Thiruchchikkaaran's Blog

நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே!

Posted on: July 4, 2011


16 வயது சிறுமி ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயை இழந்தவர். தந்தை நோயாளி. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஜீவா வீட்டின் அருகில் உள்ள ஜெபகூடத்துக்கு சென்றார். அப்போது அங்கு பிரசாரத்துக்கு வந்த மேரி என்பவர் அவரது வீட்டு கஷ்டங்களை கேட்டறிந்தார். தான் உதவி செய்வதாக கூறி செல்போன் எண்ணை கொடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு பிறகு அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். 

அப்போதுதான் அழைத்து சென்ற பெண்ணின் பெயர் மேரி அல்ல, துரைச்சி என்பதும், அவர் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சிறுமிக்கு தெரிய வந்தது.

ஒரு வாரம் விருந்தும், ஜெபமுமாக கழித்த துரைச்சி, சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து குடோனுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து 4 பேருக்கு இரையாக்கினார். பின்னர் பாளைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார். சிறுமியுடன் சுத்தமல்லியை சேர்ந்த காயத்ரி என்பவரையும் அனுப்பி பணம் சம்பாதித்தார். 

வாடகை வீட்டில் இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுவது வீட்டு உரிமையாளருக்கு தெரிந்து விட்டதால் உடனே வீட்டை மாற்றினார். கடந்த 30 நாட்களுக்குள் 3 வீடுகளுக்கு மாறி விபசார தொழில் நடத்தினார்.

இரண்டாவது வீ்ட்டில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு விஷயம் தெரிந்து விட அவருக்கும் சிறுமியை இரையாக்கியுள்ளார். இவ்வாறு 50க்கும் மேற்பட்டவர்கள் தன்னை கெடுத்ததாக சிறுமி கூறினார்.

வாடிக்கையாளர்களிடம் தலா ரூ.3000 பெற்று அதில் 1000 ரூபாயை கமிஷனாக எடுத்து கொண்டதாக தெரிவித்தார். அதிகமாக தொல்லை ஆரம்பித்ததால் அங்கிருந்து சிறுமி தப்பி வந்துள்ளார். பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயை இழந்தவர். தந்தை நோயாளி. அண்ணன் சிறையில் உள்ளார். தம்பி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

 
http://thatstamil.oneindia.in/news/2011/07/03/16-yr-old-girl-forced-prostitution-nellai-aid0091.html

Advertisements

3 Responses to "நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே!"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

இவர்களைப் போல் சிறு பெண் பிள்ளைகளைக் கடத்தி /ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளுவதும், வெளிநாடுகளுக்கு விற்பதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.இதற்க்கு பெரிய நெட்வொர்க் கே உள்ளது என்று செய்திகளின் மூலம் அறிகிறோம்.ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதைவிட மிக முக்கியமானது இந்த குழந்தைகளையும், பிள்ளைகளையும் கடத்தும் கும்பலை ஒழிப்பது.

பணவெறி மனிதனை அதுவும் பெண்களைக்கூட எவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள வைக்கிறது என்று பாருங்கள். நம்முடைய கல்வித் திட்டத்தில் உள்ள பெரிய ஓட்டை என்ன என்றால் நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இல்லாமல் பணவெறி படைத்தவர்களை உருவாக்கும் பாட திட்டங்களைக் கொண்டுள்ளது. இதை மாற்ற பணத்தை துச்சமாக மதித்து வாழ்ந்து காட்டிய மகான்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் ஞானப்பாடல்கள் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும். உதாரணமாக பட்டினத்தார் பாடல்கள் எல்லாம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையை விட்டு விட போதிக்கும் அற்புதமான தத்துவங்களடங்கிய பாடல்கள். நம் நாட்டை கொள்ளை அடித்த , சீரழித்த முஸ்லீம் மன்னர்கள் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணர், பத்திரகிரியார் போன்றவர்கள் பற்றி ஏதும் இல்லை. அப்புறம் எப்படி நல்ல மனிதர்கள் உருவாவார்கள். கொள்ளையர்கள்தான் உருவரகிறார்கள்.

நன்றி திரு. ராஜா அவர்களே , பட்டினத்தார் அவர்களின் பாடல்களின் ஒரு பகுதி இங்கே உள்ளது.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/03/17/beautiful-girls/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: