேன் என்றோ சொன்னதாக இல்லை. இவ்வளவு சிறப்பான மதத்தை , அமைதியான், சகிப்புத் தன்மை உள்ள மதத்தை, தமிழன் உருவாக்கி இருக்கிறான்.

இந்தியாவின் முக்கிய இரண்டு பணடைய மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழி இலக்கியங்கள் எதிலும், பிற மத்தவருக்கோ, இனத்தவருக்கோ, மொழியினருக்கோ எதிரான வெறுப்புக் கருத்துக்கள் எதவும் கிடையாது.

//தமிழன் இவைகளை நம்பி கடவுள் என தொழுவது வேதனைக்குரியது//

உலகிலே பலரும் வணங்கும் எந்த ஒரு கடவுளுக்கும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது,

ஆனால் மனிதன் தன் மன பலகீனத்தால் , தான் துன்பங்களால் தாக்கப் படும் நிலையில் இருப்பதால், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நம்மைக் காக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறான்.

அப்படி நினைப்பவர் உருவாக்கிய மதங்களில் தமிழன் உருவாக்கிய மதம் அமைதியான மதமாக, சகிப்புத் தன்மை உள்ளதாக், அடுத்தவரை பயமுறுத்தாததாக உள்ளது. இதில் இருந்தே தமிழனின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழன் என்றால் தமிழன், தெலுங்கன், கன்னடன், மராட்டி , குஜராத்தி, எல்லோரும் கொஞ்சம் பேச்சுதான் மாற்றமே தவிர … அடிப்படைக் குணாதிசயங்கள் ஒன்றே. எவ்வலு அடித்தாலும் வாங்கிக் கண்டு மறு கன்னத்தைக் காட்டுவது உலகிலே இந்தியன் மாத்திரமே.

ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்.

இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.

http://www.livius.org/da-dd/darius/darius_i_0.html

http://www.iranchamber.com/history/article…ple_origins.php

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: