Thiruchchikkaaran's Blog

மத வெறிக்கு பல்லக்கு தூக்குகிறதா,”THE HINDU” ஆங்கில நாளிதழ்?

Posted on: June 14, 2011


கடந்த ஒரு வாரமாக வெளி வந்த  ” THE HINDU ” ஆங்கில நாளிதழை புரட்டினால் ஒரு மனிதரின் புகழ் பாடி பக்கம் பக்கமாக செய்திகள், கட்டுரைகள், படங்கள் இருப்பதை காணலாம்.

எந்த ஒரு மனிதரும் மரணம் அடைவது ஒரு அதிர்ச்சியான, வருத்தம் தரும் நிகழ்வே.  அதற்க்கு இரங்கல் தெரிவிப்பதுவும் மரபே.

ஆனால் இப்படி பக்கம் பக்கமாக புகழாஞ்சலி செலுத்துகிறார்களே, அந்த அளவுக்கு இறந்தவர் முக்கியஸ்தரா, ஒரு வேளை உயிர்க் கொல்லி நோய்க்கு மருந்து கண்டு பிடித்த விஞ்ஞானி யாரவது இறந்து விட்டாரா, காந்தி, அம்பேத்கர் போன்ற தன்னலமற்ற தியாகத் தலைவர்கள் யாரவது இறந்து விட்டார்களா என்று பார்த்தால்….

சமூகங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி பல உயிர்களை கொல்லக் கூடிய மத வெறியை, தன்னுடைய தூரிகையின் மூலம் வெளிப்படுத்திய பரப்பிய  ஓவியர் திரு. எம். எப். ஹுசேன்,  மரணம் அடைந்து விட்டார். அதை ஒட்டியே இவ்வளவு பாராட்டும், புகழாஞ்சலியும்.

திரு. ஹுசேன் அவர்களின்  பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தவருக்கு நாம் இரங்கலைத் தெரிவிக்கிறோம். அதே நேரம் திரு, ஹுசேன் தன்னுடை தூரிகையால் மத வெறியை வெளிப்படுத்திய செயலை நாம் ஆதரிக்க இயலாது என்பதோடு, இப்படி  ” கலை” யின் மூலமாக மத வெறியை வெளிப் படுத்தும் போக்கு ஆபத்தானது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

மக்கள் தெய்வங்களாக வணங்குபவற்றை    கொச்சைப் படத்தி , இகழ்ந்து மக்களின் மனதைப் புண்படுத்தி , மத வெறி மோதலை உருவாக்குவது தேவையற்ற செயல், மிகவும் அபாயகரமான செயலும் ஆகும். ஒருவன் மனதில் இருக்கும் மத வெறியை வெளிப்படுத்தும் செயலே பிற மத தெய்வங்களை கொச்சைப் படுத்தும் செயல் ஆகும்.

இப்படித்தான் முன்பு டென்மார்க் நாட்டில் ஒரு இதழ் இஸ்லாமியர்களின் மதிப்பிற்குரிய முகமது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) நபி அவர்களைப் பற்றி கேலி செய்து சித்திரம் வெளியிட்டு இருந்தது. அதனால் இஸ்லாமிய நாடுகளில் பெரும் எதிர்ப்பும், ஆர்பாட்டங்களும் உருவாகி, டென்மார்க் தன்னுடைய தூதரகத்தை பல நாடுகளில் மூடி வைக்கும் நிலை உருவானது.

ஹுசேனின் செயல் பாடும் இதே போல அமைந்து விட்டது. இந்து மதத்தினரிடம் அம்மன் வழிபாடு முக்கியமானது என்பது இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். இந்துக்கள் தாயை தெய்வமாகவும், தெய்வத்தை தாயாகவும் கருதக் கூடியவர்கள். அவர்கள் தினமும் வணங்கும் சரஸ்வதி, துர்க்கை போன்ற தெய்வங்களை துகில் உரித்து, அவர்களை ஆடையற்ற நிர்வாணக் கோலத்தில் படம் தீட்டி இருக்கிறார் ஹுசேன்.  கேட்டால் இது கலை , எங்களுக்கு கலை சுதந்திரம்… என்றெல்லாம் பேசி விடுவார்கள். ஆனால் கலை சுதந்திரம் என்பது, பிற மதத்தவரின் பெண்களை, பெண் தெய்வங்களை பார்க்கும் போதுதான் மனதில் தோன்றுமா? தன்னுடைய மதத்தை சேர்ந்த பெண் முக்கியஸ்தர்களை வரையும் போது  ஆடை அணிகலனுடன் அடக்க ஒடுக்கமாக வரைவது, பிற மதத்தினரின் பெண் தெய்வங்களை  கொச்சைப் படுத்தி வரைவது . இது அப்பட்டமான மத வெறி வெளிப்பாடாகும். அதோடு , சாதாரண மனிதனின் மனத்தில் கோவத்தை உருவாக்கி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உருவாக்குகிறது.

அறிவு ஜீவிகளாக, நடு நிலை வாதிகளாக தங்களை காட்டிக் கொள்ள விரும்பும் பத்திரிகையாளர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். மக்கள் வணக்கும் தெய்வங்கள் கொச்சைப் படுத்தப் படுவதை கலை சுதந்திரம்  என்ற பெயரில் ஆதரித்து, வூக்குவித்து, பாராட்டுவது, அதனால் தங்கள் நெஞ்சம் புண்பட்ட மக்கள், மனம் பொறாமல், தாக்குதலில் ஈடுபடுவதை ஆவலுடன் எதிர் நோக்குவது, அப்படி அவர்கள் தாக்குதலில் ஈடுபடும்போது, அவற்றை புகைப் படங்களாக எடுத்து … இந்த மத வெறியர்களின் அராஜகத்தைப் பாரீர் .., என்று போட்டு தன்னை மத சார்பில்லாதவனாக , மத வெறியை எதிர்ப்பவனாக காட்டிக் கொள்வது. இப்படி ஒரே நேரத்தில் மத வெறியை பற்ற வைத்தவருக்கு பாராட்டுப் பாடி, அவரின்  மத வெறியை நியாயப் படுத்தி வக்காலத்து வாங்கி,  மத வெறி வளர உதவி செய்து விட்டு தன்னை மத வெறிக்கு எதிரானவராக கட்டிக் கொள்ளும் கலையில் சிறந்தது ” THE HINDU” பத்திரிகை என்றே மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

திரு ஹுசேனுக்கு விடுக்கப் பட்ட மிரட்டலையும் , அவர் ஓவியங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலையும் நாம் கண்டிக்கிறோம்.  அது தவறான செயல்பாடு. ஹுசேன் பிறரின்  மத உணர்வை புண் படுத்தி, மத வெறியை வெளிப் படுத்தி சித்திரம் வரைந்தாலும், இன்னா செய்தாரை ஒன்றும் செய்யாமல் பொறுத்தலே தலை.

THE HINDU இதழின் மத வெறி ஆதரவு நிலை கண்டு வருந்துகிறோம், கண்டிக்கிறோம், இந்த இதழ் சிங்களப் பேரினவாத இனவெறிக்கு  கமுக்க ஆதரவும்,  வெளிப்படையான ஆதரவும் தருவதையும் கண்டிக்கிறோம்.

 THE HINDU இதழ் மத வெறி ஆதரவு, இன வெறி ஆதரவு போக்கை கை விட்டு உலகில்  எல்லோருக்கும் அமைதியும் நியாயம், சம உரிமையும், பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று அனைவரும் நல்லிணக்கத்தில் இணையும் சுமூக , சமரச, சமத்துவ, நாகரீக எண்ணம் கொண்ட மக்களை,சமூகத்தை உருவாக்க உதவ வேண்டும்.
இந்த நோக்கிற்கு பெரும் இடையூறான மத வெறி, இன வெறி… ஆகியவற்றை ஆதரிக்கும் போக்கை கை விட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
Advertisements

3 Responses to "மத வெறிக்கு பல்லக்கு தூக்குகிறதா,”THE HINDU” ஆங்கில நாளிதழ்?"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

அருமையான பதிவு.ஹுசைனின் மதவெறியும், கீழ்த்தரமான விளம்பர உத்தியும், – இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் ஊடகங்களும் தான் அவர் பிரபலமாக உதவியிருக்கிறது.

அன்புக்குரிய நண்பர் திரு. தனபால் அவர்களே,

வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

சகோ,
தங்களின் பதிவுக்கு நன்றி
கருத்து, கலை சுதந்திரம் எல்லாம் பிறரை பாதிக்காதவரை தான் அனுமதிக்க பட வேண்டும்.

வலை பத்திரிக்கைகளிலும் (தளங்களிலும் ) சில அறிவு ஜீவிகள் உலாவுகின்றன, அவர்கள் இந்த ஆசமி செய்த மதவெறி பிடித்த காரியத்தை போற்றி புகழ்ந்து வக்காலத்து வாங்கி கலை சுதந்திரம், அது இது என்று ஜல்லி அடித்து அவரை போற்றி புகழும் செயலை அத்துடன் அவரை எதிர்த்தவர்களை மதவெறியர்கள் என்று பட்டமளித்து தங்களின் பத்திரிக்கை தர்மத்தை செவ்வனே நிறைவேற்றினர். ஜல்லி என்றால் அப்படி ஒரு ஜல்லி.
இதில் நாம் மதிப்பு வைத்திருக்கும் பல பெரிய வலையர்களும் அடக்கம்.

இதில் ஒரு பெரிய மேதாவி தன் தளத்தில் அந்த படத்தை வெளியிட்டு அவர் காதலியாம் அந்த தெய்வம் அதனால் அவர் காதலியை எப்படி வேண்டுமானாலும் ரசிப்பேன் .காதலி படத்தை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று வெட்கமில்லாமல் எழுதி வைத்திருந்தார்.

எந்த ஆணாவது தன் காதலியை நிர்வாணமாக்கி வலை பதிவில் போட்டு மகிழ்வானா? என்று எழுத நினைத்தேன், சரி அல்லது காதலியின் நிர்வாண படத்தை வெளியில் பகிர்ந்து கொள்ள தயங்காத ஒருவரிடம் எதற்கு விவாதம் என்று விட்டு விட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: