Thiruchchikkaaran's Blog

இந்துத்துவம் பற்றி தெரியாத இந்துத்துவவாதி திருச்சிக்காரன் (பொய்களில் வல்லவர்) / திருச்சிக்காரன் தலையில் கந்தர்வன் குட்டு

Posted on: April 19, 2011


அன்பு சகோதரர் அசோக் குமார் கணேசன் நம்மைப் பற்றி சகோ. சில்சாம் தளத்திலே எழுதியதை இங்கே கட்டுரையாக தந்திருக்கிறோம்:
//
Title: இந்துத்துவம் பற்றி தெரியாத இந்துத்துவவாதி திருச்சிக்காரன் (பொய்களில் வல்லவர்) / திருச்சிக்காரன் தலையில் கந்தர்வன் குட்டு 

நண்பர்களே,
    சிலகாலம் முன்பு, திருச்சிக்காரன் தலத்தில் “மறுபிறப்பு கொள்கை” எவ்வளவு நியாயமானது, அறிவியல் ரீதியானது என்றெல்லாம் பிதற்றி  இருந்தார்.
சில ஜால்ராக்களும் அவருக்கு “ஆமாஞ்சாமி” போட்டார்கள். இதற்கிடையில் ஒருவர், திருச்சிக்காரனுக்கு எல்லாம் தெரியும்  என்று  நம்பிக்கொண்டு,  நம் தளத்தில் அந்த சமயத்தில் நாம் வெளியிட்டிருந்த  “இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? ” என்ற கட்டுரையை காட்டி மஹாவிஷ்ணுவை இந்த கிறிஸ்துவர்கள் கேட்டவன் என்று கூறி, மேலும் அவர் துளசியை கற்பழித்தார் என்று சொல்கிறார்களே,இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்க . திருச்சிக்காரனும், தன் வழக்கமான பாணியில் மொக்கையாய், தான்தொன்றிதனமாய், இந்துத்துவத்திற்கு  சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்.அவர் செய்வது விதண்டாவாதம் என்று புரியவைக்க நாம் எவ்வளவோ  முயன்றோம், வழக்கம் போல் அவர் அறிவுக்கு ஏறவேயில்லை. ஏதோ,நமக்கு இந்துத்துவம் பற்றி ஒன்றும் தெரியாதது போலவும் (நமக்குகொஞ்சம் தெரியும்ங்க), அவருக்கு அனைத்தும் அத்துபடி போலவும் (பொய்களை வைத்து ) வாதாடினார். நமக்கு விதண்டாவாதம்  பிடிக்காத  காரணத்தால், அவற்றை விட்டுவிட்டோம்.
   இப்போது இன்னொரு இந்துத்துவவாதியாகிய அவர் நண்பர் கந்தர்வன். திருச்சிக்காரனை பிடித்து எகிறுகிறார்.திருச்சிக்காரன் ஒரு புளுகு மூட்டை எனவும், தான் ஒன்றும் கற்றறியாதவர் என்றும், நிரூபிக்கிறார். எந்தவித உண்மையும் இல்லாமல் எப்படி திரும்ப திரும்ப ஒன்றையே கூறி, விவாதங்களை விதண்டாவாதமாக்குகிறார் என்று பாருங்கள்.
  இப்போது, திருச்சிக்காரனுக்கு அவர் நண்பர் கந்தர்வன் கொடுத்த குட்டை பார்க்கலாம், அதன் கீழ், இந்த குட்டை வாங்க திருச்சிக்காரன் என்ன செய்தார் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்காரரே,

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

மேற்கண்ட கொடுமையை இன்றைக்குத் தான் பார்க்க நேர்ந்தது.

“நாராயண பரம் பிரம்மா தத்வம் நாராயண பர:”, “விச்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும்”, “தத் விஷ்ணோ: பரமம் பதம்” முதலான சுருதி வாக்கியங்களைக் கேட்டிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.

புருஷோத்தமன் நாராயணன் அன்றி வேறு யார்? சங்கரருடைய கௌடபாதீய (மாண்டூக்ய) காரிகா பாஷ்யத்தை எல்லாம் நீங்கள் படித்திருப்பீரா என்பது தெரியவில்லை. அதில் நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள மங்கள சுலோகத்தில்“த்விபதாம் வரம்” என்று வருவதை “புருஷோத்தமன்” என்று சங்கரர் பாஷ்யம் செய்து, “நாராயணன் என்ற பெயரை உடைய கடவுள்” என்று அறுதியிடுகிறார்.

“ஹரிர் யதைக: புருஷோத்தம ஸ்ம்ரிதௌ” என்று ரகுவம்சத்தில் காளிதாசனும் கூறுகிறான். இதற்கு அர்த்தம், “ஹரி ஒருவனே புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறான்” என்பது. இதையெல்லாம் கண்ணிருந்தும் காணாமல் இப்படி எழுதிகிறீரே! அத்துடன் ஒருபக்கம் சமரசம் போதித்துவிட்டு இன்னொருபக்கம் “நாராயணன் முழுமுதற் கடவுளாகக் கருதமுடியாது” என்று எழுதலாமா?

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

சுத்தம்! அர்ஜுனன் கிருஷ்ணனை “விஷ்ணு”, “கேசவன்”, “ஹரி”, “அச்யுதன்” என்றெல்லாம் கூறுகிறார். சஞ்சயரும் கிருஷ்ணனை விஷ்ணு என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். ஆதி சங்கரரும் கீதா பாஷ்யத்தில் கிருஷ்ணரை “ஆதி கர்த்தா நாராயணன் எனப்படும் விஷ்ணு” என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். இதெல்லாம் தெரியாது போலும்.

அது சரி, பகவத் கீதை மகாபாரதத்தின் பகுதி தானே? மகாபாரதத்தில் எத்தனை இடங்களில் நாராயணன் தான் கிருஷ்ணனாக அவதரித்தான் என்று கூறப்பட்டிருக்கிறார் என்று தெரியுமா?

ராமாயணத்தில் வால்மீகி மிகத் தெளிவாக ராமன் விஷ்ணுவின் அவதாரமே என்று கூறுகிறார் (பால காண்டம், யுத்த காண்டம் மட்டுமல்ல. அயோத்தியா அகண்டத்திலும் உண்டு). கம்பரைக் கேட்கவே வேண்டாம், அவர் காவியம் முழுவதிலும் திருமால்/நாராயணன்/விஷ்ணு தான் ராமனாகவும் பிறந்தார் என்று கூறியுள்ளார்.

சங்க இலக்கியங்களிலும் திருமால் தான் கண்ணனாக அவதரித்தார் என்று வருகிறது. சிலப்பதிகாரத்திலும்,

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

என்று வருகிறதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

எந்த கவியும், எந்த பாஷ்யகாரரும், எந்த ஆச்சாரியாரும் எங்கு தேடினாலும் “இராமனும் கண்ணனும் விஷ்ணுவின் அவதாரமே” என்பதைக் கூறாமல் விடுவதில்லை. நம் நாட்டில் எந்த இலக்கியம், சிற்பம் முதலியனவற்றை எடுத்துக்கொண்டாலும் அதில் நாராயணன் தான் கண்ணனாகவும் இராமனாகவும் அவதரித்ததாகவும் உள்ளது.

இதை எல்லாம் காணாமல் ஏதோ “ஆராய்ச்சி” செய்கிறேன் என்று கண்ணனையும் இராமனையும் விஷ்ணு/நாராயணரின் அவதாரம் அல்ல என்று கூறுவது எவ்வளவு பேதைமை!

அன்புக்குரிய திரு. கந்தர்வன் அவர்களே,

இந்துக்களை பொருத்தவரையில் காளி, துர்க்கை, பாலாஜி, முருகன், ஐய்யப்பன், விநாயகர் … இப்படி அன்புடன் வழிபடும் தெய்வங்கள் உண்டு. இதிலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரில் விஷ்ணு, சிவன் ஆகியவர் சிறப்பாக வழி படப் படுகின்றனர்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்த்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடுப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடு ப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். எந்த தெய்வத்தையும் நாம் இகழவில்லை. விஷ்ணு சந்நிதியில் நீந்கள் ஒரு அங்க பிரதக்ஷிணம் செய்தால் நான் இரண்டு முறை செய்ய தயார் என்று முன்பே சொல்லி இருக்கிரோம்.

மேலும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஆராயவும், இல்லை என மறுத்து சொல்வதையும் இந்து மதம் தடுக்கவில்லை.

திருச்சிக்காரன் அவர்களே,

நான் மதநல்லிணக்கத்திற்கோ ஒற்றுமைக்கோ எதிராக ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் கூறிய இரண்டு (மன்னிக்கவும் – அபத்தமான, உண்மையற்ற) செய்திகளைத் தான் எதிர்க்கிறேன்.

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

இதைத் தான் வாபஸ் வாங்கிக்கொள்ளச் சொன்னேன்.

திரு. கந்தர்வன் அவர்களே, இந்த வாக்கு வாதம் தேவை இல்லாதது. இதை நாம் ஏற்க்கனவே விவாதித்த்து இருக்கிறூம்.

கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

இராமரை பரப் பிரம்மத் தின் வடிவம் என்றே துளசி தாசர், சங்கரர், தியாகராஜர் ஆகியோர் பாடுகின்றனர். நம்மப் பொருத்த வரையில் நாம் எந்தக் கடவுளையும் இகழவில்லை. எந்தக் கடவுளையும் பார்க்கவும் இல்லை.

கடவுள் எந்று ஒருவர் இருந்தால் அவர் சீதையாக , அனுமனாக, நளனாக , குகனாக வந்திருந்தால் அது அந்தக் கடவுளுக்கு தான் பெருமை. சீதையோ, இலக்குவனோ, பரதனோ, அனுமனோ… கடவுளாக இருப்பதாக இருந்தால் அந்த கடவுள் பட்டததினால அவர் களுக்கு புதிய சிறப் போ, பெருமையோ இல்லை.

// கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

திருச்சிக்காரரே,

கீதையை பிரமாணமாக எடுத்தால் மகாபாரதம் முழுவதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் – ஒத்துக் கொள்வீர் என்று நினைக்கிறேன்.

“ஏஷ நாராயண ஶ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: |
நாகபர்யங்கம் உத்ஸ்ரிஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் ||”

என்பது பகவத் கீதையை ஒரு பகுதியாகக்கொண்ட மகாபாரத சுலோகம். இதன் அர்தம், “இந்த ஶ்ரீமன் நாராயணன் பாற்கடலில் இருப்பவன். தன்னுடைய நாகப் படுக்கையை விட்டு மதுரா நகரத்திற்கு வந்துள்ளான்” என்பது. இதை இடைச்செருகல் என்று தள்ள முடியாது, ஏனென்றால் ராமானுஜர் கீதா பாஷ்யத்தில் இவ்வாக்கியத்தை மேற்கோளாக எடுத்துள்ளார்.

அத்துடன் கீதையின் முதல் அத்தியாயத்திலேயே அர்ஜுனன் கிருஷ்ணனை “மாதவன்” என்று அழைக்கிறான். கிருஷ்ணனுடைய சங்கு பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது. இதெல்லாம் பாற்கடல் விஷ்ணு இல்லாமல் வேறு யார்?

அன்புக்குரிய சகோதரர் திரு. கந்தர்வன் அவர்களே,

பகவத் கீதை என்றால் பகவானின் பாட்டு, பகவானின் குரல் என்று பொருள் என்கிறார்கள்.நீங்களோ வேறு யாரோ கிரீஷ்ணறை நாராயணனின் அவதாரம் எனக் கொண்டால், அப்படிக் கருதுவதற்க்கு உங்களுக்கு உரிமை உண்டு. சமததுவ வீரர், மஹா ஸ்ரீமன் இராமனுஜாருக்கு என் வணக்கங்கள்

 
The following were the old conversations, which led to the above discussion between Mr.Thrichy and Mr.Gandharvan
SATHESH says:
//விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். //
ஒரு சின்ன வேண்டுகோள் துளசி பற்றி இப்படி ஒரு இழித்துரை தயவு செய்து இது சம்பந்தப்பட்ட புராண கதையை விளக்குங்கள்,இதனை பற்றி நான் அறிதிருக்கவில்லை.

இந்த‌ துள‌சி என்று சொல்ல‌ப் ப‌டுவ‌து நாம் ப‌ல‌ரும் அறிந்த‌ வ‌கையிலே ப‌ல‌ ம‌ருத்துவ‌ குண‌ ங்க‌ளை உடைய‌ ஒரு சிற‌ந்த‌ தாவ‌ர‌மே. அது பெண்ணாக‌ இருந்திருந்தால் இந்த‌ க‌ற‌ப்ப‌லிப்பு நிக‌ழ்வு உண்மையாக‌ இருந்திருந்தால் அதை செய்த‌வ‌ர் யார‌க‌ இருந்தாலும் மூர்த்தியாக‌ இருந்தாலும் ம‌னித‌னாக‌ இருந்தாலும் நாம் அதைக் க‌ண்டிக்கிறோம், எதிர்க்கிரோம்.ஆனால் உண்மையா என்று ஆராய‌ வேண்டும். க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ இய‌லாது. இவ‌ர்க‌ள் வேத‌த்திலே இந்த‌ நிக‌ழ்வு இருக்கிர‌து என்று சொல்கிரார்க‌ள். நாமும் ரிக், ய‌ஜுர், சாம‌, அத‌ர்வ‌ண‌ வேத‌ங்களில் தேடியும் கிடைக்க‌வில்லை. ப‌க‌வ‌த் கீதையிலும் இல்லை.

தெளிவாக‌ இந்த‌ அதிகார‌ம், இத்தனாவ‌து சொல் என்று குறிப்பிடாம‌ல் சும்மா பாட்டி வ‌டை சுட்டாங்க‌, காக்கா வ‌ந்த‌து என்ப‌து போல‌ ஜ‌லேந்திர‌ன் என்ரு ஒருவ‌ன் இருந்தானாம் என்று எழுதி உள்ள‌ன‌ர். என‌வே எங்கே இருக்கிற‌து என்ப‌தை தேடி நாம் ஆராய‌ வேண்டும். ஆனாலும் இது ஒரு முக்கிய‌ விட‌ய‌ம். நாம் நிச்ச‌ய‌ம் இது ப‌ற்றி விவாதிப்போம். விரைவில் க‌ட்டுரை வெளியிட‌ப் ப‌டும்.க‌ற்ப்ப‌லிப்பு த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.

Ashok kumar Ganesan says:

Padma purana is one of the major eigteen puranas of Hinduism. And the Padma purana talks about Tulsi (Vrinda) Story.

The below paragraph I copy and paste it from Wikipedia:

According to Hindu mythology, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu – the preserver in the Trinity – to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva. Vrinda cursed Vishnu to become black in colour and he would be separated from his wife. Thus, he was transformed into the black Shaligram stone and in his Rama avatar, his wife Sita was kidnapped by a demon-king and thus separated from him. Vrinda then burnt herself on her husband’s funeral pyre or immolated herself due to the shame. The gods or Vishnu transferred her soul to a plant, henceforth which was called as Tulsi. As per a blessing by Vishnu to marry Vrinda in her next birth, Vishnu in form of Shaligram – married Tulsi on Prabodhini Ekadashi. To commemorate this event, the ceremony of Tulsi Vivah is performed.[3][4][6]

//த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.//
Kandiyungal.

இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது.

ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த ஸ்மிருதி வகையை சேர்ந்ததே ஆகும்.

இதில் ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது.  இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது. 

இந்த துளசி என்பது ஒரு தாவரம் ஆகும். அது பூசனைக்கு பயன் படுத்தப் படும் பொருள்களில் முதன்மை வகிக் கிறது. அது பல மருத்துவ குணங்களை உடையது. அது மிகவும் புனிதமாக கருதப் படுகிறது என்பதும் உண்மையே.

இப்போது நீங்கள் சொல்லும் படிக்கான விடயத்திற்கு வருவோம்.

பிருந்தா என்பவர் ஜலேந்திரன் என்பவற்றின் மனைவி என்றும், அவரின் கர்ப்பொழுக்க வலிமையால் ஜலேந்திரனை யாரும் வெல்ல முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதிலே ஜலேந்திரன் என்பவர் பலரையும் தொல்லைப் படுத்தி வந்ததால் அவரை வென்று அழிக்க வேண்டிய கட்டாயத்தில் விஷ்ணு அல்லது நாராயணன் என்று சொல்லப் படுபவர் இருந்ததாக சொல்லப் படுகிறது.

இதற்காக அவர் ஜலேந்திரன் போல வேடமிட்டு துளசியை ஏமாற்றிக் கரப்பளித்ததாக சொல்லப் படுவது உண்மையானால பரவாயில்ல வேறு என்ன பண்ணுவாரு பாவம் என்று விட்டு விட முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே.

இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். யாருக்கும் அஞ்ச வேண்டியவோ, வேடம் போட வேண்டியவோ அவசியம் இல்லாத அளவுக்கு வலிமையும் முழு கண்ட்ரோலும் உள்ளவராகவே சொல்லப் படுகிறார். எல்லாமே அவராக இருப்பதாக சொல்லப் பட்டு உள்ளது. அவர் அவ்வப்போது (ஒவ்வொரு யுகத்திலும்) அவதாரங்கள் எடுப்பதாகவும் பகவத் கீதை சொல்கிறது.

(தொடரும்)

Ashok kumar Ganesan says:

அடுத்தவன் மனைவியை, அவள் புருஷனின் வேடமணிந்து, கற்பழித்து, அவளை தற்கொலைக்கு தூண்டியது பேய்தனமா? தெய்வீகமா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் திருச்சிக்காரன்.

இதுல என்ன அண்ணனே மன சாட்சி, நாம் தான் தவறு என்று சொல்லி இருக்கிறோமே. நாம அது சரி என்று சொன்னால் தானே மனசாட்சியை கேட்க வேண்டும். நம்முடைய தெளிவான பதிலை ஏற்க்கனவே சொல்லி இருக்கிறோம். இந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்குமானால், அது ஒரு தவறு, குற்றம், அதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது என்பதை திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம்.

நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் தானே அவர் இனவாதம் செய்யலாம், இனப் படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தலாம், ஒரு இனத்துக்கு தான் முன்னுரிமை என்று சொல்லாலாம் , எல்லாம் சரிதான் என்று சொல்லுபவர் அல்ல நான். துளசியார் ஏமாற்றிக் கற்பழிக்கப் பட்டு இருந்தால் அது தவறுதான், அப்படி செய்தவர் மனிதராக இருந்தாலும், அரக்கராக இருந்தாலும், தேவராக இருந்தாலும் அது தவறுதான், வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு நான் சொல்லும் இன்னொரு தகவல் என்ன என்றால், இந்த நாராயணர் என்று சொல்லப் படுபவர் இந்து மதத்தின் முக்கியக் கடவுளாக வோ, ஆதி கடவுளாகவோ சொல்லப் பட்டதாக இல்லை. இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாராயணர் முக்கியமாக வணங்குகின்றனர் என்பது உண்மையே.

ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை. கீதையில் வைகுந்தம், பாற்கடல்… பற்றி எல்லாம் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அதே நேரம் நாராயணர் என்று சொல்லப் படுபவர் விருந்தா எனப் படும் பெண்ணை ஏமாற்றிக் கரப்பளித்தார் என்று சொல்லப் படும் ஒரு குற்றச் சாட்டு அது உணமியா என்று தெரியவில்லை, புனைவாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அது உண்மையாக இருந்தால் கண்டிக்கிறேன் , எதிர்க்கிறேன்.

Ashok kumar Ganesan says:

நான் கேட்டது ஒரு மார்க் கேள்வி. பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் “அசுரத்தனமா” அல்லது “தெய்வீகமா”? நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைப்பது ஏனோ?

ஒரு ஆராய்ச்சி என்று வரும் போது நம்முடைய் கருத்துக்களை விளக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. ஒற்றை வார்த்தையிலோ, வரியிலோ பதில் சொல்ல இது என்ன கட்டைப் பஞ்சாயத்தா?

ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து அது சரியா இல்லையா, என்று சொல்லுகிறோம்.

ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து அதன் மீதான கருத்தை முன் வைக்கிறோம்.

முதலில் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வேதங்களில் இருக்கிறது என்றால் அதை ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வேதங்களில் இருக்கிறது என்று சொல்லி விட்டு புராணத்தை எடுத்துக் காட்டுகிறார்கள. இவரக்ள எந்த விஷ்ணுவை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள வாழ்ந்த காலத்தில் துளசி என்ற பெயரில் ஒரு பெண் வசித்து இருக்கக் கூடும். விஷ்ணு என்று ஒரு அரசன் ஆட்சி செய்து இருக்கக் கூடும். அல்லது இவர்கள சொல்லும் விஷ்ணு எனப் படுபவர், வைகுந்தத்தில் வாசம் செய்பவர் என சொல்லப் படும் நாராயணர் என்று இருந்தாலும் , அவர் இப்படி கற்பழிப்பு செயலில் ஈடு பட்டு இருந்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இன அழிப்பு செய்தாலும் பரவாயில்லை, ஒரு இனத்தை இரட்சிக்க வந்தேன் என்று சொன்னாலும் பரவாயில்லை என்று கை கட்டி, வாய் பொத்தி மண்டியிடவில்லை நாம்.

Ashok kumar Ganesan says:

ஐயா,
நான் கேட்கும் கேள்வி பத்மபுராணத்தில் வரும் கதாப்பாத்திரத்தை பற்றியே. பத்மபுராணம் உண்மையா என்று கேட்கவில்லை. அல்லது அதில் வரும் விஷ்ணுதான் நாராயணனா என்று கேட்கவில்லை. எதற்க்காக நீங்கள் இப்படி மழுப்புகிறீர்கள். நேர்மையான மக்கள் இப்படி மழுப்பவேண்டிய அவசியம் இல்லையே.

பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் செய்தது அசுரத்தனமா அல்லது தெய்வீகமா? உண்மை சுடும் என்று பயமாய் இருந்தால், பதில் அளிக்க வேண்டாம்.

அசோக்,

இந்த கேள்விக்கு தெளிவான பதில் அளித்தாகி விட்டது. ஏமாற்றிக் கற்பழிக்கும் கொடும் செயலை செய்தது யாராக இருந்தாலும், அது ஒரு அயோக்கிய கொடூர செயலே. அதற்கு தக்க தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இதிலே உண்மை சுட என்ன இருக்கிறது?

Ashok kumar Ganesan says:

அப்போ இந்த விஷ்ணு செய்தது, அரக்கதனம்தான்னு ஒத்துக்கிட்டீங்க.
அதைத்தாங்க நிறைய சுவிஷேஷர்களும் சொல்லறாங்க. அவங்க இதை சொல்ல தேவை இல்லைதான், ஆனாலும் அவங்க அப்படி சொல்றது தப்புன்னு தெரியலை. இப்போ பாருங்க நீங்க கூட இந்த விஷ்ணுங்கரவரு செய்தது தப்பு, கண்டிக்கதக்கதுன்னு சொல்லறீங்க.

விஷ்ணு என்பவர் மீது குற்றச் சாட்டு வைக்கப் பட்டு உள்ளது. அது உண்மையா என்று பார்க்க வேண்டும். உண்மையாக இருந்தால் தவறுதான். இது காரண காரியத்தின் அடிப்படையில் சொல்லப் படுவது. எந்த விதக் காரணமும் இல்லாமல் பிற மதங்களின் மீது உள்ள வெறுப்பு உணர்ச்சி காரணமாக , தங்களுடைய மத வெறி காரணமாக பிற மதங்களின் தெய்வங்களை இகல்கினறனர். சரஸ்வதி தேவி விக்கிரக ஆராதனையில் எந்த தவறும் இல்லை. சரஸ்வதியரும் எந்த தவறும் செய்ததாக இல்லை. அவரை வணங்குபவரும் நல்ல எண்ணங்களையே அதனால் பெறுகின்றனர். ஆனால் நீங்கள் குறிப்பிடும் சுவிசெசகர் இதையும் கண்டிக்கின்றனர். அது ஏன்?

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=37546748&p=3

Advertisements

3 Responses to "இந்துத்துவம் பற்றி தெரியாத இந்துத்துவவாதி திருச்சிக்காரன் (பொய்களில் வல்லவர்) / திருச்சிக்காரன் தலையில் கந்தர்வன் குட்டு"

SATHESH says:
2:07 பிற்பகல் இல் செப்டம்பர் 15, 2010
//Jalandara was married to Tulasi devi and drew strength from her purity and chastity. So firm was her chastity that even Lord Shiva could not defeat Jalandara in battle and all the demigods went to Lord Vishnu for help.

At this time, Lord Vishnu went to Tulasi devi assuming the form of her husband, Jalandara. When Tulasi devi greeted Him, thinking Him to be her husband, her chastity was momentarily broken. Taking advantage of this the demigods killed Jalandara. //
http://www.salagram.net/parishad95.htm

இந்த தளத்தில் விஸ்ணு கற்பழித்ததாக கூறவில்லை.

நீங்கள் விக்கிபிடியாவை ஆதாரமாக கொண்டு விஷ்ணுவை துற்றவேண்டாம். பத்ம புராணத்தில் நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு எந்த பகுதியில் உள்ளது என்று அந்த வரிகளுடன் கூறவும்.
நீங்கள் எப்போதும் நீங்கள் கேட்கும் கேள்வியை மட்டும் சிலசம் தளத்தில் போட்டு மகிழ்வது எப்போதும் உங்களுக்கும் சில்சமுக்கும் வழக்கம்.அதற்கு கீழே நான் கொடுத்த பதிலை நீங்கள் கவனிக்க வில்லையா? சிலசம் தளம் போல வேறு பல தளங்கள் இந்துக்களை இந்து புராணங்களை திரித்து கூறுவதற்கு உள்ளன அவற்றில் ஒன்றிலுள்ள திரிப்புகளை கொண்டு வந்து கொட்டி விட்டு அதற்கு பின் வரும் பதில்களை கண்டுகொள்ளாமல் மீண்டும் விஸ்ணு கற்பழித்தார் என்றே கூவி கொண்டிருந்தாள் என்ன அர்த்தம்.
மேலும் பிரமாண்ட புராணத்திலும் பத்ம புராணத்திலும் அய்யப்ப சரிதம் உள்ளதாக விக்கியில் மேற்கோள் உள்ளதாக கூறுகிறீர்கள் இரண்டையும் தேடிப்பார்த்தும் ஐயப்பனின் பிறப்பு பற்றி அவற்றில் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் இந்த கழிசடை விக்கிபிடியாவை அது போன்ற பிற கற்பனாபிடியாவை ஆதாராமாக வைத்து கொண்டு சிவனையும் விஷ்ணுவையும் பற்றி இல்லாத கட்டுகதைகளை அள்ளி விடாதீர்கள்

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; வாசகப் பெருமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு நாம் எந்தவொரு தளத்திலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட வரியை மேற்கோள் காட்டி எழுதினாலும் அதற்குரிய தொடுப்பைக் கொடுத்து வருகிறோம்;இதனால் வீணான குழப்பங்கள் தவிர்க்கப்படுகிறது;எனவே தாங்களும் தயவுகூர்ந்து அந்த வழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டுகிறேன்;குறிப்பிட்ட இந்த கட்டுரையின் பின்னணியிலிருக்கும் நண்பர் அசோக்குமாரின் கருத்துக்கள் தொடரும் தொடுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=37546748&p=3

Dear Bro. Chillsam,

The reference has been already quoted in the main article .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: