வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரிசா மக்கள் போராட்டம்!
Posted June 13, 2011
on:ஒரிசா மாநிலத்தில் அப்பாவி மக்களின் நிலங்களை அந்நிய பெரு முதலாளி போஸ்கோ (Posco) நிறுவனத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்க முடிவு செய்து, ஏழை மக்களிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலங்களையும் பறிக்கும் வேலையை கன ஜரூராக செய்து வருகிறது அரசு.
தின்கியா கிராம பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள், தங்கள் நிலங்களில் படுத்துக் கொண்டு, தங்கள் நிலங்களை தர மறுத்து போராட்டம் நடத்தி யுள்ளனர்.அவர்களின் மன உறுதியை கண்ட ஆளும் வர்க்கம், இப்போதைக்கு ஏற கட்டிக்கலாம், அப்புறமா வந்து இவங்க வயித்துல அடிக்கலாம் என முடிவு செய்து நடையை கட்டி உள்ளது.
ஏழை மக்களின் நிலங்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களை தங்களுக்கு அடிமைகள் ஆக்கும் பணியில் உலகில் முதலாளித்துவ அரசுகளும், (போலி) கம்யூனிச அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது மக்கள் அறிந்ததே.
எட்டாயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு உடைய இந்திய சமுதாயம் அமைதியான சமுதாயம் ஆகும். மக்கள் தங்களிடம் உள்ள சிறு நிலத்தில் உழுது பயிருட்டும், கால்நடைகளை மேய்த்தும், தச்சு, இரும்பு முதலான தொழிலகளை செய்தும் பிறர் சார்பற்று, சுய சார்பில் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வப் போது தன நந்தன், அலாவுதீன், லோடி, அவரங்க சீப், ஆங்கிலேயர்…. போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ நேரிட்ட போதும், அவர்களின் பணவெறி, மத வெறி காரணத்தால் போடப்பட்ட கொடுங்கோல் வரிகளை கட்டிய போதும், தங்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த துண்டு துக்கடா நிலங்களை தக்க வைத்துக் கொள்வதில் ஓரளவு வெற்றி பெற்றனர்.
பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை செய்து மக்களை சுரண்டிக் கொழுப்பதில் நம் நாட்டு “மக்கள் சேவகர்”களுக்கு இணையே இல்லை என்பது யாவரும் அறிந்ததே.
அதிலும் அந்நிய நாட்டு முதலாளிக்கு தரகு வேலை பார்ப்பது என்றால் , டபிள் ஓகே, டிரிபிள் ஓகே தான். எல்லாமே பிரச்சினை இல்லாம பாத்துக்கலாம்.
ஏதாவது முதலாளி வந்து உங்க நாட்டில, மாநிலத்துல நான் தொழில் துவங்குகிறேன் என்றால் ஆளும் சக்திகள் என்ன செய்ய வேண்டும். எங்க மாநிலத்தில் தொழில் துவங்கினால் மாநிலத்தில் வேலை வாய்ப்பு பெருகும் என்ற வகையில் அதை வரவேற்க வேண்டியது அவசியம் தான்.
அந்த தொழிலினால் சுற்றுப் புற சூழலுக்கு மாசு எதுவும் இல்லை என்றால், அந்த தொழில் துவங்க உடனடி அனுமதி அழிப்பது தொழில் வளர்ச்சி பெருக உதவும்.
பெரும் தொழில்களை துவங்க அதிக நிலப் பரப்பு தேவைப் படும் என்பதும் சரியே. ஆனால் அந்த நிலங்களை எப்படி வாங்க வேண்டும்? ஓப்பன் மார்க்கெட்டில் நிலத்துக்கு என்ன விலையோ அந்த விலையை விட அதிக விலை குடுத்தால் மக்கள் தங்கள் நிலங்களை தாங்களே தருவார்கள்.
உதாரணமாக சென்னை அண்ணா நகரில் ஒரு கிரவுண்டு நிலத்தின் சந்தை மதிப்பு 3ரூபாய் கோடி என்றால், அதே நிலத்தை வாங்க ரூபாய் 5 கோடி தருகிறோம் என்றால் அதை விற்பவர் மன மகிழ்ச்சியோடு அதை விற்க முன் வருவார். அதே நிலத்தை வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து விட்டுப் போடா என்று மிரட்டி கட்டாயப் படுத்தினால் அது அநியாய அக்கிரம கட்டப் பஞ்சாயத்து தானே.
இந்த அநியாய அக்கிரம கட்டப் பஞ்சாயத்து வேலையே அரசே செய்யும் போது, அது சட்டத்தைக் காட்டி இது சட்ட பூர்வமானது என மிரட்டி ஏழைகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பஞ்சப் பரதேச நாடோடி ஆக்குகிறது.
இப்படி திக்கற்ற நிலைக்கு மக்கள் வரும்போது அவர்களுக்கு இலவசமாக மிக்சி, டி.வி… இத்யாதிகளை தருகிறோம் என சொல்லி, அவர்களின் வாக்குகளையும் கவர்ந்து விடுகிறது.
இவ்வாறு ஏழைகளை இன்னும் ஏழைகளாக ஆக்கி, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க முடியாமல், அரசாங்கத்தின் தயவில் அடிமையாக வாழும்படி செய்வதுதான் தங்களின் ஆதிக்க அதிகாரத்திற்கு வசதி என்பதை முதலாளித்துவ அரசியல்வாதி, (போலி) கம்யூனிச அரசியல் வாதி … உள்ளிட்ட எல்லா வாதியும் பிளான் பண்ணி கடைப் பிடிக்கின்றனர்.
அதே நேரம் தொழிற்சாலைகள் அமைய வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. இப்போது நீங்களோ , நானோ ஒரு சிறு தொழிலை துவங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஒரு லேத் பட்டறையோ, கால் நடை பரமாரிப்பு தொழிலையோ துவங்க விரும்பினால் அதற்க்கு நிலத்தை நாம் தான் வாங்கிக் கொள்கிறோம்.
அதே போல பெரு முதலாளியும் மக்களிடம் இருந்து நிலங்களை தாங்களே வாங்கிக் கொள்ள முடியும். நல்ல விலை குடுத்தால் மக்கள் அந்த சந்தர்ப்பத்தை விட விரும்பாமல் நல்ல விலைக்கு தங்கள் நிலத்தை விற்பார்கள். தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் கணிசமான தொகையை அதே தொழிற்சாலைக்கு முதலீடாக செய்யும் வாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப் பட்டால், அவர்களுக்கு ஓரளவுக்காவது பாதுகாப்பும், உரிமையும் நிலை நிறுத்தப் படும் .
ஆனால் அரசாங்கம் பெரு முதலாளிகளின் கைத்தடியாக செயல் பட்டு இருபது லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள நிலத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு, அடி மாட்டு விலைக்கும் கீழே முடிக்க உதவுகிறது. இப்படியாக அப்பாவி மேலும் மேலும் சுரண்டப் பட்டு அழிக்கப் படுகிறான்.
இன்றைய நிலவரப் படி அப்பாவி ஒரிசா மக்களின் நிலங்களை மிரட்டிப் பிடுங்கும் வேலையை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஐந்து நாட்களுக்கு பின் என்ன நடக்கும், மக்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வருத்ததுடன் சிந்தித்து பார்க்கிறோம்.
Title:வாழ்வாதார த்தை அழிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரிசா மக்கள் போராட்டம்.
Leave a Reply