Thiruchchikkaaran's Blog

தியானம் – part 1

Posted on: July 19, 2011


தியானம் என்பது மனிதர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனதை ஒரு முகப் படுத்துவதாகும்.
 
ஐந்து புலன்களில் வழியாக மனம் வெளியே அலைகிறது.
 
சினிமா, கிரிக்கெட் கண் பார்த்தால் மனம் அதில் லயிக்கிறது. சுவையான திண் பண்டங்களை  நாவு ருசிக்கும் போது மனம் அதில் லயிக்கிறது.
 
 
கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய ஐந்து புலன் களின் வழியாக மனம் இன்பங்களை ஆன்பவிக்கிறது. அந்த ஐந்து புலங்களையும் அடக்கி மனதை ஒரு முகப் படுத்துவது தியானத்தின் முதல் படி. 
 
 
புலன்களை அடக்கினாலும், மனம் பல விடயங்களை நினைக்கிறது.  பையனுக்குகல்லூரியில் அனுமதி கிடைக்குமா, பிசினசில் குடுத்த பணம் திரும்பி வருமா, சண்டை போட்ட மாமா சமாதானம் அவாரா, தனக்குப் பிடித்த நடிகர் உடல் நிலை குணமாகுமா … இப்படி எண்ணற்ற கவலைகளில் மனம் புரண்டு தவிக்கும். அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று அவற்றில் இருந்து மனதை விடுவித்து கொண்டு வர வேண்டும்….இந்த நிலயிலே மனதிலே எந்த இன்பமோ, துன்பமோ, பற்றோ, பாசமோ இல்லை. அதே நிலையில் மனதை வைக்கிறோம், அதுவே தியானம்.
 
இப்படி மனதை எல்லாவற்றிலும் இருந்து திருப்பி ஏதாவது ஒரே பொருளை அதை நினைக்கும் படி செய்வதால் தியானத்தை அதிக நேரம் நீட்டிக்க முடியும் என்று ஒரு கருத்து உள்ளது. எதில் மனதை நிலை நிறுத்தலாம். வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தை  நினைத்துக் கொள்ளலாம். எதாவது பூவை நினைத்துக் கொள்ளளால். தாயை, தந்தையை நினைத்துக் கொள்ளலாம்.
 
(To be contd)
 
 
Advertisements

13 Responses to "தியானம் – part 1"

நண்பரே,

எந்த தியானத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?

மனக்குவிப்பு பயிற்ச்சியும் தியானமும் ஒன்றா?

நண்பரே, உங்கள் புரியும்படியான எளிமையான எழுத்து நடை, கருத்துகளை தெளிவுப்படுத்தும். தியானத்தை பற்றி புரிய வைக்கும்.

இந்து ஆன்மீகத்தில் ஒரு குறை என்னவென்றால், ஆன்மீக கருத்துகள் சராசரி சாமன்யன் மனிதன் புரிந்து கொள்ள முடியாத நடையில் இருக்கும் அல்லது முன்னோர்கள் சொன்ன கருத்தை தற்கால மொழியில் எடுத்து உரைப்பதில்லை.

நீங்கள் சார்வாகன் பதிவில் போட்ட பட்டினத்தார் பாடல்கள் படிப்பதற்கு நன்றாக தான் இருந்தது, நல்ல கருத்துகள் இருப்பது புரிந்தது, ஆனால் மொழி பல இடங்களில் புரியவில்லை.

அதனால், பட்டினத்தார் உரைநூல் வாங்கி புரிய வேண்டிய நிலை.

வணக்கம் சகோ,
நல்ல பதிவு.
நமக்கு பிடிக்கும் காரியத்தை செய்யும் போது இருக்கும் மன ஓர்மை கட்டயத்திற்காக(அவசியமானது) செய்யும் போது இருப்பது இல்லை.மனதை ஓர்மைப் படுத்த உதவும் தியானம் பற்ற்றிய உங்கள் தொடரை வரவேற்கிறேன். பொதுவாக இறைமறுப்பாள‌ர்கல் என்று அழைத்துக் கொள்பவர்கள் இது போன்ற விஷயங்களையும் எதிர்ப்பது தேவையில்லை என்பது என் கருத்து.நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எடுக்கலாம்.இது ஒரு நம்து நாட்டு விஞ்ஞானம் என்பதால் இறைமறுப்பாள‌ர் உடபட் எந்த மதத்தவரும் ஈடுபடலாம் என்பது என் கருத்து. இது ஒரு மிக தேவையான் விஷயம்.தொடருங்கள் .வாழ்த்துகள்!!!!!!!!!!.

அன்புக்குரிய சகோதரர்கள் நரேன், சார்வாகன் , அசோக் அவர்களே,

உங்களின் மேலாம் கருத்துப் பதிவிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

சார்வாகன் , மிக முக்கிய கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். இறை மறுப்பாளர்கள் தியானத்தை எதிர்க்கவோ, கண்டிக்கவோ வேண்டிய அவசியம் என்ன? தியானம் என்பது பகுத்தறிவு மூலம் ஆராயக் கூடிய செயலே. டம்ப் பெல்ஸ் முதலான எடைகளை தூக்கி உடற் பயிற்சி செய்வது போல தியானம் மனதுக்கு பயிற்சி தருவது எனக் கருதலாம். கௌதம புத்தரே இறை மறுப்பாளர் தானே. அவருடைய பயிற்சி முறையில் தியானம் முக்கியமாக இருக்கிறதே. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாக விவாதிப்போம்.

நரேன், உங்களின் ஆர்வத்துக்கு நன்றி. பட்டினத்தார் பாடலுக்கு உரையை நம் தளத்திலேயே விரைவில் பதிவிடுவோம்.

அசோக்,

//எந்த தியானத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?//

இந்தக் கட்டுரையில் நான் எழுதிய தியானத்தைப் பற்றி.

//எந்த தியானத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?//

இந்தக் கட்டுரையில் நான் எழுதிய தியானத்தைப் பற்றி. lol 🙂

இந்த கிறிஸ்துவனுகளுக்கு இப்ப உள்ள ..எரிச்சல் என்ன வென்றால் . யோகா , மற்றும் இந்த தியான முறைகளை மேற்க்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் பழகி , தருமத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த மாதிரியான வார்த்தைகள் அவர்களுக்கு பிடிக்காது. நல்ல பதிவு .. தொடருங்கள் …

நண்பரே,

நீங்கள் சொல்லிய கருத்து சரியாக இருந்தாலும் சொல்லிய முறையை நாகரீகமாகவும், தெளிவாகவும் சொன்னால் நீங்கள் சொல்லிய கருத்து பலம் பெரும். எல்லா கிறிஸ்துவர்களுக்கும் எரிச்சல்என சொல்ல இயலாது. பவுலிய கோட்பாட்டுணர்வில் மனம் சிக்கியவர்களுக்கு அப்படி இருக்கலாம்.

பவுலியக் கோட்பாட்டுக்காரர்கள் ஒருவன் இரட்சிக்கப் படுவது இயேசுவால் மட்டும் கூடும் என்கிற கோட்பாட்டை வைத்திருப்பவர்கள்.

உலகின் உள்ள ஒவ்வொருவனும் பாவியாக இருக்கிறானென்று அடித்து சொல்லி, அவனால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்று அவனை மேலும் மேலும் அதிக பாவத்தில் இறங்க வைப்பதே அவர்களே கோட்பாடு வெற்றி பெற வழி – உனக்கு இரட்சிப்புக்கு ஒரே வழி இயேசுவிடம் பாவ மன்னிப்பு பெறுவதுதான் என்ற நிலைக்கு அவனைத் தள்ளுவது.

ஆனால் தியானம் போன்ற அமைதியான ஆன்மீக வழிகள், ஒரு மனிதனின் கட்டுப்பாட்டையும், புலனடக்கத்தையும் அதிகரித்து அவன் மனதிலே அமைதியை உருவாக்கி அவனை ஒரு மேம்பட்ட மனிதனாக்குகினறன.

இப்படி மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியால் பகுத்தறிவு முறையில் தன்னுடைய புலனடக்கத்தையும், கட்டுப்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து, தான் சிறந்த மனிதனாகி விட்டால், அப்போது இயேசுவால் தான் உன் பாவத்தை சுத்திகரிக்க இயலும் என்று அவனை நிலைகுலைய வைக்க அவர்களால் இயலாது. எனவேதான் இந்த தியானம், யோகம் போனறவைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு வலிமையுடன் எதிர்க்கிறார்கள்.

ஆழ்நிலை தியானத்தை கற்றிருந்ததால். வெறும் மனக்குவிப்பு பயிற்சியே தியானம் அல்ல என்று அறிந்திருந்ததால்தான் அந்த கேள்வியை கேட்டேன். ஒரு கிறிஸ்துவன் அந்த கேள்வியை கேற்க கூடாது என்று உங்கள் ஏளனமான பதில்கள் சொல்கிறது.

நன்றி,

அசோக்

கட்டுரையில் நாம் எந்த மதம் பற்றியும் குறிப்பிடவில்லை. நாம் கட்டுரையில் எழுதி உள்ளதில் உங்களுக்கு ஏதாவது ஒப்பின்மையோ, ஆட்சேபமோ, சந்தேகமோ இருந்தால் அதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தால் நலம்.

இது எந்த வகை தியானம் என்று கேட்டால் என்ன அர்த்தம். நமக்கு தெரிந்த வகையில் தியானம் என்றால் என்ன என்று சொல்லி இருக்கிறோம், எனவே அந்த வகையான தியானம் என்று உங்களின் கேள்விக்கும் பதிலாக தந்து இருக்கிறோம்.

இதில் என்ன ஏளனம் என்று விளங்கவில்லை.

//ஆழ்நிலை தியானத்தை கற்றிருந்ததால். வெறும் மனக்குவிப்பு பயிற்சியே தியானம் அல்ல என்று அறிந்திருந்ததால்தான்//

//ஆழ்நிலை தியானத்தை கற்றிருந்ததால் அப்படி நீங்கள் சொல்லிக் கொள்வதில்
//வெறும் மனக்குவிப்பு பயிற்சியே தியானம் அல்ல என்று அறிந்திருந்ததால்தான்//இதில் என்ன அர்த்தம், தியானத்தில் இதுதான் தியானம் இது தியானம் இல்லை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் , யார் தீர்மானிக்க இயலும்? மசாச்சூட்டஸ் பல்கலைக் கழகத்தில் “ஆழ்நிலை தியானம்” தான் தியானம், மற்றது எல்லாம் தியானம் இல்லை என சொல்லி இருக்கிறார்கா?

நண்பரே,

தியானத்தில் பல வகைகள் உண்டென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான் கற்ற தியானங்களில் மனதை குவிக்க முயலாதீர்கள் என்றே சொல்லிகொடுத்தனர். அதனாலேயே கேட்டேன்.

நண்பர் தமிழனின் பதிலும். உங்கள் பதிலும் (இந்தக் கட்டுரையில் நான் எழுதிய தியானத்தைப் பற்றி.), ஏளனமாகவே தோன்றுகிறது. ஆழ்நிலை தியானம் மட்டுமே தியானம் என்று நான் கூறவில்லை. ஆனால், எந்த வகை தியானம் என்று கேட்பது நியாயமான கேள்விதானே?

அப்படி நான் கேட்டது தவறாக இருந்தால், இனி நான் கேட்கபோவதில்லை.

http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_21.html
பைபிளில் ஈஷா (அலை) “பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை” என்று உரைக்கிறார்…
Luke5:31 Jesus answered them, “Those who are well don’t need a physician, but those who are sick do. 5:32 I have not come to call the righteous, but sinners to repentance
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
And Jesus answering said unto them, They that are whole need not a physician; but they that are sick.

32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
I came not to call the righteous, but sinners to repentance

இங்கு எல்லோரையும் பாவிகள் என இயேசு கருதவில்லை என படுகிறது நண்பர் அசோக் அவர்கள் விளக்க முடியுமா?

மிகச் சரியான கருத்து , உலகில் உள்ள எல்லோரும் பாவிகள் என்று இயேசு பிரான் சொன்னதாக இல்லை, எனக்கு தெரிந்த வரையில் இல்லை. அதே போல உலகோர் பாவம் பண்ணி விட்டு என்னிடம் மன்னிப்பு பெற்றால் பாவம் தீர்ந்து பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம் என்றும் சொல்ல ல்லை.

மாறாக் உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் கண்ணை பிடுங்கி விடு, கண்ணுடன் நரகத்தில் இருப்பதைக் காட்டிலும் கண்ணில்லாமல் சொர்க்கத்தில் இருப்பது நல்லது என்றார். இது இயேசு பிரானின் மிக முக்கிய கோட்பாடு. அதாவது பாவம் பண்ணினால் நிச்சயம் நரகம் உண்டு என்கிறார், பாவம் செய்யக் கூடாது என்பதே இயேசு கிறிஸ்துவின் கோட்பாடு.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயரால் மதங்களை நிறுவியவர்கள் , அவருடைய கோட்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு தங்களுடைய சொந்தக் கருத்துக்களை முன்னுக்கு வைத்தனர்.

நீ ஏற்கெனவே பாவிதான் என்று அடித்து சொல்லி, உனக்கு நித்தியா நரகம் என்று சொல்லி ஒருவரை நிலை குலைய வைப்பது, உன்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்று சொல்லி பாவம் செய்வதற்கு எதிரான ஒருவரின் மனவுறுதியை அழிப்பது, பாவங்களில் எல்லாம் மிகப் பெரிய பாவம், நான் சொல்லும் தேவனை அன்றி வேறு தேவனை தொழுவது, நான் வணங்கும் தேவனைத் தவிர பிறர் தொழும் தேவர்கள் சாத்தான்கள் என்று எல்லாம் சொல்லி ஒருவரின் மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியர் ஆக்கும் செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் முக்கிய கருத்துக்களான விவாகரத்து செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்… என்பதை எல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்து நீங்கள் கேட்டது உண்டா?

இயேசு கிறிஸ்துவின் பெரும்பாலான கருத்துக்கள் இந்திய சமுதாயம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்றி வரும் கோட்பாடுகளே. இவாறாக் இயேசு நம்முடன் இருக்கிறார், நாம் அவருடன் இருக்கிறோம், இயேசுவே சொன்னது போல பலர் பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றிக் கொண்டு பிறரை உங்கள் மார்க்காத்தராக்குகிரீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தவர் ஆனா பின் அவர்களை உங்களை விட இரட்டிப்பு பாவிகள் ஆக்குகிறீர்கள் என்று சொன்னதை நினைவில் கொண்டு, பாவப் பிரச்சாரத்தை முறியடித்தி இயேசுவின் உண்மையான கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்வது நமது கடமையே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: