Thiruchchikkaaran's Blog

தியானம் செய்ய நேரம் எங்க இருக்கு?

Posted on: July 20, 2011


இன்றைக்கு நகரங்களில் உள்ள பரபரப்பும் போக்குவரத்து நிலையு ம் காலம் பொன் போன்றது என்பதை அனைவரும் உணரும் நிலையை உருவாக்கி உள்ளன.

காலையில் நாம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, நாம தயாராகி, அலுவலகம் சென்று…. மாலையில் வீடு திரும்ப கிட்டத் தட்ட இரவாகி விடுகிறது. இதிலே தியானத்தை எப்போது செய்வது?

இவ்வளவு பரபரப்பிலும் காலையில் எழுந்த உடனே , பத்து நிமிடம் அல்லது முப்பது நிமிடம் தியானம் செய்யும் நண்பர்களை நான் அறிந்திருக்கிறேன்.

ஒருவர் தியானம் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. விருப்பப் படுபவர்கள்செய்தால்  போதும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயத்தில் ஆர்வம் உண்டு. அதற்காக அவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்குகின்றனர். சிலருக்கு உடல் பயிற்சியில் ஆர்வம் உண்டு. சிலருக்கு கார்டனிங்கில் ஆர்வம் உண்டு. சிலருக்கு வெளி நட்டு மொழிகளைக் கற்பதில் ஆர்வம் இருக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் ஆர்வப் படும் துறைக்கு நேரத்தை ஒதுக்குகின்றனர். அது போல தியானத்தில் முனைப்புடையவர்கள் அதற்க்கு நேரம் ஒதுக்குகின்றனர்.

வார விடுமுறை நாட்களில் நேரம் கிடைக்கும் என்று சில நண்பர்கள் சொல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலையில்  நீண்ட நேரம் தூங்கி ரிலாக்சாக   எழுந்திருக்கிறோம். டி. வி. யில் கிரிகெட் மேட்ச் பார்க்கிறோம், திரைப் படம் பார்க்கிறோம்….இதற்க்கெல்லாம்  ஒதுக்கும் நேரத்தில் ஒரு அரை மணி நேரம் தியானத்துக்காக ஒதுக்குவது சாத்தியமே, அதாவது தியானத்தில் முனைப்பு இருப்பவர்களுக்கு !

அவ்வளவு கஷ்டப் பட்டு தியானம் செய்ய வேண்டுமா? டி.வி யில் மேட்ச் பார்த்தால் சினிமா பார்த்தால் ரிலாக்ஸ்டாக இருக்கும் என்கின்றனர் சிலர். ஆனால் டி,வியில் மேட்ச் பார்த்தால் டென்சன் தான் உருவாகிறது. “சே, ஈசியான பாலை அடிச்சு விளையாடாம டொக்கு வைக்கிறான், ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்ச், அநியாயமா தோத்துட்டான்” என்று புலம்புவதைக் காண்கிறோம். சினிமா படம் பார்த்தாலும் அதிலே நடிக்கிற நடிகைகளின் அங்கங்களைப் பார்த்து மூட் அவுட் ஆகி விடுகின்றனர் சிலர். இதை வீட்டிலே துணைவியார் பார்த்தாலோ, “ஏங்க இதையா உட்கார்ந்து பார்த்துக் கிட்டு இருக்கீங்க, பையனுக்கு அட்மிசன் விசயமா நண்பரைப் போய்ப் பார்க்கணும்னீங்க, அதி விட்டு இதை பார்த்துக்கிட்டு இருக்கீங்க” என்று நெருப்புக் கணைகளை அள்ளி வீசுகிறார். தியானத்தில் சிறிது நேரம் அமர்ந்தால், மனதுக்கும் அமைதி, வீட்டிலும் அமைதி.

(தொடரும்)

Advertisements

1 Response to "தியானம் செய்ய நேரம் எங்க இருக்கு?"

time management நன்றாக சொன்னீர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: