Thiruchchikkaaran's Blog

“பிரச்சினைகளை மழுங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும்” வினவு தள கருத்து சரியா?

Posted on: April 10, 2011


சகோதரி சந்தன முல்லை அவர்கள், வினவு தளத்திலே சாயி பாபா உடல் நிலை பற்றி  எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்ட கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

//நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும்.//

http://www.vinavu.com/2011/04/07/sai-baba/

சாயி பாபா பற்றி சகோ . சந்தனமுல்லை  எழுதிய கருத்துக்கள் பற்றி  நாம் பெரியதாக ஆட்சேபம் தெரிவிக்க ஒன்றுமில்லை. சாயிபாபா நிகழ்த்திய ” அதிசயங்கள்” பற்றிய கட்டுரை நம்முடைய தளத்திலே முன்பே வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர் ஒரு சக மனிதர் என்ற முறையிலே அவர் உடல் நலிவு நீங்கி நலம் பெற வாழ்த்துகிறோம்.

ஆனால் சாயி பாபா பற்றிய கட்டுரையில், ஆன்மீகம் என்பதே சாயிபாபா , ஜெயேந்திரர் செய்வதுதான் என்பது போலக் காட்டி, ஆன்மீகம் பிரச்சினையை மழுங்க அடிக்கிறது என தீர்ப்பு சொல்லப் பட்டு உள்ளது.

நம்மைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் என்பது. ஒரு மனிதனை இன்னும் அதிக பண்பட்டவனாக்கி, யாருக்கும் தொல்லை தராதவனாக, எல்லோரயும் சினேக பாவத்துடன் அணுகுபவனாக, கருணை உடையவனாக, நிதானம் உடையவனாக , பொறுமை உடையவனாக, இன்பம் , துன்பம் எது வந்தாலும் தன நிலையில் மாறாதவனாக இருக்க, காரணமின்றி  யாரையும் எதையும் வெறுக்காதவனாக…. இப்படிப்பட்ட நிலைக்கு ஒரு மனிதனை உயர்த்துவதுதான் ஆன்மீகம். எந்த அளவுக்கு இந்தக் குணங்களில் ஒருவன் அதிகம் முன்னேருகிரானோ, அந்த அளவுக்கு அவன் ஆன்மீகத்தில் முன்னேருவதாக கருதலாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

நாம் இப்படிக் கருதும்போது ஆன்மீகம் பற்றி தன்னுடைய கருத்தை சொல்ல சந்தன முல்லைக்கு உரிமை உண்டு. ஆனால் ஆன்மீகம் பிரச்சினைகளை மழுங்கடிக்கிறதா? இந்த கருத்து சரியா?

அரசியலுக்கு ஆன்மீகம் உதவுகிறதா என்று கேட்கிறாரே, இந்திய வரலாறில் என்ன நடந்தது?.

தானே போர்க்களத்திலே இறங்கி, எதிரிகளை சிதற அடிக்கும் மாவீரன் அசோகர் , இன்னொரு அலெக்சாண்டராக உருவாக்கி இருக்கக் கூடிய நேரத்திலே, இந்தியனின் இயல்பான குணமான அடுத்தவர்கள் தொல்லை பட நாம் காரணமாக இருக்க கூடாது என்ற உணர்வு கலிங்கப் போரின் முடிவில் வர, அந்த உணர்வை செம்மைப் படுத்தி அவர் வாளைக் கீழே போட்டு, சாலைகளைக் கட்டு வித்தார், குளங்களை வெட்டு வித்தார்,  சாலையின் இருமருங்கிலும் நிழல்  தரும் மரங்களை நட்டுவித்தார்… என மக்கள் பணியில் ஈடுபட வைத்தது புத்தரின் ஆன்மீகம் தானே. இது வாள் முனைகளில் மழுங்க வைத்து அன்பை வளரச் செய்யும் ஆன்மிகம் இல்லையா?

ஆனால் சகோ. சந்தனமுல்லை ஆன்மீகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?நாம் அருந்தும் தண்ணீர் பிரச்சினை தீர ஆன்மிகம் உதவ வேண்டும் என்றால் ஆன்மீகத்தில் முன்னேறிய ஒருவர் குச்சியால் தட்டினால் தண்ணீர் பிச்சிகிட்டு ஆர்ட்டீசியன் வூற்று போல வரும் என எதிர்பார்க்கிறாரா?

 

என் வீட்டு டி.வி நாலு நாளா வேலை செய்யலை, ஆன்மீகத்தால் அதை சரியாகக் முடியுமா என்று கூட கேட்கலாம்.

ஆனால் சகோ.சந்தனமுல்லை புத்தர்,  அப்பர்,  சுவாமி விவேகானந்தர் ,  பட்டினத்தார், தியாகராசர், சித்தர்கள் … இவர்களைப் போல போல காசு பணம் வேண்டாம் என்று உதறி விட்டு, மக்களின் மனதிலே நல்ல எண்ணங்களை உருவாக்க முயன்றவர்களை ஆன்மீக வாதிகளாக கணக்கில் எடுக்கவில்லை போல் தோன்றுகிறது. அவர் ஆன்மீக வாதிகளாக கணக்கு எடுப்பது செல்வாக்கு படைத்த  பில்லியநேர் பிரபலஸ்தர்களான சாயி பாபா, ஜெயேந்திரர் …. இவர்களைப்  போன்றவர்களைத் தான்.   இவர்கள் செய்வதையே ஆன்மீகம் என அங்கீகரித்து இந்த ஆன்மீகம் பிரச்சினையை மழுங்க அடிக்கிறது என்ற தீர்ப்பும் சொல்லி விட்டார்.

ஹலோ இன்னைக்கு இருப்பவர்களைப் பற்றி பேசுங்க… என்று சிலர் சொல்ல வருவார்கள். இன்றைக்கு ராமர் பிள்ளை என்பவர் மூலிகையில் பெட்ரோல் எடுப்பதாக் சொல்லி அது வொர்க் அவுட் ஆகவில்லை. அதற்காக அறிவியல் என்பது அது போலத்தான் என  நாம் சொல்ல முடியுமா? முன்பு வாழ்ந்த ஆர்க்கிமிடிஸ், கலிலியோ,  நியூட்டன், போஸ், சி.வி. ராமன்…. ஆகயோர் இன்றைக்கு இல்லை என்பதால் அவர்களின் அறிவியலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமால் இருக்க முடியுமா?

அப்படியானால் இடைக்காட்டு சித்தர், ஆங்கிரசர்  முதல் புத்தர், இராமனுஜர், … இப்படி விவேகானந்தர்  வரை சிறந்த ஆன்மீக வாதிகள மக்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள உதவி செய்யும் வகையில் ஆன்மீகத்தை அமைத்துக் கொடுத்த நிலையில், ஆன்மீகம் மழுங்க அடைக்கிறது என்று சொல்வது எப்படி சரியாகும்?

(தொடரும்)

Advertisements

2 Responses to "“பிரச்சினைகளை மழுங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும்” வினவு தள கருத்து சரியா?"

//நம்மைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் என்பது. ஒரு மனிதனை இன்னும் அதிக பண்பட்டவனாக்கி, யாருக்கும் தொல்லை தராதவனாக, எல்லோரயும் சினேக பாவத்துடன் அணுகுபவனாக, கருணை உடையவனாக, நிதானம் உடையவனாக , பொறுமை உடையவனாக, இன்பம் , துன்பம் எது வந்தாலும் தன நிலையில் மாறாதவனாக இருக்க, காரணமின்றி யாரையும் எதையும் வெறுக்காதவனாக…. இப்படிப்பட்ட நிலைக்கு ஒரு மனிதனை உயர்த்துவதுதான் ஆன்மீகம்.//

ஆன்மீகம் பற்றி அற்புதமான விளக்கம். நன்றி நண்பரே.

Dear Mr. Naren,

Many thanks for your visit and compliments.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: