Thiruchchikkaaran's Blog

பகவத் கீதையை எல்லா மாணவர்களும் கட்டாயாமாக படிக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் சொன்னது சரியா?

Posted on: July 21, 2011


பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்வது, கட்டாயப்படுத்துவது சரியல்ல.

இவராவது படிக்க மட்டும் தான் சொல்லுகிறார். அதே நேரம்   தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் பல  பைபிள் கோட்பாட்டு சார்பு  பள்ளிககளில் மாணவர்கள் ஒவ்வொரு  வாரமும் கண்டிப்பாக மண்டி போட்டு   பிரேயர் செய்ய வைக்கிறார்கள். இதை யாரும் கேட்பதில்லை. கேட்டால் பிரச்சினை வரும் என்று விட்டு விடுகின்றனர். நானும் சக மாணவர்களும்  ஒவ்வொரு  வாரமும் மணலில் மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கப் பட்டு இருக்கிறோம், கட்டிடத்துக்குள் வைத்து நடத்தினாலும் புழுக்கமாக மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும். 

என்னைக் கேட்டால் பள்ளியில் வரலாறு பாடத்தின் ஒரு பகுதியாக எல்லா மதங்களின் முக்கியக் கருத்துக்களையும் – நல்ல கருத்துக்கள் மட்டும் அல்ல, சர்சைக்குரிய கருத்துக்களையும் – எல்லா மாணவர்களையும் படிக்க வைக்க வேண்டும். மத வெறியினால் உலகில் நடத்தப் பட்ட சண்டைகளையும், கோடிக்  கணக்கில் மக்கள் இறந்ததை வரலாறு பதிவு செய்துள்ளதையும் சொல்ல வேண்டும்.  பகுத்தறிவு சிந்தனையையும், இறை மறுப்புக் கோட்பாட்டையும் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof ஐ யாரும் தரவில்லை என்பதையும், வெறுமனே புத்தகங்களில் எழுதப் பட்டுள்ளவற்றை  நம்பியே பலரும்  கடவுள் இருப்பதாக கருதுகின்றனர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அமைதியான வழிபாட்டை, அமைதியாக தங்கள் மதத்தை பின்பற்றுவதை  நாகரிக சமுதாயம் தடுக்காது என்பதையும்,

ஆனால் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை, அவை இல்லாமல் போக வேண்டும்,தன் மதம் மட்டுமே உண்மையானது , அது மட்டுமே எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும் என்கிற ஆவேசத்தில், பிற மதங்களுக்கு எதிராக சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை பரப்பும் பிரச்சாரம் மிக ஆபத்தானது, அணு குண்டை விட ஆபத்தானது என்பதை தெளிவு படுத்தும் கல்வியானது உலகில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப் பட வேண்டும்.

மத மறுப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. இது தொடரும் என்றே தோன்றுகிறது . ஏனெனில் மனிதன் பலகீனமானவனாக இருக்கிறான். எனவே கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது அவனுக்கு ஒரு மொரேல் பூஸ்டர் ஆகிறது.

எனவே மதங்களைப் புறக்கணிப்பதை விட அவற்றை நொங்கி நுங்கெடுத்துஇது நல்லது, இது தேவையில்லாதது,

உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.

Advertisements

45 Responses to "பகவத் கீதையை எல்லா மாணவர்களும் கட்டாயாமாக படிக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் சொன்னது சரியா?"

//பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்வது, கட்டாயப்படுத்துவது சரியல்ல.//

இந்த அளவுக்கு கீதையை யாராலும் கேவலப்படுத்த முடியாது…

//கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof ஐ யாரும் தரவில்லை என்பதையும், //

அந்த அளவுக்கு ப்ரூவ் பன்ன நாம் இன்னும் முன்னேரலைனு கூட சொல்லலாம்…

அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்கள்.
இதை விட சிறந்த வழி கீதையை புரியும்படியாக நன்றாக பிரச்சாரம் செய்தாலே போதும். அவர்களின் உண்மையான எண்ணம்- இருந்தால்- நிறைவேறும்.

//உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.//

இந்தப் பாடத்தை பள்ளி குழ்ந்தைகளுக்கு யார் சொல்லித்தர போகிறார்களோ?

நண்பர்கள் சீனு, நரேன் அவர்களே ,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

சீனு,

//அந்த அளவுக்கு ப்ரூவ் பன்ன நாம் இன்னும் முன்னேரலைனு //

முன்னேறுங்கள், ப்ரூவ் பண்ணுங்கள். அதற்க்கு முன்பே அடித்து சொல்ல முடியுமா?

வணக்கம் சகோ திருச்சிக்காரன்,
அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.எதிலும் அரசியல் என்னும் போது இப்படி நடக்குமா?.பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.
நம் இந்திய மக்கள் மத சார்பின்மை,ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனுபவித்தவர்கள்.ஆகவே நீதி மன்ன்ற தீர்ப்பு நியாயமாக்வே,இதனை தவிர்க்கும்..இது பாஜகவிற்கும் தெரியும் பிறகு ஏன என்றால்.எல்லாம் நம்ம அன்பு சகோதரர்களை நம்பித்தான்.!!!!!!!!!!!!!!!!!
*******************
ஒரு ‘அஆஇஈ’ தலைவர் போராட்டம் நடத்தி பிரச்சினையை பெரிது ஆக்கினால் மட்டுமே இதற்கு பலன்.அவர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.இப்பதிவை பாருங்கள் ..

************
இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது!
http://www.sinthikkavum.net/2011/07/blog-post_7242.html
*************
கொடுமை,ஒரு மாநிலத்தின் செயலுக்கு,அதுவும் தவிர்க்க பல வாய்ப்புகள் இருக்கும் போதே கருத்துகளை பாருங்கள்.விஷ வித்துகள்.இவர்களை நம்பித்தான் அந்த திட்டமே.பலித்தாலும் பலிக்கும்.!!!!!!!!!!!.
மதவாதிகள் அனைவருமே ஒன்றே!!!!!!!!!!!.
என்ன சிறுபான்மை,பெரும்பான்மை என்ற சூழ்நிலைக்கு தகுந்த்வாறு கொஞ்சம் நடிக்கும் பாத்திரம்,பேசும் வசனம் மாறும்.!!!!!!!!!!!

//அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.//

இதில் கட்டாயம் எதுவும் இல்லை நண்பரே,

மதங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் ஒரு முக்கிய பொது அறிவு விடயமே.

ஆஸ்திரேலியாவின் பூகோளம் பற்றி ஏழாம் வகுப்பில் விரிவாக் சொல்லப் பட்டு உள்ளது. நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேனோ இல்லையோ தெரியாது, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக குறைவு.

ஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.

நீங்கள் மதம் மனிதனுக்கு அவசியமில்லை எனக் கருதலாம். ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மதம் நமது வாழ்வில் குறுக்கிடுகிறதே. மத வரி போடுவது சரிதான் என்று சொல்லுகிறார்களே. மத சண்டைகளால் மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே. எனவே மதங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, எல்லோரையும் இணக்கமாக வாழச் செய்வது மிக முக்கிய விடயமாகிறதே. மதம் என்ற ஒன்று வேண்டாம் என்று குரல் கூட எழுப்ப முடியாத அடக்குமுறை நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய படிக்கு மத வெறி சக்திகள் சிந்தனையாளர்களின் சக்தியை அடக்கி மேல் எழுகிறதே . மதங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றோடு எப்படி டீல் செய்ய இயலும்.?

//பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.//

ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா?

//உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.//

இதை வரவேற்கிறேன். எந்த சமுதாய மனிதனாய் இருந்தாலும் அவன்மீது வன்முறை நடைபெற கூடாது.

/ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா?/
சகோ திருச்சிக்காரன்
எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் அதிகம் படிப்பது மத புத்தகங்களையே.படிப்பதால் நீங்கள் சொன்ன அனைத்து சாதக் ,பாதக விஷயங்களும் ஓரளவிற்கு புரிந்தது.
——————–
பொதுவாக ஒவ்வொரு மத புத்தக்த்திலும் எழுதப் பட்ட கால்த்தின் இயல்பான வாழ்வியல் நடைமுறைகள் அனுமதிக்கப் பட்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பட்டு இருக்கும். அவை எக்கால்த்துக்கும் பொருந்துமாறு உள்ளது, அனைத்துக் கருத்துகளுமே சரி என்றவுடன் பிரச்சினை ஆரம்பித்து விடும்.
___________
எந்த மத புத்தகமானாலும் அதில் உள்ள நல்ல்வற்றை பின் பற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. காலத்திற்கு ஒத்துவராத விஷயத்தை, புத்தக்த்தில் சொல்லி இருப்பதால் மட்டுமே நியாயப் படுத்துவதை நிச்சயம் எதிர்க்கிறேன்.
நன்றி

தாங்கள் கூறியுள்ளது மிகவும் சரிதான். ஆனால் இந்து மதத்தைப் பற்றிய கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அத்தனை முட்டாள்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர்.

கடவுள் இருக்கின்றார் என்பதை நம் நாட்டில் தோன்றிய முனிவர்கள், மகான்கள் தாமும் உணர்ந்து பிறருக்கும் வழிகாட்டி இருக்கின்றனர். சுவாமி விவேகானந்தருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனைக் காட்டியிருக்காவிட்டால் அவரும் ஒரு நாத்திகராக ஆகியிருப்பார்

எல்லாமதங்களிலும் உள்ள நல்லவற்றையும் தவறுகளையும் குழந்தைப் பருவத்திலேயே உணரச் செய்து தனக்கு பிடித்ததை பின்பற்றச் செய்வது ஒரு நல்ல வழிமுறைதான்.

http://ia.rediff.com/news/2008/nov/21gita-compulsary-at-seton-university.htm
Gita study to be mandatory at Seton Hall University

The study of the Bhagvad Gita has become mandatory for every student joining Seton Hall University in New Jersey from this year. Seton Hall is an independent, Catholic university under the Archdiocese of Newark founded in 1856.
“This is unique,” said A D Amar, professor, Stillman School of Business, the driving force behind the decision. “Nowhere there is a university-wide core program. The colleges decide on the core courses and generally oppose the university imposing core courses. But Seton hall decided that all its students should learn the core courses.”

One-third of Seton Hall’s more than 10,800 students are non-Christian. Many non-Catholics also study there. It has a significant number of Indian students. The core course is for all students, whatever the discipline.

“Seton Hall wanted to establish its identity by differentiation from other universities, and decided to develop its own brand of university-wide core curriculum,” Amar said.

For its ‘signature’ education, in 2001, the university formed a Core Curriculum Committee under the Faculty Senate’s authority. In 2006, Amar became a member of the Committee when they were drafting the content of the core courses.

The university wanted a transformational course that will influence the character and life of its students. So it wanted a course that seek answers to perennial questions like the purpose of life, why are we here, where are we going, etc, as part of the course.

Titled ‘The Journey of Transformation,’ the course is taken during the freshman year and ‘seeks to forge a community of conversation inspired to explore perennial questions central but not exclusive to the Catholic intellectual tradition.’

Amar told the Committee that the Bible teaches only one way and that students should learn from older philosophies too. He suggested the inclusion of the Vedas and the Gita.

“The faculty consists of Muslims, Buddhists, Jews, in addition to Christians. Suggestions came to include the Koran also,” Amar said. “Finally, studying the Bible– the Gospels, specifically — the Bhagvad Gita, and Dante’s The Divine Comedy were made part of the core course. The Committee found the Vedas too difficult to understand. I was surprised at the openness of these people, and the greatness of the Catholic community was evident,” he said.

In addition to these three subjects, individual instructors may add other material. Freshmen study it in the first semester, and it is a three-credit course.

The translation of the Bhagvad Gita by Stephen Mitchell is the text. The faculty teaches it with additional training. None of the teachers is Hindu. As a business professor, Amar is not teaching it but helps others to learn it.

The pilot course was started last year and students love it, he said. The second interdisciplinary signature course, ‘Christianity and Culture in Dialogue’, is more social science-oriented, drawing on readings from Karl Marx and Friedrich Nietzsche in addition to the writings of the Second Vatican Council.

The third and final signature course, taken in a student’s junior year, is intended to expand on the themes of the first two courses, but in a discipline-specific setting.

Amar arrived in the United States as a foreign student from India in 1972. He taught at Montclair State University for some time. He has been a professor at Seton Hall since 1983. He has published over 70 works in journals and periodicals and also published books. He also serves as the faculty advisor for the Seton Hall Indian Students Association. He also contested in the Republican primary from the 7th Congressional District.

Dear Thiruchchikkaaran,
The previous design of you site was comfortable. Now I am not sure that I have seen all the latest comments. Can you please do the needful?

Dear Ashok kumar Ganesan sir,

In the front page , latest comments are published, upto 7 latest comments are found there.

Hope you can find the latest comments there.

If you still have any difficulties, please inform us. The latest desig has numbers for the comments. We hope it will be easy for you to find a particular comment, that why we switched to new design

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

எதையுமே கட்டாயப்படுத்துவதன் மூலம் அதன் மேல் விருப்பம் வருவதில்லை.நீதி போதனை போன்ற வகுப்புக்களில் அனைத்து மதக் கருத்துக்களையும் சொல்லிக் கொடுக்கலாம்.

ஆஹா அருமை..அருமையா விஷயத்த திசைதிருப்பீர்கீங்க.அந்த அமைச்சர் சொன்னதுல பாதிய மட்டும் டைட்டிலா வச்சுட்டு,மீதிய ஒட்டுமொத்தமா மறக்கடிச்சா எப்டி???
அவர் வெறுமனே கீதைய படிக்கனும்னோ,இல்ல கட்டாயமாவே படிக்கனும்னோ சொன்னா யாரும் சட்டை செய்யப்போறதில்ல.ஆனா அதுக்கு அடுத்து அவன் என்ன சொன்னான்…
படிக்காதவங்க நாட்டை விட்டே ஓடனுமாம்…இதை வசதியா திருச்சி சார் மறந்துட்டு,வழக்கம் போல,எல்லாத்துக்கும் அட்வைசே பண்ண ஆரம்பிச்சுட்டீங்க..
நம்ம பதிவர்கள் பண்ணக்கூடிய ஒரு முட்டாள் தனமான,இல்ல இத அறிவு ஜீவிதனமா அவங்க நெனச்சு செய்றது,என்னன்னா,ஒரு குற்றத்தை விமர்சிக்கேறேன்ன்னு சொல்லிட்டு,அதப்பத்தி பேசாம,அவன் அப்டி செய்றான்,இவன் மட்டும் ஒழுங்க..அப்டீன்னு கேட்டு எஸ்கேப் ஆயிர்றது…..
அவன் நாட்டை விட்டு ஓட சொன்னானே,அதப்பத்தி பதிவுல ஒரு வரியைக்கூட காணோமே??ம்ம்…
உங்களுக்கு அது ஒரு மேட்டரே இல்லையோ?..இல்ல அது சரிதான்னு முடிவு பண்நீடின்களா?

பதிவுக்கு காரணமான முக்கியமான மேட்டர உட்டுட்டு நல்லாவே ஜல்லி அடிக்கிறீங்க…

பதிவு எழுதீர்க்க வேண்டிய மேட்டர் படிக்க சொன்னான இல்லையாங்கிரதிள்ள..அந்த நாய் யாரு..இந்திய குடிமகன நாட்டை விட்டு ஓட சொல்ல..பதிவு இதப்பத்தினதா இருந்திருக்கணும்…
ஹம்…இதெல்லா உங்களுக்கு தெரியாமையா???நா சொல்லித்தா தெரியனுமா???…
ஓக்கே ஓக்கே…பாவம் உங்களாளையும் எவ்ளோதா மறைக்க முடியும்???
——
சார்வாகன் கொடுத்த சுட்டி பத்தி,அது எதோ ஒரு மாநில கருத்து போலவும்,அதுக்கும் நாட்டுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் சொல்லி இருந்தாரு..பாவம்..அந்த அமைச்சர் சார்ந்து இருக்கும் கச்சிதான் நாட்டை ஆள ஆளாய் பறக்கிறார்கள்…என்பதும்,ஒரு கட்சித்தலைமையின் கொள்கையைத்தான் தொண்டனே பேசக்கூடியவனாக இருக்க,அந்த கட்சியின் ஒரு மாநில அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் இல்லை என்பது வேடிக்கையிலும் வேடிக்கை…

சக குடிமகனை நாட்டை விட்டு ஓடுன்னு சொல்லக்கூடிய விஷயம் என்ன நாட்டின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட அழைப்பா?இல்லை… நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் விடுக்கப்பட்ட மாபெரும் சவால்…இதை அந்த கச்சித்தலைமை மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து இருந்தால்,சரி…அவர்கள்தானே எழுதிக்கொடுத்து வாசிக்க சொல்வது???
பின் இந்த புத்தியோடு அவர்கள் நாட்டை ஆள துடித்தாள்,நாளை அவர்களின் ஆட்சியில் இதுக்கான சட்டம் கொண்டு வரப்படும்…அப்போ என்ன நடக்கும்..அந்த பதிவுல சொல்லப்பட்ட விஷயம் நடக்கும்????

சும்மா அடுத்தவனுக்கு அட்வைஸ் பன்றது இருக்கட்டும்…இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை அமைச்சர்களாக கொண்ட கச்சியை கண்டிக்க வழியை பாருங்கள்…முடிந்தால்!!!! (ஓ கட்சியே காட்டுமிராண்டி கூட்டம்தானோ!! சாரி..)

ரஜின்

சகோ. ரசீன் அவர்களே,

அந்த அமைச்சர் இன்று அமைச்சராக இருப்பார். நாளைக்கு ஆட்சியில் இருப்பாரா என்று தெரியாது. மத வெறி பிடித்தவர்கள் தான் இந்த நாட்டை விட்டு போக வேண்டும் வெளியே போய் மத வெறி தீரும் வரை காத்திருந்து , தீர்ந்த பிறகு இந்தியாவிற்கு வரட்டும்.

இந்தியா எட்டாயிரம் வருடத்திற்கும் மேலான வரலாறு உடைய சமுதாயம் ஆகும். எத்தனையோ பேர் இங்கே ஆட்சி செய்து இருக்கின்றனர். மௌரியர் , குப்தர், கனிஷ்கர், ஹர்ஷர், சுல்தான், மொகலாயர், ஆங்கிலேயர் … இப்ப அரசியல்வாதி!

இந்தியாவில் மக்கள் மனசாட்சிக்கு கட்டுப் பட்டு வாழ்பவர்கள். அந்த சமுதாயமே பாதுகாப்பு. இந்தியாவில் எந்த அளவு மக்களின் மனதில் சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவரும் பாதுக்காப்பாக உணர்வோம், வாழ்வோம். எனவே மக்களின் மனதில் நல்லிணக்கத்தை , சமரசத்தை உருவாக்குவதே உண்மையான பாதுகாப்பு.

இது நான் எப்போதும் அடிக்கும் ஜல்லி தான். இது நல்ல ஸ்ட்ராங்கான ஜல்லி. இதில் கான்கிரீட் போட்டால் நாடு பலமாக இருக்கும். மக்கள் நலமாக வாழ்வார்கள்.

பிரிவினையின் போது பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என அறிவிக்கப் பட்ட போது, மகாத்மா காந்தி இந்தியாவை எல்லா மதத்தினருக்கும் பொதுவான நாடு என்று அறிவித்தது – அது காந்தியின் தனிப் பட்ட கருத்து அல்ல- பெரும்பாலான இந்திய மக்களின் கருத்து அதுதான். இந்தியாவில் இருக்கும் மக்கள் இஸ்லாமியர் , கிறிஸ்தவ உள்ளிட்ட அனைவரையும் சகோதரராக , சக மனிதராக, சக இந்தியராகவே கருதுகின்றனர். அட அவங்க பாட்டுக்கு இருக்கிறாங்கப்பா, அவங்களை என் தொல்லை பண்ணனும் என்கிற நல்ல மனது படைத்தவன் சராசரி இந்தியன்.

பி.ஜே.பி. போன்ற கட்சிகள் வலிமை பெறுவதும், புறக்கணிக்கப் படுவதும் பிற மத சிந்தனையாளர்களின் கையில் தான் இருக்கிறது. அவர்கள் இந்து மத தெய்வங்களை இகழ்ந்து. பொய் தெய்வங்கள் என்று தூற்றிப் பிரச்சாரம் செய்தால் பொதுவான இந்து நொந்து போய், பி. ஜே.பி பக்கம் போகின்றனர். காசு குடுத்து மத மாற்றம் செய்வதாக அறிந்தால், பக்கம் போவான்.

பிற மதத்தவர் இந்து மதத்துடன் நல்லிணக்கம் பேணினால் இந்து பத்து மடங்கு அவர்களுடன் நல்லிணக்கம் பேணுவான், பிற மதத்தவரை வேறு படுத்தும் கட்சியினரிடம் போக மாட்டன்.

ரசீன், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை, மாறாக நல்லிணக்கத்துக்கு உதவுங்கள்.

கோல கொலையா முந்திரிக்கான்னு,பேசவேண்டிய/கண்டிக்கவேண்டிய விஷயத்தை அழகா நடுவுல வச்சுட்டு,அத தொடாம சூப்பரா சுத்தி சுத்தி வர்றீங்க..
கேட்ட..நா எப்பவும் அடிக்கிற ஜல்லின்னு வேற…அப்புறம் எதுக்கு இந்த தலைப்பு??..தலைப்பு ஒன்னு…பேசுறது வேறோன்னா?

//அந்த அமைச்சர் இன்று அமைச்சராக இருப்பார்.
நாளைக்கு ஆட்சியில் இருப்பாரா என்று தெரியாது.//

ஆனா இன்னைக்கு அவன் இப்படி பேசுரான்ன்னா அவன் கச்சி கொடுத்த தைரியம்தானே???.நல்ல சமாளிப்பு

//இவராவது படிக்க மட்டும் தான் சொல்லுகிறார். அதே நேரம் தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் பல பைபிள் கோட்பாட்டு சார்பு பள்ளிககளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் கண்டிப்பாக மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கிறார்கள். இதை யாரும் கேட்பதில்லை. //

இதென்னா மனநிலை??? எவன் தப்பு பண்ணுனாலும் தப்புதான்..அவன் கிறிஸ்தவன் முஸ்லிம்,ஹிந்து…எவனா இருந்தாலும்..

பதிவின் தலைப்பை ஒத்த வரில முடிச்சுட்டு,,,மொத்த பதிவும்,….நானாவது பரவாயில்ல..இந்தா அவன் இருக்கானே…இவன்,,..ஐயோ…அப்டீன்னு, பேசுறதும்…ஒருவனின் தப்பை கேட்கும்போது,அதுக்கு பதில் சொல்லாம,அவன் மட்டும் ஒழுங்கான்னு கேகுறதும்…எப்படிப்பட்ட மனோநிலையோ அதுவே இங்கு பிரதிபலிக்கிறது.

இத்தனைக்கும் நான் உங்களுக்கு நினைவு படுத்திய பின்னும் அது உங்க கவனத்துக்கு வரல…அப்டின்னா, அவன்,கீதைய படிக்காதவன் நாட்டை விட்டு வெளியேற சொன்னத ஏத்துக்கிறீங்க..

சொந்த மதத்துக்காரன் தப்பு பண்ணுனா கண்டிக்க திராணியில்லாம,நடந்த விஷயத்தைக் கூட முழுசா சொல்லாம,மூடி மறச்சு பூசி மெழுகி..கடைசில… வெறுப்புணர்ச்சி வேண்டாம் அது இதுன்னு..என்ன
வோ ஊர்ல எல்லாரும் திரிசூலத்த துக்கிகிட்டு, ஒவ்வொன்னும் ஒருத்தனுக்குன்னு சொல்லிக்கிட்டு அலையிரமாதிரி….

எவன் அலையிரானோ,எவன் பேசுறானோ,,அவன் சட்டைய புடிச்சு இப்டி பேசாதடான்னு சொல்லுங்க…இப்போ யார் சட்டைய புடிக்கணும் நீங்க??? சொல்லுங்க பாப்போம்…

கடைசியா நீங்க உதிர்த்தது..
//மத வெறி பிடித்தவர்கள் தான் இந்த நாட்டை விட்டு போக வேண்டும் வெளியே போய் மத வெறி தீரும் வரை காத்திருந்து , தீர்ந்த பிறகு இந்தியாவிற்கு வரட்டும். //

இன்னைக்கு மதவெறியுடன் பேசிய இந்த பாஜக தீவிரவாதியை.. நாட்டைவிட்டு வெளியே செல்ல சொல்றீங்க…அப்பாட மறைமுகமாவது சொன்னீங்களே…

//உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.//

இதுவும் அவங்கள பாத்துதானே???

கரெக்ட்டு
முதலில் இப்படிப்பட்ட அரக்ககர் கூட்டத்துக்கு சகிப்புத்தன்மையையும், மதநல்லினக்கத்தையும் கத்துக்கொடுங்க… இவங்க தா நாட்டில் பெரும்பான்மையினர்.. தெரியும்னு நேனைக்கிரேன்..

ரஜின்

அய்யா ரஜின் , இந்த மாதிரி ஹிந்துகளை ஹிந்துத்துவா வாக மாற்றியது ஆப்ரஹமிய மதங்கள் தான். அப்படி ஆகவில்லையென்றால் நாங்கள் இங்கெ இந்துவாக இருப்பது என்பது வருங்காலத்தில் கனவாகவே ஆகிவிடும். இப்போது கொஞ்சம் பேர்தான் விழித்திருக்கிறார்கள் இன்னும் சில வருடங்களில் இது பெருகிவிடும். என்னைக்கூட ஹிந்து வெறியனாக மாற்றியது முஸ்லிம்கள் தான். (கிரிக்கெட் மேட்ச்சில் நான் சொல்லும் முஸ்லிம் கும்பல் பாகிஸ்தானை ஆதரித்து நடந்தவிதமே மாற்றியது). இப்பொழுது என்னால் எனது நண்பர்கள் அனைவரும் மற்ற மதத்தைப்பற்றி தெரிந்து அவர்களும் வெளியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழன்,

//(கிரிக்கெட் மேட்ச்சில் நான் சொல்லும் முஸ்லிம் கும்பல் பாகிஸ்தானை ஆதரித்து நடந்தவிதமே மாற்றியது)//

சில முஸ்லீம்கள் அப்படி நடந்தால் அதற்காக எல்லா முஸ்லீம்களும் அப்படி இருப்பார்கள் என கருத முடியுமா?

அனேகமாக — அவர்கள் எப்போதும். இஸ்லாம்/முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கமாட்டார்கள். அவர்களைப்ப்பொருத்தவரை இந்தியா ‘ட்ர் உல் ஹர்ப்” , அவர்கள முஸ்லிம் தலைமையி இல்லை . அதானால் இது ஒரு கஃபிர் நாடு. அப்படி அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தால் அது அவர்களின் அறியாமை ஆகும். குரான்/ஹதிஸ்ப்ப்ற்றி அறியவில்லை . அதாவது அவர்கள் நமத்துபோன வெடிகுண்டு. கொஞ்சம் இஸ்லாம் என்னும் வெயிலில் காய்ந்தால் வெடிக்க ரெடி!!

தமிழன் அவர்களே,

நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் அவர்களைப் போட்டுக் காய்க்க வேண்டாம் என்பதுதான்.

இஸ்லாமியர் , கிறிஸ்துவர், இந்துக்கள், சீக்கியர் … உள்ளிட்ட அனைவரும் இணைந்து வாழ்வதில் தான் இந்தியாவின் வெற்றி இருக்கிறது.

அந்த வெற்றியை உலகம் முழுவதும் விரிவு படுத்தி உலக முழுவதையும் மத நல்லிணக்க பகுதியாக ஆக்க வேண்டும்.

இந்து மதத்தின் வெற்றி பிற மதத்தினரை மதம் மாற்றுவதில் இல்லை. பிற மதத்தினரை சகிப்புத் தன்மை உடையவராக ஆக்குவதில்தான் இருக்கிறது.

உலகில் உள்ள எல்லா மக்களும் தன்னுடைய மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கிற ஆவேச வெறியில் இருந்து விடுவித்து அவர்களை நாகரீகப் பாதைக்கு கொண்டு வருவதல் முன்னணியில் இருந்து செயல பட வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்துவுக்கு இருக்கிறது. இதை மிக சிறப்பாக செய்தவர் சுவாமி விவேகானந்தர். அவருடைய பணியை தொடர்ந்து முன்னெடுப்போம்.

வெறிக் கோட்பாடுகளில் சிக்கியவரை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் முழுமை பெற்ற இந்துவாகவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

நண்பரே , எனக்கும் அந்த ஆசை தான். ஆனால் இஸ்லாமிய கோட்பாடு என்ன என்று தெரிந்தபின் அவர்கள மாறுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களால் அல்லாவை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது.. உங்களுக்கும் இஸ்லாமைப்பற்றி தெரிந்தால் நீங்கள் இப்படி சொல்லமாட்ட்டீர்கள்.

தெரிந்துதான் இருக்கிறது, எல்லோருக்கும் தெரியும்.

காந்திக்கு தெரியாதா, விவேகானந்தருக்கு தெரியாதா, பாரதிக்கு தெரியாதா?

முரட்டுப் பிடிவாதக நிலைக்கு சென்றோரை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் முழுமை பெற்ற இந்துவாகவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

நீங்கள் , தியானம், யோகம் , பக்தி போன்ற அமைதியான ஆன்மீக முறைகளில் பயிற்சி செய்து வாருங்கள்., நீங்கள் இந்த உலகில் யாரையுமே வெறுக்க மாட்டீர்கள் . எல்லோரையும் நல்வழிக்கு கொண்டு வரும் அறிவும், அன்பும், வலிமையையும் உங்களுக்கு வரும்.

விவேகானந்தர் சொன்னது போல நீங்கள் ரிஷித்துவம் பெற்றால், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள்.

ரசின் அவர்களே,

அந்த அமைச்சர் பேசியது தவறு என்று தான் சொல்லி இருக்கிறோமே. மத வெறியை யார் கொண்டிருந்தாலும் எதிர்க்கிறோம். மனப் பூர்வமாக எதிர்க்கிறோம்!

ஆனால் அதை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் மனம் மறுக்கிறது.

ஏனெனில் தன் மதத்தை சேர்ந்தவர் எது செய்தாலும் அதைக் கண்டு கொள்வது எப்படியாவது சப்பைக் கட்டு கட்டுவது, அல்லது அப்படியே அந்த விடயத்தை விட்டு விடுவதைத்தான் தான் எல்லோரும் செய்வார்கள் என்றே நீங்கள் எண்ணி இருக்கக் கூடும்.

ஆனால் முன்பு ஒரு முறை நீங்கள் இஸ்லாத்தை உலகில் எல்லோருக்கும் எத்தி வைக்க எங்களுக்கு கடமை உள்ளது என்றீர்கள். அதே போல எல்லா மதத்தவருக்கும் உலகில் உள்ள எல்லா இடங்களிலும் தங்கள் மதத்தை அனைவருக்கும் எத்தி வைக்கும் உரிமை அளிக்கப் பட வேண்டும் என சொல்வீர்களா என்று கேட்டதற்கு எனக்கு தெரிந்து உங்களிடம் இருந்து பதில் வரவில்லை. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். அதே போலதான் நாங்களும் செயல்படுவோம் என்று எண்ணம் உங்களுக்கு தோன்றக் கூடும்.

சிறுபான்மையினரான விவிலிய மார்க்கத்தவர் பெரும்பாலான சமூகத்தவரை
மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கிறார்கள். அதையும் ஒன்றும் சொல்லாமல் வழிபட்டு வருகிறான் சகிப்புத் தன்மையுள்ள இந்து.

அவர்களே அப்படி செய்கிறார்கள், நாமும் அப்படி செய்வோம் என சிலர் என்ன வாய்ப்புள்ளது.

மத சகிப்புத் தன்மை உடையவராக இருக்கிறோம், மத வெறியையும் சகித்துக் கொள்ள வேண்டுமா?

இங்கே எழுதிய இந்துக்களுள் ஒருவர் கூட பகவத் கீதையை கட்டாயமாக படிக்க சொல்ல வேண்டும் என்பதை ஆதரிக்கவில்லை. பகவத் கீதையை படிக்க வேண்டும் என்பதையே ஆதரிக்கவில்லையே, அப்புறம் தானே படிக்காதவர்கள் வெளியேற வேண்டும் பற்றி பேச்சு.

சகோ திருச்சிக்காரன் அவர்களே,
தொடர்ந்து விவாதித்து வருகிறோம் ஒரு வகையில் நம் இருவருக்குள் நடக்கும் விவாதம் ஆரோக்கியமாக இருப்பதாகவே உணர்கிறேன்…
நல்லது…

//அதே போல எல்லா மதத்தவருக்கும் உலகில் உள்ள எல்லா இடங்களிலும் தங்கள் மதத்தை அனைவருக்கும் எத்தி வைக்கும் உரிமை அளிக்கப் பட வேண்டும் என சொல்வீர்களா என்று கேட்டதற்கு எனக்கு தெரிந்து உங்களிடம் இருந்து பதில் வரவில்லை//

இதை குறித்து விவாதித்து இருப்பதாக நினைவு,,,ஆனால் எங்கு எப்போது,அது உங்களுடன் தானா என நினைவில்லை…
ஆனால் நான் இதற்கு பதில் சொல்ல தயங்கி இருப்பேன் என தோன்றவில்லை…
அதற்கான பதில் ..எங்கும் பிற மதத்தவர் தங்களின் மதம் பற்றி எடுத்து சொல்ல எனக்கு எவ்வித ஆட்ச்சேபமும் இல்லை…இஸ்லாம் ஒரு நிலைபாட்டை கொண்டிருக்க…எனது நிலைப்பாடு அதற்கு மாற்றமாக இருக்காது என அறிவீர்கள்…ஆக இஸ்லாமின் நிலைப்பாடும் இதுவே….

மதினாவில் நபி(ஸல்) அவர்கள் யூதர்களுடன்,இரு மதங்களைப்பற்றியும்,விவாதித்திருக்கிறார்கள்…

//இங்கே எழுதிய இந்துக்களுள் ஒருவர் கூட பகவத் கீதையை கட்டாயமாக படிக்க சொல்ல வேண்டும் என்பதை ஆதரிக்கவில்லை//

கவனித்தேன் சகோ…

அன்புடன்
ரஜின்

அன்புக்குரிய ரஜின்

//இங்கே எழுதிய இந்துக்களுள் ஒருவர் கூட பகவத் கீதையை கட்டாயமாக படிக்க சொல்ல வேண்டும் என்பதை ஆதரிக்கவில்லை//

கவனித்தேன் சகோ…//
இதை நீங்கள் அறிந்து கொண்டதற்கு நன்றி. உலகிலே பிற மதங்களுடன் இணக்கமாக வாழ்வதில் முன்னிலையில் இருப்பவர்கள் இந்துக்கள். உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும்
இரண்டாவது நாடு இந்தியா.

எனவே நல்லிணக்கத்தை கடைப் பிடிக்க உலகிற்கு போதிக்க மிகச் சரியான கட்டம் இதுவே.

இந்த நேரத்தில் உங்களைப் போன்றோர் செய்யப் போவது என்ன? நல்லிணக்கப் பாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதா? அல்லது இஸ்லாத்தின் சிறப்புகளை விவரிப்பது மட்டுமா? இஸ்லாம் எளிய மதம். அதைப் புரிந்து கொள்வதும் எளிது. இஸ்லாத்தை பெரும்பாலான இந்துக்கள் வெறுக்கவில்லை, தங்கள் மத நூலை பிற மதத்தவரிடம் திணிக்க விரும்பவில்லை. இஸ்லாத்தோடு, இஸ்லாமியரோடு நல்லிணக்கத்தில் வாழ அன்று முதல் இன்று வரை இந்துக்கள் தயார். நல்லிணக்கப் பாதையில் இந்துக்கள் கை நீட்டுகின்றனர். இணைய நீங்கள் தயாரா?

அன்புக்குரிய ரஜின்

முகமது (ஸல்) அவர்கள் மதினாவில் இரண்டு யூதர்களுடன் விவாதித்தது எப்போது ? ஹிஜ்ரி காலத்தின் போதா. அல்லது மெக்காவைக் கைப்பற்றிய பிறகா? மேலும் முகமது (ஸல்) யூதர்களுடன் விவாதித்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் யூத மதத்தை தோற்றுவித்த மோசஸ் , இஸ்லாத்தின் முக்கிய ப்ராபட்களில் ஒருவர் அல்லவா. யூத மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டே. ஒரே கடவுள், வேறு கடவுளை வணங்கினால் தண்டனை, விருத்த சேதனம் செய்தல் முதல் கல்லெறிதல் முதலான கடுமையான தண்டனைகள், இவற்றோடு உணவு மற்றும் உடை ஆகியவை இருவருக்கும் ஒன்றே. மேலும் யூதர்களும், அரபியர்களும் ஒரே சீதோஷ்ண , புவியியல் நிலையில் வாழ்ந்த மக்கள்.

நான் கேட்டது இன்றைய நிலையைப் பற்றி
இன்றைய கால கட்டத்தில் இரான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பிற மதங்களைப் பற்றிய பிரச்சாரத்தை
தங்கள் நாட்டில் தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல தயாரா?
இது பற்றிய கட்டுரையை உங்கள் தளத்தில் வெளியிட முடியுமா?

ஆனால் அப்படி கட்டுரை வெளியிடுவது உங்களுக்கு எளிதல்ல என நினைக்கிறேன். பிற மதங்களை வெறுக்க வேண்டியதில்லை என்று சொல்லி கட்டுரைகளை நீங்கள் வெளியிட்டால் அது உலக அமைதிக்கு நீங்கள் ஆற்றிய பணியாகும்.

பகவத் கீதையைக் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொன்னதற்கே ஆளாளுக்கு எகிறிக் குதிக்கிறார்களே. பகவத் கீதையைப் படித்துவிட்டு அதில் குறைகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. (90 சதவீத இந்துக்களுக்கு பகவத் கீதை என்ன சொல்கிறது என்று தெரியாது) ஆனால் முஸ்லீம் நாடுகளில் ரமலான் மாதத்தில் மற்ற மதத்தவர்களாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே. அதை யாராவது கேட்கிறார்களா? வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் முஸ்லீமாக இருந்தாலும் அடிக்கிறார்கள். இது என்ன மத சுதந்திரம்? என்று யாராவது வாய்திறக்கிறார்களா?

அன்புக்குரிய திரு. ராஜா அவர்களே,

பகவத் கீதையைப் படியுங்கள், பகவத் கீதை பற்றி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப் படும்., பரிசுகள் வழங்கப் படும் என்று அறிவித்து இருந்தால் நம்மைப் பொறுத்தவரை அதில் தவறு இல்லை (ஆனால் அதைக் கூட ஓட்டுக்காக செக்யூலர் வேடம் போடுவோர் கண்டித்து இருப்பார்கள்). ஏனெனில் இந்தியாவின் மிக முக்கிய தத்துவ நூலாக பகவத் கீதை உள்ளது. எப்போதெல்லாம் தோல்வி என்னை எதிர் நோக்குகிறதோ அப்போதெல்லாம் கீதையே எனக்கு சோர்வை நீக்கும் என்றார் காந்தி, நேதாஜி சுபாஷ் சத்திர போஸ் , பாரதியார் இப்படி இந்திய தலைவர்கள் பலரும் கீதையை ஒரு முக்கிய வழிகாட்டியாக வைத்திருந்தனர்.

ஆனால் பகவத் கீதையை கட்டாயம் படித்தே ஆக வேண்டும், பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்வது சரி அல்ல, தவறானது, கண்டிக்கத் தக்கது.

இஸ்லாமிய நாடுகளில் மத விடயங்களில் கண்டிப்புக் காட்டுகிறார்கள், கட்டாயப் படுத்துகிறார்கள் என்றால், அவர்களின் கோட்பாடு, கலாச்சாரம், வரலாறு, பண்பாடு அப்படி.
இந்தியாவின் பண்பாடு அப்படியா?

//முஸ்லீம் நாடுகளில் ரமலான் மாதத்தில் மற்ற மதத்தவர்களாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே. அதை யாராவது கேட்கிறார்களா?//

சகோ ராஜா தங்களின் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக.

நான் அல்ல,இங்கு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் அமீரகத்தில் அதிகம் வெறுக்கும் விஷயங்களில் ஒன்று,இந்த ரமலான் மாதத்தில்,பிற மதத்தவரை,உணவு விஷயங்களில் கட்டுப்படுத்துவது..
இது கண்டிக்கத்தக்கதும் கூட..இது அவசியம் இல்லாத ஒன்று…தடுப்பதற்கு இங்கே ஆயிரம் விஷயங்கள் உண்டு..அதையெல்லாம் விட்டுவிட்டு…இவைகளில் கைவைப்பது தேவையில்லாத ஒன்று..

உங்களுக்கு தெரியாது..இது எதோ அனைத்து முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடப்பதாகவும்,முஸ்லிம்கள் இதை விரும்புவதாகவும் நினைத்துக்கொண்டிருந்தால்,தயவு செய்து அந்த என்னத்தை மாற்றிக்கொள்ளுங்கள்….

//வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் முஸ்லீமாக இருந்தாலும் அடிக்கிறார்கள். இது என்ன மத சுதந்திரம்? என்று யாராவது வாய்திறக்கிறார்களா?//

இதுவும் தேவையற்றது,,,யாரையும் கட்டாயத்தில் பள்ளியில் கொண்டுவந்து நிறுத்தி பயனில்லை…ஆனால் அவர்கள் தொழுகை நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தி தொழுகக செல்லும் பழக்கம் உடையவர்கள்..
அதை சட்டமாக்க முயல்கிறார்கள்…அது சிரமமா இல்லையா என முஸ்லிம்கள் சிந்திக்கட்டும் விட்டுவிடுங்கள்..என்னை பொறுத்தவரை அது எனக்கு சாதகமானதுதான்..நான் தொழுகைகை நேரத்துக்கு நிறைவேற்ற முடிவதால்…

முஸ்லிம்கள் இதை எல்லாம் கட்டாயம் என நினைத்தால்,அப்புறம் சாதாரண சாலை விதி கூட கட்டாயம் என்ற போர்வையிலும்,சுதந்திரமற்ற நிலை என பேசும் சூழல் வரலாம்..என் நாட்டில் நான் எனிஷ்டதுக்கு போக அனுமதி இல்லையா என ketpathu pola aakum..எல்லா மதத்திலும் சில கட்டுப்பாடுகள்,விதிமுறைகள் இருக்கத்தான் செய்கிறது..அதை அவர் அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அது கட்டாயமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்..
ஹிந்து மதத்திலும் இவை உண்டு…அதை நான் சொல்லமுடியாதே…கட்டாயம் அது இதுன்னு…

அன்புடன்
ரஜின்

உலகிலே மத ரீதியாக அழுத்தமான பற்றுதலும் பின்பற்றுதலும் இருந்தும் பிற மதத்தவரை தன் மத சம்பிரதாயங்களை அனுஷ்டிக்க சொல்லாத நாடாக இந்தியா இருக்கிறது. இதை ஒத்துக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை.

எந்த வகையிலாவது இந்து மதத்துக்கு சிறப்பு இருப்பதாக சொன்னதாக ஆகி விடுமோ என்று தயங்குவது போல இருக்கிறது.

திருச்சிக்கார நண்பரே ,
உங்களுக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் அவ்வளவு தான். காந்தி, விவேகானந்தர், பாரதி இவர்களால் பாகிஸ்தான் பிரிந்து போவதை
தடுக்கமுடிந்தாதா? இல்லை பிரிவினையின் போது 1000 கணக்கான பெண்கள் கற்பழிக்கபடுவதை தடுக்க முடிந்ததா. ஆனால் பாதிக்கப்பட்டது பாரதம் தான். உங்களிடம்
கிருஷ்ணபரமாத்மா வந்து இந்த மாதிரி நடந்துகொள் என்று சொன்னால் நீங்கள் அதை மீறி நடப்பீர்களா? மாட்டீர்கள்.. அதே மாதிரி முஸ்லிம்கள் குரான் என்பது அல்லா என்ற
கடவுள் சொன்னது என்று நம்புகிறார்கள். அதில் அல்லா மற்றவர்களை வெறுக்கிறார். மற்றவர்களை கொல்லச்சொல்கிறார். அதானால் அவர்கள் கண்ணைமூடிக்கொண்டு(மூளையை) அதை செய்கிறார்கள். அவர்கள் மனிதர்களாக மாறி , குரானை விட்டொழித்தால் தான் அவர்களால் மற்றவர்களை வெறுக்காமல் இருக்கமுடியும். அவர்கள் இந்துவாக மாறவேண்டாம், நாஸ்திகனாகவோ,புத்த மதத்துக்கோ மாறட்டும். இஸ்லாம் என்பது அடுத்தவர்களை வெறுக்கசொல்லி வெறுப்பால் வளர்ந்த ஒரு அரேபிய இயக்கம்(மதம் என்று சொல்லமுடியாது ). அதானால் நாம் அன்பைக்காட்டினாலும் அவர்கள் நம்மை வெறுப்பார்கள். அதனால் உள்ளது உள்ளபடி சொல்லி அவர்களை மாற்ற(இஸ்லாமில் இருந்து விடுதலை) முயற்சிப்பதே சரி. அதைத்தான் நான் செய்கிறேன். நான் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லவில்லை , அவர்கள் அல்லா/முகமது என்னும் தீய சக்தியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் அதுவே என் விருப்பம்.

தமிழன் அவர்களே,

பாகிஸ்தான் பிரிவினை முடிந்து போன ஒன்று. அதில் பல அப்பாவிகள் கொல்லப் பட்டதும், பல பெண்கள் அவமானப் படுத்தப் பட்டதும் உண்மையே. காடுமிராண்டிகளை விட மோசமான கொடூரத்துக்கு நீங்கள் வைக்கும் தீர்வு என்ன, நாமும் அந்தக் காட்டு மிராண்டித் தனத்துக்கு மாறுவதா? காட்டுமிராண்டித் தனத்துக்கு தீர்வு, நாகரீகமே. அதையே முன் வைக்கிறோம்.

அவர்கள் அல்லாவைத் தொழட்டும், அதில் என்ன பிரச்சினை, அவர்களின் ஆன்மீகத்துக்கு மதிப்பளிப்போம். முகமதுவின் (ஸல்) கொள்கைகளில் சாராயம் குடிக்கக் கூடாது, சூதாடக் கூடாது, அல்லாவைத் தொழ வேண்டும்… போன்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்றட்டும்.

ஆனால் பிற மதங்கள் இருக்கக் கூடாது என்னும் உணர்வு, பிற மதங்களின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி, தன் மதம் மட்டுமே உண்மை என்று எண்ணும் போக்கு ஆகியவை நாகரிக உலகத்துக்கு ஒவ்வாதவை என்பதையும் சொல்லிப் புரிய வைப்போம், வேறு என்ன வழி இருக்கிறது உங்களிடம் ?

இந்தப் போக்கை இஸ்லாமியர் மட்டும் அல்ல, விவிலியப் பிரிவினரும் கடைப் பிடிக்கின்றனர். இந்த தளத்தின் பல கட்டுரைகளில் இந்து மத தெய்வங்களை இகழ்ந்து, தூற்றி… எழுதி உள்ளனர்(ஆனால் அவர்களில் சிலருக்கு அவர்களின் அந்த மத வெறியே பேக் பயர் ஆகி விட்டது). எல்லோருக்கும் கல்வி புகட்டுவது ஒன்றே நம்மால் செய்யக் கூடியது

கிருஷ்ணர் எது சொன்னாலு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன், கேள்வி கேட்பேன், அவர் சொன்னதில் நன்மை இருக்கிறதா, உண்மை இருக்கறதா என்பது அயமர தீரும் வரை கேள்வி கேட்பேன். அர்ஜுனனும் அப்படியே கேட்டான். கிரிஷ்ணரும் கேள்வி கேட்பதை வூக்குவித்தார் !

//அதானால் நாம் அன்பைக்காட்டினாலும் அவர்கள் நம்மை வெறுப்பார்கள். அதனால் உள்ளது உள்ளபடி சொல்லி அவர்களை மாற்ற(இஸ்லாமில் இருந்து விடுதலை) முயற்சிப்பதே சரி. அதைத்தான் நான் செய்கிறேன். //

நீங்கள் இதுவரை எத்தனை இஸ்லாமியரை மாற்றி இருக்கிறீர்கள் சொல்லுங்கள். ஆனால் அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையவர் பாப்ரி அமைப்பின் மேல் ஏறி இடித்தவரையே அவர்கள் மார்க்கத்துக்கு மாற்றி விட்டனர். எப்படி மாற்றினர் என்பது வேறு விடயம். அவர் அமைதியான முறையில் கோவில் குளம் என வழிபட்டுக் கொண்டு இருந்தால் இப்போதும் அவர் அப்படியே இருந்திருப்பார். நீங்கள் அவர் மனதிலே ஆவேசத்தை உண்டு பண்ணி இப்போது அவர் முன்னை விட ஆவேசமாகி விட்டார்-ஆனால் இஸ்லாத்திலே .

//நாம் அன்பைக்காட்டினாலும் //

அன்பை புரிந்து கொள்வார்களா என தெரியாது . ஆனால் இருப்பது ஒரே வழிதான். இன்றைக்கு உலகத்திலே நல்லிணக்கமே ஒரே தீர்வு. நல்லிணக்கத்துக்கு வர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது . இல்லை என்றால் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு இரத்த ஆறு ஓட விட வேண்டியதுதான். புல்லை குட்டிங்களோட குடும்ப வாழ்க்கை நடத்தனும்கிற ஆசை எல்லோருக்கு இருக்கும் இல்ல. தன் புள்ளைய போலீசு பிடிச்சிட்டு போயி குன்ட்டானாமோ பே முள்ளு ஜெயில்ல போட்டு நாயை விட்டு கடிக்க விடக் கூடாதுனு தான் எல்லாரும் நினைப்பான்.

@திருச்சிக்காரரே ,
//அவர்கள் அல்லாவைத் தொழட்டும், அதில் என்ன பிரச்சினை, அவர்களின் ஆன்மீகத்துக்கு மதிப்பளிப்போம். முகமதுவின் (ஸல்) கொள்கைகளில் சாராயம் குடிக்கக் கூடாது, சூதாடக் கூடாது, அல்லாவைத் தொழ வேண்டும்…//
நான் எழுதியதை படித்தீர்களா இல்லையா.முகமது(.அல்லா) அதை மட்டும் சொல்லிருந்தால் , அதை நானும் வரேவேற்ப்பேன் அனால் அந்த நல்லதுக்கு மேலே கெட்டதைஅல்லவா சொல்லி இருக்கிறார். அடிமையை வைத்துக்கொள், கொல், மற்றவர்களுடன் பழகாதே, மற்ற வழிபாட்டுத்தளங்களை அழியுங்கள் என்றூ முகமது முன்னுதாரணமாக இருந்து விட்டு போயிருக்கிறார். அது தானெ இங்கே பிரச்சனை. …

//ஆனால் பிற மதங்கள் இருக்கக் கூடாது என்னும் உணர்வு, பிற மதங்களின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி, தன் மதம் மட்டுமே உண்மை என்று எண்ணும் போக்கு ஆகியவை நாகரிக உலகத்துக்கு ஒவ்வாதவை என்பதையும் சொல்லிப் புரிய வைப்போம், வேறு என்ன வழி இருக்கிறது உங்களிடம் ?//
அவர்களுக்கு நல்லவிதமாக கூறினால் அது எடுபடாது.. இஸ்லாமை நார் நாரக கிழித்தால் அதன் பின் அவர்கள் இஸ்லாம் என்பது ஒரு தவறான கோட்பாடு என்று தெளிந்து வெளியே வருவார்கள் அதற்கு 2 ,3 வருடங்கள் ஆகும்.. ஒரு சில அறிவு ஜீவிகள் அது தெரிந்தே இஸ்லாமில் இருக்கிறார்கள்…. அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.. http://www.faithfreedom.org/category/articles/apostates-of-islam/
இந்த இனைப்பிற்கு போய் பாருங்கள்.
http://www.faithfreedom.org/articles/apostates-of-islam/i-declare-my-apostasy/ — இது Farhan Qureshi – (famous Muslim )
அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கவேண்டும். அவ்வளவே.

//கிருஷ்ணர் எது சொன்னாலு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்//
அது தான் நம் மதம் குடுக்கும் சுதந்திரம். (உ.ம். நக்கிரன்)..
அனால் அந்த சுதந்திரத்தை முகமது குடுக்கவில்லை.

//நீங்கள் இதுவரை எத்தனை இஸ்லாமியரை மாற்றி இருக்கிறீர்கள் சொல்லுங்கள். //
இது உடனே நடக்கும் காரியமல்ல பொருங்கள் மக்கள் வெளியே வருவார்கள். ( நான் சந்தித்தி முஸ்லிம்களுக்கு , முகமதுவின் உண்மை ஸ்வரூபமே தெரியவில்லை.. நான் அவர்களிடம் முதலில் (அவர்களின் குரான்/ஹதிஸ் மேற்கோள் காட்டாமல் ) இப்படி செய்வது சரியா என்று எல்லாம் கேட்டுவிட்டு .. அவர்கள் , இல்லை அது மிக மிக தவறு என்று சொல்லுவார்கள்.. அதன் பின் மேற்கோள்காட்டினால் — அவர்கள் உடனே இஸ்லாமிய தளத்துக்கு சென்று பார்ப்பர்கள். (அவர்களுக்கு தெரியாது நான் அவர்களின் தளத்தில் இருந்து தான் எடுத்தேன் என்று) .பார்த்து விட்டு அதிர்ச்சியாகி விடுவார்கள். பின் வேறு ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு கழண்டு கொள்வார்கள். — இந்த அதிர்ச்சி போய் அவர்கள் யோசிக்க ஆரம்பித்தால் போதும் — அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள்… அதற்கு 2,3 வருடங்கள் ஆகும் ..(வந்தாலும் வெளியே சொல்ல மாட்டர்கள்) .

//ஆனால் அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையவர் பாப்ரி அமைப்பின் மேல் ஏறி இடித்தவரையே அவர்கள் மார்க்கத்துக்கு மாற்றி விட்டனர். எப்படி மாற்றினர் என்பது வேறு விடயம். //

நண்பரே, ஹிந்து மதத்தை பற்றி அறியதவன் தான் .. இதில் இருந்து வெளியே போவான். நீங்கள் கூறிய நபர் மூளையை உபயோகிக்காதவன்.. இந்த மாதிரி ஆட்களுக்கு இந்து மதத்தை பற்றி புரியவைக்கவேண்டும். (அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்) .. நான் இந்து மதத்தை , நமது கடவுள் கொள்கை பற்றி தெரிந்தவன்.. அதனால் தான் முஸ்லிம்களை அடிமைத்தளத்தில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறேன்…..

நண்பரே,

மொத்தத்தில் நீங்கள் கட்டாயத்தை உபயோகிக்காமல் அறிவு பூர்வமாக எதையும் சொல்லும் போது , அதில் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் முறையானது ஆத்திரத்தை மூட்டும் வகையிலே இருப்பதால், சிந்திப்பவன் கூட பின் வாங்கி விடும் வகையிலேயே அமைந்துள்ளது.உங்களின் எழுத்துக்களைப் படிப்பவர் அதில் வெறுப்புணர்ச்சியைக் காணும் வகையிலே உங்களின் எழுத்து அமைந்திருக்கிறதே அல்லாது நடுநிலையாக நன்மை கருத்து சொல்வது போலக் காணப் படவில்லை.

வெளிப்படையாக சொன்னால் இன்றைக்கு மத மாற்றம் என்பது வாழ்க்கை உதவிகளை அமைத்து தருவதன் மூலமே பெருமளவு நடக்கிறது. இப்படி அறிவு பூர்வமாக ஒருவரை மாற்றுவது என்றால் அது சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மீக சக்தி உடையவர்களாலேயே கூடும். அப்படி யாரும் இன்று இந்து மதத்திற்கு இல்லை.

நண்பரே, முதலில் முஸ்லிம்களுக்கு முகமதுவைப்ப்ற்றி தெரியப்படுத்தினாலே போதும் .. அவர்கள் விடுதலை அடைந்து விடுவார்கள்…. நானும் கொஞ்சம் மிதமாக சொல்ல முயற்சிக்கிறேன்….

நீங்கள் அதீத கற்பனையில் இருக்கிறீர்கள். இது வரையில் யாரையும் மாற்றவில்லை.

இஸ்லாத்தில் இருப்போருக்கு முகமது (ஸல்) செய்ததது தவறாகத் தெரியாது. பத்து மனைவி என்றால் பரவாயில்லை, எல்லா ராஜாவும் பல பொண்டாட்டிகள் வைத்து இருந்தார் என்பார்கள். போரில் பிடித்தவரை அடிமை செய்தார் என்றால், அவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள செய்தார் என்பார்கள், அக்காலத்தில் அடிமைகளாகப் பிடிப்பது முறையாக இருந்தது என்பார்கள்.

இஸ்லாத்துக்கு மாற்றாக வைக்க உங்களிடம் என்ன ஆன்மீகம் இருக்கிறது?

கௌதம புத்தர் இந்து மத சடங்குகளைக் கண்டித்தார் என்றால், அவரிடம் மாற்றாக இன்னொரு ஆன்மீகம் இருந்தது.

உங்களிடம் முகமது (ஸல்) வை எக்ஸ்போஸ் செய்ய வேண்டும் ஆவல் மட்டுமே இருக்கிறது. முகமது (ஸல்) வல்லமை உள்ளவராக கடவுள் (அல்லா) ஒருவரை நிறுத்தி, அவரை ஐந்து முறை வணங்கும் ஆன்மீகம், ரமதான் நோன்பு, சமூக சட்டம், இராணுவ முறை, வணங்கினால் சுவனம், வணங்க மறுத்தால் நரகத்தில் தோல் கருகும்….. என்று புல் பேக்காஜாக கொடுத்து இருக்கிறார்.

முகமது(ஸல்)வை விமரிசிப்பது என்பதைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் இல்லை.

.நீங்கள் வெறுப்புணர்ச்சியைக் கை விட்டு பக்தி, தியானம், தவம், புலனடக்கம், பகுத்தறிவு ஆராய்ச்சி இவற்றில் ஈடுபட்டால், சங்கரர், புத்தர் , விவேகானந்தர் போல ஆன்மீக வெற்றி பெற இயலும். அந்த நிலையில் நீங்கள் சொல்வது மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். மக்களுக்கு மாற்றாக இன்னொரு ஆன்மீக வழி கிடைக்கும்.

//உலகிலே மத ரீதியாக அழுத்தமான பற்றுதலும் பின்பற்றுதலும் இருந்தும் பிற மதத்தவரை தன் மத சம்பிரதாயங்களை அனுஷ்டிக்க சொல்லாத நாடாக இந்தியா இருக்கிறது. இதை ஒத்துக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை.//

அடக்கடவுளே!!!!…
நா எங்க சார் அப்டி சொன்னேன்..முன்மிடிவுகுக்கு என்னால் பதில் சொல்ல முடியாதே..

//எந்த வகையிலாவது இந்து மதத்துக்கு சிறப்பு இருப்பதாக சொன்னதாக ஆகி விடுமோ என்று தயங்குவது போல இருக்கிறது.//

சுத்த ஹம்பக்…

அப்புறம் இன்னொரு விஷயம்…இந்த வெறுப்புணர்ச்சி,வெறுப்புணர்ச்சி…
இதை நான் யாருக்கு சொல்லணும்..நான் பார்க்கும் முஸ்லிம்கள் என்னைபோன்றவர்களாக இருக்க,அவர்களிடம் போய் வெறுப்புணர்ச்சின்னு சொன்ன,என்னடா நா என்ன பண்ணுனேன்…சொல்றாதா இருந்த போயி..கசாப்ட சொல்லும்பான்…அவனுக்கு நான் எழுதுறது படிக்க முடியுமான்னு தெரியல…அவன் ஏன் இன்னும் உயிரோட இருக்கான்னும் புரியல…அது தவிர நா எழுதுறத படிக்கிறவன் எல்லா அண்ணனாக்கி பொழுத கஷ்டமில்லாம கழிக்க போராடுற சாதாரண குடிமகந்தானே…

எங்கிட்ட இல்லாத ஒரு விஷயத்த,…இல்ல அது உன் கிட்ட இருக்கு…அது இல்லன்னு சொல்லு சொல்லுங்கேரீங்க…நா என்னத்த சொல்றது…குஜராத் சம்பவத்துக்கு,இங்க இருக்கிற திருச்சிக்காரன் கிட்ட வந்து முஸ்லிம்கள கற்பழிக்க மாட்டேன்,வயித்த கிழிச்சு கருவ எரிக்க மாட்டேன்,உயிரோட கொளுத்தமாட்டேன்ன்னு சொல்லு சொல்லுன்னா,திருச்சிக்காரன் என்ன சொல்வார்???

ஏன்டா செவனேன்னு போயிட்டு இருக்கிறவன்கிட்ட வந்து என்ன கேக்குற???….இப்டி கேப்பாரா மாட்டாரா???….

இப்டி சும்மா கேடக்கிரவன் கிட்ட வந்து சொல்லு சொல்லுன்னா என்னத்த சொல்லுவான்…

இது ஒருவகையாக உக்தி…ஒரு மனிதனை மனதளவுல பலகீனப்படுத்தனும்ன்னா…தெனமும்,நீ கேட்டவன் கேட்டவன்….சொல்லிட்டீ இருந்தா போதும்..அவன் துவண்டு போக ….அவன் மனதை அவனை அறியாமலே நம்பவைக்கும் சதி…

இது மனோவியல்..இதைதான் திருச்சிக்காரர் செய்கிறார்…

இதை கேட்டா..சே என்னப்பா நா நல்லத்தான சொல்றேன் இந்த முஸ்லிம்களுக்கு புரியமாட்டேன்க்குதேன்னு அப்டி ப்ளேட் திருப்பப்படும்…

சரி செய்யலன்னு சொன்னா,இல்லாத ஒன்ன இருக்குன்னு ஒத்துக்க வகிரீங்க..இல்லைன்னு சொன்னா அவன் மனசுல வெறுப்பு இருக்குன்னு கதகடீரீங்க…என்னத்த சொல்ல…

சரி,..நடந்துவிட்ட சம்பவங்களுக்கு பகரமாக இனி திருச்சிக்காரன் கிட்டயும் தினமும்,சில கேள்விகளை கேட்கிறேன்..அவர் ஒப்புக்கொண்டு..இனி அப்படி செய்யமாட்டேன்..ஏன் மனதில் அப்படி எண்ணம் இல்லைன்னு சொல்லட்டும்…

ஹிந்து ஒவ்வொருவனுக்கும்,ஒரு சூலம் தரப்பட்டு இருக்கிறது..அதில் ஒவ்வொன்றும் யாருக்கு என சொல்லி சொல்லி கொடுக்கப்படுகிறது…நானோ கையில் வெளக்குமாத்து குச்சி கூட இல்லாம இருக்கேன்..குஜராத் ரத்தவாடை இங்கே தமிழ் நாடு வரை வந்துவிட்டது…

முஸ்லிம்கள் குறித்த கணக்கை கனகச்சிதமாக ஒரு கூட்டம்,மக்கள் தொகை கணக்கேடுப்பவர் போர்வையில் வந்து திரட்டி செல்கிறது…

ஹைதிராபாத் வரை வந்துவிட்ட அந்த மரண ஓலம் நம்மூரில் கேட்காமல் இருக்க,..சம்பந்தபட்டவர்கல்லுக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்கவேண்டிய காலம் இது…

அதை திருச்சுக்காரன் செய்வாரா???

அன்புக்குரிய ரசீன்,

நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு ஒன்றுமே தெரியாதது போல எழுதுகிறீர்கள்.

//அது தவிர நா எழுதுறத படிக்கிறவன் எல்லா அண்ணனாக்கி பொழுத கஷ்டமில்லாம கழிக்க போராடுற சாதாரண குடிமகந்தானே…//

உங்கள் பிளாகைப் படிப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டப் படுகிறவர்கள் என்றால் நீங்கள் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கட்டுரை போட்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் கட்டுரையில் இருப்பதோ, இஸ்லாத்தின் சிறப்புகள், இந்துக்களுக்கு இஸ்லாத்தை விளக்குதல், இப்படி தொப்புளுக்கு மேலே கஞ்சி இருப்போர் தங்களின் மார்க்க பிரச்சாரத்தை ரசிக்கும் வகையிலான கட்டுரைகளே உங்கள் தளத்தில் அதிகம் உள்ளன.

சிலை வணக்கம் என்றாலே எட்டிக் காயாக இருக்கிறது இஸ்லாமியருக்கு. நாங்கள் இஸ்லாமியரை
சிலை வணக்கம் செய்ய சொல்லவில்லை. ஆனால் பிறர் சிலை வணக்கம் செய்வதைப் பார்க்கும் போது அவ்வளவு ஆவேசமும் எரிச்சலும் வருகிறது.

அதிகம் சொல்ல விரும்பவில்லை ரசீன் அவர்களே, இந்து தெய்வங்களை இகழ்ச்சி செய்து எழுதியது எத்தனை இருக்கிறது. ஜிசியா வரி சரிதான் என சுவனப் பிரியன் என்பவர் திரு, தருமி தளத்திலே 250 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டு விவாதித்து இருக்கிறார். முகமது ஆஷிக் என்பவர் being a better man, – being a muslim போட்டு தளம் வைத்து இருக்கிறார்.

பிற மதங்களுடன் நல்லிணக்கமா என்று கேட்டால் என் மார்க்கம் எனக்கு, உன் மார்க்கம் உனக்கு, – அதுதான் உங்களின் அதிக பட்ச நல்லிணக்கம். அதாவது நான் உன் மீது ஆட்சி செலுத்த முடியாத வரையில் நீ உன் சாமியை தூக்கிக் கிட்டு உன் தெரு வழியா போ என் தெருவுக்கு உன் சிலையை தூக்கிக்க்கிட்டு வராதே , நா என் சாமியை என் தெருவில கும்பிட்டுக்கிறேன்(இத்தனைக்கும் ரோடு என்பது பொது இடம், எல்லோருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் போகலாம்). ஆட்சி இஸ்லாமிய ஆட்சி என்றால் ஷரியா சட்டம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நீங்கள் எந்த வகையிலும் நல்லிணக்கத்துக்கு
வர விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லலாம். இஸ்லாத்தின் சிறப்பைக் கேட்பதானால் கேள், இஸ்லாம் சொல்லும் கடவுள் தத்துவமே உண்மை,… இந்த வகையிலேயே இருக்கிறது உங்கள் எழுத்து.

ஆனால் நீங்கள் என்ன எழுதினாலும் எங்கள் பாதை நல்லிணக்கப் பாதையே. ஒவ்வொரு இஸ்லாமிய சிறுவர் சிறுமியரையும் அணுகி பிற மத வழிபட்டு முறைகளை வெறுக்க வேண்டாம், அவற்றை ஆக்க பூர்வமாக அணுகுங்கள். எல்லா மதங்களும் சிறந்த பண்பாட்டு முறைகளைத் தந்துள்ளன, உங்களை சுற்றி உள்ள காபிர்களை பாருங்கள், அமைதியான குடும்பம், குழந்தை குட்டி , பிற மதங்களை இகழாத அமைதியான ஆன்மீகம் … என்பதை விளக்குவோம். எனக்கு மனிதர்களின் மனசாட்சியின் மேல் நம்பிக்கை இருக்கிறது.

குஜராத்தில் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொருவரையும் என்னுடைய சகோதர சகோதரியாகவே கருதுகிறேன். பாதிக்கப் பட்ட தாக்குதலுக்கு ஆளான, கொல்லப் பட்ட, அவமானப் படுத்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வும் எனக்கே நிகழ்ந்தது போன்றதே. தாக்குதல் நடஹ்தியவருக்கு அதிக பட்ச தண்டனை தர வேண்டும் என்றே சொல்கிறோம். குற்றத்தை நியாயப் படுத்தவில்லை. அதே நேரம் கோத்ரா சமபவம் கலவரத்துக்கு காரணப் பொறி என்பது அனைவருக்கும் தெரியும். அறுபத்து எட்டு பேரை ரயிலில் பூட்டி வைத்து கொளுத்தி விட்டனர். அதற்கும் இஸ்லாமியருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை என சொல்ல வேண்டாம் (ட்வின் டவர் இடிப்பு சம்பவம் அமெரிக்க அரசாங்கமே செய்தது, பாலித் தாக்குதல் ஆஸ்திரேலிய அரசாங்கம் செய்தது, காசபுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பதமும் இல்லை என ஒவ்வொன்றாக கை கழுவுவீர்கள் ) – சம்பவத்தில் திட்டம் தீட்டியவர் ரயில் மார்க்கமாக பாகிஸ்தான் தப்பி செல்ல முயன்ற போது பிடித்தது எல்லாம் பத்திரிகையில் தெளிவாக உள்ளது.

இஸ்லாமியரின் மனதிலே பிற மதங்களின் வழிபாட்டைக் காணும் போது, உருவ வழிபாட்டைப் பார்க்கும் போது, மனதிலே கசப்புணர்ச்சியும், வெறுப்புணர்ச்சியும் வருவதே இல்லையா? இஸ்லாமியர்கள் இந்த உலகிலே எல்லா மதங்களும் இருக்கலாம், அவரவர் விரும்பிய மதத்தை பின்பர்றட்டுமே என ரிலாக்சாக நினைக்கும் மன நிலை உள்ளவராக் இருக்கிறாரா? ஆட்டோ ஓட்டும் படிப்பறிவில்லாத இஸ்லாமியர் கூட பிற மதங்களை இழிவாக நினைக்கிறார் என்பதுதானே உண்மை!

இங்கே தமிழன் என்பவருடன் எவ்வளவு தூரம் விவாதிக்கிறேன். இஸ்லாமியரின் சார்பாகவே, இஸ்லாத்தின் சார்பாகவே நான் அவரிடம் வாதிடுகிறேன் என்று சொல்லும் வண்ணம் அவருக்கு வரிக்கு வரி பதில் தருகிறேன். உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி விழிப்புடன் இருந்தால், மனசாட்சியை மறைக்காமல் இருந்தால், நான் எந்த அளவுக்கு இந்துக்களிடம் இஸ்லாமியருக்கு எதிராக , இஸ்லாத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சி கூடாது என்று சொல்கிறோம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் – கடவுள் நம்பிக்கையுள்ள உங்களைப் போன்றோர் இந்த உண்மைகளை நேரே பார்த்து மழுப்பி திசை திருப்புகிறீர்கள். உண்மையைப் பார்த்தும் மாற்றி சொல்லி கடவுளின் சந்நிதானத்தில் எப்படி சமாதானமாக தொழுவீர்களோ தெரியவில்லை.

//இது ஒருவகையாக உக்தி…ஒரு மனிதனை மனதளவுல பலகீனப்படுத்தனும்ன்னா…தெனமும்,நீ கேட்டவன் கேட்டவன்….சொல்லிட்டீ இருந்தா போதும்..அவன் துவண்டு போக ….அவன் மனதை அவனை அறியாமலே நம்பவைக்கும் சதி…

இது மனோவியல்..இதைதான் திருச்சிக்காரர் செய்கிறார்…//

இது எத்தனை அப்பட்டமான பொய் என்று பாருங்கள்,

இஸ்லாமியரின் சிறப்புகளை விவரித்து அஸ்ஸலாம் அலைக்கும், ரமதான் நோன்பு, இறைவனிடம் கை ஏந்துங்கள் போன்ற கட்டுரைகளை வெளியிட்டு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியருக்கும் எவ்வளவு சிறப்பு செய்து இருக்கிறோம். அவற்றை பல இஸ்லாமிய சகோதரர்களே பாராட்டியும் இருக்கிறார்கள். இஸ்லாம் என்ற கேட்டகரியில் அக்கட்டுரைகளைக் காணலாம்.

இஸ்லாமியர்கள் நல்லிணக்கப் பாதைக்கு வந்து விடுவார்களோ, என்ற அச்சத்திலேயே நம்மைக் கட்டம் கட்டுவதில் முனைந்து பச்சைப் பொய்யை கட்டவிழ்த்து விடுகிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

//ஹிந்து ஒவ்வொருவனுக்கும்,ஒரு சூலம் தரப்பட்டு இருக்கிறது..அதில் ஒவ்வொன்றும் யாருக்கு என சொல்லி சொல்லி கொடுக்கப்படுகிறது…நானோ கையில் வெளக்குமாத்து குச்சி கூட இல்லாம இருக்கேன்..குஜராத் ரத்தவாடை இங்கே தமிழ் நாடு வரை வந்துவிட்டது…/

ஹிந்து ஒவ்வொருவனுக்கும்,ஒரு சூலம் தரப்பட்டு இருக்கிறது..

அன்புக்குரிய நண்பர்களே, இந்தியாவில் கிட்டத் தட்ட நூறு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தனுக்கும் கையில சூலம் கொடுத்து இருக்காங்களாம். (கையில சூலம் இருந்தா அதை வித்து வடை பாவ் சாப்பிடுவான்யா.) இவருக்கு எவ்வளவு கற்பனை பாருங்கள், உங்கள் கையில் யாராவது சூலம் கொடுத்தார்களா? அப்படிக் குடுத்தாலும் நீங்களோ, நானோ வாங்குவோமா?

தன்னுடன் இத்தனை காலம் வாழ்ந்தவன், படித்தவன் எப்படி பட்டவன் என்று கூட இவருக்கு தெரியவில்லை. எல்லாரும் தங்கள் மார்க்கத்தை வாள் மூலமாகத்தான் பரப்புவார்கள், பிற மதத்தவர் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று எண்ணுகிறார், வேறு விதமாக சிந்திக்க கூடவில்லை.

நிராகரிப்போரின் நெஞ்சங்களில் திகிலை உண்டாக்குவேன், அவர்களின் பிடரிகளை வெட்டுங்கள், விரல் நுனிகளை வெட்டுங்கள் என்று எழுதியதைப் படித்து விட்டு இவர் கொஞ்சம் புதியதாக சேர்த்து இருக்கிறார் போல் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் நண்பர்களே, அஹிமசையே நம்முடைய முக்கியக் கொள்கை. நமக்கு ஆபத்து வந்தாலும், நமது இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நாம் காப்போம் அல்லவா?

தமிழன் உங்கள் கருத்துக்கள் அருமை. திருச்சிக்காரரும் மக்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்வதற்கு தம்மாலான முயற்சியைச் செய்கிறார். இருவரையுமே பாராட்டுகிறேன். ஒவ்வொருவரின் மனநிலைக்கும் ஏற்றபடி அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். மக்கள் மனிதர்களாக நடந்து கொண்டால் உலகமே சந்தோஷமாக இருக்கும். மிருகங்களாகி விட்டால் நிம்மதி ஏது. மனிதனை மனிதனாக உருவாக்கும் எல்லா மதங்களும் உலகில் நிலைத்திருக்க வேண்டும். அழிக்க நினைப்பவை அழிய வேண்டும்.

இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஜாதிகள் இருக்கின்றன. ஏராளமான மொழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் அனைவரும் இந்தியன் என்பதில் ஒன்று பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரே மொழி பேசும் ஒரே மதத்தைப் பின்பற்றும் அரபு மக்கள் எத்தனை நாடுகளாக பிரிந்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் என்று பாருங்கள். நம்மையும் பிரித்தாள சுழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திருச்சிக்காரன் அவர்களே,
தாங்கள் ரசீனுக்கு கொடுத்திருக்கும் பதில் மிக அருமை. உண்மையில் எல்லா இந்துக்களும் தாங்கள் கூறுவதைத்தான் முஸ்லீம்களிடமும் , கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களோ தங்கள் கடவுளைத் தவிர மற்றவை எல்லாம் சாத்தான் , என்றே கருதுகின்றனர். இந்து தெய்வங்களை வணங்கித்தான் ஏராளமான மகான்கள் அரும்பெரும் இலக்கியங்களையும், வைத்திய முறைகளையும், இசையையும், கலைகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் மேற்படி இரு மதத்தாரும் இவற்றை அழிப்பதையே குறிக்கோளாக செயல்படுகின்றனர். நாம் சீக்கிய, புத்தமதத்தை சேர்ந்தவர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் அனைத்து வேற்று மதத்தை சேர்ந்தவர்களிடம் நல்ல உறவு முறை வைத்திருக்கிறோம். ஆனால் இந்துக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவது இந்த இரு ஆபிரகாமிய மதங்களால்தான். அவர்களைத் திருத்த முடியாதபடி அவர்களின் மத நூல்கள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றன. அது தான் பிரச்னையே.

நானும் ஒரு முஸ்லீம் அன்பரிடம், யார் எந்த கடவுளை வணங்கினால் என்ன. நல்லவராக இருந்தால் போதாதா. ஏன் உங்கள் வழிதான் சரி என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்டேன். அவரிடமிருந்து பதிலே இல்லை.

உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.

நன்றி திரு. ராஜா அவர்களே,

வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.

அதே நேரம் மத நல்லிணக்கத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமா அத்தனையும் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈத் திருநாளில் நபர்களுடன் கலந்து கொள்ளங்கள். அதே போல கிருத்துமஸ் விழாவிலும் கலந்து கொள்ளுங்கள், தன் மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் எனவும் பிற மதங்களின் மீது வெளிப்படையாகவும், கமுக்கமாகவும் வெறுப்புணர்ச்சி செலுத்துவோரின் மனசாட்சி வெட்கப் படும் படி நல்லிணக்கத்தில் முன்னேறுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

109:1. (நபியே) நீர் கூறுவீராக: நிராகரிபோரே
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

குர்-ஆன், அத்தியாயம் : 109

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: