Thiruchchikkaaran's Blog

பார்ப்பனீய இந்து மதம் !

Posted on: April 21, 2011


இந்து மதம் என்ற பெயர் நடுவிலே வந்தது, ....  பாரஸீகர்
 சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதத்தை 
இந்து மதம் என அழைத்தனர் , இன்னொருத்தன் வச்ச பேரு.... 

அதுனால என்ன? 

ஏம்பா இந்த மதத்துக்கு பேர் எல்லாம் மாத்தி இருக்கு பா.. 
அதனால இந்த
இந்துமதம் என்கிற  ஒண்ணு இல்லைனு 
இன்டெர்நேசனல்  கெஜட்டுல போடுங்கப்பா.

கோட்பாடு என்ன என்று பாருங்க, எந்த பேரில் இருந்தாலும் அதே கோட்பாடுதானே,
அன்று முதல் இன்று வரை சகிப்புத் தன்மையை, பிற மார்க்கங்களை இகழாமல் 
அவற்றை அரவணைக்கும் போக்கை தானே இந்து மத கோட்பாடுகள் சொல்லுகின்றன.  

ஒரு இந்துவின் பெற்றோர் அம்மனையோ, முருகனையோ, கண்ணனையோ… கடவுளாக காட்டி, கும்பிட்டுக்க என்கிறார்கள். தான் காட்டும் கடவுளைத் தவிர பிற வடிவத்தில்  கடவுள் இல்லை என்றோ, வேறு வடிவத்திலோ , வடிவமற்ற முறையிலோ கடவுளைக் கும்பிடக்கூடாது, அப்படிக் கும்பிடும் முறைகளை வெறுத்து கண்டித்து ஒழிக்க வேண்டும் என்கிற சகிப்புத் தன்மை அழிப்புக் கோட்பாட்டை ஒரு இந்து பெறுவது    இல்லை.

File:HinduDevoteeNepal.jpg

இந்து மதத்தின் மிக  முக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத் கீதையில் சொல்லப் பட்ட ஒரு செய்யுளை இங்கே

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்தக் கருத்துக்களைப் பெரும்பாலான இந்துக்கள் படித்து தெரிந்து கொள்வது இல்லை, ஆனால் ஒரு இந்து படிக்காமலே , கேட்காமலே, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறான்.

மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை   என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.

இந்த சிந்தனைகளை ஒருவர் நூல்களைப்  படிப்பதன் மூலம் மாத்திரமே பெற முடியும்  என்று அவசியம் இல்லை.

Advertisements

3 Responses to "பார்ப்பனீய இந்து மதம் !"

அதே தான் தன்னைப்போல் பிறரையும் நேசி என்றுதான் எல்லா மதமும் சொல்கின்றது..

நாம்தான் மதம் பிடித்து இருக்கிறோமே..

சகோ. jmmsஅவர்களே,

கருத்துப் பதிவிற்க்கு மிக்க நன்றி. உலகில் உள்ள எல்லா மதங்களிலும் நல்லிணக்க்த்துக்கான கோட்பாடுகளும் உள்ளன. அவற்றை முன்னிலைப் படுத்தி உலகில் பல்வேறு மதத்தினரும் சுமுகமாக வாழ‌ முடியும் என்ற கோட்பாட்டையே இந்திய சமுதாயம் சொல்லி வருகிறது.

ஆனால் சில மத நூல்களில் சில பல இடங்களில் பிற மதங்களுக்கான சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையிலே , தங்களுடைய மதம் மட்டுமே எல்லொராலும் பின்பற்றப் பட வேண்டும் என்கிற உணர்ச்சியைத் தூண்டும் வகையிலே கோட்பாடுகள் இடம் பெற்று உள்ளன. மத வெறி பாதையில் சென்று விட்ட நண்பர்கள், இத்தகைய கோட்பாடுகளை பிடித்துக் கொண்டு, மத சகிப்புத் தன்மையை அழிக்கும் செயலில் அறிந்தோ அறியாமலோ ஈடுபடுகின்ற்னர்.

எனவே நல்ல கோட்பாடுகளை முன்னிலைப் படுத்தி இணக்கத்தி உருவாக்க முயல்கிறோம்.

தாங்கள் கூறுவது உண்மைதான். இந்துக்கள் இந்து மதம் என்ன சொல்கிறது என்று தெரியாமலேயே அதனைப் பின்பற்றுகின்றனா். கிறிஸ்தவா்களும் முஸ்லீம்களும் தங்கள் குருமார்கள் சொல்லிக்கொடுப்பதை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனரே தவிர பைபிளிலும் குரானிலும் என்ன சொல்லியுள்ளது என்று புரிந்து கொள்ளாமல் தங்களை தவறாக வழிநடத்தும் போதகா்களை நம்புகின்றனா். இவ்விரு மதங்களின் போதகர்களும் பிற மதங்களை மதிக்காதவாறு மக்களை திசைதிருப்பி மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்கின்றனா்.

அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு பாஸ்டர் குரானை எரித்ததற்கு ஆப்கானிஸ்தானில் 20க்கும் மேற்பட்டவா்களை இனிய இஸ்லாம் மார்க்கத்தினா் கொன்று தள்ளியுள்ளனா். இங்கே ராமரையும் விநாயகரையும் செருப்பால் அடித்தவா்களையும் ஆதரித்துக்கொண்டு இருக்கிறொம். இப்போது கேரளாவில் இந்துக்கள் ஐம்பது சதவீதமாக குறைந்து விட்டார்களாம். இனிமேல் கேரள இந்துக்கள் அகதிகள்தான். அங்கே கம்யுனிசமும், காங்கிரசும் தீவிரவாத இயக்கங்களைக் கண்டுகொள்ளாமல் வளர்த்து விட்டுள்ளது.

நம் டிவி சேனல்களும் பத்திரிகைகளும் இந்துக்களுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இந்துக்கள் இனிமேலாவது விழிப்புணா்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: