Thiruchchikkaaran's Blog

டெண்டர் விட்டு குழாய் போடுவதுதான் ஒரு ஆன்மீக வாதியின் பணியா?

Posted on: May 3, 2011


சாயி பாபா இவ்வளவு நலத் திட்டப் பணிகளை செய்து இருக்கிறார், அதனால பல மக்கள் பலன் பெற்று உள்ளனர்.

இவ்வளவு நல்லவரைப் போற்றி பாடுவதை விட்டு அவர் ஆன்மீகத்துக்கு என்ன செய்தார் என்று மேதாவி தனமாக காட்டிக் கொள்ள  கட்டுரை போடுகிறார் திருச்சிக்காரன் என்று பக்தர்கள் நம்மை வன்மையாக கண்டிக்கின்றனர்.

இன்னாயா பெரிய ஆன்மீகம் வெங்காயம், ஆன்மீகத்தால இன்னா யூசு, இலவச மருத்துவமனை கட்டினா, நாளைக்கு உனுக்கே கூட பிரீயா  டிரீட் மென் ட் குடுப்பாங்க, புரியுதா என்கின்றனர்.

வழக்கம் போல, புத்தரின் ஆன்மீகம் அசோகரின் மனதில் எழுந்த இரக்கத்துக்கு ஒரு வடிவைக் கொடுக்க வில்லையா? அசோகர் போரையும் நிறுத்தினார், அமைதியை கைக் கொண்டார். குளங்களை வெட்டு வித்தார், சாலைகளைக் கட்டுவித்தார்  சாலையின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வித்தார் , தன மகன் மகேந்திரனையும்…..

யோவ், புத்தர் இன்னொரு ஆளு மனத்தை மாத்தி  குளத்தை வெட்ட சொல்லி கிறாரு. ஆனால் நாங்களே குழாய் போட்டு தண்ணி கொண்டாந்து இருக்கிறோம். அந்த தண்ணியை தான் நீ குடிக்கிற, நன்றி  இல்லாதவன் பா நீ !

மக்களின் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்குவதுதானே ஆன்மீக வதியின் முக்கிய பணி. டெண்டர் விட்டு குழாய் போட வேண்டியது அரசாங்கத்தின் பணி தானே. நாங்க தான் குடி நீர் வரி, சாலை வரி, வீட்டு வரி, வருமான வரி….. இப்படி பல வரிகளை அரசாங்கத்துக்கு கட்டுரோமே அத வச்சு நியாயமா குழாய் போடும் அளவுக்கு சின்சியராக இருக்கும் படி அதிகாரிகளையும் , அரசியல்வாதிகளின் மன நிலையையும் உயர்த்த வேண்டியதுதானே ஒரு ஆன்மீக வாதியின் பணி. அவரே டெண்டர்  விட்டு காண்டிராக்ட் கொடுத்த அது என்ன P.W.D ஆபீசா?

அடப் போய்ய, மக்கள் மனசை எல்லாம் மாத்த முடியாது, அவன் அவன் உருவுன வரைக்கும் இலாபம் னு தான் நினைப்பான், விக்கிற விலைவாசியைப் பாரு , ஒரு ஆரஞ்சு பழம் 25  ரூபாய் !

அப்ப குழாய் போடுறது, இஸ்கூலு கட்டுறது இதான் ஆன்மீகம்கிறியா.

இப்போதைக்கு இதுதான் ஆன்மீகம்,  உனுக்கு தெரிஞ்ச ஆளுங்க யாராவது புத்தர், ஆதி சங்கரர்  விவேகானந்தர் மாதிரி மக்களை மனதில நல்லெண்ண ங்களை, விழிப்புணர்ச்சியை  உருவாக்குபவரு இருந்தா இட்டா, அப்பால பேசிக்கலாம்!

Advertisements

9 Responses to "டெண்டர் விட்டு குழாய் போடுவதுதான் ஒரு ஆன்மீக வாதியின் பணியா?"

வணக்கம் திருசிகாரரே ! இந்தியாவில் அத்தனை சிறப்பான கல்வி கூடங்களும், மருத்துவ மனைகளும் கிறிஸ்தவம் நமக்கு தந்ததாகவும், ஹிந்துக்களுக்கு கொடுக்கும் குணம் ரொம்ப குறைவு என்றும் பரவலான கருத்து திணிக்க பட்டுள்ளது. பெரும்பாலும் ஹிந்து ஆன்மீக பெரியோர்கள் செல்வம் சேர்க்க நினைப்பதில்லை. பணம் சேர்க்காததினால் அவர்கள் கல்வி கூடங்களோ, மருத்துவ மனைகளோ கட்டுவதில்லை. திரு. சத்ய சாய்பாபா அவர்கள் நிறைய பொது சேவைகளை, ஆன்மீகத்தோடு இணைத்து கொடுத்திருக்கிறார். இதனால் நிறைய பேர் நன்மை அடைந்துள்ளனர். ஒரு மத குருவுக்கு இது தேவையா என்றால் – தேவை இல்லை தான். கிறிஸ்தவத்தை அடக்க இவரின் சேவை உதவியாக இருந்தது.

வணக்கம் ராம், வாங்க,

சரியான கிறிஸ்தவ பிரச்சாரத்தை யாரும் குறை சொல்லவில்லை. சரியான கிறிஸ்தவத்தை நானே இங்கே பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறான். ஆனால் கிறிஸ்தவம் என்ற பெ பயரில் மக்களிடம் மத வெறி நஞ்சைக் கலந்து, மத சகிப்புத தன்மையை அழித்து அவர்களை பிற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சி உடையவர்களாக ஆக்கி மதம் மாற்றும் வேலை ஆந்திராவில் ஜாம் ஜாமென்று நடந்தது, நடக்கிறது- கிறிஸ்தவ பிரச்சாரம் என்ற பெயரில் . சாயி பாபா இந்த மத சகிப்புத் தன்மை அழிப்புக்கு எதிராக குரல் எதுவும் குடுத்தாகவோ , செய்ததாகவோ தெரியவில்லை.

பசியோடு இருப்பவனுக்கு சோறுதான் வேணும் முதலில்.பசி தீர்ந்தவன் தான் ஆன்மிக தாகம் கொண்டு தேட ஆரம்பிக்க முடியும். உடம்பை வளர்த்தல் அன்றி உயிரை வளர்க்க முடியாது.திறம்பட மெய்ஞானம் சேரமுடியாது. தண்ணீர் தாகத்தை முதலில் தீர்த்துவிட்டுத்தான் ஆன்மிக தாகத்திற்கு நீர்வார்க்க முடியும்.
சரி ஆன்மிகத்திற்காக அவரை பாராட்டமுடியாது போயினும் ஏன் அவரது மக்கள் சேவையை பாராட்டக்கூடாது. மக்கள் நல்வாழ்வை விட ஆன்மிகம் என்ன பெரிதா? மக்கள் சேவையே மகேசன் சேவை. நர சேவையே naaraayanan சேவை.

சரிதான்,அப்ப, நீங்க நம்ப கலைஞர் ஐயாவையும் கும்பிட ஆரம்பிப்பதே சரி, பல ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்து மக்கள சேவை, மகேசன் சேவை, நர சேவை செய்து இருக்கிறார். அவரும் சாயி பாபாவின் அன்புக்குரிய தோழர்தான்.

ஏன் மத வெறுப்பு கருத்துக்கு எதிராக போராடுபவர் தான் ஆன்மிகவாதியா? தானுண்டு தன் வேலையுண்டு என்று தனக்கு தெரிந்த ஆன்மிகத்தை பயிற்சி செய்பவர் ஆன்மிகவாதியாக இருக்ககூடாதா? இந்து மதத்தில் ஆன்மிக வாதியாக இருக்க இப்படி ஏதாவது கட்டுபாடுகள் உண்டா?
பிற மத ஆன்மிக வாதிகள் வெறுப்பு கருத்துகளை வளர்ப்பதே தன் தொழிலாக கொண்டு வயிறு வளர்ப்பது தாங்கள் அறிந்ததே. அவர்களை காட்டிலும் தன் வழியில் பிறரை புண்படுத்தாது வாழ்ந்து சென்ற அவர் பன்மடங்கு உயர்ந்தவர்தான். மீண்டும் சொல்கிறேன் நான் பாபாவின் பக்தன் அல்ல.
செய்த நன்மைகளை பாராட்டவேண்டியது அவசியம், அதுவும் உள்நோக்கம் இன்றி செய்த பணிகளை நிச்சயம் பாராட்டனும்.

ஆன்மீக வாதி என்றால் புத்தரைப் போல, சங்கரரைப் போல, விவேகானதரைப் போல மற்றவரும் உயர்ந்த மன நிலையை அடையும் படி, வலிமை பெற்ற மனநிலையை பிறர் அடையும் படி செய்ய வேண்டும். இப்ப பில் கேட்ஸ் அதிக தான தர்மம் செய்து, பல மருத்துவ மனைகளை திறந்து காவி துணி கட்டிக் கொண்டு, கையில் இருந்து மோதிரம் தந்தால் அவரையும் புனிதராக கருத நீங்கள் தயாரா?

சாய் பாபாவை யார் கும்பிட சொன்னார்கள்? அவர் செய்த சேவைகள் பாராட்டுக்குரியன என்றுதான் சொல்கிறேன். அரசியல் வாதி கலைஞ்சர் செய்வது எல்லாம் ஓட்டை எதிர்பார்த்து. ஓட்டுக்கு பணம் கூடத்தான் கொடுக்கிறார். அரசாங்கத்தை நடத்தும் அரசனின் கடமை பிரஜைகளுக்கு பாதுகாப்பும் பிற தேவைகளும் வழங்குவது. அதையும் அவர் உள்நோக்குடனும் குடும்பத்தினர்க்கு கிடைக்கும் கமிசனுக்குமாகதான் செய்தார். அவர் சிறந்த அரசன் என்று நீங்கள் நினைத்தால் ஒரு சிறந்த முதலமைச்சர் என்று பாராட்டுங்கள்.
மனிதனை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை.
குருவாக மதிப்பது கூட அவரவர் இஷ்ட்டம்
கும்பிட நினைத்தால் கும்பிடுங்கள்.
சாமியார்களை வணங்குவது எனக்கு ஏற்புடையதல்ல.
அவரின் சேவையை பாராட்டினேனே தவிர அவரை கும்பிடுவது அவரவர் இஷ்ட்டம். மற்ற மத குருக்களை விட நல்ல பண்பாளர் என்ற வகையில் அவர் சிறந்தவர்.
///பசியோடு இருப்பவனுக்கு சோறுதான் வேணும் முதலில்.பசி தீர்ந்தவன் தான் ஆன்மிக தாகம் கொண்டு தேட ஆரம்பிக்க முடியும். உடம்பை வளர்த்தல் அன்றி உயிரை வளர்க்க முடியாது.திறம்பட மெய்ஞானம் சேரமுடியாது. தண்ணீர் தாகத்தை முதலில் தீர்த்துவிட்டுத்தான் ஆன்மிக தாகத்திற்கு நீர்வார்க்க முடியும்.
சரி ஆன்மிகத்திற்காக அவரை பாராட்டமுடியாது போயினும் ஏன் அவரது மக்கள் சேவையை பாராட்டக்கூடாது. மக்கள் நல்வாழ்வை விட ஆன்மிகம் என்ன பெரிதா? மக்கள் சேவையே மகேசன் சேவை. நர சேவையே naaraayanan சேவை./////

பெரியவர்களை, முனிவர்களை வணங்குவது அவர்களின் ஆசியை பெறுவது ஆன்மீகத்தின் ஒரு பகுதி.அதை தவறு என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. பாபா செய்ததில் 0.0000000001 பங்காவது இங்கு கதையளக்கும் மேதாவிகளான நீங்கள் செய்ததுண்டா.

//பாபா செய்ததில் 0.0000000001 பங்காவது இங்கு கதையளக்கும் மேதாவிகளான நீங்கள் செய்ததுண்டா.//

செய்யவில்லை. இந்து மதத்தை வைத்து நாங்கள் இது வரை ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை. அப்படி சம்பாதித்த பணத்தை விட்டு போகவும் போவதில்லை. இந்து மதத்தின் அமைதியான ஆன்மீகத்தை பின்னுக்கு தள்ளி மோதிரம் வாட்சு தரவும் இல்லை.

ஏனெனில் நாங்கள் காதற்ற வூசியும் வாராது காணும் கடை வழிக்கே என்கிற தத்துவத்தின் மூலம், நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவா சுகமா தத்துவத்தின் மூலம், அவ்வையார் சொன்னது போல பாடுபட்டு பணத்தை சேகரித்து, கூடு விட்டிங்கு ஆவிதான் போன பின் யாரோ அனுபவிப்பார் பாவிகாள அந்தப் பணம் தத்துவத்தின் மூலம் இந்து மதத்தை அனுகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: