Thiruchchikkaaran's Blog

ஆன்மீகம் மக்களை துன்பத்தில் இருந்து மீட்டு அவர்களை உயர்த்த உதவி செய்கிறதா? ஆன்மீகம் என்பது என்ன? பகுதி- 3

Posted on: April 11, 2011


File:Swami Vivekananda Jaipur.jpg

1897ம் வருடம்,  பிப்ரவரி மாதம் 9ம் நாள்,  சென்னை விக்டோரியா ஹாலில் சுவாமி விவேகானந்தர்  “மை வே ஆப்  கேம்பைன் (My  way  of  Campaign) என்ற தலைப்பில் நிகழ்த்தியஉரையின் ஒரு பகுதி:

எல்லோரும் தேசப் பற்று பற்றி பேசுகிறார்கள். நானும் தேசப் பற்றில்

நம்பிக்கை உள்ளவன்,தேசப் பற்றைப்  பற்றி எனக்கொரு சொந்தக்

கருத்தும் உண்டு.

எந்த மகத்தான் சாதனைகளுக்கும் மூன்று விசயங்கள் அவசியமானவை.

முதலில் இதயபூர்வமான உணர்ச்சி.  அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன

இருக்கிறது. அது சிலஅடிகள் செல்லும், பிறகு நின்று விடும்.ஆனால்

இதயத்தின்மூலம் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை

எல்லாம் அன்பு திறக்கிறது.

எனவே உணர்ச்சி கொள்ளுங்கள். என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே,

வருங்கால தேசபக்தர்களே, நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா?

தேவர்கள மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானு கோடி பேர் மிருகங்களுக்கும்  அடுத்த நிலையில்

வாழும் கொடுமையைஉணர்கிறீர்களா?

பட்டினியால் இன்று லட்சக்  கணக்கானோர் வாடுவதையும்,

காலங்காலமாக லட்சக்  கணக்கானோர் பட்டினியால் துடிப்பதையும்

உணர்கிறீர்களா?

இந்த நாட்டின் மீது ஒரு கரிய மேகம் போல அறியாமை கவிந்துள்ளதை

உணர்கிறீர்களா?இந்த உணர்ச்சி உங்களை அமைதி இழந்து தவிக்கச் செய்கிறதா?

இந்தஉணர்ச்சி உங்கள் இரத்தத்தில் கலந்து, உங்கள் நாடி நரம்புகள்

தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா ?

இது உங்களை ஏறக் குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா?

உங்கள் பெயர்,உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் , சொத்து,

ஏன் உங்கள் உடம்பை கூடநீங்கள் மறக்கச் செய்யும் அளவுக்கு உங்களின்

கோடானு கோடி  சகோதரர்களை இருட்டில்இருந்து மீட்க

செய்யும் அக்கறை , தவிப்பு உங்கள் உள்ளத்தில் மேலேழுகிறதா?

இதுதான் தேசப் பற்று உடையவன்  ஆவதற்கு முதற்படி,

இது முதற்படி மாத்திரமே.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: