Thiruchchikkaaran's Blog

மோகினியோடு பரம சிவன் கூடியது கள்ள உறவா, கடமை உறவா?

Posted on: April 9, 2011


நமது அன்பு சகோதரர் திரு.  எபி அவர்கள், நமது தளத்தில் இட்ட பின்னூட்டத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்.

//செக்ஸ் கணவன் மனைவி உறவிற்குள் தப்பில்லை, அசிங்கமில்லை. ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் தான் கட்டின மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை விடாமல் துரத்தி உறவு கொண்ட விசயம் தான் நெருடுகிறது. சாதாரண மனிதனும் அந்த நிலையில் தானே உள்ளான். சாதாரண மனிதனின் இந்த செய்கையே (பெண்ணின் சம்மதத்துடன் என்றால்) கள்ள உறவு என்றும்,(பெண்ணின் சம்மதம் இல்லையென்றால் ) பாலியல் பலாத்காரம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கடவுள் என்று சொல்லப்படுபவர் செய்தால் அது சரியா? அதற்கு என்ன பெயர்? கடவுள் என்பவர் பரிசுத்தக் குலைச்சலோடு இருக்கலாமா?பின்னர் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?//

திரு. எபி இப்படி கருதக் காரணம் அநேகமாக அவருக்கு இந்திய தத்துவ சிந்தனைகளின் கோட்பாடுகள் அறியாப் பட்டிராததால் எனக் கருதலாம்.எபி போன்ற சகோதரர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமானால் நாம் அவருக்கு இந்திய தத்துவங்களைப் பற்றி சொல்ல  வேண்டியுள்ளது.

இந்திய நாடு உலக்குக்கு நான்கு முக்கிய மதங்களை தந்துள்ளது. இந்து , சமண, பவுத்த, சீக்கிய மதங்களே அவை. இந்த நான்கு மதங்களும் மனித உயிர் பல பிறவிகளை எடுக்கிறது என்கிற தத்துவத்தை, அதாவது பிறப்பு இறப்பு, மீண்டும் பிறப்பு… என்கிற சுழற்சி சக்கரத்தில் இருப்பதாகவும், ஆசையை வென்று, தன் நிலையை உயர்த்தி, தன் உண்மை உணர்வை அறிபவன் விடுதலை  அல்லது மோட்ச நிலையை அடைகிறான்,  பிறவிகளும் அதனால் வருகிற துன்பங்களும் இருக்காது என்கின்றன.

பிறவி என்பது உயிருக்கு ஒரு உடை போன்றது, எப்படி மனிதன் பழைய  உடையை களைந்து புதிய உடையை அணிகிறானோ அதைப் போல உயிர் ஒரு உடலை  விட்டு இன்னொரு உடலை அடைகிறது என்கிறார் கிருஷ்ணர். இதை நம்ப சொல்லி நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை, இது இந்திய மதங்களின்  அடிப்படைக் கோட்பாடு என்பதையே நாம் சொல்கிறோம். இந்தக் கோட்பாட்டுக்கு நான் சாட்சி கொடுக்கவில்லை.

இப் பிறவியில் ஒரு மனிதனுக்கு மனைவி யாக இருப்பவர் அடுத்த பிறவியிலும் மனைவியாக இருப்பாரா என்று சொல்ல முடியாது. இப்பிறவியில் மனைவியாக இருந்த உயிர் அடுத்த பிறவியில் ஆணாக  கூட இருக்கலாம், அவர் முற்பிறவியில் நல்ல செயல் செய்து இருந்தால் அடுத்த பிறவியில் ஒரு நாட்டின் அதிபராகவோ, அல்லது பெரிய செல்வந்தராகவோ இருக்க கூடும். அவருக்கு கணவனாக இருந்தவர் இழிவான செயல்களில் ஈடுபட்டால் அந்த உயிர் அடுத்த பிறவியில் நாயாக கூட பிறக்கலாம். எனவே உயிர் கணவனாகஇருப்பதும், மனைவியாக இருப்பதும், நாடகத்தில் நடிக்கப் படும் வேஷங்களைப் போன்றதே என்கிறது இந்திய தத்துவம். இதையே நாடகமே உலகம் என்பார்கள்.

இந்த தத்துவப் பின்னணியில் நாம் பரமசிவன் மோகினியுடன் கூடிய நிகழ்வை ஆராய்வோம்.

சுவாமி ஐயப்பன் பற்றிய குறிப்புகளில் நம் கீழ்க்கண்ட வாறு  காண்கிறோம்.

//Lord Dharma Shasta is born out of the union of Supreme Lord Shiva and Mohini( Vishnu Maya) thus carries both the power of Shiva (destruction) and Vishnu (sustenance). The Lord was born on Uttram Nakshatram in the month of Dhanu on last Saturday and resides in Kailash. The purpose of his Avatar is to kill the demon Mahishi and save the Devas from her atrocities. Lord Dharma Shasta then took the avatar of Manikantha with the blessings from Shiva and Vishnu and left Kailash.

The Lord took the form of a child and lie on the banks of Pampa and later was found by the King of Pandalam. When Ayappan turned into 12 years old, the Queen of Pandalam pretended to have a severe headache and instructed the physician to prescribe tigress’s milk as the remedy.

Manikantha, upon hearing the news agreed to go the jungle and get the milk. During the Lord’s expedition in jungle, he killed the demon Mahishi and returned to Pandalam with herd of tigers. After seeing the actual form of Manikanda (Vishwarupa), the King of Pandalam realized the Supreme Lord’s vision to the earth and requested to construct a temple for the Lord.//

எனவே பரம சிவம் மோகினியுடன் கூடியது தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ததாகவே கருத வாய்ப்பு இருக்கிறது. மோகினி என்கிற புதிய உடலை விஷ்ணு எடுத்து இருக்கிறார், அவருடைய அந்தப் பிறவிக்கு கணவனாக கடை யாற்றும் பொறுப்பு பரமசிவனுக்கு இருந்திருக்கிறது. அதை அவர் செய்து இருக்கிறார். இதை கள்ள உறவு என்று கருத முடியாது. ஏனெனில் மோகினிக்கு சிவனைத் தவிர வேறு கணவன் இல்லை. எனவே இது எப்படி கள்ள உறவாகும்? மேலும் இது தேவர்கள்  எல்லோரும் அறியும்படியாக செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் இது எப்படிக் கள்ள உறவாகும்?

மேலும் மோகினியை பார்த்து சிவன் விரட்டி விரட்டி துரத்தினார் என்பது நகைப்புக்குரிய புனைவாக இருக்கக் கூடும். ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக விஷ்ணு அவ்வப் போது மோகினி வடிவம் எடுக்கிறார். பாற்கடலில்  அமிர்தம் கிடைத்தவுடன், மோகினி வடிவம் எடுத்து அரக்கர் முன் நடனமாடியதாக உள்ளது. பின்னர் பஸ்மாசுரனுக்கு சிவன் வரம் கொடுத்தார், யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் பஸ்பமாவர்கள்  என்று சிவன் வரம் கொடுத்ததாகவும், பஸ்மாசுரன் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல சிவன் தலையிலே கையை வைக்க முனைந்த போது சிவன் அங்கிருந்து விலகி விட்டார். இந்த நேரத்திலும் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து, அரக்கன் முன் ஆடியதாகவும், அரக்கன் மோகினி யைப் போலவே டான்ஸ் ஸ்டெப்புகள் போட்டு ஈடு கொடுத்து ஆடியதாகவும் , நடன ஆட்டத்தின் ஒரு பகுதியாக மோகினி தன தலையில் கையை வைத்து ஆடியதாகவும் தன் வரத்தை மறந்த பசமாசுரன் தானும் தலையில் கை வைத்து ஆடியதாகவும் ,தானே பஸ்பமாகி போனதாகவும், இவ்வாறு விஷ்ணு சிவனை ரெஸ்கியூ செய்ததாகவும் புராணங்கள்  சொல்லுகின்றன.

பாற்கடல் அமிர்தம் கடைந்த நிகழ்வின் போது கூட விஷ்ணு uமோகினி வடிவம் எடுத்து இருக்கிறார். அப்போது பரமசிவன் அவரை விரட்டி விரட்டி துரத்தவில்லை. பிறகு பஸ்மா சுரனிடம் இருந்து மீள உதவி செய்து இருக்கிறார்.

இப்படி இருக்கும் போது சுவாமி ஐயப்பன் பிறப்புக்காக விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து, அந்த நேரத்திலே தன்னுடைய கடமையாக சிவன் கணவனாக இருந்த போது விரட்டி விரட்டி வயலென்ஸ் செய்ததாக சொல்வது பில்ட் அப் கொடுக்கப் பட்ட வெர்சனாகவே கருதப் பட முடியும்.

இந்துக் கடவுள்கள் ஒவ்வொருவரன் மீதும் ஒவ்வொரு குற்றச் சாட்டை வைத்து, யாருமே கும்பிடத் தகுதி இல்லாதவர்கள், நாங்கள் சொல்லுகிற கடவுளை மட்டுமே கும்பிடுங்க, என்று சொல்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே   இந்த விரட்டி விரட்டி துரத்தும் வெர்சனை எடுத்து பிரச்சாரம் செய்வது, என்று மக்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் இந்து மதம் இந்தியாவின் பெரும்பான்மை யோர் பின்பற்றும் மதமாக இருக்கும் வரை , இந்திய சமுதாயத்தின் சகிப்புத் தன்மையை அழிப்பதோ, மத வெறியை திணிப்பதோ இயலாத காரியம் என்பதை மத வெறி பரப்பு பிரச்சாகர்கள் அறிந்து உள்ளனர்.

திரு. எபியைப் போன்றவர்கள் இதைப் புரிந்து கொண்டு எல்லா மதங்களையும் ஆக்கபூர்வமாக அணுகி அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களைப் பாராட்டி வரவேற்கும் இந்திய பண்பாட்டில் இருப்பார் என்று நாம் நம்புவோமாகுக.

Advertisements

12 Responses to "மோகினியோடு பரம சிவன் கூடியது கள்ள உறவா, கடமை உறவா?"

மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பரே. இந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்பதற்காக நம் தெய்வங்களை குறைகூறி நமது நம்பிக்கையைக் குலைக்க முயற்சிக்கும் இவர்களின் அடாவடி செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். எவன் எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? நல்லவனாக இருந்தால் போதாதா? என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இருந்தால் நாட்டில் மதத்தால் பிரச்னைகள் வராமல் நல்லிணக்கத்துடன் வாழலாம். ஆனால் மேற்படி இரு மதத்தவர்களும் அப்படி இருப்பதில்லை. அவர்களின் வேத நூல்கள் மதம் பரப்புவதற்காக கூறியுள்ள வசனங்களை மட்டும் பின்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்களே தவிர நல்ல விஷயங்களை பின்பற்றுவதில் தீவிரம் காட்டுவது கிடையாது. இவர்கள் திருந்தினால் உலகம் சுபிட்சமாக இருக்கும்.

எந்த மதமா இருந்தாலும் அதிலுள்ள நல்லவைகளை பிரதானமா எடுக்க பழகவேண்டும்..

நன்றி, திரு.jmms அவர்களே,

https://thiruchchikkaaran.wordpress.com/2010/10/11/sakthi-worship/

இந்தக் கட்டுரையையும் அதற்க்கு வந்த பின்னூடங்களையும் நீங்கள் படியுங்கள். இந்தியாவின் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் அமைதியாக கருமாரி அம்மனை வணங்குகிறார்கள். அவர்களிடம் போய் கருமாரி அம்மன் பொய் தெய்வம், நான் சொல்லும் தேவன் மட்டுமே ஜீவனுள்ள தேவன் … பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை, நான் சொல்லும் மதம் மட்டுமே உண்மை என்று மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்புவது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்துக்களிடம் இயேசு கடவுள் அவரை தொழுங்கள் , அவரை தொழுது விட்டுப் போகிறார்கள். வம்படி செய்து மத வெறியைப் பரப்ப அவசியம் என்ன?

இன்றைக்கு வேளாங்கண்ணி மேரி மாதா கோவிலுக்கு செல்லும் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தவர் யாரவது இருந்தால் அது இந்துக்களே. அவரகளிடம் போய் மரியாள் கடவுள் இல்லை, தொழக் கூடாது என்று எல்லாம் சொல்லி அவர்களை நல்லிணக்கப் பாதையை விட்டு விளக்குவது ஏன்?

யார் எதை தொழுதால் இவரகளுக்கு என்ன?

இவர்கள் சொல்லும் கடவுள் மட்டுமே உண்மை என்றால் அதற்கு நிரூபணம் வேண்டும் அல்லவா?

முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணம், verifiable proof யாரிடமாவது, இருக்கிறதா?

யாரும் பார்க்காத ஒன்று, அது இருக்கிறதோ, இல்லையோ, கடவுள் என்கிற கானசெப்டை வைத்து, என் மதம் தான் உண்மையான மதம் என்று நிலை நிறுத்த போட்ட புனிதப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை , இரண்டு உலகப் போரிலும் இறந்தவரின் எண்ணிக்கையை விட அதிகம்.

அமைதியாக கும்பிட்டுக்கங்க என்றால் கேட்கிறார்களா, உன் தெய்வம் பொய் தெய்வம், அவர் வெறும் தூதுவர தான், இல்லை கடவுள் … எவ்வளவு சண்டைகள் பாருங்கள்.

நண்பரே , என் மதம் , என் கடவுள் பெரிது னு சொன்னாலே அங்கே கடவுளோ பக்தியோ ஆன்மீகமோ இல்லைன்னு புரிஞ்சிடணும்..

எந்த தாயாவது என்னை மட்டும் வணங்கு னு சொல்வாங்களா?..

மத வெறி பிடித்தவர்கள் மனிதத்தனமையையே அழிப்பார்கள்..

// எந்த தாயாவது என்னை மட்டும் வணங்கு னு சொல்வாங்களா? //

நண்பரே பிரச்சினை என்னவென்றால் வணங்குதல் அல்ல,அந்த குழந்தைக்கு எத்தனை தாய் இருக்கமுடியும் என்பதே;ஓரிறை கொள்கையைக் குறித்து கரிசனை கொள்ளாதோரிடம் ஒன்றையும் கற்றுக்கொள்ளவோ கற்பிக்கவோ இயலாது.

அன்பு சகோதரர் சில்சாம் அவர்களே, குழந்தைக்கு தாய் இருப்பதோடு தந்தையும் இருக்கிறார், தந்தையை வணங்கக் கூடாதா? மாமாவிற்கு மரியாதை செலுத்தக் கூடாதா?

அவரவர் அமைதியாக வணக்கி விட்டுப் போங்கள் என்றுதானே கேட்டுக் கொள்கிறோம். ஓரிறைக் கொள்கை, திரித்துவக் கொள்கை, பல இறை கொள்கை, ஒரே இறைவனே பல வடிவங்களில் வரும் கோட்பாடு… இப்படி பல கோட்பாடுகள் உள்ளன. எதற்கும் நிரூபணம் இல்லை. .

நான் நேரடியாக சொக்கிறேன், இயேசு தொழத் தக்கவர் அல்ல என்று சிலர் சொல்லும் போது ( நாம் அப்படி சொல்லவில்லை, நாம் இயேசு தொழத் தக்கவர் என சொல்லி இருக்கிறோம்) உங்களுக்கு வேதனை வருகிறதா இல்லையா? அதைப் போலத் தானே கருமாரி அம்மனை வணங்கும் பக்தனிடம் போய் அவரை வணக்காதே என்று எருது நோவு காக்கை அறியுமா என்று அவரை குத்திப் பார்ப்பது சரியா? இப்போது நீங்களே வருத்தத்தில் இருப்பீகள், இந்த நேரத்தில் உங்களால் புரிந்து கொள்ள இயலும்.

// நான் நேரடியாக சொக்கிறேன், இயேசு தொழத் தக்கவர் அல்ல என்று சிலர் சொல்லும் போது ( நாம் அப்படி சொல்லவில்லை, நாம் இயேசு தொழத் தக்கவர் என சொல்லி இருக்கிறோம்) உங்களுக்கு வேதனை வருகிறதா இல்லையா? //

நண்பரே,நீங்கள் இயேசுவைத் தொழத்தக்கவரென்று சொல்லுவதால் நாம் மகிழ்ந்துவிடவுமில்லை அல்லது சிலர் அவரை புறக்கணிப்பதால் வேதனைப்படவுமில்லை; உங்கள் கர்மாவை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்;எங்கள் கர்மாவை நாங்கள் நிறைவேற்றுகிறோம், அவ்வளவே. நீங்கள் சிந்தனையாளர் என்ற நம்பிக்கையிலேயே சில ஐயங்களைக் கேட்டுவைத்தோம்.

உதாரணத்துக்கு நீங்கள் கருமாரி என்று சொன்னதால் கேட்கிறேன், “கருமாரி உருமாறி பாம்பாக வந்து பாலைக் குடித்தாள்” என்று பாடுகிறீர்களே, அது உங்களுக்கு ஏற்புடையதா, சொல்லுங்கள்; பாம்பு பால் குடிப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? எதற்குமே நிரூபணம் கேட்கும் நீங்கள் இதற்கெல்லாம் நிரூபணம் கேட்கலாமல்லவா? கேட்டால் உடனே என்ன சொல்லுவீர்கள்,அதைக் கண்டித்து நாம் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம் ,என்பதாக; (முன்னாள்?) தமிழக முதல்வர் பற்றியெறியும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் பிரதமருக்கு இந்த நவீன காலத்தில் கடிதம் எழுதினாரே அதுபோல‌..!

அன்புக்குரிய சகோ. சில்சாம் அவர்களே,

உங்களை மகிழ்விப்பதற்காக இயேசுவை தொழ தக்கவர் என்று சொல்லுகிறேன் என்று கருத வேண்டாம். . நீங்கள் எனக்கு அறிமுகம் ஆகும் முன்னரே நாங்கள் அந்தக் கொள்கையிலே இருக்கிறோம்.

நாம் சொல்ல வந்த முக்கியக் கருத்து என்னவென்றால் – இயேசு தொழ தக்கவர் அல்ல – என்று சொல்வதைக் கேட்டால் உங்கள் மனம் வேதனைப் படுகிறதா , இல்லையா?அதே போல பிறன் வணங்கும் தெய்வத்தை தொழ தக்கவர் அல்ல என சொன்னால் அவர் மனம் வேதனைப் படும் என்பதை நீங்கள் எப்போது உணர்ந்து கொள்வீர்கள் என்பதே நாம் சொல்ல வந்த முக்கியக் கருத்து.

கருமாரி அம்மன் பாம்பாக மாறி பாலைக் குடித்தாக சொல்லப் படுவதற்கு எந்த நிரூபணமும் இல்லை. அதற்க்கு நான் சாட்சியும் குடுக்கவில்லை. அந்தப் பாட்டை நாம் நம் கட்டுரையில் போடவுமில்லை. நீங்கள் சொல்லும் “கருமாரி உருமாறி பாம்பாக வந்து பாலைக் குடித்தாள்” வரிகள் உள்ள பாடல் ” செல்லாத்தா, செல்ல மாரியாத்தா” என்ற பாடல் ஆகும்.

//“காலையும் மாலையும் நல்ல அருமையான பாடல்கள் ஒலிக்கின்றன, தமிழ் மொழி எனக்கு தெரியாததால் நான் அவற்றை உணர முடியவில்லை” என்று சொல்லி விட்டு ஒரு ட்யூனை ஹம் செய்து காட்டினார்.

இது தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான பாடல்

”கற்பூர நாயகியே கனகவல்லி,
காளி மகமாயி கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!!”

அந்தப் பாடலை பாடிக் காட்டினேன்.

“இந்தப் பாட்டுதான், இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அந்தப் பாட்டின் பொருளை அவருக்கு சொன்னேன். அந்தப் பாட்டை எனக்கு அனுப்புங்கள் என்றார். அவருக்கு அனுப்பி விட்டேன்.
இங்கேயும் பதிவு செய்து இருக்கிறேன். கீழ்காணும் சுட்டியில் கிளிக் செய்து பாட்டைக் கேட்கலாம்.

http://www.raaga.com/player4/?id=12045

“இந்த தேவி உற்சவம் மிக சிறப்பாக நடக்கிறது. நாங்கள் ஒரு நாள் சென்று வரும்போது அப்படியே வண்டியில் இருந்து இறங்கி தேவியை வணங்கினோம், எத்தனை மக்கள் கூட்டம்,” என்று ஆச்சரியப் பட்டார் அந்த வட இந்தியாவை சேர்ந்த நண்பர்.

தமிழ் நாட்டில் கருமாரி அம்மன் வழிபாடு முக்கியமானது.

சென்னையில் ஆடி மாதத்தில் கருமாரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடை பெறுகிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பங்கு பெரும் விழாவாக கருமாரி அம்மன் விழாக்கள் உள்ளன.

தமிழர்கள் தாயை தெய்வமாக வழிபடுபவர்கள். தங்கள் தெய்வத்தை தாயாக கருதி வழிபடுபவர்கள். உலகின் மிக சிறப்பான வழிபாட்டு முறைகளில் கருமாரி அம்மன் வழிபாட்டு முறையும் ஒன்றாக இருக்கிறது.

”நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும், அம்மா
நெஞ்சினில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்,
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்.
…..
மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா
மடி மீது பிள்ளை என்னை தள்ளலாமா?’”

இப்படியாக கடவுளை தன் அன்னையாகவே கருதி பாடி இருக்கிறார். //

நம்முடைய பாயின்ட் ஆப் வியூ , ஒரு வழிபாடு ஒருவரின் மனதில் அமைதியை உருவாக்கி அவரை மேம்பட்ட நிலைக்கு உருவாக்குகிறதா என்பதைப் பற்றி ஆகும்! வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் எந்த ஒரு கருத்தும் கருமாரி அம்மன் கோட்பாட்டில் இல்லை.

//அல்லது சிலர் அவரை புறக்கணிப்பதால் வேதனைப்படவுமில்லை; //

வேதனைப் படவில்லையா , இது உண்மையா, பின்னர் பிசாசின் தூதுவன், கர்சிக்கிற பிசாசின் தூதுவன் … என்று எல்லாம் ஒருவர் ஒருவர் திட்டிக் கொண்டது எதற்கு?

இயேசு தொழத் தக்கவர் அல்ல என்று சொன்னதால் உங்களுக்கு வேதனை இல்லை என்பதாக இன்று எழுதுகிறீர்கள். உங்களுக்கு வேதனை இருக்கிறதோ, இல்லையோ … எங்களுக்கு வேதனை இருக்கிறது.

இயேசு தொழத்தக்கவர் அல்ல என்ற வகையிலே பேசுவதை மத சகிப்புத் தன்மை உடைய இந்திய நாட்டின் குடிமகன் என்கிற வகையில் மிக வருத்ததோடு நோக்குகிறோம்.

அவரவர் விரும்புவோரை வணங்கிக் கொள்ளலாம், பிறர் அதை வெறுக்காமல் இருப்பதே சகிப்புத் தன்மை ஆகும்.
பாரசீக மதத்தில் நெருப்பை வணங்குகின்றனர்.

இவாறாக ஒருவர் வணங்குவதை இன்னொருவர் வணங்கத் தக்கது அல்ல என்று சொல்லுவது இந்திய நாட்டின் அமைதிக்கு, வூறு விளைவிக்கக் கூடியது.

ஒரு வழிபாட்டில் அறிவுடைமை பிரதானமானதா,வெறுப்புணர்ச்சி பிரதானமானதா? சத்தியம் பிரதானமானதா,ஒத்துப்போதல் பிரதானமானதா? மக்களை மாக்களாக்கும் மடமையா, மனிதனை தெய்வத்தின் நிலை ஏகச் செய்யும் தியாகமா? எதில் நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்? ஆத்தும ஈடேற்றத்துக்கும் முக்திக்கும் வழிகாட்டும் குருதேவனை புறக்கணித்துவிட்டு அவரவர் வழியிலேயே செல்லுவோம் என்று கலகம் செய்யும் திரள்கூட்டத்தினரின் முரட்டாட்டத்தின் காரணமாகவே வெறுப்புணர்ச்சி உண்டாகிறது.நீங்கள் தொழுதுகொள்ள ஆயத்தமாக இருக்கும் இயேசு பெருமானே தன்னுடைய பிதாவின் சித்தத்தை செய்வதே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்;உங்களால் பிரிவினைவாதிகளின் தெய்வமாக சித்தரிக்கப்படும் யெகோவா தேவனையே அவரும் தொழுதுகொண்டார்;அப்படியானால் யெகோவா வேறு இயேசுவானவர் வேறு என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்? இந்நிலையில் உங்களையும் கிறித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை வேண்டும் என்கிறீர்களே..? முதலில் கிறித்துபோதித்த மார்க்கத்தினை ஆதியோடந்தமாக ஆய்ந்தறிந்து பிறகு அவரைக் குறித்து ஏதாவது எழுதுவதற்கு தைரியமிருந்தால் எழுதுங்கள்..!

//ஒரு வழிபாட்டில் அறிவுடைமை பிரதானமானதா,வெறுப்புணர்ச்சி பிரதானமானதா?//

எது அறிவுடைமை? மத சகிப்புத் தன்மையை இழந்து, பிறருடன் மோதல் போக்கில் ஈடுபடுவதுதான் அறிவுடமையா?

//சத்தியம் பிரதானமானதா,ஒத்துப்போதல் பிரதானமானதா?//

சத்தியம் என்றால் நிரூபணம் வேண்டும். மின் காந்த புலத்தில் மின் கடத்தி வூடுருவி சென்றால், அதிலே மின்னோட்டம் வு ருவாகும் என்பது சத்தியம் – இதி உலகில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். தன்னடைய மார்க்கம் மட்டுமே உலகில் எல்லோராலும் பினபர்றப் பட வேண்டும் என்கிற துடிப்பிலே நான் சொல்லுவது சத்தியம், நான் சொல்லுவது சத்தியம் என்று சொன்னால் அது சத்தியமா என்று எப்படி தெரிந்து கொள்வது. இஸ்லாமியர் அவர்கள் சொல்வதுதான் சத்தியம் என்கிறார்கள்.நீங்கள் ஏன் அவர்கள் சொல்லும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அப்படி இஸ்லாமியர் சொல்லும் சத்தியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாத பொது, நீங்கள் சொல்லும் “சத்தியத்தை” உலகில் எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

// மக்களை மாக்களாக்கும் மடமையா, மனிதனை தெய்வத்தின் நிலை ஏகச் செய்யும் தியாகமா? எதில் நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்? ஆத்தும ஈடேற்றத்துக்கும் முக்திக்கும் வழிகாட்டும் குருதேவனை புறக்கணித்துவிட்டு அவரவர் வழியிலேயே செல்லுவோம் என்று கலகம் செய்யும் திரள்கூட்டத்தினரின் முரட்டாட்டத்தின் காரணமாகவே வெறுப்புணர்ச்சி உண்டாகிறது.//

நீங்கள் மத சகிப்புத் தன்மையை மனதில் வைத்தால் வெறுப்புணர்ச்சி வராது. அதாவது நீங்கள் சொல்லும் குரு தேவனை மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும், அதை விட்டு வேறு தேவர்களை வணங்கினால் அதை உங்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை, அதனால் முரட்டாட்டம் செய்யும் கலகக் கூட்டம் என்று எல்லாம் திட்டும் நிலை உருவாகிறது. இதுவே சகிப்புத் தன்மை இழந்த நிலை ஆகும். வெறுப்புணர்ச்சி வேண்டாம் என்று தான் சொல்லுகிறோம். நீங்கள் மத சகிப்புத் தன்மையை மனதில் வைத்தால் வெறுப்புணர்ச்சி வராது.

//உங்களால் பிரிவினைவாதிகளின் தெய்வமாக சித்தரிக்கப்படும் யெகோவா தேவனையே அவரும் தொழுதுகொண்டார்;//

பிரிவினைவாதி என்று நீங்கள் சொல்வது யாரை , யூதர்களையா?

//அப்படியானால் யெகோவா வேறு இயேசுவானவர் வேறு என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்//

இயேசுவின் சிறப்பான கோட்பாடுகளுக்காக, அன்புக்காக அவரை தொழலாம் என்கிறோம், நல்லிணக்க அடிப்படையில் யூதர்களுடன் சேர்ந்து யெஹோவா வழிபாட்டிலும் பங்கெடுக்கலாம், ஆனால் யெஹோவா சொன்னதாக சொல்லி, யூதர்கள் இனப் படுகொலையை, மத வெறியை நியாயப் படுத்துவதை ஆதரிக்க இயலாது.

ஜெஹோவாவும், கிறிஸ்துவும் ஒன்று என்றும் நாம் சொல்லவில்லை, வேறு என்றும் நாம் சொல்லவில்லை. இதை வைத்து பிரச்சினை செய்ய வேண்டியதில்லை என்பதே நம் கருத்து.

கோட்பாடுகளின் அடிப்படையில், நேசிப்பின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவோடு நாம் பெருமளவு இணக்கமாக இருப்பதாக கருதுகிறேன். இப்போது இயேசு வந்தால் நான் கிறிஸ்தவன் என்றும் கருதப் படத் தகுதியானவனா என்பதை தீர்மானிக்க அவராலே மட்டுமே கூடும். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட வேறு யாரையும் நான் சந்திக்கவில்லை என்கிற வருத்தத்தாலே இதை சொல்கிறேன்.

விவாதங்களில் நேரடியாக பங்கேற்க விரும்புவோர் தொடுப்பைத் தொடரவும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42116540&p=3

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: