Thiruchchikkaaran's Blog

மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட, நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்!சுவாமி விவேகானந்தர் சாட்டை!(ஆன்மீக‌ம் என்ப‌து என்ன‌? part-2)

Posted on: April 10, 2011


                 

1897ம் வருடம்,  பிப்ரவரி மாதம் 9ம் நாள் காலை,  திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில்,   சுவாமி  விவேகானந்தர், “நம் முன்னே உள்ள பணி” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை இங்கே கட்டுரையாக பதிவிட்டு இருக்கிறோம். :

//ஆன்மீக சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்து விடக் கூடாது.

உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீக  சிந்தனைகள்  என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர நாம் நெஞ்சோடு நெஞ்சாக பற்றிக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை அல்ல.

அந்த மூட நம்பிக்கைகளை ஒரேயடியாக இந்த மண்ணில் இருந்தே பிடுங்கி எறிய வேண்டும். அவை மீண்டும் தலை எடுக்கவே கூடாது.

இந்த மூட நம்பிக்கைகள்தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணம். நம் மூளையை பலவீனப் படுத்துவதும் இவைதான்!

உயரிய கருத்துக்களைச் சிந்திக்கும் திறன் அற்ற, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்த, சுறுசுறுப்பை இழந்த, கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத் தானே பாழ்படுத்திக் கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டிய உலகாதாயம்(Materialism). மற்றொன்று அதற்க்கு நேர் மாறான வடி  கட்டிய மூட நம்பிக்கை .

இன்றைய இளைஞன் மேலை நட்டு கல்வி பெற்றவுடன் தன்னை  எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக் கொள்கிறான். நமது புராதன  ரிஷிகளைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரிக்கிறான் அவனுக்கு இந்துச் சிந்தனை எல்லாம் வெறும் குப்பை , தத்துவம் எல்லாம் குழந்தைகளின் வெறும் உளறல், மதம் என்பது முட்டாள்களின் மூட நம்பிக்கை.

இதற்க்கு மாறாக இன்னொருவன் இருக்கிறான், அவன் கல்வி அறிவு பெற்றவன், ஆனால் ஒன்றைப் பற்றிக் கொண்டு அதுதான் சரி என்றுசாதிப்பவன் அவன்.  சகுனம் (என்று சொல்லப் படும் நிகழ்வு) களுக்கு கூட அது  இது என்று விளக்கங்கள் தருகிற மற்றொரு எல்லையை நோக்கி ஓடுகிறான் அவன்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே  நான் விரும்புகிறேன்.

ஏனெனில்  நாத்தீகனிடம் உயிர்த் துடிப்பு இருக்கிறது. அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய் விடுகிறது. மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து விடுங்கள்.

Title: மூட நம்பிக்கை  உடையவர்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே  நான் விரும்புகிறேன் – சுவாமி விவேகானந்தர் சாட்டை!

Advertisements

5 Responses to "மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட, நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்!சுவாமி விவேகானந்தர் சாட்டை!(ஆன்மீக‌ம் என்ப‌து என்ன‌? part-2)"

சகோ திருச்சிக்காரன் வணக்கம்,
நாம் எந்த மதத்திற்கு விரோதமான்வர்கள் அல்ல.மதம் என்பது மக்கள் பண்பு மேம்படுத்துதலில் மட்டுமே பங்காற்ற வேண்டும் மற்றபடி நிறுவன அமைப்பாக அரசியல் பொருளாதாரம் சார்ந்து இயங்கக் கூடாது .
இந்து மதத்தில் இம்மாதிரி விஷயங்களை கொண்டு வரும் இம்மாதிரி ஆட்களை எதிர்ப்பதே நல்லது.
மதத்தில் இருப்பதில் கால்த்திற்கு ஏற்ற நல்ல விஷயங்களை மட்டும் ஆய்வு செய்து பின்பற்ற்வும்,இம்மாதிரி ஆட்களை நம்பி மோசம் போகாமல் இருக்கவே இப்பதிவை இட்டேன். இம்மாதிரி ஆட்கள் பதிவில் நீங்கள் மதிக்கும் பெரியவர்களின் பெரையே சொல்லாதீர்கள்.
**********
நம்பிக்கை: இது ஒரு தேடல் மட்டுமே.மதத்தில்,கொள்கையில் உள்ள ஒத்து வரும் விஷயங்களை மட்டுமே கடைப்பிடிப்பேன்.தவறுகளை கண்டிப்பேன்.
_____________
மூட நம்பிக்கை:மத‌ம்,கொள்கையில் அனைதுமே சரி.ஆதாரங்கள் அனைத்தும் உண்டு.சந்தேகம் இருந்தால் ஒண்டிக்கு ஒண்டி(விவாதம்!!!!!!!!) வர்ரியா?.அப்படியே நான் மட்டுமல்ல உலகில் உள்ள ஒவ்வொருவரும் பின்பற்றியே ஆக வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்வேன்.
********************

மதத்தில் அற்புதம்,அறிவியல்,சர்வ ரோஹ நிவாரனம் என்பதெல்லாமே ஏமாற்று வேலைகள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகம் கிடையாது.

//மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்.//
நன்றி சகோ திருச்சிக் காரன். உண்மையான இறை தேடல் உள்ளவனுக்கும் இறை மறுபாளனுக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது.
நன்றி!!!!!!!!!!!!.

இம்மாதிரி ஆட்கள் என்பதூ நித்யாநன்ந்தாவை குறிக்கிறது.

சகோ திருச்சிக்காரன்
/என்ற கட்டுரையானது சுவாமி விவேகானந்தர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியே./
நன்றி .இது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும்.ஒரு முதிர்ச்சி அடைந்த ஞானியின் தேடலின் கருத்து இதுவாகவே இருக்க முடியும்.விவேகானந்தருக்கு salute!!!!
/இதைக் கம்பேர் செய்து மக்களுக்கு காட்ட வேண்டும்./
சொல்லுங்க தோழர் . நாங்களும் முடிந்த உதவி செய்கிறோம்.இம்மாதிரி விஷயங்களை பார்க்கும்போது வரும் கோபம்தான் அடக்க முடிவதில்லை.
நன்றி

நண்பரே spirituality based on reasoning, logical analysis இருக்கும் பொழுது ஏன் இந்து ஆன்மீகவாதிகள் இது சாமான்ய மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று கருதி ஏன் புராண கதைகளை புனைந்தார்கள் என தெரியவில்லை.

கீதையின் அடிப்படை உபதேசங்களை ஒரு பாமரன் தன் வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து சொல்லும்பொழுது, அது பாமரனுக்கு புரியாது என்று ஏன் ஆன்மீகவாதிகள் corporate உபதேசங்கள் செய்கின்றார்கள் என தெரியவில்லை.

ஆன்மிகத்தின் உயரிய கருத்துகள் மக்களை விட்டு விலக விலக அதிசிய சாமியார்கள் உருவாகி கொண்டுதான் இருப்பார்கள்.

அன்புக்குரிய சகோதரர்கள் சார்வாகன், நரேன் ,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நரேன், புராணங்களை புனைவு எனக் கருதி விட முடியாது. புராணங்களில் முக்கியமான ஆன்மீகக் கருத்துக்கள் உள்ளன.

பகுத்தறிவு அடிப்படியில் சிந்த்தித்து ஆராயக் கூடிய ஆன்மீகக் கருத்துக்கள் உள்ளன.
Kindly read the beloe mentioned article

”அஸ்லி பிஜ்லி சர வெடி!”

https://thiruchchikkaaran.wordpress.com/2010/12/26/hanuman/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: