Thiruchchikkaaran's Blog

ரமதான் நோன்பு அனுபவங்கள்- பகுதி 2

Posted on: August 1, 2011


ரமதான் நோன்பு அனுபவங்கள்- பகுதி 2

எந்த ஒரு நோன்பும்  மனிதனுக்கு ஒரு சவாலாக அவன் தன்னைத் தானே கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும் ஆளுமைக்கு ஒரு பரீட்சையாக அமைந்து விடுகிறது. எந்த ஒரு மனிதன் தன்னுடைய மனதையும், புலன்களையும் தன்னுடைய முழுக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறானோ அவனை ஜினர் என்றும், மாவீரன் என்றும் சான்றோர் அழைக்கின்றனர்.

எந்த ஒரு மனிதன் தன்னை முழுமையாக கட்டுப் படுத்திக் கொள்ளும் திறன் உடையவனாக இருக்கிறானோ அவனால் இந்த உலகில் பிறருக்கு எந்த தீங்கும் விளைவதில்லை. அவன் தன்னைத் தானே வென்ற இராஜாவாக திகழ்கிறான் என்றும், தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் இருப்பவன் உண்மையில்  புலன்களுக்கு அடிமையாக வாழ்கிறான் என்றும் சொல்லுகின்றனர்.

ரமதான் நோன்புக் காலத்தில் உடல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதும் ஒரு விரத நெறியாகும்.

பிற  மதங்களிலும்  பல வகையான நோன்புகள் உள்ளன. இந்துக்களில் சிலர்  ஏகாதசி விரதம் என ஒரு முழு நாள் விரதம் இருக்கின்றனர்.   அதிலும் நீர் அருந்தி விரதம் இருப்பது, நீரே அருந்தாமல் விரதம் இருப்பது என்பது போல பல வகையான விரதங்கள உள்ளன. சபரி மலைக்கு மாலை போட்டுக் கொள்வது ஒரு முக்கியமான விரதம் ஆக உள்ளது.மாலை போட்டவர்கள் நாட்கள  மது அருந்தாமல், புகை பிடிக்காமல் இல்லற உறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இத்தகைய சுய கட்டுப்பாடுகள் ஒரு மனிதனின் கட்டுப் பாட்டுக்கு உதவுகிறது.

இவற்றை எல்லாம் கடவுளுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செபவர்கள விரதத்திலே உறுதியாக இருக்கின்றனர்.

நான் சிறுவனாக  இருந்தபோது பட்டதாரி வாலிபர்கள்  வேலை வாய்ப்பு கேட்டு தொடர் உண்ணா விரதம் இருந்ததைப் பார்த்து இருக்கிறேன். அவர்களில் பலர் நேர்மையாகவும்   உண்ணா விரதமும் இருந்தனர்.

அரசியல் சமூக காரணங்களுக்காக பலர்  உண்ணா விரதம் இருந்திருக்கின்றனர்.

பலவகையான நோன்புகள் இருந்த போதிலும் ரமதான் நோன்பு குறிப்பிட்டு சொல்லும் படிக்கான ஒரு தனிப் பட்ட நோன்பு என்பதாகவும், உலகில் இந்தளவுக்கு பெரும்பான்மையான மக்கள் ஒரே நேரத்திலே அனுஷ்டிக்கும் விரதமாக ரமதான் நோன்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: