Thiruchchikkaaran's Blog

அஸ்ஸலாமு அலைகும்!

Posted on: July 5, 2011


“அஸ்ஸலாமு அலைகும்”  அரபு மொழி வாக்கியம். “அஸ்ஸலாமு அலைகும்”  என்றால் “உங்களிடம் அமைதி நிலவட்டும் (peace be upon you) ” என்று அர்த்தம் ஆகும்.

ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளுள் சிறப்பானது மன அமைதி ஆகும். ஒரு மனிதனிடம் எவ்வளவு பணம், சொத்து, பதவி, அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் அவற்றை விட அவனுக்கு நன்மை தருவது நோயற்ற உடலும், அமைதியான மனமுமே.

தமிழர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “வணக்கம்”  என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோமோ அதே போல,

 “அஸ்ஸலாமு அலைகும் ” என்பது  அரேபியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒருவர்  இன்னொருவரை வாழ்த்தும் வாசகமாக உள்ளது. நான் ஒரு முறை லிப்டில் நுழைந்த போது அதே பில்டிங்கில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி செய்து வந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் அந்த லிப்டில் இருந்தார். அவரை நான் அவ்வப் போது லிப்டில் சந்தித்து இருக்கிறேன். அன்று அவரைக் கண்டவுடன் நான் அவரிடம் அஸ்ஸலாமு அலைகும் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வ அலைகும் ஸலாம் என்றார்.

“‘நீங்கள் சிறப்பான செயலை செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் காண நேரிட்டால் முந்திக் கொண்டு ஸலாம்சொல்ல வேண்டும் என முகமது (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொல்லி இருக்கிறார்” என்றார்.

இது பண்பாட்டை உருவாக்கும் செயல் ஆகும். இது மனிதாபிமானத்தையும் கட்டுகிறது. ஏதோ கவலையுடன், ஒரு செயல் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தவிப்புடன் செல்வோரிடம் அஸ்ஸலாமு அலைக்கும்  என்று வாழ்த்தினால் அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நாம் ஏழையா இருக்கோமே, நம்மளை யாரும் மதிப்பது இல்லையே என்று நினைப்பவரிடம் அஸ்ஸலாம் அலைகும் என்றால், அட நம்மளையும் மதித்து முகமன் சொல்லுகிறாரே  அவர் மனதில் புத்துணர்ச்சி உருவாகிறது.

தெருவில் செல்லும் போது ஒருவரை ஒருவர் காண நேர்ந்தால் முந்திக் கொண்டு சலாம் சொல்லுவது சிநேகத்தை வளர்ப்பதாகவும், ஈகோவை குறைப்பதாகவும் உள்ளது. அவன் முதல்ல சலாம் சொல்லட்டும் என்று இருவரும் இருந்தால், கடைசியில் இருவருமே முகமன் சொல்லாமல் சென்று விடுவார்கள். எனக்கு அவன் சலாம் சொல்லலை, பார்த்தும் பாக்காமா போயிட்டான் இல்லை, சரி கவனிச்சுக்கறேன் என்று கர்ரம் வைக்க அது காரணமாகி விடும்.

வெறுப்புணர்ச்சியும், வெறி உணர்ச்சியும், கோவமும் , குரோதமும், ஆசையும் , தாபமும் கொழுந்து விட்டெரியும் மனதில் அமைதி உருவாகாது.

வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி , கோவம், குரோதம்… இவை எல்லாம் நீக்கிய மனதிலேயே அமைதி உருவாகும்.

நாம் எந்த அளவுக்கு ஆசைகளை விடுகிறோமோ, அந்த அளவுக்கு நம் மனதில் அமைதி நிலவும்.

நாம் எந்த அளவுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை, தாபம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அமைதி நீங்கி மனம் பொங்கித் தவிக்கிறது.

 

அன்பும், சினேக மனப்பான்மையும்., கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும்  மனதிலே அமைதியை உருவாக்குகிறது.

நம் அனைவரின் மனதிலும் அமைதி நிலவட்டும்.

அஸ்ஸலாமு அலைகும்!

Advertisements

26 Responses to "அஸ்ஸலாமு அலைகும்!"

ஐயா திருச்சிகாரரே .. இதை படியுங்கள்.

Islamic-Dictionary.com
Meaning:
Peace be unto you. It is a shortened form of the grand greeting: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh (Peace be unto you and so may the mercy of Allah and His blessings). The greeting is recommended to be only used between Muslims.

அதனால் எனக்கு அல்லாவின் கருணை ஒன்றும் வேண்டாம். காஃபிரிடத்தில் அல்லாவின் கருணை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் மத நல்லிணக்கம் என்னும் பெயரில் தவறான தகவல் தர வேண்டாம். நமது பாரதத்தில் இல்லாத சொற்களா? ( நமஸ்தே, நமஸ்க்காரம், வணக்கம்).
வணக்கம் என்பது வணங்குகிறேன். (கடவுளை வணங்குவது மாதிரி) உன்னுள் இருக்கும் கடவுளை வணங்குகிறேன். இந்த ஒரு வார்த்தையில் நமது கடவுள் தத்துவத்தை அறியமுடிகிறது. அதை விடுத்து நாம் அரேபிய மொழியில் அல்லாவிடம் இலலாத கருணையைப்பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

வணக்கம் தமிழன் அவர்களே,

Peace be unto you. It is a shortened form of the grand greeting: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh (Peace be unto you and so may the mercy of Allah and His blessings). The greeting is recommended to be only used between Muslims.

அமைதி உன் மனதில் உருவாகட்டும், அதைப் போல அல்லாஹ்வின் கருணையும் உன் மேல் இருக்கட்டும் என்கிற முழு சொற்றொடரில், அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு உள்ளது. அமைதி உருவானால் நல்லதுதானே!

வணக்கம் என்கிற சிறப்பான தமிழ் சொல்லை பலமுறை சொல்கிறோம், நமஸ்தே நமஸ்காரம் இதையும் சிலமுறை சொல்கிறோம். அது போல அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை ஓரிரு முறை சொல்வது நல்லிணக்கப் பாங்கே. நான் தமிழ் மொழி சிறப்பு சொல்லான வணக்கம் என்பதை விடுத்து அதற்கு பதிலாக அஸ்ஸலாமு அலைக்கும் என சொல்ல வேண்டும் என சொல்லவில்லையே.

ஐயா ,

மேலே உள்ளது நான் தான் கூறினேன். வேறு பெயரில் வந்து கூறியதாக தவறாக என்னவேண்டாம்

மதிப்பிற்குரிய நண்பரே சலாத்தின் பொருள் புரிந்துகொண்ட
தாங்கள் மீது ( அஸ்ஸலாமு அழைக்கும் ) இறைவனின்
சாந்தியும் ,சமாதானமும் உண்டாவதாக !
>> நன்றி :பிறைத்தமிழன்

அன்புக்குரிய சகோதரர் பிறைத் தமிழன் அவர்களே,

வணக்கம். உங்கள் மனதில் சாந்தி அமைவதாக! உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பிற கட்டுரைகளையும் படித்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாம் இருக்கும் இடத்தில் சாந்தியாவது , சமாதானமாவது. எல்லாம் வெளிப்பேச்சு. எந்த முஸ்லீம் நாட்டிலாவது பிற மதத்தினர் அமைதியாக வாழ முடிகிறதா? http://www.jihadwatch.org என்ற தளத்தில் தினசரி உலவி பாருங்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, லிபியா என முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் சிறுபான்மையினர் எந்தநிலையில் உள்ளார்கள் என்று பாருங்கள். இவர்கள் நயவஞ்சகர்கள். உள்ளுக்குள் இந்துக்களை அழித்து இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வெளியே சாந்தி,சமாதானம், என்று பேசுகிறவர்கள். இவர்கள் பேசுவதை உண்மை என்று நம்பினால் நீங்கள் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
திருச்சிக்காரரே நீங்கள் இஸ்லாமிய வரலாறை தெரிந்துதான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளீர்களா? அவர்களின் அரிவாளுக்கு பயந்தா?

திருச்சிக் காரரே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள்.

அன்புக்குரிய சகோ. சுவனப்பிரியன்,

வ அலைக்கும்.ஸலாமு ,

பாராட்டுக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி .

அரபு மொழியில் வணக்கம் சொல்ல தொடங்கினால் உங்கள் பெயரை கூட அரபுக்கு மாற்ற வேண்டி வரும். தாய் தமிழ் மொழியில் வணக்கம் சொல்ல விருப்பமில்லாவிட்டால் பக்கத்து மாநில மொழியிலோ அல்லது உலக பொது மொழி ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லி கொள்ளலாம். அரபு வேண்டாம்.

அன்புக்குரிய சகோதரர்கள் ராஜா, உண்மை விரும்பி மற்றும் அனைவருக்கும்,

வணக்கம்.

ஸலாம் அலைக்கும் என்ற கட்டுரையை வெளியிட்டு இருக்கிறோம் என்றால், அது பிறரின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் விதமாகவே.

இக் கட்டுரையை வெளியிட்டதன் நோக்கம் எல்லோரும் வணக்கம் சொல்வதற்கு பதிலாக் ஸலாம் சொல்ல வேண்டும் என்பது அல்ல.

எப்போதோ ஒரு முறை ஒரு இஸ்லாமியரைப் பார்த்து ஸலாம் அலைக்கும் என்கிறோம். இது சிநேகத்தை நல்லிணக்கத்தைக் குறிக்கும் வெளிப்பாடே.

ஒரு இந்து எந்தளவுக்கு வேண்டுமானாலும் இஸ்லாமிய மதத்தோடு இணக்கத்தைக் கடைப் பிடிக்கலாம். ஒரு இந்து மசூதிக்கு சென்று தொழலாம். ரமலான் மாதம் நோன்பு இருக்கலாம்.

அதே போல ஒரு இந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலம் கிறிஸ்துவ மார்க்கத்தை பின்பற்றலாம். ஒரு நல்ல இந்து ஒரு நல்ல கிறிஸ்துவனுமாவான். ஒரு நல்ல கிறிஸ்துவன் ஒரு நல்ல இந்துவுமாவான் என்று சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற் பொழிவில் சொல்லி இருக்கிறார்.

பிற மதங்களை ஆக்க பூர்வமாக அணுகி அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை முன்னிலைப் படுத்தி, அம்மதங்களின் சார்பாக வைக்கப் பட்ட ஆவேசக் கோட்பாடுகளின் தன்மையை மட்டுப் படுத்துவதே இந்திய நாட்டின் பண்பாடு ஆகும்.

எல்லா மதங்களையும் அமைதியாக பின்பற்ற முடியும், எல்லா மதங்களும் இணக்கத்துடன் செயல் பட முடியும் , உலகில் எல்லோரும் தங்கள் மதத்தை பின்பற்றும் அதே நேரத்தில், பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி இல்லாமல் அவற்றின் ஆன்மீக த்தை புரிதல் செய்து பாராட்ட இயலும் என்பதை இந்தியா உலகுக்கு பண்டு தொட்டே சொல்லி வருகிறது.

இஸ்லாமியர், கிறிஸ்துவர், பவுத்தர் இந்துக்கள்… உள்ளிட்ட அனைவரையும் நல்லிணக்கப் பாதையில் நடை பயிலச் செய்வதுது நம் தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இது வெளிப்படையானது, எல்லோரும் அறிந்ததே.

திருச்சிக்காரரே, நம் மதங்கள்(தருமத்தை அடிப்படையான) எதுவும் மற்ற மதத்தவற்களை வெட்டு , குத்து கொல்லு என்று சொல்வது கிடையாது. கீழே பாருங்கள். அல்லா சொல்கிரார். இந்த மாதிரியான கடவுள் கொள்கை உடையவர்களீடம் அன்பை எதிர்பார்பது மடத்தனம். இந்த மதம் தான் தர் உல் இஸ்லாம் , தர் உல் ஹராப் என்று உலகத்தை இரண்டாக பார்க்கிறது. இவர்களிடம் அமைதியை எதிர் பார்க்க முடியாது. இவர்களை அவர்களுக்கு ஏற்ற ”தர் உல் இஸ்லாம்” இருக்கும் பகுதிக்கு அனுப்பிவைப்பது தான் எல்லாருக்கும் நலம் . எல்லாருக்கும் அமைதி.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

இந்தியாவில் நமஸ்கார் அல்லது வணக்கம் போன்ற உபசரிக்கும் சொல்லை அனைத்து இடங்களிலும்,நேரத்திலும் பயன்படுத்துவதில்லை.அதுவும் அறிமுகமானவர்களிடமே கூறுகிறார்கள்.

அஸ்ஸலாமு அலைகும் என்ற அரேபிய வார்த்தையை அறிமுகம் இல்லாதவர்களிடமும் கூட சொல்கிறார்கள்.நாம் அறிமுகமில்லாத ஒருவரிடம் வழி விசாரிக்க வேண்டுமானாலும் கூட வணக்கம் சொல்லி கேட்பதில்லை.அரேபியர்கள் முதலில் அஸ்ஸலாமு அலைகும் சொல்லியே பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.மேலும் இஸ்லாமிய பற்றுள்ளவர்கள் வயது,தகுதிகள் போன்ற எதுவும் பார்க்காமல் உபசரிக்கிறார்கள்.

நம்மிடம் உள்ள ஈகோ இவர்களிடம் இல்லை.வாய்ச்சண்டை போட்டுக்கொண்டாலும் கூட பின் சமாதானமாகி அரவணைத்துக்கொள்கிறார்கள்.இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்பும் கூட வெளியுறவுக்கொள்கைகள் மக்களை இணைக்கும் சக்தியாக மாறவில்லை.ஆனால் குவைத்-ஈராக் போருக்குப் பின்பு கூட பழையவற்றை மறந்து வெளிநாட்டுக்கொள்கையை உருவாக்கியுள்ளார்கள்.

ஜகாத் எனும் ஈகை குணங்கள் போன்றவை பாராட்டப்படவேண்டியவை.இஸ்லாத்தின் நற்குணங்களை தலிபானிசமும், அதனைச் சார்ந்த இந்திய,பாகிஸ்தான் இஸ்லாமிய பின்பற்றல் மற்றும் அரேபியாவின் மனித உரிமை மீறல்களும் ஹைஜாக் செய்து விடுகின்றன.

அன்புக்குரிய திரு ராஜ்நாத் அவர்களே,

வணக்கம். வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

ஒவ்வொரு கலாச்சாரமும் ஒவ்வொரு மாதிரி.

இந்தியாவில் பெரியவர்களை, முதியவர்களை காலில் விழுந்து வணங்கும் பழக்கம் உள்ளது. அரேபியர் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம். இக்கால அரேபியர்கள் பலர் செல்வந்தர்களாக உள்ளதோடு, அமேரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட இடங்களில் கல்வி பயின்று நாகரிகம் உள்ளவர்களாகவும் கருதலாம். ஆனால் அரேபியர்கள் அவ்வளவு எளிதில் தங்களுக்குள் ஒத்துப் போவார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியர்கள் இருவர் இன்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் , ஒரு வாரத்திற்குள் சகஜமாகி விடுவதே பெரும்பாலாக உள்ளது.

குவைத் , இராக் தனிப்பட்ட அரேபியர்களுக்கு இடையேயான பிரச்சினை இல்லை. குவைத்துக்கும் இராக்குக்கும் இப்போது என்ன பெரிதாக நட்பு இருக்கிறது என்று தெரியவில்லை. குவைத் இராக் சண்டை வராமல் இருந்தால், சதாமே இன்றைக்கும் ஆட்சியில் இருந்து இருப்பார். ஷியா மற்றும் குர்த் பிரிவினர் நசுக்கப் பட்டு இருப்பார்கள். இன்றைக்கு சதாம் தூக்கிலிடப் பட்டு ஷியா பிரிவினர் ஆட்சிக்கு வந்ததால் அந்த வகையில் குவைத் அவர்களுக்கு நல்லது செய்ததாக அவர்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றாமல் இருந்திருக்காது.

இஸ்ரேல் விடயத்தில் ஒவ்வொரு அரபு நாடும் , வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு நிலைப் பாட்டை எடுத்துள்ளன. இந்த விடயத்தில் அவர்களிடம் சரியான ஒற்றுமை இருந்தால், இன்றைக்கு பாலஸ்தீனியர்கள் நிலம் பிடுங்கப் பட்டு, இனப் படுகொலை செய்யப் பட்டு நாடோடியாக அலைய வேண்டி இருந்திருக்குமா?

////அஸ்ஸலாமு அலைகும்!
July 5, 2011 by thiruchchikkaaran ////

அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹ்…

தங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!!

பதிவுக்கு மிக்க நன்றி சகோ.
முஹம்மத் ஆஷிக் ‘Citizen of World’

அன்புக்குரிய சகோ. முஹம்மத் ஆஷிக்,

வ அலைக்கும் ஸலாம் ,

பாராட்டுக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி .

முக்கியம். சமயத்தைப் பின்பற்றாமல் வாழமுடியும். மொழியில்லாமல் முடியுமா?தமிழ் இந்துவாகிய நான் தமிழ் கிறிஷ்த்தவரைக் காணும் போது வணக்கம் சொல்லலாம் என்றால், தமிழ் இஷ்லாமியரைக் காணும்போதும் வணக்கம் சொல்லலாம் தானே.இரு தமிழ் இஷ்லாமியர்கள்கூட தங்களிடையே வணக்கம் சொல்லலாமே.தமிழ் இஷ்லாமிய நண்பர்களை நான் காணும் போது அரபியில்தான் நான் வணக்கம் சொல்லுவேன்.அது தவறு என்று தெரிந்து செய்கின்றேன். ஆனால் அவர்கள் என்னைத் திருப்திப்படுத்த அல்லது மதிக்கும் வண்ணம் வணக்கம் சொல்வதில்லை.கடவுள் என்பது தமிழில் பொதுச் சொல். சிங்களத்தில் தெய்யோ, ஆங்கிலத்தில் God , அரபியில் அல்லா. அரபு மொழி பேசுகின்ற இரு கிறிஷ்த்தவர்கள் யேசுவை தங்கள் அல்லா என்று சொல்லியே கதைப்பார்கள்.அரேபிய இஷ்லாமியர்கள் கடவுள் என்ற கருத்தில்தான் அல்லா என்கிறார்கள். அரபு மொழி பேசாத இஷ்லாமியர்கள்தான், நாங்கள் சிவன் என்பதுபோல‌ தங்களின் கடவுள் அல்லா என்கின்றார்கள். சிவன் கடவுளின் பெயர். சிவன் என்பதற்கு GOD என்று சொல்லமுடியாது. ஆனால் அல்லா என்பது தமிழில் கடவுள்.

வணக்கம் அன்பன்

வணக்கம் தாரளமாக சொல்லலாம். அப்படித்தான் சொல் வேண்டும். தமிழர் அவர் கிறிஸ்துவராக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும் வணக்கம் என்று சொல்லுவதே சிறப்பு.

அதே நேரம் எப்போது ஒரு முறை இஸ்லாமியர்களின் பண்டிகை காலங்களில் அவரை அஸ்ஸலாம் அலைக்கும், ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவது, தமிழர்கள் எந்த ஒரு பண்பாட்டின் , மதத்தின் , மொழியின் மீது வெறுப்புணர்ச்சி இல்லாதவர்கள், நல்லிணக்க காரர்கள் என்பதை காட்டும் .

இந்தக் கட்டுரை எழுதினோம் என்றால் எல்லோரும் வணக்கத்தை விட்டு சலாம் சொல்ல வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அரேபியப் பண்பாடு, மொழி, காலச்சாரத்தை அறிந்து கொள்ளும் வண்ணம் சொல்லுகிறோம்.

அல்லா என்பது கடவுளின் பெயர்.(சிவன் என்பது போல்). அது “GOD” என்பதாகாது …. தெரியாமல் உளறவேண்டாம்

The word Allah, according to several Arabic lexicons, means “the Being Who comprises all the attributes of perfection”, i.e. the Being Who is perfect in every way (in His knowledge, power etc.), and possesses the best and the noblest qualities imaginable in the highest degree. This meaning is supported by the Holy Quran when it says:

“His are the best (or most beautiful) names.” (17:110; 20:8; and 7:180)

Contrary to popular belief, the word Allah is NOT a contraction of al-ilah (al meaning ‘the’, and ilah meaning ‘god’).

Had it been so, then the expression ya Allah (‘O Allah!’) would have been ungrammatical, because according to the Arabic language when you address someone by the vocative form ya followed by a title, the al (‘the’) must be dropped from the title. For example, you cannot say ya ar-rabb but must say ya rabb (for ‘O Lord’). So if the word Allah was al-ilah (‘the God’), we would not be able to say: ya Allah, which we do.

Lane’s Arabic-English Lexicon (which is based on classical Arabic dictionaries), says under the word Allah, while citing many linguistical authorities:

“Allah … is a proper name applied to the Being Who exists necessarily, by Himself, comprising all the attributes of perfection, a proper name denoting the true god … the al being inseparable from it, not derived…”

Allah is thus a proper name, not derived from anything, and the Al is inseparable from it. The word al-ilah (the god) is a different word.

The word Allah is unique among the names of God in all the languages of mankind, in that it was never applied to any being other than God. The pre-Islamic Arabs used it to refer to the Supreme Being, and never applied it to any of the other things they worshipped. Other names of God used by mankind, such as “lord”, “god”, “khuda”, etc. have all also been used for beings other than God. They have meanings which refer to some particular attribute of God, but “Allah” is the name which refers to the Being Himself as His personal name.

The Holy Quran itself refers to the uniqueness of the name Allah when it says:

“Do you know anyone who can be named along with Him?” (19:65)

Arabic is the only language, and Islam is the only religion, that has given the personal name of God (as distinct from attributive names such as lord, god, the most high, etc.) There are clear prophecies in previous scriptures (the Bible, the Vedas etc.) about the man who will come and give the name of God, which in previous religions was regarded as a secret.

David prophesied:

“Blessed is he who comes in the name of the Lord” (Psalms 118:26).

This is also repeated in the Gospels (Matt. 21:9, etc.), and was fulfilled by the Holy Prophet Muhammad whose first revelation was “Read in the name of thy Lord” (the Quran, 96:1).

Zechariah prophesied:

“And the Lord shall be king over all the earth, in that day there shall be one Lord, and his name one.” (Zech. 14:9)

All Muslims, anywhere on the earth, speaking totally different languages, recognise the name “Allah”, thus fulfilling this prophecy, “his name one”. (All Christians, to take an example, do not recognise a single name of God, and therefore do not fulfil this prophecy.)

Isaiah prophesied:

“And in that day shall you say, Praise the Lord, call upon His name.” (Isaiah 12:4)

So Muslims say repeatedly exactly this: al-hamdu li-llah, and call upon His name Allah.
An objection answered.

The following objection has been raised regarding the name Allah:

Al -‘The’, lah – ‘God’. It means the God. It was one of the gods worshipped by the Arabs. His female equivalent was Allat, al- ‘the’, Lat ‘goddess’. Muhammed’s followers did not like the concept of worshipping a female diety.

Answer.

“Allah” was NOT “one of the gods” of the pre-Islamic Arabs, but was recognised by them as the supreme, abstract God. There was no idol which they called “Allah”. The Quran quotes the idol-worshippers as presenting the argument that:

“We worship them (i.e. the idols) only so that they may bring us nearer to Allah.” (39:3)

Obviously then, “Allah” was not just one of the gods.

It is also entirely wrong to say that Al-Lat was a feminine form of Allah. Besides Allah, the different tribes of the Arabs believed in their tribal gods. “Al-Lat” was the tribal god of the Thaqeef tribe who lived in the city of Taif (where there was a shrine with an idol of Lat). The Quraish worshipped Uzza as their tribal god, and similarly with other tribes.

So it is simply incorrect to say that the Arabs regarded Lat as being a female equivalent of “Allah”. “Allah” was, as said above, regarded by them as their supreme God. Lat, Manat etc. were believed in as tribal gods.

Moreover, Lat, Manat and Uzza were believed by them to be daughters of Allah, as the Quran says:

“Have you then considered Lat and Uzza, and the third, Manat? Are the males for you and for Him the females” (53:19-21).

The Quran is here pointing out the contradiction in their beliefs, that they ascribed daughters to Allah, but preferred to have sons themselves! So Lat being believed as a daughter of Allah, could not possibly be regarded by them as the female equivalent of Allah.

In Lane’s Arabic-English Lexicon the words ilah (god) and Allah occur under the root A-L-H, but the word Al-lat is given under an entirely different root L-T. Therefore, “Al-lat” is not the feminine form of the word Allah (for in that case it would occur under the same root as for “Allah”), but is derived from a completely different root with a totally different meaning.

The root from which al-lat comes means (among other things) “to moisten”. Lane quotes several reports on how the idol came to be so called. It is named after a man called Al-Lat. Sometime before Islam, there was a man who used to give pilgrims a barley meal (known as saweek), moistened with either water or clarified butter. He thus became known as Al-lat. After he died, the rock where he was buried came to be worshipped and was known by his name. And thus there came to be the idol named Al-lat.

The great Mufassireen, Alama Ibn Kathir [ra] gives a beutifull explanation of the word ‘Allah’ in His tafsir too:

The Meaning of “Allah

Allah is the Name of the Lord, the Exalted. It is said that Allah is the Greatest Name of Allah, because it is referred to when describing Allah by the various attributes. For instance, Allah said,

[هُوَ اللَّهُ الَّذِى لاَ إِلَـهَ إِلاَّ هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَـدَةِ هُوَ الرَّحْمَـنُ الرَّحِيمُ – هُوَ اللَّهُ الَّذِى لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَـمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَـنَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ – هُوَ اللَّهُ الْخَـلِقُ الْبَارِىءُ الْمُصَوِّرُ لَهُ الاٌّسْمَآءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِى السَّمَـوَتِ وَالاٌّرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ]

(He is Allah, beside Whom La ilaha illa Huwa (none has the right to be worshipped but He) the Knower of the unseen and the seen. He is the Most Gracious, the Most Merciful. He is Allah, beside Whom La ilaha illa Huwa, the King, the Holy, the One free from all defects, the Giver of security, the Watcher over His creatures, the Almighty, the Compeller, the Supreme. Glory be to Allah! (High is He) above all that they associate as partners with Him. He is Allah, the Creator, the Inventor of all things, the Bestower of forms. To Him belong the Best Names. All that is in the heavens and the earth glorify Him. And He is the Almighty, the Wise) (59:22-24).

Hence, Allah mentioned several of His Names as Attributes for His Name Allah. Similarly, Allah said,

[وَللَّهِ الأَسْمَآءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا]

(And (all) the Most Beautiful Names belong to Allah, so call on Him by them) (7:180), and,

[قُلِ ادْعُواْ اللَّهَ أَوِ ادْعُواْ الرَّحْمَـنَ أَيًّا مَّا تَدْعُواْ فَلَهُ الاٌّسْمَآءَ الْحُسْنَى]

(Say (O Muhammad “Invoke Allah or invoke the Most Gracious (Allah), by whatever name you invoke Him (it is the same), for to Him belong the Best Names.”) (17:110)

Also, the Two Sahihs recorded that Abu Hurayrah said that the Messenger of Allah said,

«إِنَّ للهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ»

(Allah has ninety-nine Names, one hundred minus one, whoever counts (and preserves) them, will enter Paradise.)

These Names were mentioned in a Hadith recorded by At-Tirmidhi and Ibn Majah, and there are several differences between these two narrations.

http://www.tafsir.com/default.asp?sid=1&tid=251

அல்லது தெரிந்தே சொல்லும் பொய்யா? (தக்கியா)

//அல்லா என்பது கடவுளின் பெயர்.(சிவன் என்பது போல்). அது “GOD” என்பதாகாது …. தெரியாமல் உளறவேண்டாம்//

‘அல்லாஹ்’ என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.’ என்று முஹம்மதே! கூறுவீராக!’
-குர்ஆன் 17:110
————————————————————————————–
‘அஸ்ஸலாமு அலைக்கும’ ‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற இந்த வார்த்தை யாருக்கும், எந்த நேரத்திலும், வயது வித்தியாசமின்றி பயன்படுத்தத் தக்க ஒரு வார்த்தை.

ஒருவரின் தகப்பன் இறந்து கிடக்கும் இடத்தில் நீங்கள் ‘குட்மார்னிங்’ என்ற வார்த்தையில் அவரை அழைக்க முடியாது. ஏனெனில் இன்றைய பொழுது அவருக்கு சிறந்த காலைப் பொழுது அல்ல. அதே நேரம் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறினால் அவரது தகப்பனுக்கும் அவருக்கும் சேர்ந்து அமைதி உண்டாகட்டும் என்று அவருக்காக நாம் பிரார்த்திக்கிறோம். இது சகோதரத்துவத்தையும் பாசத்தையும மேலும் வளர்க்கிறது.

சிவன், ஈஸ்வரன், நீல கண்டன், இவை கூட கடவுளின் வெவ்வேறு பெயர்கள் தான். அதனால் சிவன் தான் ஒரேகடவுள் மற்றவையெல்லாம் கடவுள் இல்லை என்று தொழுங்கள் பார்க்கலாம்.

//அதனால் சிவன் தான் ஒரேகடவுள் மற்றவையெல்லாம் கடவுள் இல்லை என்று தொழுங்கள் பார்க்கலாம்.//

சிவன் என்ற கடவுளின் பெயருக்கு குறிப்பிட்ட ஒரு உருவத்தை கொடுத்தது யார்? எந்த ஆதாரத்தின் அடிபபடையில் சிவனுக்கு அந்த குறிப்பிட்ட உருவத்தை அளித்தீர்கள்.

அரபு மொழி பேசும் கிறித்தவர்கள் அல்லா என்ற சொல்லை கடவுள் என்ற பதத்தில் பாவிக்கின்றார்களே?

என்னைப் பொறுத்தவரையில் கடவுளுக்குப் பெயரோ உருவமோ இல்லை என்பதே.

மேலும் தங்கள் விளக்கங்களைத் தந்த இருவருக்கும் நன்றி.

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவது தமிழர்கள் எந்த ஒரு பண்பாட்டின் மதத்தின் மொழியின் மீது வெறுப்புணர்ச்சி இல்லாதவர்கள் நல்லிணக்க காரர்கள் என்பதை காட்டும் . –திருச்சிக்காரர்

இஸ்லாமியர்கள் தவிர்ந்த பிற மதத்தவர்கள் யாவரும் தாரளமாக சகோதர மத நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் தாராளமாக வாழ்த்துக்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனல் இஸ்லாமியர்களில் (நல்ல மனம் கொண்ட அன்பு சகோதரர்களை தவிர) இஸ்லாமிய மத வெறி கொண்டோர் பெரும்பான்மையினர் பலர் பிற மத சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை. அவர்களை அப்படி செய்ய அரபு இஸ்லாமிய மதம் தடுக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: