Thiruchchikkaaran's Blog

மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது. அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை.

Posted on: March 26, 2011


 இன்னொருவரும் நீங்கள் வழிபடும் முறையிலேயே வழிபட வேண்டும் என்று ஏன்  எதிர்பார்க்கிறீர்கள்? பிறர் வேறு முறையிலே வழி பட்டால் ஏன் உங்களால் அதை சகித்துக் கொள்ள இயலவில்லை?
உருவமற்ற நிலையில் தான்  கடவுளை  வணங்க வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்தப் படுத்துகிறீர்கள்?  

 இப்போது முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடிக்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான்.

உங்களுக்கு உருவமற்ற கோட்பாட்டின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, அதே அளவுக்கு கடவுள் உருவமும் எடுக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை இந்துக்களுக்கு இருக்கிறது.

உங்களை உருவங்களை வணங்க சொல்லி கட்டாயப் படுத்தவில்லை.

 ஆனால் பிற மதத்தினர் உருவங்களை வணங்குவதை உங்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

இன்னும் புத்த மதம் இருக்கிறது. புத்த மதம் கடவுள் என்று யாரும் இல்லை என்கிற கோட்பாட்டை தைரியமாக சொல்லுகிறது. புத்த மதம் இந்த உலகில் முக்கிய மதம் என்பதைப் பலரும் வசதியாக  மறந்து விடுகின்றனர். சீன அரசு தடை இல்லா மத வழிப்பாட்டை அனுமதித்தால் உலகில் அதிகம் பேரால் பின்பற்றப் படும் மதமாக பவுத்தமாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு வெவ்வேறு  கோட்பாடுகளை உடைய பல மதங்கள் உள்ளன.

அதனால் தான் சொல்கிறோம், பிற மதத்தினர் எங்கள் கோட்பாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய வேண்டுமா? அது நாகரீகமா?

முன்பெல்லாம் இந்துக்கள் தங்களின் கடவுளை இகழ்ந்தால் சும்மா போவார்கள், இப்ப அவர்களும் சிலிர்த்து சீர ஆரம்பித்து விட்டார்கள்.

இருப்பது இரண்டே வழி. ஒன்று நீங்கள் கடவுளாக வணங்குபவரை நீங்கள் எப்படி மதிக்கிரீர்களோ அதே போல தான் மற்ற மதத்தவரும் அவர்கள் கடவுளாக வணங்குபவரை மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி நல்லிணக்கத்தில் இணைந்து வாழ்வது.

இல்லை என்றால் சகிப்புத் தன்மை இன்மையால் உருவான வெறுப்புணர்ச்சியால் உந்தப் பட்டு மோதல் போக்கை கடைப் பிடிப்பது!

இரண்டும் இல்லை என்றால் அமைதியாக வாழ்ந்து அவரவர் வேலையை செய்து பொறுப்புள்ள நாகரிக மனிதனாக  வாழ்வது. இவர்கள் கடவுள், மதம் இது பற்றி எல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்

மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது!அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை!

Advertisements

14 Responses to "மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது. அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை."

You are very correct Sir. They could not tolerate others faith. The reason behind this attitude is that they are taught to do so in church & mosque. Because the preachers of their religion think that their religion will vanish if they accept other religious faith. மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது!அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை! These words are super.

///வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது!அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை! These words are super////

இந்து கடவுள்களிடம், இந்து நம்பிக்கை மற்றும் இந்துக்கள் மீது மட்டும் வெறுப்புணர்ச்சியை காட்டுவதே இன்றைய நாத்திகம்,அதாவது நாத்தீகர் என்றாலே இந்து வெறுப்பாளர்.இந்துக்களிடம் மட்டும் வெறுப்புணர்ச்சி கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே,இருப்பினும் ஒருமுறை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பின்னர் எங்கிருந்து உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்திகர் கிடைப்பார் ? ஆனால் நீங்கள் சொல்லும்படி ஒரு உண்மையான நாத்திகர் இருந்தால் நல்லதுதான்.அவரால் யாருக்கும் ஆபத்து ஏற்படாது என்பதை நானும் ஏற்கிறேன் சகோ திருச்சி மற்றும் சகோ ராஜா அவர்களே.
நீங்கள் இப்போதுள்ள நாத்திகர்களை வைத்து இதுபோல சிந்திக்க கூடாது என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
இங்கிருப்பவர்கள் biased atheists not genuine

முக்கியமான கருத்துக்களை தெரிவித்த நண்பர்கள் ராஜா , சிவனடியான் ஆகியோருக்கு மிக்க நன்றி.

சிவனடியான் அவர்களே,

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான நாத்தீகர்கள், இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்புணர்ச்சி காட்டுகிறவர்கள் என்ற கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்

அதே நேரம் பதிவுலகில் சில பல நாத்தீகர்கள் எல்லா மதங்களையும் விமரிப்பவர்களாக உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா என்பது ஐயமே. குறிப்பாக திரு. தருமி, திரு. சார்வாகன், திரு. வால் பையன் போன்றோர் எல்லா மதங்களினாலும் சமூகத்துக்கு உருவாக்கக் கூடிய ஆபத்துக்களைப் பற்றி பதிவுகளை இடுகின்றனர்.

எனவே வெறுப்புணர்ச்சி உள்ள நாதீகர்களை , வெறுப்புணர்ச்சி இல்லாத , பகுத்தறிவு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆக்க பூர்வமான நாத்தீகர்களாக ஆக்க முயலாலாம். அது முடியாத காரியமல்ல.

நீங்கள் எந்த அளவுக்கு இந்து மதத்தை அதன் இயல்பான பகுத்தறிவு வழியில் கொண்டு செல்லுகிரீர்களோ, எந்த அளவுக்கு இந்திய சமுதாயத்தில், இந்து மத வழி பாட்டு தலங்களில், முறைகளில் சாதிகளற்ற சமத்துவ m எல்லா பிரிவினரும் பங்கெடுப்பதில் முக்கியத்துவம் பெறுவதில் எட்டுபாடு காட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு இவர்களின் இந்து மதத்தின் மீதான் தனிப் பட்ட வெறுப்புணர்ச்சி குறையும்.

//இங்கிருப்பவர்கள் biased atheists not genuine//

அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

///////இங்கிருப்பவர்கள் biased atheists not genuine//

அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்////////

தயவு செய்து அவர்களின் செயல்பாட்டுக்கு மட்டும் நியாயம் கற்பிக்காதீர்கள்

எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் பயன்களால் தான்.அல்லது அவர்களின் பகுத்தறிவு குறை உடையதாக இருக்கவேண்டும்.நான் குறிபிடுவது 90 சதம் இங்குள்ள போலி நாத்திகர்களை,
மற்றபடி இங்குள்ள தவறுகளை நீங்களும் சாடிகொண்டுதான் இருக்கிறீர்கள் நானும் இவற்றை ஏற்பதில்லை, உண்மையான நடுநிலையான எல்லாமதங்களிலும் உள்ளகுறைகளை சாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் மறுக்கவில்லை அந்த வரிசையில் நீங்கள் தோழர் சங்கரை மறந்து விட்டீர்கள்.
அவர்களை பற்றி நான் எழுதவும் இல்லை நீங்கள் குறிப்பிடும் உண்மையான நாத்திகர்களின் கருத்துக்களில் உண்மையை ஆராய்ந்து தேவையான கருத்துகளை எடுத்து கொண்டு பகுத்தறிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன் தான் நானும்.
மேலும் இப்போதுமே அந்த வழியில் தான் இந்து மதம் செல்வதாக நம்புகிறேன்
நான் குறிப்பிட்டது தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ள தகுதி இல்லாதவர்களை பற்றி

நீங்கள் நண்பர் ராம் அவர்களின் தளத்தை பற்றி அறிந்தவர் தானே அவர் தளத்தின் பெயரே பகுத்தறிவு தானே. அவர் இந்து மதத்தில் உள்ள நல்ல விசயங்களை விளக்கி கொண்டு தான் உள்ளார்.
//////நீங்கள் எந்த அளவுக்கு இந்து மதத்தை அதன் இயல்பான பகுத்தறிவு வழியில் கொண்டு செல்லுகிரீர்களோ, எந்த அளவுக்கு இந்திய சமுதாயத்தில், இந்து மத வழி பாட்டு தலங்களில், முறைகளில் சாதிகளற்ற சமத்துவ m எல்லா பிரிவினரும் பங்கெடுப்பதில் முக்கியத்துவம் பெறுவதில் எட்டுபாடு காட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு இவர்களின் இந்து மதத்தின் மீதான் தனிப் பட்ட வெறுப்புணர்ச்சி குறையும்//////

மேலும் இந்து மதத்தில் இன்று எந்த வழிபாட்டு தளத்தில் எல்லா பிரிவினரும் பங்கெடுக்க முடியாமல் உள்ளது? எனக்கு தெரிந்து எல்லாரும் எல்லா வழிபாட்டு உரிமைகளும் எல்லாவிடத்தும் பெற்றிருப்பதாகவே நினைக்கிறேன்
தவறை திருத்த நாமும் முயற்சி எடுப்போம் ஏற்கனவே தோழர் சங்கர் சில நீக்க வேண்டிய விசயங்களை எனக்களித்த மறுமொழியில் கூறி இருக்கிறார், எல்லாருக்கும் பொதுவான மதத்துக்கு அப்பாற்பட்ட தனிமனித கடமைகள் தேவைகளாக நான் அவற்றை கருதுகிறேன்.அவற்றில் ஒரு சில தான் நீங்கள் இப்போது குறிப்பிட்டு இருப்பதும்
உண்மை நாத்திகரால் மதத்தில் உள்ள தேவையற்ற விசயங்களை நீக்க முடியும்

அன்புக்குரிய சிவனடியான் அவர்களே ,

நான் எதையும் நியாயப் படுத்தவில்லை.

பெரியாரும் இராஜாஜியும் சேர்ந்து காங்கிரெஸ் மாநாட்டுக்கு வேறு வூருக்கு செல்கின்றனர். காலையில் , பெரியாருக்கும் இராஜாஜிக்கும் சிற்றுண்டி பரிமாறப் பட்டது. மதிய உணவும் அதே வீட்டில் காலையில் இராஜாஜி சிற்றுண்டி சாப்பிட்ட எச்சல் இலை எடுக்கப் பட்டு விட்டது. பெரியார் சாப்பிட்ட இலை எடுக்கப் படவில்லை. அந்த எச்சல் இலைக்கு அருகிலேயே இருவருக்கும் மதிய உணவு சாப்பாடு பரிமாறப் பட்டது.
இத்தனிக்கும் அந்த வீட்டின் தலைவன் பெரியாரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துதான் தொழில் செய்கிறார்.
பெரியார் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

நீங்கள் மற்றவரின் எண்ணப் போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நிலை, பிரச்சினைகள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் சாதித் துவேசத்தை நான் நியாப் படுத்தவில்லை. அவருடைய பகுத்தறிவும் மேம்போக்கானதுதான். ஆனால் அவரிடம் இருந்து இந்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டியது, சீர் திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது.

திரு. சங்கர், திரு. கோவிகண்ணன்… ஆகியோரும் குறிப்பிடப் பட வேண்டியவரே. சகோதரர் இராம் தளம் பற்றி நமக்கு நன்கு தெரியும். அவர் தளத்திலே எழுத் ஆரம்பித்துதான் நானே பிலாகு தொடங்கினேன்.

நீங்கள் திரு. சீனு நம்முடைய தளத்தில் எழுதிய பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள்.

இன்றைக்கு இந்து மத வழி பாட்டுத் தளங்களில் யாரும் மற்றவர் எந்த சாதி என்று பார்ப்பது இல்லை. ஆனால் அனைத்து இந்துக்களுக்கும் இந்து மதத்தின் தத்துவங்கள் சென்று சேர்ந்து விட்டனவா? இந்து மத்தில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு கீதை பற்றி தெரியும்?

வெறுப்புணர்ச்சியை கக்கும் நாத்தீகராக இருந்தாலும் சரி , மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளாரக இருந்தாலும் சரி, நாம் அவர்களிடம் நியாயத்தின் அடிப்படையில் ,லாஜிக்கின் அடிப்படையில் வெறி உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி அற்ற நாகரிக சமுதாயத்தின் அவசியத்தை எடுத்து சொல்ல முடியும்.

நாத்திகம் வேறு தீண்டாமை எதிர்ப்பு வேறு, தீண்டாமை எதிர்ப்பு அல்லது சாதி வாரியாக மனிதரை இழிவுபடுத்தல் என்பதற்கு எதிரானா போராட்டங்கள் நிச்சயம் அவசியமே. இங்கு நாம் பேசிகொண்டிருப்பது நாத்திகம் பற்றி, நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு தானே ஒழிய சாதி பற்றிய பிரச்னை இல்லை.
சாதி முறைக்கு எதிராக உண்மையாக போராடிய ஆன்மிகவாதிகளே பலர் உள்ளனர்.நாம் இங்கு விவாதிப்பது நாத்திகம்,போலி நாத்திகம்,நடுநிலை நாத்திகர் பற்றி,உங்களுக்கு நான் சொல்ல வந்தது நடுநிலை நாதிகவாதிகளால் ஒரு பிரச்னையும் இல்லை மேலும் நன்மை கூட நடக்கலாம், ஆனால் எந்த காலத்திலும் போலி நாத்திகர்களால் வெறுப்புணர்ச்சி இல்லாமல் இருக்கவே முடியாது ஏனென்றால் இவர்களை பொறுத்தவரை இந்துக்களுக்கு (கடவுள் மற்றும் வழிபாடு,இறை நம்பிக்கை) எதிரான வெறுப்புணர்ச்சி கொள்வதே நாத்திகம்

கீதை தெரியாமல் இருப்பது பெரிய பிரச்னை இல்லை, அதனால் யாரும் நாத்திகர் ஆகிவிட போவதில்லை, மேலும் கீதை தெரியாதவன் எல்லாம் இந்து அல்ல என்று சொல்ல முடியாது.
நானே வலையில் பதிவிறக்கி வெகு சமீபமாகத்தான் கீதை படிக்க ஆரம்பித்தேன் அதும் அதிலுள்ள தமிழ் விளக்கத்தை படிப்பதுதான் எளிதாக உள்ளது ஏதோ புரிந்து கொள்ள முடிகிறது அவ்வளவே
இதற்கு முன் அலுவலகங்களில் எழுதி இருப்பார்களே எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ……………………….தான் எனக்கு தெரிந்த கீதை.

மாரியாத்தாவை மட்டும் கும்பிடுபவன் இந்து இல்லையா?

அருணகிரி நாதர் எந்த கீதை படித்தார்? பட்டினத்தார்? கீதை படிக்காத மகான்களே இந்து மதத்தில் உண்டு.
வள்ளலார் கூட கீதை படித்ததாக இல்லை.

ஆனால் கீதை எல்லொரையு சென்றடைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் இங்கே உங்கள் தளத்திலேயே கீதையும் அதன் தமிழ் வழி விளக்கமும் கட்டுரையாக பதிவிடுங்கள் முடித்தவரை அது அனைவரையும் போய்சேரும்

கீதை லாஜிக்காக வெறுப்புணர்வு கொண்டவர்களை விளங்க வைபதற்கு என்றால் அதில் ஈடுபாடு உள்ளவர்கள் நிச்சயம் படிப்பார்கள், அதற்குத்தான் நானும் இப்போது படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆனால் முடிவு எடுத்து வந்து குதர்க்கம் செய்பவர்கள் எவ்வளவு லாஜிக்காக விளக்கினாலும் ???????????????

மேலும் சகோ திருச்சிக்கு ஒரு வேண்டுகோள் வேதங்களின் தமிழ் விளக்கங்களையும் வெளியிட்டால் அதனையும் தெரிந்து கொள்வோம்,ஏனென்றால் அதில் அப்படி உள்ளது இப்படி உள்ளது பிறர் கூறும் போது உண்மை என்னவென்று தெரியாமல் பேசாமல் இருக்க வேண்டியுள்ளது, வலைகளில் தேடியும் தமிழ் வழி கிடைக்கவில்லை, வலையில் எங்காவது கிடைக்கும் என்றாலும் தயவு செய்து சுட்டியை தரவும்.

அன்புக்குரிய சிவனடியான்,

பெரும்பாலான முஸ்லீம்களுக்கு குர் ஆன் தெரியும்,பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தெரியும், ஆனால் பெரும்பாலான இந்துக்களுக்கு கீதை தெரியாது.

எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்னவென்றால் இந்து மத்தில் ஆன்மீக ஆராய்ச்சி என்பது பிராமணர் அல்லது அதிக பட்சம் சத்திரியரகளோடு நின்று விட்டது. மேலும் ஒரு பிரிவினர் நசுக்கப் பட்டதற்கும் இந்த சாதீய சமுதாயமே காரணமாக உள்ளது. இந்நிலையில் தாங்கள் நசுக்கப் பட்டதற்கு காரணமாக உள்ள உயர் குடி என்று சொல்லப் படுகிற பிராமணர்கள் மற்றும் பிற சாதி வகுப்பினர் கடவுள் சொன்னார் என்று சொல்லி உயர் சாதி என்று சொல்லிக் கொள்வதாக கருதினார். எனவே இந்தக் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டால் என்ன, என்றும் நாத்தீகம் பேச ஆரம்பித்தனர். இடையிலே வேறு சில மதத்தவர் வந்து எங்க மதம் நல்ல மதம் என்று ரொம்ப நல்லவன் என்று சொல்லிப் பார்த்த போதும், பலர் அவற்றில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று உறுதியாக இருந்து விட்டனர்.

எனவே உங்களுக்கு இந்து மதத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் எனத் தோன்றினால், ஞாயிற்றுக் கிழமை காலைகளில் நசுக்கப் பட்ட பிரிவினர் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லுங்கள். தியாகராசர் போன்றவர்களின் கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டு , மக்களையே இராமராக நினைத்து அவர்களின் கால்களுக்கு சந்தானம் பூசி பாத பூஜை செய்யுங்கள், சுடச் சுட பொங்கலை பொங்கி அங்கேயே மக்களுக்கு குடுங்கள், அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடுங்கள்.

இங்கே இணையத்தில் எழுதுவதால் பெரிய லாபம் இல்லை.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நாத்தீகப் பிரச்சாரம், அல்லது போலி நாத்தீகப் பிரச்சாரம் இந்த அளவுக்கு செல்வாக்குப் பெறக் காரணம் சாதிப் பாகுபாடே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. இந்த விடயத்தில் நெருப்புக் கோழி போல மண்ணில் தலையைப் புதைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. எந்த அளவுக்கு தமிழக மக்கள் சிறந்த நாகரிக நிலைக்கு வருகிறார்களோ அந்த அளவுக்கு இந்திய சமுதாயத்திற்கு, இந்திய நாட்டிற்கு , இந்து மதத்திற்கு நல்லது.

நாத்தீகர்களின் மேல், அல்லது போலி நாத்தீகர்களின் மேல் கோவப் படுவதால் பெரிதாக ஆகப் போவது ஒன்றுமில்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால், அது பிணியால் பீடிக்கப் படுவது இல்லை என்று சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.

நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் போலி நாத்திகர்களை நம்பி அவர்களால் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறாதீர்கள் அவர்களையும் வெறுப்புணர்ச்சி அற்றவர்கள் என்று நினைக்காதீர்கள் அவர்களின் இயல்பே இந்து வெறுப்புணர்ச்சி மட்டுமே என்று தான் நான் திரும்ப திரும்ப கூறுகிறேனே ஒழிய அவர்கள் மேல் எனக்கு கோபம் என்று எங்காவது சொன்னேனா?
ஆன்மிகத்தை பரப்ப்புவதை பற்றியும் அவர்கள் ஏன் போலி நாத்திகர் ஆனார்கள் என்பது பற்றியும் நீங்கள் கூறிக்கொண்டு உள்ளீர்கள்.

கடவுளை மார்கெட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இந்துக்களுக்கு இல்லை

ரொம்ப சிம்பிள் உண்மை நாதீகர்களை மனதில் வைத்து எழுதிய வரிகள் இங்கு மெஜாரிட்டி ஆகா உள்ள வெறுப்புணர்வு கொண்டவர்களுக்கு பொருந்தாது என்கிறேன் நான், இதற்கு ஏன் இவ்வளவு விளக்கம்?

இதிலே என் கோபத்திற்கு என்ன வழி ?

இணையத்தில் எழுதுவதால் எந்த பிரயோசனமும் இல்லை என்றால் எதற்காக நாம் கட்டுரையும் பின்னுட்டங்களும் இடுகிறோம்,
இதில் புரிந்து கொள்பவர்களும் உண்டு, மேலும் இது இங்குள்ளவர்களுக்கான கருத்து பரிமாற்றம் தானே

அன்புக்குரிய சிவனடியான்,

வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகர்கள் மேலானவர்கள் என்று தெளிவாக எழுதி இருக்கிறோம். தமிழ் நாட்டில் தங்களை நாத்தீகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் வெறுப்புணர்ச்சி இல்லாதவர்கள் என்றுசொல்லவில்லை.

வெறுப்புணர்ச்சி உடைய நாத்தீகர்களையும் , ஆக்கபூர்வமான நாத்தீகர் ஆக்கவே முயலுகிறோம், அது முடியாத செயல் அல்ல.

இணையம் என்பது வருங்காலத்தில் இன்னும் அதிக வலிமை உடைய தகவல் தொடர்பு சாதனமாக ஆகக் கூடும். ஆனால் இணையத்தில் எழுதுவதை உண்மையில் கடைப் பிடித்துக் காட்டினால் மக்களுக்கு புரிதலும், உணர்வும், நம்பிக்கையும் கிடைக்கும். இன்றைக்கு தியாகராஜர் பாடல்கள் ஆன்மீக உணர்வை உருவாக்கும் வல்லமை உள்ளவையாக உள்ளன. தியாகராசர்நிதி சால சுகமா , இராமு நீ சந்நிதி சால சுகமா என்று பாடியதோடு, அதே போல வாழ்ந்து காட்டினார். வறுமை நிலயிலும் அரசவைப் பாடகராக வந்த அழைப்பை ஏற்று இராசாவுக்கு துதி பாட விரும்பவில்லை. மக்களிடம் சென்று பாடி, பிக்ஷை வாங்கி உண்டார். அவர் போல பிக்ஷை வாங்கும் அளவுக்கு எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வது எளிதல்ல. ஆனால் மக்களை சந்திப்பது முக்கியம்.

மக்களிடம் ஆன்மீக உணர்வை உருவாக்குவதே ஒரு ஆன்மீக வாதியின் வெற்றி. நாம் ஆயிரம் எழுதினாலும், பேசினாலும், கடைப் பிடித்தாலும், நம்முடைய ஆன்மீக உணர்வை அடுத்தவருக்கு கொடுக்க இயலாவிட்டால் அது வயலுக்குப் பாயாமல் கடலுக்குப் பாயும் தண்ணீர் ஆகி விடும்.

வெறுப்புணர்ச்சி உள்ள நாத்தீக வாதியை வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகவாதியாக்க இயலும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இப்படி வெறுப்புணர்ச்சி உள்ளோர் உருவாக முக்கியக் காரணம், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்ததே, எனவே சீர் திருத்தவாதிகள் எங்கே தவறு நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

தவறை சுட்டிக் காட்டியவர்கள், அவர்கள் வெறுப்புணர்ச்சி உடையவராக இருந்தாலும் அவர் மேல் கோவப் பட்டு ஆவது என்ன? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு.

//////வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகர்கள் மேலானவர்கள் என்று தெளிவாக எழுதி இருக்கிறோம். தமிழ் நாட்டில் தங்களை நாத்தீகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் வெறுப்புணர்ச்சி இல்லாதவர்கள் என்றுசொல்லவில்லை./////////

இதைதான் சார் நான் ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன், திரும்பத்திரும்ப நான் சொல்லவரும் கருத்து குறிப்பிட்ட விரல் விட்டு என்னும் ஒரு சிலரை தவிர மற்ற எல்லோரும் போலிகள் தான் என்று
////இங்கே இணையத்தில் எழுதுவதால் பெரிய லாபம் இல்லை////

இதற்குதான் இந்த்த மறுமொழி

////இணையத்தில் எழுதுவதால் எந்த பிரயோசனமும் இல்லை என்றால் எதற்காக நாம் கட்டுரையும் பின்னுட்டங்களும் இடுகிறோம்,
இதில் புரிந்து கொள்பவர்களும் உண்டு, மேலும் இது இங்குள்ளவர்களுக்கான கருத்து பரிமாற்றம் தானே////

/////வெறுப்புணர்ச்சி உடைய நாத்தீகர்களையும் , ஆக்கபூர்வமான நாத்தீகர் ஆக்கவே முயலுகிறோம், அது முடியாத செயல் அல்ல//////
வாழ்த்துக்கள் உங்களுக்கு தோள் கொடுக்கவும் தயார்

/////தவறை சுட்டிக் காட்டியவர்கள், அவர்கள் வெறுப்புணர்ச்சி உடையவராக இருந்தாலும் அவர் மேல் கோவப் பட்டு ஆவது என்ன? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு/////
எங்கே கோபம் வந்தது அவர்கள் வெறுப்புணர்ச்சி உடையவர்கள் உங்களுக்கே தெரிந்திருக்கிறதே அதைதான் கூறுகிறேன்,இதில் என்ன கோபம்?

//////////இப்படி வெறுப்புணர்ச்சி உள்ளோர் உருவாக முக்கியக் காரணம், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்ததே/////////
சகோ என்ன மீண்டும் மீண்டும் இதே கூறுகிறீர்கள்? வயிற்று வலிக்கு வயிற்று வலி மாத்திரைதான் சாப்பிடவேண்டும் இதனை ஒரு காரணமாக கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு,
எப்படியோ இது உண்மை நாத்திகமா அல்லது ஒருதலை பட்ச நாத்திகமா என்பதுதான் விவாத பொருள், அவர்கள் எப்படியோ அவர்கள் இச்ட்டத்திற்கு இருந்து விட்டு போகட்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: