Thiruchchikkaaran's Blog

மத சகிப்புத் தன்மை இழந்து மத வெறிக் கோட்பாட்டில் சிக்கிய மகா ஜனங்களே ……பகுதி – 1

Posted on: May 8, 2011


இந்த உலகில் மக்கள் படும் பெரும்பாலான துயரங்களுக்கு காரணம் பதவி வெறி, பணவெறி, மத வெறி, இன வெறி, மொழி, வெறி, சாதி வெறி, வர்க்க வெறி, பாலின வெறி… உள்ளிட்ட பல்வேறு வெறி சிந்தனைகள் மக்களின் மனதில் விதைக்கப் படுவதே இதற்க்கு முக்கிய காரணம். சர்வாதிகாரிகளின் கொடுமையால் மக்கள பட்ட கொடுமைக்ளகொஞ்ச நஞ்சம் அல்ல.

இதிலே தன மதம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்ற ஆவேசத்தினால், பிற மத வழிபாடுகளை பார்க்கும் போது வெறுப்பு பொங்கி …அந்த அளவுக்கு கசப்புணர்ச்சி ஏன் வர வேண்டும்?

நீ கடவுளாக கருதுவதை ,  நீ எந்த அளவுக்கு மதிக்கிராயோ, அதே அளவுக்கு தான் அடுத்தவனும் அவன் கடவுளாக கருதுவதை மதிக்கிறான்!

இதைப் புரிந்து கொள்ளும் அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் , நான் சொல்லுறதை  தான் எல்லாரும் தொழ வேண்டும் என்றால், அது எந்த நியாயமும் இல்லாத, நாகரீகம் அற்ற காட்டுமிராண்டி கட்டப் பஞ்சாயத்து முறை என்பது நடு நிலையோடு நோக்கும் எவருக்கும் தெரியும்.

காட்டுமிராண்டியாவது கல்வி அறிவு வளர்ச்சி பெறாத , சிந்தனை முதிர்ச்சி அடையாத காலத்திலேயே வாழ்ந்தவன்.

இப்போது இவ்வளவு கல்வியும், சிந்தனையும் இருக்கும் காலத்திலும், பிறருக்கு உள்ள வழிப்பட்டு உரிமையை, அவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை புரிந்து நல்லிணக்கத்தோடு வாழ்வதுதான் நாகரீகம் என்பதை உணராமல் , பிற மதங்களை சகித்துக் கொள்ள முடியாமல்  இகழ்ந்து, கண்டித்து, மத வெறிக் கருத்துக்களுக்கு கமுக்க ஆதரவையும், வெளிப்படையான ஆதரவை யும் தருகிறாய் என்றால் … மனிதர்களின் உணர்வுகளை , உரிமைகளை புரிந்து கொள்ள தெரியாத உங்களால், நான் சொல்லுற மார்க்கத்தை தான் நீ பின்பற்ற வேண்டும் என்கிற ஆவேசத் துடிப்பு, மத சுதந்திர  அழிப்பு உங்கள் மனத்தை  ஆக்கிரமித்து இருக்குமானால் உங்களால்,  சக மனிதர்களுக்கு ஆபத்து உருவாகிறது என்பதை எல்லோரும் தெரிந்தே உள்ளனர்.

இத்தனைக்கும் நாம் எந்த ஒரு மதத்தையோ, அவர்களின் வழிபாட்டு முறையையோ வெறுக்கவோ இகழாவோ இல்லை. ஒவ்வொரு மதத்திலும் உள்ளநல்ல விடயங்களை பாரட்டுகிறோம். அவற்றில் உள்ள சில கருத்துக்கள் சமூகத்துக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்றால் அவற்றை சுட்டிக் காட்டுகிறோம், அவர்களை சீர்திருத்திக் கொள்ள சொல்லி. அதற்காக எந்த ஒரு மதத்தையும் ஒட்டு மொத்தமாக நாம் குறை சொல்லவில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள். புதன் கிழமையோ,  வியாழக் கிழமையோ, வெள்ளிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோ எந்த தினத்தை வேண்டுமானாலும், புனித நாளாகவோ,ஓய்வு நாளாகவோ கருதிக் கொள்ளுங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள், நாங்கள் உங்களை கேலி செய்யவோ, கனடிக்கவோ, தடுக்கவோ இல்லையே.

நாகரிக சமுதாயம் இவ்வளவு தூரம் நல்லிணக்கத்தைக் கடைப் பிடிக்கும் போது, மத வெறியில் மனம் சிக்கிய நண்பர்களே, நீங்கள் பிற மதங்களை பின்பற்றுபவர்களை பிற மதக் கடவுளர்களை இகழ்ந்து மோதலில் ஈடுபட்டு இரத்த ஆறு ஓட விட்டு மனிதர்களை அழிக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்.

சிந்தித்து பார்த்து நல்லிணக்கப் பாதைக்கு வாருங்கள். எல்லோரும் அவரவர் மதங்களை பின்பற்றிக் கொண்டு, பிறரின் மார்க்கங்களை வெறுக்காமல் நல்லிணக்கத்தில் அமைதியாக  வாழ முடியும்.

Advertisements

1 Response to "மத சகிப்புத் தன்மை இழந்து மத வெறிக் கோட்பாட்டில் சிக்கிய மகா ஜனங்களே ……பகுதி – 1"

//இத்தனைக்கும் நாம் எந்த ஒரு மதத்தையோ, அவர்களின் வழிபாட்டு முறையையோ வெறுக்கவோ இகழாவோ இல்லை. ஒவ்வொரு மதத்திலும் உள்ளநல்ல விடயங்களை பாரட்டுகிறோம். அவற்றில் உள்ள சில கருத்துக்கள் சமூகத்துக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்றால் அவற்றை சுட்டிக் காட்டுகிறோம், அவர்களை சீர்திருத்திக் கொள்ள சொல்லி. அதற்காக எந்த ஒரு மதத்தையும் ஒட்டு மொத்தமாக நாம் குறை சொல்லவில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள். புதன் கிழமையோ, வியாழக் கிழமையோ, வெள்ளிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோ எந்த தினத்தை வேண்டுமானாலும், புனித நாளாகவோ,ஓய்வு நாளாகவோ கருதிக் கொள்ளுங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள், நாங்கள் உங்களை கேலி செய்யவோ, கனடிக்கவோ, தடுக்கவோ இல்லையே.//
நண்பரே
இதைத்தானே ஆதிகாலம் முதல் சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லி கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கீங்க .என்ன ஆச்சு?

அவர்கள் செய்வதை என்னவென்று அறிந்திருக்கிறார்கள்.ஆகவே திருந்த மாட்டார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: