Thiruchchikkaaran's Blog

சூரியனை பாம்பு விழுங்குவதாக நினைப்பது அறியாமையே! மூட நம்பிக்கைக்கு எதிரான சங்கராச்சாரியாரின் முழக்கம் !

Posted on: July 24, 2011


உலகின் பல்வேறு மதங்களும் பல்வேறு கோட்பாடுகளை முன் வைக்கின்றன. இந்திய மதங்களான இந்து, பவுத்த, சமண, சீக்கிய மதங்கள் பகுத்தறிவு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குடுக்கின்றன.

ஆனால் மக்கள் அவ்வப் போது தங்களின் கற்பனைகளை மதத்தின் மேல் ஏற்றி விடுகின்றனர்.

அப்படி ஏற்றப் பட்ட கற்பனைகளில் ஒன்றுதான் ராகு , கேது என்னும் இரண்டு பெரிய பாம்புகள்  சந்திரனையும், சூரியனையும் விழுங்க முயலுவதாகவும், அதுதான் கிரகணம் எனப் படுவதாகவும் கருதி, சொல்லி வந்தது.

வானவியல் ஆராய்ச்சி அதிகம் இல்லாத காலத்தில் மக்கள் இயற்கை நிகழ்வுகளுக்கு தங்கள் மனம் போனவாறு கதை கட்டினர்.

ஆனால் இந்து மதத்தின் முக்கிய சிந்தனையாளர்களான சங்கராச்சாரியார்,சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மக்களுக்கு அவற்றை சுட்டிக் காட்டி,உண்மையை எடுத்துரைக்க  தயங்கியதில்லை.

எட்டாம் நூற்றண்டிலேயே வாழ்ந்தவர் சங்கராச்சாரியார். அக்காலத்தில்
சூரியன்,  பூமி, சந்திரன் இவற்றை பற்றிய அறிவியல் உண்மைகள்  வெளிவரவில்லை.
சங்கராச்சாரியார் அக்காலத்திலேயே  “சூரியனை ராகு என்னும் பாம்பு விழுங்குவதாக மக்கள் நினைக்கிறாகள், அது அறியாமையே” என்று தெளிவாக் சொல்லி இருக்கிறார். “சூரியனின் உண்மை இயல்பு அவர்களுக்கு தெரியவில்லை” என்றும் சொல்லி இருக்கிறார்.
சங்கராச்சாரியார் இயற்றிய விவேக சூடாமணி  என்னும் நூலில் இக்கருத்து உள்ளது.

Viveka Chudamani

548.

The sun which appears to be, but is not actually swallowed by Rahu (snake),

is said to be swallowed, on account of delusion, by people,

not knowing the real nature of the sun.

File:Raja Ravi Varma - Sankaracharya.jpg

இந்த மிக முக்கிய அறிவியல் உண்மையை மிக எளிதாக சொல்லி அதை தன்னுடைய ஆன்மீகக் கோட்பாட்டுக்கு உதாரணமாக சொல்லி இருக்கிறார்

549. Similarly, ignorant people look upon the perfect knower of Brahman, who is wholly rid of bondages of the body etc., as possessed of the body, seeing but an appearance of it

ஆனால் அவருடைய காலத்துக்குப் பின் அவர் நிர்மாணித்த மடங்களில் வேதம் கற்று புரோகிதம்  செய்து வந்தோர், சங்கராச்சாரியாரின் இந்தக் கருத்தை விட்டு விட்டு, கிரகணம் , தோஷம், என்று தர்ப்பை பையும் கையுமாக சுற்றி வந்ததுதான் துரதிர்ஷ்டம்.
இன்றும் கூட அதே சங்கராச்சாரியாரின்  பேரால  பாம்பு பாடம் சொல்லிக் கொடுத்தது, விஷம் கக்கியது என எல்லாம் அளந்து விடுபவர்கள் சங்கராச்சாரியாரின்  பகுத்தறிவு பாதைக்கு வருவார்களா?
Advertisements

3 Responses to "சூரியனை பாம்பு விழுங்குவதாக நினைப்பது அறியாமையே! மூட நம்பிக்கைக்கு எதிரான சங்கராச்சாரியாரின் முழக்கம் !"

http://www.salagram.net/eclipses-page.htm

இது எப்படி இருக்கு 🙂 .

as per astrology there is no physical planets as ragu and kethu ,they are saya kragangal (shadow planets) means north and south shadows of earth which is hiding the earth slowly during grahna.
the meaning behind the snake story is to understand the moon and sun is hiding by earth during grahana.
later it has been misunderstood as in the story.

http://thamizhan-thiravidana.blogspot.com/2011/09/69.html

கிரகணம் ஏற்படும் போது, அந்த நாளைய சாமானிய மக்கள்
சூரியன், அல்லது சந்திரனை பாம்பு விழுங்கி விட்ட்து என்று நினைத்தார்கள்.
இந்த எண்ணம் சாதாரண மக்களுக்கிடையே ஏற்பட்ட எண்ணம்.
இது பண்டிதர்களது எண்ணமல்ல.
ஏனெனில் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ப்ருஹத் சம்ஹிதையில்
மக்களுக்கிடையே இந்த நம்பிக்கை இருந்தது என்று
8 பாடல்களில் சொல்லிவிட்டு,
அதற்குப் பிறகு, கிரகணம் என்பது
உண்மையில் வானில் சூரிய, சந்திர, பூமிக்கிடையே ஏற்படும் நிழல்கள் என்றும்,
அவை கணித ரீதியில் கணிக்கப்படுகின்றன என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் ஜோதிட வல்லுனர்களுக்கும்,
பண்டிதர்களுக்கும் தெரிந்திருந்தாலும்,
ராமாயணத்தில் பல இடங்களிலும்
ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போல முகம் பொலிவிழந்து இருந்தது
என்று பலவாறு சொல்லப்பட்டுள்ளது.

மக்களுக்கிடையே இருந்த நம்பிக்கையை
ராமாயணத்திலும் பிரதிபலித்துள்ளனர்.
இந்த நம்பிக்கையை தமிழ்ச் சங்க நூலான புறநானூறிலும்
பிரதிபலித்துள்ளனர்.

புறநானூறு 174 –இல் மாறோக்கத்து நப்பசலையார் அவர்கள்
அசுரர் ஞயிற்றை மறைத்தனர். அதனால் உலகம் இருளில் முழுகியது.
உலகத்தின் துன்பத்தை நீக்குமாறு அஞ்சன வண்ணன்
அந்த ஞாயிற்றை வானின்கண் நிறுத்தினான் என்கிறார்

அஞ்சன வண்ணன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் பெயர்.
கிருஷ்ணனது கதையில் இப்படி ஒரு சம்பவம் வரவில்லை.
எந்தப் புராணத்திலும் இப்படி ஒரு சம்பவம் வரவில்லை.
ஆனால் அசுரர் ஞாயிற்றை மறைத்தனர் என்றால்
அது கேது என்னும் அசுரனால்,
அதாவது பாம்புக் கிரகத்தால் ஏற்படும் சூரிய கிரகணத்தையே குறிக்கும்.

கேதுவைக் கதிர்ப் பகை என்றும்,
ராஹுவை மதிப் பகை என்றே ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவர்.

இந்த நம்பிக்கை ராமன் ஆண்ட வட இந்தியாவிலும் இருந்தது.
சங்கத் தமிழ் வளர்ந்த தென் தமிழ் நாட்டிலும் இருந்தது
என்பதைப் புறநானூறு தெரிவிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: