இந்துக்களுக்கு, இந்து மத்தைப் பற்றி தெரியவில்லையா?
Posted August 4, 2011
on:பெரும்பாலான இந்துக்கள் இந்து மதம் சம்பந்தமான எந்த ஒரு நூலையும் படித்து தேர்ச்சி பெறுவதில்லை. தங்கள் மதத்திற்கு என்று ஒரு நூல், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அடி பணிய வேண்டும் … என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் எல்லாம் இந்து மதத்தில் இல்லை.
அப்ப எப்படித் தான் ஒரு இந்து, இந்து மத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். ஒரு இந்து தன் பெற்றோரிடம் இருந்து, தன் அண்ணன், அக்காளிடம் இருந்து உறவினர்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து தான் பெற்ற சிந்தனைகளால் இந்துவாக இருக்கிறான்.
ஒரு இந்துவின் பெற்றோர் அம்மனையோ, முருகனையோ, கண்ணனையோ… கடவுளாக காட்டி, கும்பிட்டுக்க என்கிறார்கள். தான் காட்டும் கடவுளைத் தவிர பிற வடிவத்தில் கடவுள் இல்லை என்றோ, வேறு வடிவத்திலோ , வடிவமற்ற முறையிலோ கடவுளைக் கும்பிடக்கூடாது, அப்படிக் கும்பிடும் முறைகளை வெறுத்து கண்டித்து ஒழிக்க வேண்டும் என்கிற சகிப்புத் தன்மை அழிப்புக் கோட்பாட்டை ஒரு இந்து பெறுவது இல்லை.
இந்து மதத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத் கீதையில் சொல்லப் பட்ட ஒரு செய்யுளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்!
பகவான் (கிருஷ்ணர்) சொல்லுகிறார்,
“எவன் ஒருவன் மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக, பகைமை இல்லாதவனாக,
எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்,
கருணையே உடையவனாக(கருணை மட்டுமே உடையவனாக),
அகந்தையும் திமிரும் இல்லாதவனாக,
இன்பத்தையும் , துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை உடையவனாய்,
பிறர் தனக்கு இழைக்கும் இன்னல்களை பொறுத்து மன்னிப்பவனாக,
எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக,
யோக நெறியில் நிற்பவனாக ,
திடமான உறுதி உடையவனாக,
மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவனாக
இருக்கிறானோ,
அவனை எனக்கு பிடிக்கும்!”
Chapter12, verses 13, 14
//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானாம் மைத்ர (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை உடையவனாய் )
க்ஷமீ (பிறர் தனக்கு இழைக்கும் இன்னல்களை பொறுத்து மன்னிப்பவனாக )
ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)
யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )
ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//
இந்தக் கருத்துக்களைப் பெரும்பாலான இந்துக்கள் படித்து தெரிந்து கொள்வது இல்லை, ஆனால் ஒரு இந்து படிக்காமலே , கேட்காமலே, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறான்.
மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.
இந்த சிந்தனைகளை ஒருவர் நூல்களைப் படிப்பதன் மூலம் மாத்திரமே பெற முடியும் என்று அவசியம் இல்லை
10 Responses to "இந்துக்களுக்கு, இந்து மத்தைப் பற்றி தெரியவில்லையா?"

நண்பரே
இந்து மக்களுக்கு இந்து மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத காரணத்தினால்தான் மிக எளிதாக மதம் மாறிவிடுகிறார்கள். பிற மதங்களுக்கு ஒரே ஒரு வேத புத்தகம். அதை மட்டும் படித்தால் போதும். ஆனால் நமக்கு கடல் போல் நூல்கள் இருக்கின்றன. ஒரு புத்தகத்தில் இந்து மதம் அடங்கி விடுவதில்லை. இதில் எவரும் முழுமையாக கற்றுணர்ந்தவர் இல்லை.
பெற்றோர்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் பெற்றோர்களுக்கே ஒன்றும் தெரியாது. தெரிந்தவற்றையும் பலர் பிறருக்கு சொல்லித் தருவதில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் பலருக்கு தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை. கோவிலில் உபன்யாசம் நடைபெறுகிறது என்றால் மிகச் சொற்ப நபர்களே முழுவதும் கேட்கிறார்கள். பெரும்பாலானோர் கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு கிளம்பி விடுகிறார்கள்.
இந்து மதத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் தான் பலமும், பலவீனமும். பள்ளிக்கூடத்தில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து , ட்ரில் மாஸ்டரை போல,”முழங்கால் போடு, குனி, நிமிர், கைகளை உயர்த்து ” என்று வழிபடும் முறை இந்துவுக்கு ஒத்து வராது.

இந்து மதத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் தான் பலமும் பலவீனமும். பள்ளிக்கூடத்தில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து இ ட்ரில் மாஸ்டரை போல முழங்கால் போடு குனி நிமிர் கைகளை உயர்த்து ” என்று வழிபடும் முறை இந்துவுக்கு ஒத்து வராது.
உண்மை, உண்மை. Raja.



இந்து மதத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாததனால் அற்ப விஷயங்களுக்கெல்லாம் மதம் மாறி விடுகிறார்கள். ஆனால் தாங்கள் சொல்வது போல் நண்பர்கள், உறவினர்கள் பெற்றோர் மற்றும் சுய சிந்தனை மூலமே இந்து மதத்தை புரிந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. மதம் மாறிச் சென்றவர்களுக்கு சுய சிந்தனை என்பதே இல்லாமல் தங்கள் போதகர்கள் சொல்லித்தருவதையே உண்மை என்று நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள்.
நம் ஆன்மீகத்தின் பெருமையை நம் சந்ததியினருக்கு புரிய வைக்க வேண்டும்.


நண்பரே
தாங்கள் கூறுவது உண்மைதான். ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எளிதில் மதம் மாறுவதில்லை. ஆனால் சபரி மலைக்கு விரதமிருந்து பல வருடங்கள் சென்றவர்கள் கூட மதம் மாறியுள்ளனர். அதற்கு காரணம் மனித மனத்தின் பலகீனங்களை அறிந்து அவன் பலகீனம் பணமா, நோயா, குடும்ப பிரச்னைகளா? என்று அதை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள்.
ஆனாலும் நமது ஆன்மீகம் கோடிக்கணக்கான வெளிநாட்டு பண ஆசை காட்டியும், அற்புத சுகமளிக்கும் ஏமாற்று விளம்பரங்களிலும் மோசம் போகாமல் இன்னும் நிலைத்து இருக்கிறது.
எந்த மதத்தை பின்பற்றினாலும் தங்கள் கர்ம வினைகள் நம்மை விட்டு நீங்காது. அதற்குரிய பலன்களை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை நம் மக்கள் அறிய வேண்டும்.

1 | naren
August 4, 2011 at 6:28 pm
நண்பரே….அந்த சமஸ்கிரத வார்த்தைகளை உபயோகித்தால், அது எதோ புரியாத புதிர் போல என்று புரிந்தவனும் ஒடிப்போய்விடுவான். கீதை செய்யுளின் தமிழ் வடிவத்தை மட்டும் போட்டால் இன்னும் சொல்லவந்த கருத்தின் தாக்கமும் புரிந்த சிந்தனை கோட்பாடை இன்னும் தெளிவு பெற உதவும். மேலும் படிக்க தோன்றுபவர்களுக்கு சமஸ்கிரத சுலோகத்தை தேடி படித்துக் கொள்ளட்டும்.
இந்து தத்துவத்தை விளக்கும் செய்திகளை ஊடகங்களில் படிக்கும் போது எனக்கு தோன்றியவை
1) சமஸ்கிரத சொற்களை பொருள் கூறாமல் உபயோகிப்பது.
2) சம்ஸ்கிரத சொற்களுடன் பொருள் வருமாறு பயன்படுத்துவது, இதில் படிப்பவர்க்கு continuity போய்விடும்.
இதற்கு தமிழ் விளக்கத்தை முதலில் முழுமையாக தந்துவிட்டு. பிறகு சமஸ்கிரதத்துடன் அந்த சொற்கள் ஏற்ப விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
மற்றொன்று தமிழ் செய்யுள் பாட்டுகள் மேற்கொள் காட்டும்போது முழுமையான விளக்கவுரை தருவது நல்லது. பாட்டையும் இரசிக்க முடியும். அர்த்தத்தையும் புரிய முடியும். பழைய தமிழ் படித்து புரிவதற்கு தமிழில் இளங்கலை பட்டம் பெற்றவர்களே தடுமாறுகிறார்கள்.
thiruchchikkaaran
August 5, 2011 at 12:29 am
நன்றி நரேன்,
நீங்கள் கூறுவது சரியே ,
தமிழிலே தொடர்ச்சியாகப் படிக்கும் போது உருவாகும் உணர்வு, வடமொழி இடையே இருக்கும் போது வரவதில்லை.
இப்போது சிறிது மாற்றி இருக்கிறோம்.
மூல மொழியில் இருக்கும் பொருளை மொழி பெயர்ப்பில் கொண்டுவருவது எளிதன்று. எனவே பதவுரையையும் அப்படியே மாற்றாமல் வைத்து இருக்கிறோம்.
இது எப்படி இருக்கிறது பாருங்கள்!