Thiruchchikkaaran's Blog

ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணின ஒருவன்…. கன்னிமையைக் காணவில்லை என்று அவதூறு உண்டாக்கினால்…..

Posted on: August 1, 2011


பைபிள்  

உபாகமம்,  அதிகாரம் 22

13. ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து:
If any man take a wife, and go in unto her, and hate her,

14. நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
And give occasions of speech against her, and bring up an evil name upon her, and say, I took this woman, and when I came to her, I found her not a maid:

15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity unto the elders of the city in the gate:

16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
And the damsel’s father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
And, lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.

18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
And the elders of that city shall take that man and chastise him;

19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
And they shall amerce him in an hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,
But if this thing be true, and the tokens of virginity be not found for the damsel:

21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.


Then they shall bring out the damsel to the door of her father’s house, and the men of her city shall stone her with stones that she die: because she hath wrought folly in Israel, to play the whore in her father’s house: so shalt thou put evil away from among you.

Advertisements

34 Responses to "ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணின ஒருவன்…. கன்னிமையைக் காணவில்லை என்று அவதூறு உண்டாக்கினால்….."

வணக்கம் சகோ,
மோசேக்கு வழங்கப் பட்டதாக கூறப்படும் உபாகமத்தில் இந்த கல்லெறிதல் வலியுறுத்தப் பட்டு இருந்தாலும்,யூதர்களோ,கிறித்தவர்களோ இப்போது இதனை பின் பற்றுவதாக தெரியவில்லை.இதன் காலம் சுமார் பொ.மு 1000,அதாவது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டம்.பொது ஆண்டு முதல் நூற்றாண்டிலேயே யூதர்கள் மரண தண்டனையை இரத்து செய்கின்றனர்.இபோதும் வலியுறுத்தி,பின்பற்றுபவர்கள் இஸ்லாமிய மத ஆட்சி நடக்கும் சில நாடுகள்[சவுதி,இரான்,சோமாலிய,சூடான்) மட்டுமே
http://en.wikipedia.org/wiki/Stoning
கிறித்தவர்களீன் பைபிளை தொகுத்த கான்ஸ்டன்டைன் யூதர்களின் வேதங்களான பழைய ஏற்பாட்டையும் சேர்த்து விட்டதுதான் கொடுமை. புதிய ஏற்பாட்டி இயேசுவுக்கும்,பழைய ஏற்பாட்டின் ஏல் (யாகோவா)க்கும் சம்பந்தமே இல்லை.ஆனாலும் அரசியல் காரனங்களுக்காகவே பழைய ஏற்பாட்டு,புதிய ஏற்பாட்டு மதமும் ஒன்றாகவே தொடர்ச்சியானதாகவே காட்டப் படுகின்றன.இப்படி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கிறித்தவம் அன்பு மார்க்கமாக்வே இருந்திருக்கலாம்.ஆனால் நீடித்திருக்குமா என்பது சந்தேகமே.
http://bible-christian.org/discussion/response146.html
கிறித்தவ மத சட்டங்களில் வரலாற்றுரீதியாக க்ல்லெறிதல் குறித்து தகவல்கள் இல்லை.இருண்ட காலங்கள் என்றழைக்கப் பட்ட கிறித்தவ மத ஆட்சியின் உச்ச கட்டத்தில் மத மறுப்பாளர்கள் மீது கொலை,சித்திரவதை, வன்முறை கட்டவிழ்த்து விடப்ப்ப்ட்டது.அப்போதும் கூட இது நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை.இது குறித்து யாரேனும் தகவல்கள் பகிரலாம்.

Thanks Bro. Saaravaakan,

In India in general and Tamil nadu in particular, each and every word of BIBLE is considered as holy.
There is plenty of bigotry for other religions in Bible.

Thus knowingly or unknowingly the preachers of Bible preach religious bigotry, destroys the tolerance in the herats of the peoplr, thus creating hatredness.

So its imperative to explain as what is in Bible, whether the mankind in general and people of India in particular can bear if the concepts inBible are considered as Holy and followed faithfully!

நண்பர் சார்வாகன்,

உங்கள் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது. பைபிளை கான்ஸ்டன்டைன் தொகுக்கவில்லை, அவர் காலத்தில் தொகுக்கப்பட்டது அவ்வளவே. மேலும், பைபிளில், இவை அனைத்தும் பழைய ஏற்பாடு என்று தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். பழைய ஏற்பாடு என்றால் என்ன, புதிய ஏற்பாடு என்றால் என்ன விளங்கிக்கொண்டால், கிறிஸ்துவம் அன்பை வலியுறுத்துவதை நீங்கள் அறியலாம்.

திருச்சிக்காரன் அவர்களே,

நீங்களே, பழைய ஏற்பாடு என்றால் என்ன, மற்றும் புதிய ஏற்பாடு என்ன என்று ஒரு கட்டுரை வரைந்தால் சிறப்பாக இருக்குமே.

நன்றி,

அசோக்

Ashok,

The biblical preacher’s

bigotry and contempt shown towards other religions,

The zeal to obliterate all other religion from the earth except their own sect

the resulting hatredness and hate campaign

are all attributed to the old testemet and also certainly to the new testement (where the concepts of old concepts are thoroughly mixed indeed)

as the new testement does not hesitate to the imbibe and mix the bigotry

I dont find any big difference as such except for few chapters!

திருச்சிக்காரன்,

பைபிளை குறித்த உங்கள் வெறுப்பு ஒரு புறம் இருக்கட்டும்.

பழைய ஏற்பாடு என்றால் என்ன?

புதிய ஏற்பாடு என்றால் என்ன?

சொல்லுங்களேன், உங்களுக்கு தெரிந்தால்.

அசோக்,

//பைபிளை குறித்த உங்கள் வெறுப்பு ஒரு புறம் இருக்கட்டும். //

பைபிள் உட்பட எந்த ஒரு நூலையும் சரி, ஒட்டு மொத்தமாக நாம் அன்பு செய்வதும் இல்லை, வெறுப்பதும் இல்லை.

ஒவ்வொரு கருத்தையும் எடுத்து வைக்கிறோம், அந்த கருத்து நல்ல கருத்தாக இருந்தால் ஆதரிக்கிறோம்.

பைபிளில் உள்ள பல நல்ல கருத்துக்களை சுட்டிக் காட்டி கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

பைபிளில் உள்ள பிற மத வழிபட்டு தளங்களை அடித்து உடைத்து நொறுக்க வேண்டும், பிற மத வழிபாடுகளை அனுமதிக்க கூடாது, இனப் படுகொலை செய்து அவர்களின் இடங்களைப் பிடுங்கி கொள்ளலாம், சிறு குற்றங்களுக்கு கூட கல்லெறிதல் … இப்படியான கோட்பாடுகளை ஆதரிக்க இயலாது. கன்னிப் பெண்களை தூக்கி வந்து இனபத்துக்கு வைத்துக் கொள்ளாலாம் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால், இது நல்லது இல்லைங்க என்றால், திருச்சிக்காரன் அந்த நூலை வெறுக்கிறார் என்று சொல்வது சரியா?

.

//திருச்சிக்காரன்,

பழைய ஏற்பாடு என்றால் என்ன?

புதிய ஏற்பாடு என்றால் என்ன?

சொல்லுங்களேன், உங்களுக்கு தெரிந்தால். //

என்னைப் பொறுத்த வரையில் பைபிளை ஏற்பாடுகளாக்குவது என்றால்
(பகுதிகளாக பிரிப்பது என்றால்)

ஆதாம் ஏவாள் விரட்டப் பட்ட பகுதி

ஆபிரகாம் பகுதி

மோசசின் உடன்படிக்கை மறுப்பு, பிற இன அழிப்பு, கொடூர தணடனைகள் பகுதி

ஜோஷுவாவின் கொடூர இனப் படுகொலைப் பகுதி

தாவீதின் பாலஸ்தீனிய அழிப்பு பகுதி

சாலமன்…. உள்ளிட்டோர் பகுதிகள்.

நீதி மொழி பகுதிகள்

இயேசு கிறிஸ்துவின் யூத மதத்தை சீர்திருத்தி, யூதர்களை நல் வழிக்கு கொண்டு வர முயலும் பகுதி

அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு, மோசசிய , ஜோசுவாவிய.. கோட்பாடுகளை உள்ளடக்கிய யூத மதத்தை உலகெமெங்கும் இயேசு கிறிஸ்துவின் பேரால் நிலை நிறுத்த முயலும் பகுதி.

இப்படியாக பிரிக்கலாம்.

இதிலே புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்று பிரித்ததில் என்ன? .

ஆதாம் விரட்டப் பட்டதையும், மோசசின் செயல் பாடுகளையும் ஒரே ஏற்பாட்டில் எப்படி வைக்க முடியு?

ஏனெனில் தோட்டத் தொழிலாளிகளான ஆதாம் ஏவாள் ஒரு பழம் பறித்தற்கே அவர்களை குற்றம் சொல்லி தோட்டத்தி விட்டு விரட்டினார் எஜமானர். ஆனால் மோசஸ் பல இனங்களை அழித்து, அவர்களின் இடங்களைப் பிடுங்கி அவர்களின் கன்னிப் பெண்களை தூக்கி வந்தது ஒரு குற்றமோ பாவமோ இல்லை என சொல்லப் பட்டு விட்டது .

எனவே ஆதாம் விரட்டப் பட்டதையும், மோசசின் செயல் பாடுகளையும் ஒரே ஏற்பாட்டில் எப்படி வைக்க முடியு?

அதோடு அப்போஸ்தலரின் நடபடிகளில் மோசசிய யூத மதத்தின் தாக்கம், ஆதாம் ஏவாள் பழம் பறித்த … தாக்கம்
இதோடு, மிகப் பெரிய தவறாக இயேசு கிறிஸ்துவின் உண்மையான் கோட்பாட்டை சிதைத்து, பாவம் பண்ணிட்டு அவர் இரத்தத்தை குடிச்க்சு மன்னிப்பு வாங்கிக்கலாம், மிச்ச ஆளுங்களை எரி நரகம் போவ னு சொல்லிக்கலாம் என இயேசு சொல்லாதவற்றை எல்லாம் சொல்லி அவரின் கோட்பாட்டுக்கு பின்னடைவை உருவாக்கி உள்ளனர்.

இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை இந்திய சமூகம் ஆறாயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்றி வருவதை நாம் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கிறோம்.

சிவனடியான் போல இன்னும் பலரும் பைபிளை நன்கு படித்தி இந்தியாவில் உள்ள ஒவ்வொர்வரிடமும் விளக்கினால் அது இந்தியாவுக்கு நல்லது. உலகுக்கும் நல்லது.

திருச்சிக்காரன் (மற்றும் இதர நண்பர்களே),

இங்கே திருச்சிக்காரனின் கூற்றை பார்த்தால், அவருக்கு பைபிள் மீது இருக்கும் வெறுப்பு தெளிவாக தெரிகிறது. ஆனால், இந்த வெறுப்பானது காரணமில்லாமல் இல்லை. திருச்சிக்காரனுக்கு பைபிள் மேல் வெறுப்பு இருக்கிறது என்று (அவரின் இந்த வார்த்தைகளின் மூலம் தெரிந்தாலும்), நம்மாளை விட்டுக்கொடுப்பதா என்று அதை பற்றி கூறாமல் மற்றவர்கள் அமைதியாக இருப்பது புரிகிறது.

//என்னைப் பொறுத்த வரையில் பைபிளை ஏற்பாடுகளாக்குவது என்றால்
(பகுதிகளாக பிரிப்பது என்றால்)//

எந்த ஊர் தமிழில் “ஏற்பாடு” என்ற வார்த்தைக்கு “பகுதி” என்று அர்த்தம்? இப்படி அரைகுறை அறிவுடன் புரிந்துகொள்ள முயன்றால் ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது.

நான் பைபிளில் “புதிய ஏற்பாடு” மற்றும் “பழைய ஏற்பாடு” என்றால் என்ன என்று கேட்டதற்கு, இப்படி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல், இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, தன் சொந்த கருத்துக்களை, சொல்கிறாரே. இது கேள்வியை விட்டு விலகி மற்றவரை குழப்பும் முயற்சியல்லவா?

நண்பர் சார்வாகன், சிவனடியான் அவர்களே,

நீங்கள் திருச்சிக்காரனை விட பல வகையில் நேர்மையாய் இருப்பதாக நான் உணர்கிறேன் (திருச்சிக்காரன், கோபம் வேண்டாம், சில வகையில் நீங்கள் Biased ஆக இருப்பதாக நான் உணர்கிறேன்). அதனால், நீங்களே சொல்லுங்கள், மேற்கண்ட என் கேள்விக்கு, திருச்சிக்காரனின் பதில் நேர்மையானதா? அல்லது, குழப்புவதாக உள்ளதா?

//நண்பர் சார்வாகன், சிவனடியான் அவர்களே,

//நீங்கள் திருச்சிக்காரனை விட பல வகையில் நேர்மையாய் இருப்பதாக நான் உணர்கிறேன்//

நீங்கள் சகோதரர் சிவனடியானையும் சார்வாகனையும் நேர்மையாக் கருதுவது எனக்கு மகிழ்ச்சியே!

//திருச்சிக்காரன், கோபம் வேண்டாம்//

அசோக் எனக்கு கோவம் இல்லை, நீங்கள் முன்பு இத தளத்தில் எழுதும்போது கடவுள் செய்தார் என்ற பெயரில் பைபிளில் சொன்ன எதுவும் சரியே , புனிதமே என்று கருதியும் சொல்லியும் வந்தீர்கள். இப்போது கல்லெறிதல், இனப் படுகொலை செய்தல்.. போன்றவற்றை எல்லாம் நியாயப் படுத்த முடியாது என்பதை ஓரளவுக்காவது உணர்ந்து இருப்பீர்கள். ஒரு நூலைக் கையில் குடுத்து அதைப் புனித நூல் என்று சொன்னதை ஒத்துக் கொண்டால் அதை அப்படியே நம்பி போற்றி பாடி பரப்ப வேண்டும் என்கிற எண்ணப் போக்கை உங்களுக்கு தந்து விட்டனர்.

ஆனால் நாமோ நம் கையில் எந்த நூல் தந்தாலும் அதை ஆராய்வது என்கிற பகுத்தறிவு பாரம்பரியாய்த்தில் இருக்கிறோம்.

எனவே நம் ஆராய்ச்சின் விளைவை நாம் சொல்லும் போது உங்களுக்கு நாம் நேர்மையற்றவராக தோன்றக் கூடும்.

நாம் சொன்னதில் உண்மையான நேர்மை உள்ளது.

ஒரே ஒரு பழம் பறித்த தோட்டத் தொழிலாளியை விரட்டி விட்ட நிகழ்வை யூதர்கள் முக்கியமாகக் கருதுவதில்லை.

ஆபிரகாமோ, சாராளோ எந்த இடத்திலாவது ஆண்டவ்ரே, ஆதம் ஏவாள் பாவம் எங்கள் மேல் இருக்கிறதே , நாங்கள் என்ன செய்யட்டும் என்று கேட்டார்களா?

மோசசோ, ஜோஷுவாவோ ஆதாம் ஏவாள் பழம் பறித்த பாவம் பற்றி ஒரு இடத்திலாவது சிந்தித்தார்களா,
பல இனங்களை பூண்டோடு வேரறுத்து, அவர்களின் கன்னிப் பெண்களைக் கற்பழித்தது கூட அவர்களைப் பொறுத்தவரயில் புனித செயலே, ஆண்டவரின் கட்டளையே1

அடப் போய்யா, சுவாசம் உள்ள எல்லாவற்றையும் விடாம சங்கரித்து இருக்கோம், அதுவே பாவம் இல்லை, அவசியமான புனித செயல், இந்த ஆதாம் கிரீசில் உள்ள ஏதென்ஸ் தோட்டத்தில் வேலைக்கு போன போது, ஒரு பழம் பரித்தர்க்கு அவனை அவமானப் படுத்தி விரட்டியதை எல்லாம் நாம் ஏன் கவலைப் படனும் என்று நினைத்து இருக்கக் கூடும் .

இயேசு தன வாழ்வின் முக்கிய பணியாக குறிப்பிட்டது, யூதர்களை திருத்தி அவர்களை பண்புள்ள மனிதராக்குவதே.

ஆனால் ஒரு யூதரைக் கூட இயேசு கிறிஸ்துவின் கருத்துப் படி நடக்க செய்ய உங்களால் கூட வில்லையே.

மொத்திலே இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர் மறுத்து சொன்ன யூத மதத்து கோட்பாடுகளை உலகம் முழுதும் பரப்பி அடிசனலாக, யாரும் பாவம் செய்யாமல் இருக்க முடியாது, பாவம் செஞ்சிக்கோ, மன்னிப்பு வாங்கிகலாம் என்றும் உலகம் முழுவது பாவ பரப்பு பிரச்சாரத்தையும் செய்தனர்.

எனவே இயேசு வின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் உண்மையான கருத்திலேயே யாருக்கும் கிடைக்காத படி, தெளிவாக சொன்னால் தவறாக கருத்திலேயே கிடைக்கும் படி செய்து விட்டார்கள்.

எனவே புதிய ஏற்பாடு என்பது உண்மையிலே எந்த ஒரு புதிய ஏற்பாடாகவும் இல்லை.

உண்மையில் புதிய ஏற்பாடு என்பது யூதர்களின் இன மேலாண்மையை இனவாதத்தை , இனப் படுகொலையை உலகில் நிலை நிறுத்த புதியதாக செய்யப் பட்ட ஒரு ஏற்பாடு என்றால் அதை நாம் மறுத்து சொல்லவில்லை.

//எந்த ஊர் தமிழில் “ஏற்பாடு” என்ற வார்த்தைக்கு “பகுதி” என்று அர்த்தம்? இப்படி அரைகுறை அறிவுடன் புரிந்துகொள்ள முயன்றால் ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது.//

புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்பது பைபிளை பகுதிகளாக பிரிப்பதுதான்.

பள்ளியில் எனக்கு “புதிய ஏற்பாட்டை” மட்டும் கொடுத்தபோது பல சந்தேகங்கள் வந்தன. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பூர்வத்தாருக்கு சொல்லப் பட்டு இருப்பதை கேட்டு இருப்பீர்கள் என்று இயேசு சொன்னார் என அதில் எழுதி உள்ளது பூர்வத்தாருக்கு எப்போது சொன்னார்கள், யார் சொன்னார்கள் என்று அப்போது விளங்கவில்லை.

ஆனால் உண்மையில் பைபிளை பகுதிகளாக பிரிப்பது என்றால் நான் சொன்னது போல பிரிப்பது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பிரிப்பை விட பொருத்தமானது.

இது சார்வாகன், சிவனடியான் ஆகிய இருவருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

//நீங்கள் Biased ஆக இருப்பதாக நான் உணர்கிறேன்//

நான் Biased ஆக இருந்தால் இயேசுவை இகழ்ந்து எழுதி இருக்கலாம். அப்படி இகழ்ந்து எழுதி இருந்தால் இந்த தளமானது ஒவ்வொரு நாளும் இப்போது வருவது போல பத்து மடங்கு அதிகமான ஹிட்டுகளை பெற்று இருக்கும்.

நண்பர்களே,

குட்டையை குழப்புவதில் நண்பர் திருச்சிக்காரன் அசரவில்லை என்பதை நீங்கள் நன்றாக பார்க்கலாம். நான் கேட்ட கேள்வி மிக எளிதானது. What is the meaning of பழைய ஏற்பாடு and புதிய ஏற்பாடு?

இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை அளிக்கும் வகையிலே
பிற மதத்தினர் வாங்கும் தெய்வங்களை இழிவாகப் பேசி, பொய்த் தெய்வங்கள் என்று சொல்லி
தங்களின் மத வெறியை இந்தியாவிலும் பரப்பி, இந்தியாவையும்

இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையிலே
நான் வணங்கும் தெய்வம் மட்டுமே உண்மையான தேவன், பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள பொய்த் தெய்வங்கள் என்று சொல்லி, நான் வணங்கும் தெய்வத்தை வணங்காவிட்டால் நீ எரி நரகம் போவாய், என் மதம் மட்டுமே உண்மையான மார்க்கம், பிற மார்க்கங்கள் பொய்யானவை , தவறானவை
என்றெல்லாம் சொல்லி தங்களின் மத வெறியை இந்தியாவிலும் பரப்புவது சரியா?

இதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள். ஏனெனில் இந்த பதிலைப் பொறுத்துதான் நான் பழைய ஏற்பாடு and புதிய ஏற்பாடு பற்றி நான் விளக்க இயலும்.

அசோக்,

நீங்கள் பொறுமையாக நம்முடைய கருத்துப் பரிமாற்றங்களைக் குறித்து சிந்தீப்பீர்களேயானால்

நாங்கள் இயேசு கிறிஸ்துவைப் போலவே மோசசிய கோட்பாடுகளான சமரச மறுப்பு இரக்க மறுப்பு, சகிப்புத் தன்மை அழிப்பு, ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி அவற்றை விட்டு விடுபடி சொல்வதையும்

யூத குருமார்கள் மோசசிய கோட்பாடுகளின் மீது வைக்கப் படும் விமரிசனங்களினால் கடுப்பாகி எகிருவதைப் போல் உங்கள் பதில்கள் இருப்பதையும் காணலாம்.

இவ்வாறாக எங்களின் செயல் பாடுகள் இயேசு கிரிச்துவினதைப் போல உள்ளது, ஆனால் நாங்கள் மிகவும் சிறியவர்கள், இயேசு கிறிஸ்து மிக மிகப் பெரியவர் என்பது எங்களுக்கு தெரியும்.

ஆனால் இயேசு கிறிஸ்து எப்படி யூத குருமார்களின் முன் அஞ்சாமல் நின்றாரோ, நாங்களும் அதே போல உங்களின் கடுமைக்கு அஞ்ச மாட்டோம், உங்களிடம் நல்ல பேர் வாங்குவதற்காக நாங்கள் இயேசு கிறிஸ்துவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மெய்யாலுமே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அசோக்,

அப்படி நீங்கள் உண்மையிலேயே நேர்மையுள்ளவராக இருந்தால், இயேசு கிறிஸ்துவின் வருகை உங்களின் உள்ளத்தில் புதிய மாறுதலை உண்டாக்கி இருந்தால், நீங்கள் எப்படி ஒரு பழம் பறித்த குற்றத் துக்காக கடவுள் ஆதாமை விரட்டுவார் என்று நினைப்பீர்கள்.

ஏனெனில் தன்னுடைய மகன் தன சொத்தில் பகுதியை எடுத்துக் கொண்டு போய் சூதாடி தோற்ற போதும், அவனுக்காக கண்ணீருடன், அவன் சென்ற வழி நோக்கி காத்திருந்த தந்தையின் கோட்பாடு உங்களின் உள்ளத்திலே புதிய மாறுபாட்டை உண்டாக்கி இருந்தால், அந்த தந்தையானவர் ஒரு போதும் பழம் தின்றதர்காக ஆதமை விரட்டி இருக்க மாட்டார் என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.

பழைய ஒயினை புதிய துருத்தியிலே வார்த்து வூருக் கெல்லாம் விநியோகம் செய்வோரின் கோட்பாட்டை தவறேனே உணர்ந்து இருப்பீர்கள்.

//பழைய ஒயினை புதிய துருத்தியிலே வார்த்து வூருக் கெல்லாம் விநியோகம் செய்வோரின் கோட்பாட்டை தவறேனே உணர்ந்து இருப்பீர்கள்.//

தப்பு தப்பா பேசுங்க. நீங்க சொல்லற மாதிரி வசனம் பைபிளில் இருக்கிறது முதலில். அப்படி இருந்தால் அதற்கான விளக்கம் சொல்ல முடியுமா? வெறுமனே வலைதளத்தில் எதையாவது படித்துவிட்டு அவசர அவசரமாக இப்படி உளறவேண்டாம்.

உங்களின் இன்னும் பல சூழ்ச்சிகளும் அம்பலமாகும் ஐயா.

இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையிலே
பிற மதத்தினர் வாங்கும் தெய்வங்களை இழிவாகப் பேசி, பொய்த் தெய்வங்கள் என்று சொல்லி
தங்களின் மத வெறியை இந்தியாவிலும் பரப்பி, இந்தியாவையும் கெடுக்க சூழ்ச்சி, சதி செய்வது யார்?

நான் எல்லா மார்க்கத்தினரின் விழாகளிலும் கலந்து கொண்டு மத சகிப்புத் தன்மையை , மத நல்லிணக்கத்தை மனப் பூர்வமாக கடைப் படிக்கிறோம், ஆனால் இனப் படுகொலையை, மத வெறியை ஆதரிக்க இயலாது. விவிலிய மார்க்கத்தார் தடுத்தும் கூட மேரி மாதா வழி பாட்டில் கலந்து கொள்கிறேன்.

நீங்கள் என்னைப் பார்த்து சூழ்ச்சி, சதி என்றெல்லாம் சொல்வது வேடிக்கை, வெட்கம் , விபரீதம்.

புதிய ஒயினை புதிய துருத்தியிலும் , பழைய ஒயினை பழைய துருத்தியிலும் வையுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னது பைபிளில் உள்ளது!

பழைய ஒயினாகிய சமரச மறுப்பு, மத சகிப்புத் தன்மை அழிப்பு ஆகியவற்றை இயேசு என்னும் புதிய துருத்தியில் வைத்து உலகெங்கும் விநியோக்கிக்கிரார்கள் – இது பைபிளில் இருக்கிறது என நான் சொல்லவில்லை. இது இன்றைக்கு நடப்பதை நான் சொல்வது.

//பழைய ஒயினாகிய சமரச மறுப்பு, மத சகிப்புத் தன்மை அழிப்பு ஆகியவற்றை இயேசு என்னும் புதிய துருத்தியில் வைத்து உலகெங்கும் விநியோக்கிக்கிரார்கள் – இது பைபிளில் இருக்கிறது என நான் சொல்லவில்லை. இது இன்றைக்கு நடப்பதை நான் சொல்வது.//
சூப்பர் சமாளிப்பு திருச்சிக்காரன் சார்.

//நான் எல்லா மார்க்கத்தினரின் விழாகளிலும் கலந்து கொண்டு மத சகிப்புத் தன்மையை , மத நல்லிணக்கத்தை மனப் பூர்வமாக கடைப் படிக்கிறோம், //
ஆமாம் சார், எல்லா விழாவுக்கும் போய், அவர்கள் புனித நூல்கள் எல்லாம் தவறென்று கூறி, கலவரம் உண்டாக்குவீர். நாங்கள் ஒழுங்காய் ஒதுங்கி இருப்போம்.

ஒழுங்கை ஒதுங்கி இருந்தால் பிரச்சினை இல்லையே, மத வெறியை பரப்புவதுதானே பிரச்சினை சார் .

இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையிலே
நான் வணங்கும் தெய்வம் மட்டுமே உண்மையான தேவன், பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள பொய்த் தெய்வங்கள் என்று சொல்லி, நான் வணங்கும் தெய்வத்தை வணங்காவிட்டால் நீ எரி நரகம் போவாய், என் மதம் மட்டுமே உண்மையான மார்க்கம், பிற மார்க்கங்கள் பொய்யானவை , தவறானவை
என்றெல்லாம் சொல்லி உங்களின் மத வெறியை இந்தியாவிலும் பரப்புவீர்கள்,

நாங்க ஆமாம் சார், இது புனிதம் சார், பிற மதங்களை கண்டியுங்க சார், அவங்க கடவுள் எல்லாம் பொய், உங்க கடவுள் மட்டும் தான் உண்மை என்று சொல்லி பூசலை மூட்டுங்க சார் என்று ஒதுங்கிப் போக முடியுமா சார் .

திரு.திருச்சிக்காரன்,

இப்படி கிறிஸ்துவ கட்டுரைகளை வெளியிடுவதற்க்காய் மிக்க நன்றி. உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்.

கிறிஸ்தவ பாதிரிகள் பழைய ஏற்பாட்டில் வசனம் நன்றாக இருந்தால், அந்த வசனம் யாருக்கு, எதற்காக, எந்த சுழ்நிலையில் சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றி கவலைப் படாமல் அந்த குறிப்பிட்ட வசனத்தை மட்டும வீட்டில் எழுதி ஒட்டி, அந்த வசனம் உலக மக்களுக்கு ஏசு சொன்னது போல் விளம்பரம் செய்வர்.
உதாரணமாக கர்த்தர் மோசேயிடம், பாலும் தேனும் ஓடுகின்ற எகிப்து நாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பகலில் மேகமாகவும், இரவில் ஒளியாகவும் இஸ்ரவேல் கூட்டத்தாரை அழைத்துச்செல்லும் போது ” என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” என்று சொல்கிறார். இந்த வசனம் இயேசு சொன்னது இல்லை. பிற இன மக்களை கொலை செய்ய உத்தரவிட்ட பழைய ஏற்பாட்டு கர்த்தர் சொன்ன வார்த்தையை இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ( )கள் தங்கள் வாகனங்களில் ஒட்டியும், வீடுகளில் ஒட்டியும் விளம்பரம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
பழைய ஏற்பாடு முழுக்க அபத்தங்களும், ஆபாசங்களும் வன்முறைகளும் தான் இருக்கின்றன. இவற்றைத் தம் தேவைக்கு ஏற்ப கிறிஸ்தவ பாதிரிகளும், அவர்களின் தொண்டர்களும் பின்பற்றுகின்றனர்.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் இப்படித்தான் வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன. எனவே இரண்டு ஆபிரகாமிய மதங்களைப் பற்றியும் மக்கள் அனைவரும் உணரும்படி வெளியிடுங்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு.

அது சரி . உங்கள் கருத்து எதையும் வெளியிடாமல் மொட்டையாக வசனத்தை மட்டும் வெளியிட்டுள்ளீர்களே. ஏன்?

Thanks Raja,

The cruelty shown for petty crimes is evident and obvious, that too directly from the LORD in his own words.

I think it does not require any clarification, atleast for now!

//அந்த வசனம் உலக மக்களுக்கு ஏசு சொன்னது போல் விளம்பரம் செய்வர்//

“மாரியம்மன் துணை” என்று தன் வாகனத்தில் எழுதிக்கொண்டு போகிறவன் மாரியம்மனை விளம்பரம் செய்கிறானா? இல்லையே, அப்படி எழுதி இருப்பதால் அவனுக்கு மாரியம்மன் பாதுகாப்பு தருவாள் என்று ஒரு நம்பிக்கை.

அதே போல்தான், மோசேக்கு வனாந்தரத்தில் உதவி செய்த கர்த்தர் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்துவர்கள் எழுதுகிறார்கள்.

ஊழழ், பொய், புரட்டு போன்றவற்றை பார்த்து பார்த்து, எதை பார்த்தாலும் சிலருக்கு தவறாகவே தெரியும்.

அசோக்குமார் கணேசன்

முதலில் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்பது என்ன என்று தெரிந்து கொள்ளுஙகள்.

புதிய ஏற்பாடு ஏசுவின் சீடர்கள் தெரிவித்ததாக தொகுக்ககப்பட்டது. ஏசு பிறந்த பின் நடைபெற்ற சம்பவங்களாக தொகுக்கப்பட்டது. பழைய ஏற்பாடு ஏசு பிறப்பதற்கு முன் நடந்ததாக கூறப்படுவது. பழைய ஏற்பாடு முழுக்க யுதர்களின் வேத நூல்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை.

ஏசுவும் கர்த்தரும் வேறு வேறு என்பதை மக்கள் உணராதபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று குழப்பி விடுகின்றனர். இயேசு பிறப்பதற்கு முன்பு இருந்த கர்த்தர் தான் மோசே கூட்டத்தாரை அழைத்துக்கொண்டு கானானியர், எப்புசியர், என பல இன மக்களை கொன்று குவிக்க உத்தரவிடுகிறார். விக்ரகங்களையும் நொறுக்க சொல்கிறார். (Please see http://www.evilbilble.com) ஆனால் ஏசு இது போல் வன்முறைக் கட்டளைகள் ஏதும் இடவில்லை. ஆனால் பழைய ஏற்பாட்டு கர்த்தர் மோசே கூட்டத்தாருக்கு கூறியவற்றை ஏசு நமக்கு சொன்னது போல விளம்பரம் செய்வது தான் ஏமாற்றுத்தனம்.
ஏசு இறந்தபின் கர்த்தரின் வலது பாரிசத்தில் (தொடையில்) அமர்ந்தார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கர்த்தரும், ஏசுவும் வேறு வேறு என்றுதானே அர்த்தம்.

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று ஒரு வசனத்தை சுவர்கள் எல்லாம் எழுதி போட்டு விளம்பரம் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த வசனம் ஏசுவைக் குறிக்கும் வசனமல்ல. பழைய ஏற்பாட்டு கர்த்தரை நம்பும் இஸ்ரவேலர்கள் வேண்டுமானால் செழிக்கலாம். இந்தியர்கள் அல்ல.

ஏசுவிடம் ஒரு சீடன் தன் தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கேட்கிறான். அதற்கு அவர் ” மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் செய்யட்டும். நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கி” என்று கூறுகிறார். இந்த ஏசுவே கூறிய வசனத்தை விளம்பரம் செய்வார்களா?
நான் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல பட்டயத்தையே உண்டாக்க வந்தேன். எப்படி எனில் தந்தையையும் மகனையும் பிரிப்பேன். தாயையும் மகளையும் பிரிப்பேன். மாமியாரையும் மருமகளையும் பிரிப்பேன். என்னை விட தநதையையோ தாயையோ நேசிப்பவன் எனக்கு பாத்திரன் அல்ல ” என்று ஏசுதான் கூறுகிறார். நாமோ தந்தையும் தாயும் முன்னறி தெய்வம் என்று கூறுகிறோம்.

குடும்பத்தை ஏசு பிரிக்கும் வசனத்தை எல்லாம் சுவரில் விளம்பரம் செய்ய மாட்டார்கள். பழைய ஏற்பாட்டு வசனம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுவார்கள். மோசமானவற்றைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.

மதம் மாற்றுவதற்காக இப்படி ஏமாற்று விளம்பரங்கள் செய்ய வேண்டுமா? என்பது தான் என் கேள்வி.

நன்றி ராஜா,

விட்டுக் கொடுக்கும் கோட்பாடுகளை உடைய இயேசு கிறிஸ்து இனப் படுகொலை செய்வதை ஆதரித்திருக்க மாட்டார், அடுத்தவன் நிலத்தை பிடுங்குவதையும், விக்ரகங்களையும் நொறுக்க சொல்லுவதையும் ஆதரித்திருக்க மாட்டார். அதே நேரம் இஸ்ரேலிய இனம் மேலான இனம் என்கிறது போன்ற இன வாதம் ஒரு சிறு அளவில் இயேசு கிறிஸ்து விடமும் இருந்திருக்கிறது. இவ்வாறாக இந்தியர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவை பற்றி நன்கு அறிந்திருக்கிறோம். உங்களின் மேலான விளக்கத்திற்கு நன்றி.

எனவே இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாமே எல்லா இந்தியரக்ளைடமும் விளக்கி சொல்லி அவர் பேரால் மத சகிப்புத் தன்மை அழிப்பு , மத வெறி பரப்பு நடத்தப் படுவதில் இருந்து இந்தியாவை காக்க வேண்டும்.

.///பழைய ஏற்பாடு என்றால் என்ன, புதிய ஏற்பாடு என்றால் என்ன விளங்கிக்கொண்டால், கிறிஸ்துவம் அன்பை வலியுறுத்துவதை நீங்கள் அறியலாம். //////
அப்படி எனில் ஒன்று மட்டுமே அன்பை வலியுறுத்துகிறதா?
அப்ப மற்றொன்று ?
ஆனால் நீங்கள் பைபிளில் உள்ள எல்லா வார்த்தைகளையும் நம்புகிரீர்கள்தானே? எதுவும் உங்களுக்கு தவறு என்று ஒத்து கொள்ளமுடியாதுதானே?
//

///திருச்சிக்காரன் அவர்களே,
நீங்களே, பழைய ஏற்பாடு என்றால் என்ன, மற்றும் புதிய ஏற்பாடு என்ன என்று ஒரு கட்டுரை வரைந்தால் சிறப்பாக இருக்குமே.////

அவர் நெடு நாட்களாக அதைதானே கூறி வருகிறார், என்ன, புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என பிரித்து கூறாமல் கிறித்துவின் உண்மையான கருத்துகளை மட்டும் ஏற்போம் அவை அன்பு கருத்துக்கள், பிறர் சொன்ன துவேச கருத்துகளை விட்டொழியுங்கள் என்று. ஓகே தனித்தனியாக விவரித்து ஒரு கட்டுரை வருவதும் சரிதான்.

Dear Brother Sivanadaiyan,

I really appreciate you for your maturity, patience, and above all understanding.

You have graduated well in understanding the concepts of various religion, have a right approach, takking the good things, cautious of hate contents.

நண்பர் சிவனடியான்,

//அப்படி எனில் ஒன்று மட்டுமே அன்பை வலியுறுத்துகிறதா?
அப்ப மற்றொன்று ?//

இதற்கு நான் பதில் அளிக்கிறேன். ஆனால், இதை போன்ற இன்னொரு கேள்விக்கு நான் திருச்சிக்காரநிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்பதால், சற்று தாமதமாக உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.

//ஆனால் நீங்கள் பைபிளில் உள்ள எல்லா வார்த்தைகளையும் நம்புகிரீர்கள்தானே? எதுவும் உங்களுக்கு தவறு என்று ஒத்து கொள்ளமுடியாதுதானே?//

பைபிளின் எல்லாவார்த்தைகளையும் நம்புகிறோம். ஆனால், எதன்படி நடக்கிறோம் என்று நீங்கள் பார்க்கவேண்டும். ஏன் சிலவற்றை நம்பினாலும் (பழைய ஏற்பாட்டு கட்டளைகள்) அதை நடைமுறையில் பின்பற்றவில்லை என்று நீங்கள் பார்க்கவேண்டும்.

அவசர அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நாம் இந்த விடையத்தில் முடிவு எடுக்க முடியாது. கொஞ்சம் ஆராய்ச்சியும் தேவை. ஆனால், வருடக்கணக்கில் தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.

உங்கள் பொறுமைக்கு நன்றி. உண்மையை குறித்த உங்கள் தேடலுக்காக கடவுளை துதிக்கிறேன்.

//அவர் நெடு நாட்களாக அதைதானே கூறி வருகிறார், என்ன, புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என பிரித்து கூறாமல் கிறித்துவின் உண்மையான கருத்துகளை மட்டும் ஏற்போம் அவை அன்பு கருத்துக்கள், பிறர் சொன்ன துவேச கருத்துகளை விட்டொழியுங்கள் என்று.//

திருச்சிக்காரன் அதைத்தான் கூறுகிறார் என்று நாம் சொல்லமுடியாது. அவர் சொல்லுவது முழு உண்மையல்ல. ஆனால், பொய்யுமில்லை. ஒரு முழு பொய்யைவிட, உண்மை கலக்கப்பட்ட பொய்யே அபாயகரமானது.

//அவர் சொல்லுவது முழு உண்மையல்ல. ஆனால், பொய்யுமில்லை. ஒரு முழு பொய்யைவிட, உண்மை கலக்கப்பட்ட பொய்யே அபாயகரமானது.//

ஒரு முழு பொய்யைவிட, உண்மை கலக்கப்பட்ட பொய்யே அபாயகரமானது.

But as you rightly said, அவர் சொல்லுவது , பொய்யுமில்லை, so mine is not dangerous

thanks for your appreciation sir,

நண்பா அசோக்,
விவாதத்தில் அவர்க்கு தெரிந்ததை அவர் சொல்வதாக கொள்வோமே. உண்மை விளக்கம் வேறாய் இருப்பின் நாங்களே இங்கு அதனை விளக்கி பின்னுட்டம் இடலாம் தானே. அவர் சொன்ன இந்த வரிகள் தவறு என்று திருத்தி சொல்லுங்கள் நாங்கள் புரிந்து கொள்கிறோம், நான் இப்போதுதான் பைபிள் ஐ படிக்கிறேன் எனக்கு அவர் கொடுத்த பதில்கள் பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை, ஒரு கிறித்தவரானா உங்களுக்கு அவரைவிட அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.எனக்கு புரிந்தவரை கிறித்துவுக்கு முன் கிறித்துவுக்கு பின் என்று பிரிக்கலாமா? இதுவும் தவறு என்றால் விளக்குங்கள் கோபம் வேண்டாம். நமக்குள் (நான் நீங்கள்,திருச்சி மற்றும் எல்லா வாசக நண்பர்களும்தான்) ஏன் மனஸ்தாபம்? உண்மை அவர் சொல்லி மாற போவதில்லை, உங்கள் வார்த்தையில் தவறு இருப்பின் தெரிந்தவர் திருத்தி கூறட்டும், நீங்கள் யாருடைய வார்த்தையில் தவறு கண்டாலும் உடனே அத்தவறை சுட்டி காட்டுங்கள்
அவர் தரும் விளக்கங்களே முடிவானது அல்ல அதற்கு பதில் கருத்து ஒன்று வந்து விட்டால். ஒவ்வோர் ஏற்பாட்டிலும் பிரிவுகள் உள்ளன,
அன்புடன்
சிவனடியான்

அசோக்,

நான் எழுதிய வரிகளை அப்படியே மேற்கோள் காட்டி – இது தவறானது என சுட்டிக் காட்டினால், ஆரய்ந்து அது தவறக இருந்தால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

///நம்மாளை விட்டுக்கொடுப்பதா என்று அதை பற்றி கூறாமல் மற்றவர்கள் அமைதியாக இருப்பது புரிகிறது.////
இன்னொனொரு விஷயம், நம்மாள் என்று திருச்சிகாரர் மட்டும் கிடையாது, நீங்களும் நம்மாள் தான் என்னை பொறுத்தவரை,கருத்து பங்களிப்பில் ஈடுபடும் எல்லோருமே நம்மாள்தான். ஏற்கனவே நாம் மதத்தை தாண்டி நம் கருத்து பரிமாற்றங்களை கொள்வோம் எனக்கூறினேனே நினைவில்லையா?

அசோக்,

நீங்கள் பொறுமையாக நம்முடைய கருத்துப் பரிமாற்றங்களைக் குறித்து சிந்தீப்பீர்களேயானால்

நாங்கள் இயேசு கிறிஸ்துவைப் போலவே a மோசசிய கோட்பாடுகளான சமரச மறுப்பு இரக்க மறுப்பு, சகிப்புத் தன்மை அழிப்பு, ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி அவற்றை விட்டு விடுபடி சொல்வதையும்

யூத குருமார்கள் மோசசிய கோட்பாடுகளின் மீது வைக்கப் படும் விமரிசனங்களினால் கடுப்பாகி எகிருவதைப் போல் உங்கள் பதில்கள் இருப்பதையும் காணலாம்.

இவ்வாறாக எங்களின் செயல் பாடுகள் இயேசு கிரிச்துவினதைப் போல உள்ளது, ஆனால் நாங்கள் மிகவும் சிறியவர்கள், இயேசு கிறிஸ்து மிக மிகப் பெரியவர் என்பது எங்களுக்கு தெரியும்.

ஆனால் இயேசு கிறிஸ்து எப்படி யூத குருமார்களின் முன் அஞ்சாமல் நின்றாரோ , நாங்களும் அதே போல உங்களின் கடுமைக்கு அஞ்ச மாட்டோம், உங்களிடம் நல்ல பேர் வாங்குவதற்காக நாங்கள் இயேசு கிறிஸ்துவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மெய்யாலுமே உங்களுக்குச் சொல்லுகிறேன்!

திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,

///எந்த ஊர் தமிழில் “ஏற்பாடு” என்ற வார்த்தைக்கு “பகுதி” என்று அர்த்தம்? இப்படி அரைகுறை அறிவுடன் புரிந்துகொள்ள முயன்றால் ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது.///

சரி,எந்த ஊர் தமிழில் இந்த “ஏற்பாடு”களுக்கு “வேதம்” என்று அர்த்தம்?

இந்தப்”பழைய ஏற்பாடு” என்னும் பதம் யூத மத நூலுக்கு யூதர்களின் விருப்பமின்றி கிறிஸ்தவர்களால், திணிக்கப்பட்டது.யூதர்களின் பைபிலையே “பழைய ஏற்ப்பாடு” என்று கிருஸ்தவர்கள் அழைக்கின்றனர்.யூத பைபிளில் கூறப்பட்ட மெசியா “ஏசுவே” என்பதைக் யூதர்களுக்குக் காட்டவே, இயேசு புராணமான புதிய ஏற்பாடுடன் யூதர்களின் பைபிளையும் சேர்த்தனர்.பிதாவான யாஹ்வே யூதர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை/உடன்படிக்கையை பழைய ஏற்ப்பாடு என்றும், அதே பிதாவான யாஹ்வே சுதனான இயேசு மூலமாகவும்,அவருக்குப் பின் ஆவிமூலமாகவும் யூதர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை/உடன்படிக்கையை !!!!(அப்படி எந்த உடன்படிக்கையும் புதிய ஏற்ப்பாட்டில் இருப்பது சந்தேகமே ) புதிய ஏற்பாடு (புதிய உடன்படிக்கை) என்றும் கிருஸ்தவர்கள் (மட்டுமே) அழைக்கின்றனர்.

இயேசு “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் “(யோவான் 10:30 ) என்றார்.ஆனால் இந்த ஒன்றாக இருப்பவரை இரண்டாக்கி அவரின் வார்த்தைகளையும் இரண்டாக்கியத்தின் விளைவே புதிய ஏற்பாடு, மற்றும் பழைய ஏற்பாடு. புதிய ஏற்ப்பாடு என்பது ஒரு “வால்” அது தனியாக இயங்க முடியாது.அதனால் பழைய ஏற்ப்பாடு என்ற “உடல்” தேவைப்படுகிறது.அதாவது பழைய ஏற்ப்பாட்டின் தொடர்ச்சி புதிய ஏற்ப்பாடு.

இந்த “ஏற்ப்பாடு” என்ற வார்த்தைக்கு “பகுதி” என்ற அர்த்தம் வராவிட்டாலும் இந்த ஏற்பாடே ஒரு பகுதி தான்.பழைய ஏற்பாடு முதல் பகுதி ,புதிய ஏற்ப்பாடு நிறைவுப்பகுதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: