Thiruchchikkaaran's Blog

நார்வே தலை நகர் ஓஸ்லோவில் பயங்கரவாதிகள் இரட்டைத் தாக்குதல்கள்! வன்மையாக கண்டிக்கிறோம்.

Posted on: July 23, 2011


நார்வேயின் தலை நகர் ஓஸ்லோவில் பயங்கரவாதிகள் இரட்டைத் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

பிரதம மந்திரியின் அலுவலகம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.
 
 அதோடு ஒரு தீவில் இருந்த  இளைங்கர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
 
அந்த தீவுக்கு தனி போட்டில் சென்ற பயங்கரவாதி , அந்த தீவில் இருந்த இளைஞர் முகாமுக்கு சென்று தான் போலீஸ் என்றும் குண்டு வெடிப்பு சம்பந்தமாக அனைவரையும் விசாரிக்கக் வேண்டுமென்றும், வெளியே வந்து நிற்கும்படி சொல்லி இருக்கிறன். அவர்கள் வெளியே வந்து நின்றபோது வெறி நாய்க் குணம் கொண்ட அந்த பயங்கரவாதி அவர்களை சுட்டுத் தள்ளி இருக்கிறான்.
 
இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆகும்.
 
பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியவனை வன்மையாக கணடிக்கிறோம்!
 
 
Advertisements

6 Responses to "நார்வே தலை நகர் ஓஸ்லோவில் பயங்கரவாதிகள் இரட்டைத் தாக்குதல்கள்! வன்மையாக கண்டிக்கிறோம்."

நண்பரே,

நெடுநாளாய், இருக்கும் ஒரு கேள்வி. உலகில் எங்கேயோ நடக்கும் செயலுக்கு, வேறு ஏதோ ஒரு மூலையில் “இதை கண்டிக்கிறோம்” என்று அறிக்கை வருவதை நான் சிறுவயது முதல் பார்த்திருக்கிறேன். இந்த அறிக்கை விடுதலால் என்ன பயன் என்று சொல்லமுடியுமா?

நண்பரே, எனக்கு தெரியாததால்தான் இந்த கேள்வி கேட்கிறேன். உள்நோக்கம் எதுவும் இல்லை.

நன்றி,

அசோக்

உலகில் எங்கேயோ நடக்கும் செயலுக்கு, வேறு ஏதோ ஒரு மூலையில் “இதை கண்டிக்கிறோம்” என்று அறிக்கை வருவதை நான் சிறுவயது முதல் பார்த்திருக்கிறேன். இந்த அறிக்கை விடுதலால் என்ன பயன்

பக்கத்து தெருவிலே குண்டு வெடித்தாலும் அதை நாம் கண்டிப்பதால் பலன் இருக்குமா? மும்பையில் போன வாரம் நடந்த குண்டுவெடிப்பில் இது வரை என்ன துப்பு துலக்கினார்கள்?

உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவரையும் நாம் சகோதரராக கருதுகிறோம், என்பதையே காட்டுகிறது. கொடூர கோட்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் செயலில் உலகின் பல் பகுதிகளிலும் இருக்கும் நாகரிக முனைப்பு சிந்தனையாளர்கள் பங்க்டுப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.

நம் உணர்வை வெளிப்படுத்துகிறோம், நம் கோட்பாடு என்னதென்று திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.

நீங்கள் ஒரு இடத்தில் கல் எரிய சொன்னது சரிதான் என்கிறீர்கள். மன்னிப்பு கேட்டால் விட்டு விடலாம் என்கிறீர்கள். மீடும் கல் எரிதலை ஆதரிக்கவில்லை என்கிறீர்கள். திரும்பவும் பைபிளில் சொன்னது எல்லாவற்றையும்
நம்புகிறேன் என்கிறீர்கள்.

எங்களைப் பொறுத்தவரயில் தெளிவான நிலைப்பாட்டை சொல்லுகிறோம்.

//உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவரையும் நாம் சகோதரராக கருதுகிறோம், என்பதையே காட்டுகிறது. கொடூர கோட்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் செயலில் உலகின் பல் பகுதிகளிலும் இருக்கும் நாகரிக முனைப்பு சிந்தனையாளர்கள் பங்க்டுப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.//

வெறும் கண்டன அறிக்கையை மாத்திரம் பார்த்து எப்படி நீங்கள் மீட்க்கும் செயலில் (கவனிக்க “செயலில்”) ஈடுபடுவீர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்புவார்கள்.

//நீங்கள் ஒரு இடத்தில் கல் எரிய சொன்னது சரிதான் என்கிறீர்கள். மன்னிப்பு கேட்டால் விட்டு விடலாம் என்கிறீர்கள். மீடும் கல் எரிதலை ஆதரிக்கவில்லை என்கிறீர்கள். திரும்பவும் பைபிளில் சொன்னது எல்லாவற்றையும்
நம்புகிறேன் என்கிறீர்கள். //

இது என்னது சம்பந்தமே இல்லாமல். நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

மொத்தத்தில், உங்கள் கண்டனங்கள் வெறும் தன்னிலை விளக்கமே. சரிதானா? என் புரிதல் தவறென்றால் விளக்கவும்.

Not only Thiruchchikkaaran, even others also can educate me on this. I am really curious to know about this.

//வெறும் கண்டன அறிக்கையை மாத்திரம் பார்த்து எப்படி நீங்கள் மீட்க்கும் செயலில் (கவனிக்க “செயலில்”) ஈடுபடுவீர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்புவார்கள். //

அறிக்கைகள் மூலமாகவே பலர் வெறுப்புணர்ச்சியை , வெறியை பரப்பும் போது போது, அறிக்கைகள் மூலமாக சகிப்புத் தன்மையை , நல்லிணக்கத்தை பரப்ப முடியுமே.

ஒரு மனிதனின் உரிமையை, அதாவது தான் எந்த ஒரு தீவிரவாத அச்சுறுதலும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும், என்ற உரிமையை எந்த ஒரு சக்தி பறித்தாலும், அது மனி உரிமை மீறல் என்ற முறையில் கண்டிக்கத்தக்கது தான். அது எந்த தேசத்தில் நடந்தாலும் எந்த இனம் மக்களுக்கு நடந்தாலும்.

இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்பு செயல்களுக்கும் உலகத்தில் இருந்து எல்லா தருப்பு மக்கள் தேசத்தில் இருந்து கண்டனங்கள் ஆறுதல்கள் வருகின்றன.

அதனால் குண்டுவெடிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எந்த காரணத்திற்காக நிகழ்ந்தாலும் கண்டிக்கதக்கது தான்.

.இந்த மனித விரோத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஒரு கொள்கை மட்டுமே சரி,அத்னை சார்ந்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் அதற்கு விரோதமானவர்கள் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள் என்னும் மனநிலைக்கு வரத் தூண்டும் எந்தக் கொள்கையுமே தீவிரவாதம் ஆகும்.

தீவரவாதத்திற்கு இன ,மத, மொழி வித்தியாசம் கிடையாது என்பதையே இத்தாக்குதல் காட்டுகிறது.இம்மாதிரி தாகுதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் முயற்சிகளை அரசும் பொதுமக்களும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு நமது அஞ்சலி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: