Thiruchchikkaaran's Blog

மத சகிப்புத் தன்மை வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி தூஷிக்கிரோமா?

Posted on: April 5, 2011


மத சகிப்புத் தன்மை வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி தூஷிக்கிரோமா? 

நாம் யாரையும் தூஷிக்கவில்லை. எல்லோரும் அடிப்படையில் நல்லவர்களே, அவர்கள் கேட்கும் பேச்சுக்கள், சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்கள் படிக்கும் நூல்கள், நட்பு இவை போன்றவையே   ஒருவரின் குணாதிசயம் அமையக் காரணம் என்பதே நம்முடைய கருத்து.

நாம் சொல்லுவது, மத சகிப்புத்தன்மையை அழிக்கும் பிரச்சாரத்தை செய்ய வேண்டாம் என்பதுதான். இதை எழுதினால் உடனே தூஷிக்கிறார்கள், கிறிஸ்துவர்களை  தூஷிக்கிறார்கள் என்று திசை திருப்ப பார்க்கிறார்கள்.

 நாம் தெளிவாக சொல்லுகிறோம், நாம் கிறிஸ்துவர்களையோ, இந்துக்களையோ, இஸ்லாமியர்களையோ, யாரையுமோ… தூஷிக்கவில்லை. எதற்கு தூஷிக்க வேண்டும்? எனக்கு பல கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு, நெருங்கிய நண்பர்கள் உண்டு. நான் அறியாத, அறிந்த  எந்த ஒரு கிறிஸ்தவரையும் நாம் தூஷிக்கவில்லை !

மத சகிப்புத் தன்மையை அழிக்க வேண்டாம் என்கிற கோரிக்கையை வைத்தால் தூஷிக்கிறான், தூஷிக்கிறான் என்கிறார்கள். இந்தியாவின் மிக முக்கியமான  அடிப்படை பண்புகளில்  ஒன்று மத சகிப்புத் தன்மை. அதைக் கெடுத்து, ஒரு மதம் மட்டுமே உண்மை, மற்ற மதங்கள் பொய்யானவை … நாங்கள்  சொல்லும் தேவன் மட்டுமே ஜீவனுள்ள தேவன், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்கள் பொய்யானவை,  அவற்றை வணங்கினால எரி நரகம் போவாய்… என்று எல்லாம் பிரச்சாரம் செய்வதால், அதைக் கேட்கும் மற்றவர்களும் கடுப்பாகி  பதிலுக்கு உன் கடவுள் தான் பொய் என்று ஆரம்பிக்கின்றனர். இவ்வாறாக இந்தியாவின் மத சகிப்புத் தன்மையைக் கெடுக்கிறார்கள்.

அமைதியாக வழிபாடு நடத்துவதை நாம் ஒன்றுமே சொல்லவில்லை, அனைவரின்  வழிபாட்டில் கலந்து கொள்ளுகிறோம் என்று சொல்லுகிறோம்.

பிற மதங்களை இகழாமல் அமைதியாக மதப் பிரச்சாரம் செய்வதையும் நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் இவர்கள் அறிந்தோ அறியாமலோ, மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரத்தை, மத வெறிப் பிரச்சாரத்தை செய்கிறார்கள். இதை சொன்னால் தூஷிக்கிறான் , தூஷிக்கிறான் என்கிறார்கள்.

அடாவடி மத வெறிப் பிரச்சாரம் இவர்களுக்கே பேக் பயர் ஆகும் நிகழ்வுகளும் உள்ளன. பிற மதங்களை புரிந்து கொள்ளும், அணுசரிக்கும், நல்லிணக்கமாக செல்லும் தன்மை கூடாது என்கிறதை முக்கிய கோட்பாடாக கொண்டவர்கள்,  அவர்கள் இரண்டு பிரிவினர் சந்திக்கும் போது என்ன ஆகிறது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கின்றனர்! இதைப் பார்த்தும் மத நல்லிணக்கத்தின் அருமை தெரியவில்லை.

நான் சொல்கிறேன், இயேசு பிரான் தொழத் தக்கவர்  என்று. நான் என்ன சொல்வது, இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞர்கள் பலர் அதை  சொல்லுகின்றனர். நீங்கள் இயேசு பிரானை  10 நிமிடம் தொழுதால் நான் 15 நிமிடம் தொழத் தயார். மேரி மாதவையும் தொழத் தயார்.

மத சகிப்புத் தன்மைக்கு மாறாக யார்  பேசினாலும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், அவர்களை முழு வீச்சில் எதிர்க்கிறோம், இயேசு கிறிஸ்துவின் சிறப்புகளை நான் விவரித்து எழுதியபோது, இந்துக்கள் சிலர்  அதை மறுத்த போது பல பின்னூட்டங்கள் இட்டு வாதாடி இருக்கிறோம், அவர்கள் நம்மை கிரிப்டோ கிறிஸ்தவன், கிறிஸ்தவனாக இருந்து கொண்டு இந்து போல நடிக்கிறான் என்று.

எனவே மத சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையில் இந்துக்கள் எழுதினாலும், அதையும் நாம் கண்டித்து முழு வீச்சில் எதிர்த்து எழுதி வருகிறோம்.

இந்து மதத்தின் பேரால் மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரம் செய்யப்  படுவதை எதிர்த்த பொது, இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இவன் எல்லாம் இந்துவாக இல்லாமல் இருப்பதே நல்லது என்கிற வகையிலும் நம்மை திட்டி,  நமக்கு  எவிக்சன் நோட்டீஸ் குடுக்கும் அளவுக்கு நாம் மத நல்லிணக்கத்தில் உறுதியாக இருக்கிறோம்.
எனவே மத வெறியில் மனம் சிக்கிய சகோதர சகோதரிகளுக்கு நாம் சொல்லிக் கொள்ளவது என்னவென்றால், மனம் திரும்புங்கள் என்பதுதான். மத சகிப்புத் தன்மையை அழிப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் வெறுப்புணர்ச்சி பிரச்சாரம் செய்வதில் நீங்கள் இவ்வளவு உறுதியாக இருந்தால், அமைதியான சகிப்புத் தன்மையை, மத நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்வதிலும்,  மத வெறியை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கட்டி அவர்களை எச்சரிக்கை செய்து காப்பதிலும் நாங்கள் உறுதி குறைவோமா?
 
 
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: