Thiruchchikkaaran's Blog

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்! நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது! அறிவை நீ நம்பு , உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது!

Posted on: August 3, 2011


ஆசையே துன்பத்துக்கு காரணம், ஆசையை ஒழித்தால் துன்பத்தை வெல்லலாம் என்பது கௌதம புத்தரின் முக்கியக் கோட்பாடு ஆகும். நம் மனதை துன்பங்களால் துயர் படாத   நிலைக்கு உயர்த்த முடியும் என்பதும் அந்த நிலையை உயிர் விடுதலை பெற்ற நிலை, பரி நிர்வாணம் என்றும் சொல்கிறார்கள்.
 
 
இந்த நிலையை அடையாத வரை உயிர் இறக்குப்புக்கு பின் மீண்டும் பிறக்கிறது, தொடர்ந்து துன்பங்களை அன்பவிக்கிறது, இப்படி பிறப்பு இறப்பு சுழற்சியில் தோடர்ந்ந்து சிக்கி துன்பத்தை அனுபவிக்கும் உயிர் விடுதலை பெறுவதன் மூலம் பிறப்பற்ற  நிலையை அடைந்து எல்லா துன்பங்களில் இருந்தும் ஒட்டு மொத்த விடுதலையை அடைவதாக சொல்கிறது புத்த மதம்.
 
 
ஆதி சங்கரர் இன்னும் ஒரு படி மேலே போகிறார். ஆசையை விடுவது  விடுதலை பெற மிக்கிய காரணி என்று சங்கரரும் சொல்கிறார்.
 
 
ஆனால் உயிர் பிறவிகள் எடுப்பதும், இன்ப துனப்த்தை அனுபவிப்பதும் வெறும் தோற்றமே, மயக்கத்தினாலே உயிர் இன்ப, துன்பங்களை அனுபவிப்பதாக தோன்றுகிறது, மனிதனாக, மிருகமாக உயிர் பிறவி எடுப்பது வெறும் காட்சியே  உண்மையில் நடப்பதில்லை, நாம், நம் வீடு, உறவினர், நண்பர் இந்த உலகம் உட்பட எதுவமே உணமியில் இல்லை, எல்லாமே வெறும் காட்சியே, கனவில் வருவது போன்றதே என்று திடுக்கிட வைக்கும், ஆச்சரியப்  பட, அதிர்ச்சிப் பட வைக்கும்  கோட்பாட்டை சொல்கிறார் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்)!

If we see a human body with a naked eye we see the body only.

If our eye can see like x- ray machine, we can see the bones!

The persuit for finding the truth will be always there!

The Advaitha philosphical theory of Sankarachaarya (Adi Sankara) which took many in to surprise and shock was that

the entire world and universe including all the livings are mere imaginary – as good as the things seen in the dream.

Once we are awakened to find our real nature we would find that all these (univers & livings) never existed but only imagination.

There is no physical proof for that!Neverthless Sankarcharya (Adi sankara) says that one can verify that himself by elevating ones mind to that level of awkening!

More specifically he insisted that elevating our minds in to this awakened stage is very essential, as till that time a man “suffers” with the imaginary pains!

இது வடமொழி பண்டிதர்களால் மாயாவாதம் என அழைக்கப் படுவதே. இதை நீங்கள் எப்படி ஏற்க முடியும்? இதை நானும் எப்படி ஏற்க முடியும்? நாம் எதையும் அப்படியே ” நம்புவது” இல்லை. Verifiable proof இல்லாத எதையும் நாம் உண்மை என சொல்ல இயலாது.

அதே நேரம் சங்கராச்சாரியாரின் மாயாவாதத்தை ஆராய்வது தவறல்ல என நினைக்கிறேன். ஒத்துக் கொள்வது என்பது வேறு, ஆராய்வது என்பது வேறு.

எனது தாயார், தகப்பனார், பாட்டன், பாட்டி ஆகியோர் இப்போது எங்கே(இறந்து விட்டனர் அதாவது இப்போது இல்லை)?

நாமே சிறுவனாக கிரிக்கெட் விளையாடிய காலத்தை எண்ணுங்கள். கள்ளங் கபடமற்ற அந்த சிறுவன் எங்கே (அந்த சிறுவன் இப்போது இல்லை)?

நாமே கையிலே தூக்கி, அதோ பார் மாடு, அதோ பார் நாய் என்று வேடிக்கை காட்டி சிரித்து விளையாடிய குழ்நதை இன்று படித்து முடித்து அமேரிக்காவில் பணி செய்கிறாள். தூக்கி வைத்து விளையாட்டுக் காட்டி மகிழ்ந்த சிறுமி எங்கே?

சிறுமி மாறி பெண்ணாகி விட்டால் என்றால் அப்போது நூறு வருடத்துக்கு பின அந்தப் பெண் எங்கே?

அதாவது கடைசியில் எல்லாமே இல்லாமல் போகின்றன, இது நாமே அறிந்த உண்மை. ஆனால் உண்மையிலே அவை ஒரு போதும் இருந்திருக்கவேயில்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஆதி சங்கரர்.

இந்த இடத்திலே ஒரு சிறு நிகழ்ச்சியை சொல்லுகிறேன்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் குடும்பத்தை எனது தந்தை சினிமா பார்க்க அழைத்து செல்வார். என் தம்பி செகண்ட் ஷோ தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான். செகண்ட் ஷோ படம் முடிந்தவுடன் தியேட்டரை விட்டு வர மாட்டான். கூட்டம் எல்லாம் கலைந்து கடைசி நபர் தியேட்டரை விட்டு செல்லும் வரை தியேட்டரிலேயே நிற்பான். ஏன் என்று பார்த்தால் தியேட்டரில் செகன்ட் ஷோ நடித்து விட்டு நடிகர்கள் வீட்டுக்கு செல்வார்கள், அப்போது நடிகர்களை நேரிலே பார்க்க முடியும் என்று அவன் நினைத்து இருக்கிறான். திரைக்குப் பின்னால் இருந்து நடிகர்கள் நடிப்பதைத் தான் நாம் பார்க்கிறோம் என்று அவன் கருதி இருக்கிறான். உண்மையில் திரைக்குப் பின் யாரும் இல்லை என்பதை அவன் விரைவிலேயே புரிதல் செய்து கொண்டான்.

சங்கராச்சாரியாரின் விளக்கம் என்னவென்றால், நாம் கனவில் இருக்கும் போது கனவில் வருவதை உண்மை என்றே நினைக்கிறோம், சிங்கம் நம் மீது பாய்வது போல கனவில் வந்தால், அந்த கனவு நிலையில் ஒருவன் சிங்கம் பாயும் போது உருவாகும் பயத்தை அனுபவிக்கிறான் என்பதே.

கனவில் இருந்து விழிப்பு நிலைக்கு வராத வரை நடப்பது கனவு என்பதை நாம் அறியவில்லை என்பது சங்கரரின் தீர்மானமான விளக்கம் ஆகும்!

இத்தனையும் நாம் சொல்கிறோம் என்றால், சங்கராச்சாரியாரின் “சிருஷ்டி என்பதே ஒரு திருஷ்டிதான் (படைப்பு என்பது ஒரு தோற்றமே)” என்கிற கோட்பாட்டை ஒத்துக் கொள்கிறோம், சாட்சி கொடுக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறதா என ஆராய்கிறோம், அவ்வளவே!

கடவுள் மறுப்புக் கோட்பாட்டாளரான புத்தர் ஒரு பகுத்தறிவுவாதிதான், இந்து மதத்தின் சாஸ்திரங்களையும், கடவுள் கோட்பாட்டையும் உதாசீனம் செய்த புத்தர் தன்னுடைய சொந்த முயற்சியில் தன் மன நிலையை உயர்த்தியதாகவே சொல்லப் படுகிறது. ஆனால் அதையும் நாம் நம்ப வேண்டியதில்லை, நாம் என்ன புத்தரின் மனதில் புகுந்து கொண்டு பார்த்தோமா, இல்லையே!

அதே நேரம் நம்முடைய மன நிலையை துன்பங்கள் தாக்காத ஒரு நிலைக்கு உயர்த்த முடியும் என்பது சாத்தியமாக இருக்க கூடுமா என்று ஆராய்வது, முயலுவது தவறில்லை என நினைக்கிறேன், இன்னும் சொல்லப் போனால் அது அவசியமும் கூட. அண்டங்களையும் , கோள்களையும் ஆராய்வது எந்த அளவுக்கு முக்கியத்துவமோ , அதே அளவுக்காவது இதுவும் முக்கியமாகக் கூடும், ஏனெனில் இது நமது சொந்த வாழ்க்கைக்கு மிகவும் உதவக் கூடியதே.

பூமி சூரியனை சுற்றுகிறதா, அல்லது சூரியன் பூமியை சுற்றுகிறதா என்கிற ஆராய்ச்சியால் நம் வாழ்க்கையில் நாம் பெறுகின்ற நன்மையை போல, துன்பங்களால துயர் படாத நிலைக்கு நம் மனதை அடைய செய்வது (அப்படி முடியுமானால்) நம் வாழ்க்கைக்கு பல மடங்கு நன்மையைத் தரும் அல்லவா?

Advertisements

4 Responses to "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்! நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது! அறிவை நீ நம்பு , உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது!"

நம் கண்ணையே நாம் நம்ப முடியாது என்ற சூழ்நிலை இருந்தால், எந்த proof இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாதே.

Whatever we see, we can further check as what it is exactly!

நீங்கள் தான், கண்ணைத்தான் நம்புவேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். பி.சி. சர்கார் போன்றவர்கள் உங்களை சுலபமாக கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைக்க முடியும்.

பி. சி சர்க்கார் மட்டும் அல்ல, இன்னும் பலர் குருடர்கள் பார்வை அடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் என்று செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது பற்றி சகோ. சார்வாகன் தளத்திலே சிறப்பான் கட்டுரை உள்ளது. இதை எல்லாம் தாண்டி உண்மையை உணரும் சக்தியும் மனிதனுக்கு உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: