Thiruchchikkaaran's Blog

நெல் கட்டும் செவல் பச்சேரி தேவாலயத்துக்கு தீ வைப்பா?

Posted on: July 27, 2011


 நெல் கட்டும் செவல் பச்சேரி தேவாலயத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. அதைப்  பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

புளியங்குடி அருகே உள்ளது நெல் கட்டும் செவல் பச்சேரி கிராமம். இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சால்வேஷன் கிறிஸ்தவ ஆலயத்தில் வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் அந்த தேவாலயத்தில் நடக்கும் திருமண விழா, ஞானஸ்தான விழா ஆகியவறறிலும் கலந்து கொள்வர். அனைவரையும் போல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகள் பரிமளா தேவியும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தார். 

மூன்று மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் மோகன்தாஸ் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றார். அப்போது மோகன்தாசுககும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினர்.

இதையறிந்த மோகன்தாசின் மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால்  மோகன்தாஸ் கண்டித்த மனைவியை அடித்து உதைத்தார் என  சொல்லப் படுகிறது. மோகன்தாஸ் – பரிமளா காதல் ஊரிலே பரப்பாக பேசப் பட்டது.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி பரிமளா தேவியுடன், பாதிரியார் மோகன்தாஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா தேவியின் தந்தை மதியழகன் தேவாலயத்திற்கு தீ வைத்தார். இதில் ஆலயத்திலிருந்த நாற்காலிகள், திரை மற்றும் பைபிள் உள்ளிட்ட நூல்கள் தீயில் கருகின.

திடீரென்று  தேவாலயத்தில் தீ எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும்  டிஎஸ்பி தமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இளம்பெண் பரிமளா தேவியுடன் தலைமறைவான பாதிரியார் மோகன்தாசையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisements

8 Responses to "நெல் கட்டும் செவல் பச்சேரி தேவாலயத்துக்கு தீ வைப்பா?"

கிறிஸ்துவத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, எவ்வளவு தரம் தாழ்ந்த கட்டுரைகள் வரத்தொடங்கிவிட்டது இந்த தளத்தில்.

இந்த மூணு எழுத்து நடிகைக்கும், திருமணமான நான்கெழுத்து நடிகருக்கும் கள்ளகாதல் என்று கிசுகிசு எழுதும் தரம்தாழ்ந்த பத்திரிக்கைகளை போல ஆகிவிட்டீர்களே.

இதை சொல்வதால் நான் கள்ளக்காதலுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். தவறு யார் செய்தாலும் தவறே.

அசோக்,

அப்ப அந்த தந்தையின் பரிதாப நிலையை பற்றி உங்களுக்கு கவலை இல்லை, மத பிரசாரகருக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்பதுதான் உங்களுக்கு முக்கியம் இல்லையா?

பெற்று, சீராட்டி, தாலாட்டி, பாராட்டி, துணி மணி,வாங்கிக் கொடுத்து, படிக்க வைத்து ஒரு நல்லவனுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று வாழ்ந்த அந்த அன்புத் தந்தைக்கு யார் பதில் சொல்வது.

இப்போது அந்தப் பெண்ணின் கதி என்ன? சட்டப் படி அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ முடியுமா? முடியாது என்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன?

//தரம்தாழ்ந்த பத்திரிக்கைகளை போல ஆகிவிட்டீர்களே.//

கடவுளைப் பற்றி கல்வி என்று சொல்லி விட்டு காமப் பாடங்களை எடுப்பது சரியா?தரம் தாழ்ந்து செய்வது தப்பு இல்லை, அதை சொல்வது தப்பா?

//தவறு யார் செய்தாலும் தவறே.//

அதைதான் நாமும் சொல்கிறோம்!

//கிறிஸ்துவத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக,//

காஞ்சி தேவநாதன் , சாயி பாபாவின் “அற்புதங்கள்” இவற்றை விமரிசித்து கட்டுரைகள் , குரு பூர்ணிமா என்ற பெயரில் நிர்வாணக் குளியல் சரியா … இது போல பல கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம், அவை எல்லாம் இந்து மதத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியிடப் பட்டவையா?

மொத்தத்தில் உங்கள் கருத்து என்ன? இந்து மத பிரசாரகர் தவறு செய்தால் எழுதலாம், ஆனால் கிறிஸ்தவ மத பிரசாரகர் தவறு செய்தால் எழுதக் கூடாது என்பதா? அல்லது எந்த மதத்துக் காராரக இருந்தாலும் சரி, கடவுளைப் பற்றி சொல்லித் தருகிறேன் என சொல்லி காம சல்லாபத்தில் ஈடுபட்டால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட வேண்டும் மக்களுக்கு சொல்லி எச்சரிக்கை செய்யக் கூடாது என்பதா?

கடவுளின் பெயரை சொல்லி அப்பாவிகளைக் கெடுக்கும் காம சல்லாபர்களை காப்பதற்காக நமது தளத்தை தரம் தாழ்ந்து விட்டது என சொல்கிறீர்களா?

//கடவுளின் பெயரை சொல்லி அப்பாவிகளைக் கெடுக்கும் காம சல்லாபர்களை காப்பதற்காக நமது தளத்தை தரம் தாழ்ந்து விட்டது என சொல்கிறீர்களா?//

இதைத்தான் சொல்ல வருகிறார்…அசோக்கு…

பாதிக்கப்பட்ட பொண்ணு மேல அக்கறை இருக்கிற எவனும், இப்படி ஒரு பொண்ணு வாழ்க்கையை வலை உலகில் போட்டு அசிங்கப்படுத்த மாட்டான்.

//பெற்று, சீராட்டி, தாலாட்டி, பாராட்டி, துணி மணி,வாங்கிக் கொடுத்து, படிக்க வைத்து ஒரு நல்லவனுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று வாழ்ந்த அந்த அன்புத் தந்தைக்கு யார் பதில் சொல்வது.//
உங்க கட்டுரை அந்த தகப்பனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

//இப்போது அந்தப் பெண்ணின் கதி என்ன? சட்டப் படி அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ முடியுமா? முடியாது என்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன? //
பாதிக்கப்பட்ட பரிமளா உங்க கட்டுரைக்கு “ரொம்ப நன்றி” என்று பின்னூட்டம் போடுவாங்களா? பின்னாடி அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமைந்தால் கூட, உங்க கட்டுரையால் அது கெட்டுபோக வாய்ப்புள்ளது.

//மொத்தத்தில் உங்கள் கருத்து என்ன? இந்து மத பிரசாரகர் தவறு செய்தால் எழுதலாம், ஆனால் கிறிஸ்தவ மத பிரசாரகர் தவறு செய்தால் எழுதக் கூடாது என்பதா? //
உங்களின் “கதவை திற காற்று வரும்” கட்டுரைக்கு என் பின்னூட்டங்களை பாருங்கள். இந்து சாமியாரான நித்தியானந்தாவின் மேலும் நான் பரிதாபம் கொண்டு எழுதி இருப்பது தெரியும். தவறு செய்தவன் திருந்த என்ன வழி என்றுதான் உண்மையான ஆன்மீகவாதி பார்ப்பானே அல்லாமல், அந்த தவறை பகிரங்கப்படுத்தி, அதினால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கில் தொங்கும் அளவுக்கு “உலக அமைதியை” பற்றி பேசும் ஒருவர் செய்யக்கூடாது. அப்படி செய்வது, அவர்களின் அந்தரங்கத்தை வியாபாரமாக்குவதற்கு சமம். சொல்வதை சொல்லிட்டேன். நம்ம, இந்து கிருஸ்துவ விவாதத்தில், ஒரு பெண்ணின் எதிர்காலம் பாழாககூடாது.சிந்தியுங்கள்.

அசோக்,

.முதலில் இந்தக் கட்டுரையை கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது போல சித்தரிப்பு, அது முடியவில்லை என்றவுடன் வேறு மாதிரி குற்றம் சுமத்த முயல்கிறீர்கள்.

பரிமளாவின் வாழ்க்கையை சீரழித்த மத பிரச்சாரகரை விட்டு திசை திருப்பும் வகையில் என் மேல் குற்றம் சொல்ல வழி பார்க்கிறீர்கள்.

வூருக்கே தெரிந்த விடயம், பத்தரிகையில் வந்திருக்கிறது, இதிலே நாம் எழுதியது காமுகர்கள் திருந்த வேண்டும் என்பதற்கே. உங்களைப் போல நாம் இதை மத ரீதியாக பார்க்கவில்லை. மத ரீதியாக செயல் பட்டால் இந்து மத குருமார்களின் செயல்களையும் விமரிச்க்கிரோமே. ஆக நாம் நடுநிலையாக நல்ல சமுதாயம் அமைய வேண்டும் என்றுதான் எழுதுகிறோம். எப்படியாவது மத போதகரை காப்பது திருச்சிக்காரனை குறை சொல்லுவது என்கிற நோக்கிலேயே செயலப்டுவது எல்லாருக்கும் தெரிகிறது.

//அந்த தவறை பகிரங்கப்படுத்தி, அதினால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கில் தொங்கும் அளவுக்கு “உலக அமைதியை” பற்றி பேசும் ஒருவர் செய்யக்கூடாது. //

அசோக், எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தால் இப்படி எழுதவீர்கள் என்பது தெரிகிறது. கடவுளின் பெயரால் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை கெடுக்கும் காமுகர்களை தோடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

//இந்து சாமியாரான நித்தியானந்தாவின் மேலும் நான் பரிதாபம் கொண்டு எழுதி இருப்பது தெரியும்//

நான் கள்ளக் காதலை ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே கள்ளக் காதல் புரிவதை நியாயப் படுத்துகிறீர்கள்.

//அசோக், எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தால் இப்படி எழுதவீர்கள் என்பது தெரிகிறது. கடவுளின் பெயரால் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை கெடுக்கும் காமுகர்களை தோடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். //
குறைந்தது, பாதிக்கப்பட்டவர்களின் பெயரையாவது போடாமல் விடலாம்.

//நான் கள்ளக் காதலை ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே கள்ளக் காதல் புரிவதை நியாயப் படுத்துகிறீர்கள்.//

திருச்சிக்காரன்,

என்னங்க இப்படி சொல்லிடீங்க? நான் கள்ளகாதலுக்கு ஆதரவு தருகிறேன் என்று நினைக்கிறீர்களா? கள்ளக்காதலை குறித்து புறம்பேச வேண்டாம் என்றே கூறினேன், அவ்வளவே.

இந்த தளத்தில் உள்ளதை விடவா மோசமாக எழுதியிருக்கார்? இன்னும் எப்படி எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்…?

http://thatstamil.oneindia.in/news/2011/07/27/pastor-elopes-with-young-girl-puliangudi-aid0175.html

நண்பர் சீனு,

அந்த தளங்கள் வியாபார நோக்கத்தோடு, சமுதாய அக்கறை இல்லாமல், அடுத்தவனை சூடேற்றி அதில் குளிர்காய்பவர்கள். அந்த தளத்தில் இதுதவிர, ஆபாச படங்களும் பிரசுரிக்கிறார்கள்.

அத்தகைய கேடு கெட்ட தளத்தோடு, இந்ததளத்தை நாம் ஈடுவைக்க முடியாது. எத்தனைதான் நான் திருச்சிக்காரனிடம் சண்டை போட்டாலும், அவர் ஒழுக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நான் மறுக்கவே மாட்டேன்.

இத்தகைய கள்ளக்காதல் தொடர்பான செய்திகள் நம் தளத்திற்கு தேவைதானா என்றே கேட்கிறேன். சம்பந்தப்பட்டவர் கிறிஸ்துவர் என்றதால் இப்படி நான் சொல்லவில்லை. நித்யானந்தா விவகாரம் பற்றி இந்த தளத்தில் வந்தபோதும் என் நிலைப்பாடு இதுவே. அந்த கட்டுரைக்கு என் பின்னூட்டங்களை பார்த்தால் தெரியும்.

நன்றி,

அசோக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: