Thiruchchikkaaran's Blog

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

Posted on: July 1, 2011


நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …. என்று  சொல்லுபவர்களை பிடிவாதக்காரர்கள் என்கிறோம் அல்லவா,

பல முறை முயல்களை பிடித்து எத்தனை கால்கள் உள்ளன என்று அறியத் தர முடியும். ஆனாலும் பிடிவாதக்கார நண்பர் விடாமல்  நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் செயல் படுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பொது மக்களும், பிடிவாதக்காரரின் சமாளிப்பு செயல் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிற பிடிவாதத்தை விட ஆபத்தான பிடிவாதம் கடவுள் கோட்பாட்டு பிடிவாதம்.

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிறவர்களாவது இருக்கின்ற ஒரு விடயத்தை  பிறர் காணக் கூடிய, உணரக் கூடிய விடயத்தை பற்றி சொல்லுகிறார்கள்.

ஆனால் இந்த கடவுள் என்பது  இல்லாத ஒன்று அல்லது இன்றைக்கு  உலகில் யாரும் பார்க்காத , அறியாத, உணராத ஒன்று, இருக்கிறது என்பதற்கு verifiable proof இல்லாத ஒன்று.

எனவே இல்லாத ஒன்றிலே என்ன ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனாலும் மனிதன் தான் நினைத்தபடி வாழும் சுதந்திரனாக இல்லாமல் இருப்பதால், கஷ்டம் வரும் போது கடவுள் வந்து தன்னைக் காப்பார் – சிறு வயதில் அன்னை உதவிக்கு வருவது போல என கருதிக் கொள்கிறான்.

இந்த நிலையில் தான் சார்ந்துள்ள மதத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுள் கோட்பாடு உண்மையானது என நம்புகிறான்.

மதங்களோ ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையான  கோட்பாட்டை சொல்லுகின்றன. சரி, ஏதாவது ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைதியாக வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. நான் சொல்லுற கோட்பாடுதான் சரி என்கின்றனர். அதை மாத்தி சொல்லாதே, கடவுளை இழிவு படுத்தாதே … என்று சொல்ல  ஆரம்பித்து, சர்ச்சையில் துவங்கி பெரிய ஆயதங்களுடன் சண்டையில் கொண்டு போய் விடுகிறது.

ஒரு சாரார்   கடவுள் நிகரற்றவர், அவர் மனிதனாக வந்தார் என்றால் அவரை சுருக்கி பலகீனப் படுத்தியது போல ஆகும் என்கிறார்.

இன்னொரு சாரார் கடவுள் எல்லையற்றவராக எல்லா இடத்திலும் வூடுருவி, எல்லாவற்றையும் தனக்குளே வைத்திருப்பவராக இருக்கிறார், அவரே மனிதனாகவும் அவதாரம்  எடுககிறார் என்கின்றனர்.

சரி மனிதனாக அவதாரம் எடுக்கிறார், அப்ப ( as example)  ஐயப்பனாக சுருங்கி விடுகிறாரே, அவ்வளவு பெரிய கடவுள் ஒரு சிறிய மனிதனாகி சுருங்கி விட்டது போலக் காட்டுவது, கடவுளை சுருக்குவது போல மனசுக்கு வருத்தமாக இருப்பதாக பீலிங்ஸ் ஏற்பட்டு வருத்தப் படுகின்றனர்.

இது கடவுளை சுருக்குவது போல ஆகாது, மனிதனுக்கு உதவி செய்ய இன்னொரு மனிதனாக வந்தால் தவறில்லை. மேலே உட்கார்ந்து கொண்டு கீழே நடப்பதை வேடிக்கை பார்ப்பது அருளாளனுக்கு உரிய தன்மையா, இறங்கி வந்து உதவுவதுதானே கருணையை காட்டும் செயல் என்கின்றனர்.

“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? ”

“மலம் என்பது செரிக்கப் பட்ட உணவின் சக்கை, அதை  உடல் வெளி ஏற்றுகிறது .மனிதனோடு  வாழ்ந்து அவனுடைய கஷ்டத்துக்கு உதவ தான மனுசனாவே வராரு, மல ஜலம் கழிச்சா தப்பா?”

“சொன்னா உனக்கு புரியுதா, மனுஷன் மாறியே கல்யாணம் பண்ணி… உடல் உறவு கொள்வது… இதெல்லாம் அசிங்கமா இல்லை?”

“கடவுள் மனுசனா பொறந்து ஒரு மனிதப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி உடல் உறவு கொண்டால் அதில் என்னய்யா தவறு? இன்னொருத்தன் பொண்டாட்டியோடு உடல் உறவு கொண்டால் தான் தவறு. எதுயா அசிங்கம் , நீ நான் சொல்ற படி செஞ்சுட்டு மேலே வா, உனக்கு இதை தாரேன், அதை தாரேன்,  என்று சொல்லுவதாக கோட்பாடு வைப்பது அசிங்கம் இல்லை , ஒரு பொண்ணை வூரரிய , உறவறிய தொட்டுத் தாலி காட்டி அவளோடு குடும்பம் அடத்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அசிங்கமா?”

இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.

இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. உண்மை என்றால் எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஏதோ ஒரு கடவுள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு , அமைதியாக வழி பட்டு விட்டு சென்றால் பரவாயில்லை. வழிபாடு முடிந்தவுடன் மனதிலே பொறுமையும், நிதானமும் , சிநேகமும், சகிப்புத் தன்மையும் , இணக்கமும், சாந்தமும் … உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால்  இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்? இதனால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றனர் சார்வாகர், புத்தர், விவேகானந்தர், பெரியார்… போன்றவர்கள்.

Advertisements

22 Responses to "நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …."

//உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால் இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்//
எதற்கு அனாவசியமாக இஸ்லாமை வம்புக்கு இழுக்கிறீர்கள். 🙂

வாங்க தமிழன், கட்டுரையை படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

நாம் எல்லா மதத்தவருக்கும் தான் சொல்லுகிறோம்.

எல்லோரும், பிற மதங்களை வெறுக்காமல், அமைதியாக தங்கள் மத்தைப் பின்பற்றிக் கொண்டு நல்லிணக்கமாக வாழ்ந்தால் அமைதி நிலவும். மத வெறுப்புணர்ச்சியால் ஆயுதம் எடுத்து சமர் செய்து தாலிகளை அறுக்க வேண்டாம் என்று தான் சொல்லிக் கொள்கிறோம்.

நாம என்னதான் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடாவடித்தனத்துக்கு எதிரா சங்கு ஊதினாலும் அரசியல் **கள் அவர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் திருந்தப்போவது இல்லை. அரசியலில் இந்து உணர்வைக்கொண்டு வந்தால் மட்டுமே இந்துக்கள் வாழமுடியும். நாம் பெரும்பான்மையாக இருக்கும்போதே செயல்பட்டால்தான் இந்தக் காட்டுமிராண்டிகளை ஜெயிக்க முடியும். கேரளாவில் இந்துக்கள் 50 சதவீதமாகக் குறைந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். 25 சதவீதமாக குறைந்து விட்டால் அவர்கள் கதி அதோ கதி தான்.

திரு. ராஜா அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

//நாம என்னதான் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடாவடித்தனத்துக்கு எதிரா சங்கு ஊதினாலும்//

மட்டும் அல்ல, இந்து மதத்தின் பேரால் அடாவடித் தனம் செய்தால் அதுவும் ஆபத்துதான். அது இந்து மதத்தையும் இந்திய சமுதாயத்தையும் முரட்டு சமுதாயமாக ஆக்கி விடும்.

இந்து மதத்தை சுவாமி விவேகானந்தர் , ஆதி சங்கரர், தியாகராஜர் போன்ற அறிஞர்களின் கையில் இருந்து பிடுங்கி தெருவிலே அடாவடி செய்பவர்களின் கையில் கொடுத்தால், அது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், இந்து மதத்தை அழித்து விடும் என்கிற கருத்தை உங்களின் சிந்தனைக்கு வைக்கிறேன்.

இராமரின் மேல் உண்மையான மரியாதை வைத்திருப்பவன், இராமரின் கொள்கையை சரியாகப் புரிந்து கொண்டவன், மனைவியைத் தவிர பிற பெண்களை பாலில் ரீதியாகவோ, வேறு எந்த வகையிலோ தொல்லை குடுத்து துன்புறுத்த மாட்டான், அப்பாவிகளை பாதுகாக்க முயலுவானே அன்றி துன்புறுத்த மாட்டான் – அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இது உண்மையா இல்லையா?

இந்துக்கள் குறைந்தார்கள் என்றால், இந்துக்களும் தங்கள் மதத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யலாமே.

இந்து மதத்தின் பேரால் கல்லா கட்டி தங்களை சாமியாராக காட்டிக் கொள்ளும் கணவான்கள பலர் கொடிகளைக் குவித்து விட்டு, பிறகு ஆசையால் பல சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இந்து மதத்தின் இப்போதைய தேவை
விவேகானந்தர் சங்கரர் போன்ற ஆன்மீக வாதிகள். அவர்களை உருவாக்க என்ன வழி என்று சிந்தியுங்கள்.

//இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் // நல்ல மூட்ல இருக்கீங்க போல இருக்கு.

//கேரளாவில் இந்துக்கள் 50 சதவீதமாகக் குறைந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்//

கேரளாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இதே நிலைதான். ஆனால் கேடுகெட்ட அரசியல் வாதியக் நிஜ புள்ளி விபரத்தைச் சொல்ல மாட்டார்கள். மைனாரிட்டி என்று ஓட்டு வேட்டை நடத்த இந்துக்களை மெஜாரிட்டியாகவே காட்ட வேண்டும். கடைசி இந்து சாகும் வரை அரசியல் வியாதிகள் அதைத்தான் செய்யப்போகிறார்கள்.

வாங்க ராம்,
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

//இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் // நல்ல மூட்ல இருக்கீங்க போல இருக்கு.

இது நான் சொன்னதாக இல்லை, மத பிடிவாத போக்கு கொண்டு போய் விடும் எது என்பதை இது காட்டுகிறது.

ஆபிரகாமிய மதங்கள் கட்டளைக்குக் கீழ்படிதலையே ஆன்மீகமாக ஆக்கியிருக்கிறது. எது ஆன்மீகம்? அவர்களுக்குப் புரியவில்லை.

http://hayyram.blogspot.com/2011/07/blog-post_03.html

கிறிஸ்தவமோ இஸ்லாமோ ஆன்மீக மதங்கள் கிடையாது, அவை ஒருவகையான அதிகார அரசியல் கோட்பாடே. ஆனல் கார்ல் மார்க்ஸை போன்று அரசியல் கோட்பாடு என்று சொல்லாமல் ஆன்மீகத்தை முகமூடியாக அணிந்துகொண்டு அதிகாரம் செய்கின்றார்கள். இதற்கு ஆசிய ஆபிரிக்க அறிவு குறைந்த பாமரர்கள் பலியாகின்றார்கள்.இதற்குப் பலியாகிய எந்த ஒரு தமிழனாவது மீண்டு அல்லது உண்மை புரிந்து வெளியேறி இருக்கின்றானா பாருங்கள். ஏனெனில் ஒருமுறை அதற்குள் விழுந்துவிட்டால் மீண்டு எழுவதற்கு அந்த ஊர் பாதிரியார் அனுமதிக்கப் போவதில்லை. இதிலிருந்து எம்மவரை காப்பாற்ற நீங்கள் கூறுவது போன்று மத நல்லிணக்கமோ மத சகிப்புத்தன்மையோ உதவப்போவதில்லை.இதற்கு ஒரு சில வழிகள் எங்கள் மத்தியில் இருக்கும் அறியாமை சாதியம் வறுமை என்பனவற்றை நீக்குவதே. வறுமையை அரசுதான் போக்கவேண்டுமென்றாலும் அறியாமையையும் அதன்வழி சாதியத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களால் முயற்சிக்க முடியும். அத்துடன் மதமாற்று ஏஜண்டுகளுக்கும் சாம பேத தான தண்டம் என்ற வழி முறையில் பகலிலோ இருட்டிலோ கவனிக்க வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் நச்சுப்பாம்புகள்.
அக்கறையுடன் லோகன்

அன்புக்குரிய சகோதரர் லோகன்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

உண்மையான ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சென்றால், ஆன்மீகம் என்ற பெயரில் பரப்பப் படும் அடாவடிக் கருத்துக்களை, வெறுப்புணர்ச்சிக் கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மத சகிப்புத் தன்மை,மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளால் உருவாகும் அமைதியை மக்கள் சரியாகப் புரிந்து கொண்டால், மதவெறிக் கோட்பாடுகளை புறக்கணிப்பார்கள்

இந்து மதம் நமக்கு வழிபாட்டிலும், கருத்துக்களை சொல்வதற்கும் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. நாம் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முயலவில்லை.
முஸ்லீம்களை கொன்று விட்டு முகமது சொன்னது போல் அவர்களின் பெண்களை வைத்துக்கொள்ள சொல்லவில்லை.

முஸ்லீம்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால் கூப்பாடு போட்டு, வன்முறையில் இறங்கி கலவரம் நடத்த முயற்சிப்பர். ஆனால் முஸ்லீம்களால் பிற மதத்தவருக்கு என்ன நடந்தாலும் அல்லா ஆசியால் நடக்கிறது என்பர். அதனால் தான் அவரைப் பின்பற்றும் தீவிரவாதிகளும் தாங்கள்தான் முழுமையாக இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம் என்று நினைக்கிறார்கள்.

அவர்களைத் திருத்த முடியாது. அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் அல்லா உங்கள் கைகளைத் தரிப்பானாக , உங்களுக்கு மறுமையில் நரகம் இருக்கிறது. உங்களைக் கொல்வது அல்லாவுக்கு பிரியமான செயல் என்று சொல்வார்கள், முயற்சிப்பார்கள். உங்களிடமே சவால் விட்டிருப்பார்கள் தைரியமிருந்தால் உங்கள் முகவரியையோ உண்மையான புகைப்படத்தையோ போடச்சொல்லி. உண்மையா? இல்லையா?

உண்மையில்

திரு. ராஜா அவர்களே,

நீங்கள் கஜினி முகமது , கோரி முகமது , அலாவுதீன் கில்ஜி போன்றவர்களை குறிப்பிடுகிறீர்களா?

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? “///

அருமையாகச் சொன்னீர்கள்.

இவர்கள் ???கடவுளுக்கே ‘நீ இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று கட்டளைப் பிறப்பிபவர்கள்.

கடவுள் மனிதனாக பிறக்கக்கூடாது.மனிதனாக பிறந்தால் அவர் கடவுள் கிடையாது.

கடவுள் மனிதனாக பிறந்தால் பசி, தூக்கம் எல்லாம் வரும்.கடவுளுக்கு தூக்கம் வரக்கூடாது.தூக்கம் வந்தால் அவர் கடவுள் கிடையாது.

கடவுளுக்கு பசிக்கக் கூடாது.பசி எடுத்தால் அவர் கடவுள் கிடையாது.

பசி எடுத்தால் உணவு சாப்பிடவேண்டும்.உணவு சாப்பிட்டால் அவர் கடவுள் கிடையாது.

உணவு சாப்பிட்டால் மலம் கழிக்கவேண்டும்.மலம் கழித்தால் அவர் கடவுள் கிடையாது.

கடவுளுக்கு உருவம் இருக்கக் கூடாது.உருவத்துடன் வந்தால் அவர் கடவுள் கிடையாது…….

Dhanabal sir,

Happy to find you visited our blog and read the article. Thanks.

திருச்சிக்கார அண்ணா
நானும் உங்களைப் போல் குரானைப் பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருந்தேன். எல்லா மதங்களையும் போல் இஸ்லாமும் அன்பைத்தான் வலியுறுத்துகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் என் அறிவுக் கண்ணை தமிழன்1001-தான் திறந்து வைத்தார். தயவு செய்து http://faithfreedom.org அல்லது http://alisina.org தளத்தில் சென்று பாருங்கள். முகமது நபியையும் இஸ்லாத்தையும் பற்றி தெரிந்து கொள்ள அலி சினா அவர்கள் எழுதிய understanding muhammad புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
உங்கள் ப்ளாக்கில் நிறைய கட்டுரைகள் எழுதுவதற்கு விஷயங்கள் கிடைக்கும்.
அளவற்ற கருணையாளன்க்கு எதிராக எதுவும் எழுதாதீர்கள். ஜாக்கிரதை

எழுதிய கருத்துக்கள்:

காண முடியாக் கடவுளுக்கு ஏன் கோட்பாடு?

அப்படியே இருப்பினும் ஏன் முரண்பாடு?

அப்படியே இருப்பினும் ஏன் ஒன்றை உண்மை, மற்றொன்றைப் பொய் எனவேண்டும்?

அப்படியே சொன்னாலும், அதில் ஏன் வன்முறை?

இந்தக்கேள்விகளை எவரும் எதிர்னோக்கியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பந்தத்தைப் பாய்ந்து பிடித்துக்கொண்டு இசுலாம், கிருத்துவத்தைத் தாக்கி தன் இந்து மதமே உயர்ந்தது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பதிவாளரும் அவர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் பதில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

சகோ. ஜோ அமலன் அவர்களே,

வணக்கம். உங்களின் வருகையும், கருத்துப் பதிவிற்கும் நன்றி.

எல்லா மதத்தினரும் அமைதியான வழிபாட்டில் ஈடு பட வேண்டும், மோதல் போக்கு வேண்டாம், சகிப்புத் தன்மை வேண்டும், நல்லிணக்கம் நல்லது என்றே நாம் சொல்லி வருகிறோம். இந்து மதத்தினர் பிற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சி காட்டும் போது அதையும் எச்சரித்து வருகிறோம். மற்றபடி அவரவர் மனதில் இருப்பதை எழுதுகின்றனர். . அதையும் மட்டுறுத்தியே வெளி இடுகிறோம். அதே நேரம் பிறரின் எண்ணப் போக்கை எல்லோரும் தெரிந்து கொள்வது ஒரு வகையில் அவசியம் ஆகிறது. எனவே ஓரளவுக்கு எண்ணங்களை அறியத் தருகிறோம்.

வன்முறை ஏன் வருகிறது என்றால் ஆன்மிகம் லௌகீத்தோடு சேரும்போது அது ஒரு தனிக்குணத்தைப் பெறுகிறது. அதில் பெருங்கவர்ச்சியும் கிடைக்கிறது வாழ்வு, வாழ்வு இக சுகங்கள், ஒரு பாதுகாப்புணர்வு குழுமனப்பான்மையால் வருவது எல்லாமே இருக்கிறது ஆங்கே.

எனவே லௌகீகம் கல‌ந்த ஆன்மீகம், வெறும் ஆன்மீகத்தை விட மக்களைக்கவர்கிறது. வெறும் ஆன்மிகம் தனிமனிதனுக்கும் ஞானிகளுக்குமட்டுமே என்றாகிறது.

நீங்கள் எழுதிச் சாடிக்கொண்டிருப்பது ஆன்மிகம் அன்று. லௌகீயான்மீகமே. இப்பதிவு மட்டுமல்ல. எல்லாப்பதிவுகளும் அப்படியே.

இந்துமதம் பழமையான மதம். அதுவே உலகுக்கு லௌகீயான்மீகத்தைக் காட்டியது. அது ஒரு வாழ்க்கை வாழும் முறை; மதமல்ல எனப்பறைச்சாற்றியது. அப்படி வாழும் முறை கண்டிப்பாக வெறும் ஆன்மிகமாக இருக்காது. எனினும். அதில் வெறும் ஆன்மிகமும் தனியாகக் கிட்டும் அதை ஞானிகள் எடுத்துக்கொள்வர். எ.கா. சித்தர்கள்.

மற்றபடி பொதுமக்களுக்கு லௌகீகான்மீகமே காட்டப்படுகிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள்.

இவர்கள் மற்றவர்களைத்தூற்றுகிறார்கள். கோயில்கள் பணத்தை ஒழித்துவைக்கும் கொடவுண்களாக இருந்தன என்பதை நாம் இன்று தெரிகிறோம். அன்று ஆடல் பாடல் என்றும் பொட்டுக்கட்டும் தேவடியார்கள் என்றவினத்தை வளர்த்து பெண்ணை இழிவுபடுத்தி சுகங்காணும் இடங்களாக விளங்க வைத்தவர்கள் இன்று பிறம்தங்களைப்பழிக்கிறார்கள்.

“…அப்படியே இருப்பினும் ஏன் முரண்பாடு?

அப்படியே இருப்பினும் ஏன் ஒன்றை உண்மை, மற்றொன்றைப் பொய் எனவேண்டும்?….” These r questions.

– இந்த முரண்பாடு, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்! என்னும் பிடிவாதமும் ஒருவகையில் சரியே.

எனக்கு வழிகாட்டிய ஞானிகள், கடவுள் என்றால் அவருக்கு இப்படிப்பட்ட கலியாண குணங்கள் உண்டு; வாழ்வை எப்படி வாழ்ந்தால் கடவுளிடம் பாதத்தை அடையலாம்? என்று சொல்லிக்கொடுக்க நான் அதை விரும்பி அறிந்து தெளிந்து ஏற்றுக் கொள்கிறேன்.

பிறரைப்பார்க்கிறேன். அவர்கள் எதை எதையோ கடவுள் எனச்சொல்லி எப்படிஎப்படியோ வாழ்கிறார்கள. இது எனக்குப் பைத்தியக்காரத்தனமாக மட்டுமல்ல், அவர்கள் குழிக்குள் விழுகிறார்களே என கழிவிரக்கம் வருகிறது.

இது வன்முறையாக அவர்களிடம் சொல்லப்படா வரையில், அஃதாவது கழிவிரக்கமாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் – என்னை ஏன் பிடிவாதக்காரன் என்கிறீர்கள்?

அவர்களது பொய் என நான் நம்பினால் ஏன் தவறென்கிறீர்கள் ?
எனக்கு இது முரண்பாடல்ல. ஒரே பாடு. My way s the only way. Y shd I take a false way that s urs?

என் வழியே உண்மை. பிறர் வழி பொய் – இதில் என்ன தவறு நான் என் வழியைப் பிறர்மேல் திணிக்காதவரை, வன்முறையை நாடா வரையில்?

//பிறரைப்பார்க்கிறேன். அவர்கள் எதை எதையோ கடவுள் எனச்சொல்லி எப்படிஎப்படியோ வாழ்கிறார்கள. இது எனக்குப் பைத்தியக்காரத்தனமாக மட்டுமல்ல், அவர்கள் குழிக்குள் விழுகிறார்களே என கழிவிரக்கம் வருகிறது.//

இதுதான் பிறர் மேல் தன வழியை திணிப்பது என்பது.

பிறர் வழி பைத்தியக் காரத் தனமாது என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா?

எல்லோரும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு அதில் உள்ள கோட்பாட்டை அப்படியே நம்பி அதுதான் உண்மை என்றும் மற்றது எல்லாம் பத்தியக் காரத் தனமானது என்றும் சொல்வது தான் மத மோதல்களின் ஆரம்பம்.

வன்முறையில் நேரடியாக ஈடு பட வேண்டும் என்பது இல்லை, பிறரின் மதத்தை பைத்தியக்காரத் தனம் என்று சொல்லுவது .
எழுதுவதே பிறரை கொந்தளிக்க வைத்து மத மோதலை ஆரம்பித்து வைக்கிறது. வாளின் முனையில் செய்யப் படும் வன்முறை வெளிப்படையானது. பேனா முனையிலே, நாவின் மூலம் செயப் படும் இகழ்ச்சிப் பிரச்சாரம் கமுக்கமாக வன்முறையை தூண்டுகிறது. நீங்கள் சிறிது அமைதியாக சிந்தித்துப் பாருங்கள். நான் சொல்லுவது உண்மையா இல்லையா என்று உங்களுக்கே தெரியும்.

அவர்கள் எந்தக் குழிக்குள் விழுகிறார்கள். எந்த குழிக்குள்ளும் விழவில்லை. தன்னுடைய மதம் மட்டுமே உண்மையானது என்று அடித்து சொல்ல வேண்டும்- ஆனால் அதற்கு நிரூபணம் எதுவும் இல்லை- பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்று அடித்து சொல்ல வேண்டும். இதுதான் மத வெறிக் குழி. ஆபத்தான் குழி. பிற மதங்களை சகித்துக் கொள்ள இயலாத குழி.

மத நல்லிணக்கத்துக்கு இந்தியர்கள் என்றுமே தயார் . உங்கள் ஆலயத்துக்கு வர வேண்டுமா, உங்களுடன் சேந்து பிராத்தனை செய்ய வேண்டுமா, நூறுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் ஆட்கள் வருவார்கள். ஆனால் பிற மதங்கள் பொய்யானவை என்று சொல்ல வேண்டுமா, பிற மதக் கடவுள்கள் ஜீவன் இல்லாதவை என்று நிந்திக்க வேண்டுமா- அதற்க்கு பெரும்பானமியான இந்தியர்கள் தயார் இல்லை- மத மோதல் பாதிக்கு, மத வெறிப் பாதைக்கு இந்தியர்கள் தயார் இல்லை.

நீங்கள் உங்கள் வழி மட்டுமே உண்மை என்பதை நிரூபிக்காத வரையில் பிறர் வழி பொய் என்ற கோட்பாட்டை பரப்புவது, சரியான செயல் அல்ல.

sariyaa puriyalaa… oruvelai naan pidiththa muyalumm

//நீங்கள் உங்கள் வழி மட்டுமே உண்மை என்பதை நிரூபிக்காத வரையில் பிறர் வழி பொய் என்ற கோட்பாட்டை பரப்புவது, சரியான செயல் அல்ல.//

ஆஹா…! நன்று.

அன்புக்குரிய சகோ.தருமி ஐயா அவர்களே,

வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நாம என்ன இவங்க வழிபாட்டை இகழவோ, தடுக்கவோ செய்கிறோமா? அமைதியா வழிபடுங்க என்றால் கேட்கிறார்களா?
என் மதம் மட்டும் தான் உண்மை, பிறர் மதம் பொய்; நான் கும்பிடற கடவுள் மட்டும் தான் உண்மையான தேவன், பிறர் வழிபடும் தேவர்கள் ஜீவனில்லாதவர்கள் என்று அடாவடி வம்பு செய்து கொண்டு, நாங்கள் வன்முறையை உபயோகப் படுத்திநோமா, நாங்க ரொம்ப நல்லவங்க என்கிற ரேஞ்சில் இவர்களின் செய்கையை நியாயப் படுத்துகிறார்கள்.

அறிவியலில் ஒரு கோட்பாட்டை சொன்னால் அதை அடுத்தவர் ஒத்துக் கொள்ள செய்ய படாத பாடு படுகிறார்கள். கடவுளுக்கோ ஒரு நிரூபணமும் (verifiable proof) இல்லை, யாருமே பார்த்ததில்லை, ஆனாலும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் இப்படித்தான், அவரை இப்படித்தான் கும்புடணும்… இல்லேன செத்ததற்கு அப்புறம் உனக்கு நரகம். இப்போதைக்கு வங்கிக்க சதக் சதக் என்கிற அளவிலே இருக்கிறது !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: