Thiruchchikkaaran's Blog

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!

Posted on: April 12, 2011


இராமன் இந்தியாவின் உதாரண புருஷன். இராமனின் கொள்கைகள்   இந்திய சமூகத்தின் அடிப்படையாக இருக்கின்றன.

இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ இராமனின் கொள்கைகளால் உந்தப்பட்ட குண நலன்களை உடையவராக இருக்கின்றனர்.

சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளில் சொல்வது என்றால்,

”இராமர் வீர காலத்தின் இலட்சிய புருஷர்,

சத்தியம் மற்றும் ஒழுக்கத்தின் திரண்ட வடிவம்,

லட்சிய மகன்,

லட்சியக் கணவன்,

லட்சியத் தந்தை,

இவைகளுக்கு மேலாக லட்சிய அரசன்!”.

File:Burmese Ramayana dance.jpg

பதவி என்பது தோளிலே போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை செய்து காட்டியவர் இராமர்.

தனக்கு என எதையும் அவர் கோரவில்லை.

வெல்லும் வலிமை இருந்தும் , விட்டுக் கொடுத்து தியாகம் செய்த அவரின் கொள்கையும் , செயல் பாடும் உலகில் அமைதியையும், மக்களின் மனதில் அன்பையும் உருவாக்கும் தன்மை உடையனவாக உள்ளன.

உலகின் மிகப் பழமையான இலக்கியமாக இராமனின் வாழ்க்கை காவியம் உள்ளது.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் தாய்லாந்து, பர்மா, மலேசியா, இந்தோனேசியா…….. உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் இராமரின் வாழ்க்கையானது இசையாக, நாடகமாக சொல்லப் பட்டு வருகிறது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில்  இராமரின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகள் இராமரின் பெயராலே  பரப்பப் பட்டும் ,  செயல் படுத்தப் பட்டும் வருகின்றன.
எனவே இராமரின் சரியான் கொள்கைகளை எடுத்து சொல்ல வேண்டியது நம்முடைய கடமை ஆகிறது.  இராமரின் கொள்கைகளை விளக்கும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்திலே  வெளியாகும்.
Title: ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!
Advertisements

1 Response to "ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!"

//////ஆனால் இன்றைய கால கட்டத்தில் இராமரின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகள் இராமரின் பெயராலே பரப்பப் பட்டும் , செயல் படுத்தப் பட்டும் வருகின்றன.
எனவே இராமரின் சரியான் கொள்கைகளை எடுத்து சொல்ல வேண்டியது நம்முடைய கடமை ஆகிறது. இராமரின் கொள்கைகளை விளக்கும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்திலே வெளியாகும்/////

good thing, awaitting for it

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: