Thiruchchikkaaran's Blog

ஆசை இல்லா இதயம் தன்னை, துன்பம் எங்கே நெருங்கும்!

Posted on: June 12, 2011


 எப்போது ஒருவர்,ஒரு பொருளை அடைய வேண்டும், ஒரு அந்தஸ்தை பதவியை  அடைய வேண்டும்,  ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும்… என்றெல்லாம் ஆசைப் பட ஆரம்பிக்கிறாரோ அந்த ஆசையோடு துன்பமும் சேர்ந்து அவர் மனதில் நுழைகிறது.

ஒருவர் எந்த அளவுக்கு ஆசைகளை ஒதுக்கி வாழ்கிறாரோ அந்த அளவுக்கு அவர் மனதில் அமைதி நிலவுகிறது.அமைதியான மனம் ஆனந்தம் அடைகிறது.

ஆசைப் படும் பொருள் கிடைத்தாலும் நமக்கு ஆனந்தம் வருகிறதே என்று தோன்றலாம்.ஆனால் மனம் மகிழ்ச்சிஅடைந்தாலும் சரி, துயரப் பட்டாலும் சரி மனம் எழுச்சியும் தாழ்ச்சி யுமாக பொங்கிய நிலையில் இருக்கிறதே அல்லாமல், மகிழ்ச்சி அடையும் போது மனம் சலனமற்ற அமைதி நிலையில் இருப்பதில்லை.

ஆசைப் பட்ட ஒரு பொருள் கிடைத்த பிறகு மனதின் நிலை என்ன?

அந்தப் பொருளினால் கிடைக்கும் இன்பம் தன்னை விட்டுப் போகாமல் எப்போதும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும் கவலையும் மனதை வாட்ட ஆரம்பிக்கிறது. அந்த இன்பத்தை, பொருளை நிலை நிறுத்திக் கொள்ள செய்ய வேண்டிய வழிகளைப் பற்றிய சிந்தனையில் மனம் செல்லுகிறது. எனவே ஆசைப் படும் பொருள் கிடைப்பதால் மனதில் அமைதியோ, நிலையான ஆனந்தமோ உருவாவது இல்லை.

இந்திய தத்துவம் கடவுளை (இப்போதைக்கு ) மற, மனிதனை (முதலில்) நினை என்ற படி மனிதனின் நன்மைக்கு முக்கியத்துவம்  செயல்படுகிறது.

இந்திய மதங்களான  இந்து, புத்த,  சமண, மதங்கள் யாவும் ஆசையை விடுவதே துன்பத்தை வெல்ல வழி என்னும் தத்துவத்தை உடையதாக உள்ளன.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், “பொருள்களில் பற்று வைப்பதால் ஆசை வருகிறது, ஆசையிலிருந்து கோவம் உண்டாகிறது, கோவத்தினால் மனக் குழப்பம்,மனக் குழப்பத்தினால்  புத்தி நாசம் உண்டாகிறது, புத்தி நாசத்தினால் ஒருவன் முழுதும் அழிகிறான்” என்றார்.

“அர்ஜுனா ஆசையினால் தூண்டப் பட்டே ஒருவன் பாவம் செய்கிறான், ஆசையை விடு” என்றார்.

File:Buddha nobletruths.jpg

“ஆசையே துன்பத்துக்கு காரணம் , ஆசையை வென்றால் துன்பத்தை வெல்லலாம்” ,  என்பது கௌதம புத்தர் தன்னுடைய பகுத்தறிவு ஆராய்ச்சி, தியானம் ஆகிவற்றின் மூலம் தானே இண்டிபென்டன்ட் ஆக கண்டறிந்து வெளிப்படுத்திய அவருடைய முக்கிய கோட்பாடாக உள்ளது.

ஒருவன் வீடற்று   மேலே சூரியன் தகிக்கும் படியாக , பின்னால் அக்னி சுடும்படியாக, குளிர்காலத்தில் பல்லைக் கிட்டும் குளிரில்  வாடும்படிக்கு வெளியில் அலைந்து  திரிந்து பிச்சை  எடுத்து வாழ்ந்தாலும், ஆசை அவனை விட்டுப் போகவில்லையே என்று சுட்டிக்காட்டுகிறார்.  சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்)!

File:Raja Ravi Varma - Sankaracharya.jpg

ஆசையை விடுவது எளிதல்ல , ஆனாலும் பகுத்தறிவு ஆராய்ச்சின் மூலம் நம் வாழ்வை ஆராய்ந்து பார்த்தால், ஆசையை விட அது உதவியாக இருக்கும்.

படிப் படியாக  ஆசைகளைக் களைந்து துன்பத்தில் இருந்து விடுபடுவோம்.

(தொடரும் )

Advertisements

2 Responses to "ஆசை இல்லா இதயம் தன்னை, துன்பம் எங்கே நெருங்கும்!"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

மிகச் சிறப்பாக இருக்கிறது இந்தப் பதிவு.

///ஆசைப் படும் பொருள் கிடைத்தாலும் நமக்கு ஆனந்தம் வருகிறதே என்று தோன்றலாம்.ஆனால் மனம் மகிழ்ச்சிஅடைந்தாலும் சரி, துயரப் பட்டாலும் சரி மனம் எழுச்சியும் தாழ்ச்சி யுமாக பொங்கிய நிலையில் இருக்கிறதே அல்லாமல், மகிழ்ச்சி அடையும் போது மனம் சலனமற்ற அமைதி நிலையில் இருப்பதில்லை.///

அருமையானக் கருத்துக்கள்.

அன்புக்குரிய நண்பர் திரு. தனபால் அவர்களே,

வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: