Thiruchchikkaaran's Blog

கடவுள் இனப் படுகொலை செய்தார் என்ற கோட்பாட்டை வைத்துக் கொண்டால் தப்பில்லை. ஆனால் கடவுள் இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்டார் என்று கோட்ப்பாட்டை வைத்துக் கொள்ள கூடாது! – பகுதி- 1

Posted on: March 25, 2011


மத நல்லிணக்கம், மத சகிப்புத் தன்மை ஆகியவற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பும், தத்துவமும் உடையதாக இருக்கிறது, இந்திய சமூகம்.  நேர்மையான குடும்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிறைந்த சமுதாயமாக உள்ளது இந்திய சமுதாயம். ஆனால் மேலை நாட்டு சமுதாயம் குடும்ப வாழ்க்கையை விட்டு விட்டு டேட்டிங்  வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

File:Ravi Varma-Lakshmi.jpg

இப்படி சமூகம், சமரச  நல்லிணக்கம் இரண்டிலும் இந்தியா தொடர்ந்து நன்மைப்  பாதையில் செல்வதால் இந்தியாவில் உள்ள மத சகிப்புத் தன்மையை , மத நல்லிணகத்தை அழித்தாலன்றி  இந்தியாவில் மத வெறி விடத்தை பாய்ச்ச முடியாது என்று எண்ணி, அதற்க்கு என்ன வழி என்று பார்த்தனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்து மத்தைப் பின்பற்றுவதால் , அந்த இந்து மதத்தை அழித்தாலன்றி, இந்திய மக்களை மத வெறிப் பாதைக்கு கொண்டு வருவது கடினம் என்பதைப் புரிந்து கொண்டனர்.  இது விடயமாக யோசித்து, இந்திய மக்கள் நல்லவங்க, ஆனா இந்துக் கடவுள்கள் பல தார மணம் செய்து கொண்டனர், அதனால் இந்துக் கடவுள்களை விட்டு இனவாதத்தை நியாயப் படுத்தும் கடவுள்களைக் கும்பிடுங்க என்று ரூட்டு போட முயலுகின்றனர்.

இந்துக் கடவுள்கள் பார்த்தால் அதில் பாதிக்குப் பாதி பெண் தெய்வங்களாக உள்ளனர். கருமாரி என்கிற ஆதிபாராசக்தி,  பார்வதி, லக்ஷ்மி, சாரதா என்னும் சரஸ்வதி, காளி, துர்க்கை, சீதை, அன்னபூரணி, சந்தோஷி மாதா, அலமேலு… இப்படி எண்ணற்ற பெண் தெய்வங்களை இந்தியர்கள் வழிபடுகின்றனர். இப்படியாக, பல துணை மணம் செய்யாத இந்தக் கடவுள்களை இந்தியர்கள் கும்பிடுவதை குறிப்பிடாமல் விட்டு விடுவார்கள் மத வெறியில் மன சிக்கிய நண்பர்கள்.

.

அதோடு திருமணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாக வாழும் கடவுள்கள் அனுமன், ஐயப்பன் … உள்ளிட்ட கடவுள்களை யும் இவர்கள் விட்டு விடுவாரகள்.

இதிலே இராமர் என்றால் ஏக பத்தினி விரதன் என்று இருப்பதால் , இராமரை பற்றி  வேண்டா வெறுப்பாக எழுதி விட்டு அதெல்லாம் சும்மா, அப்படி  எல்லாம் இருக்க முடியாதுங்க .. என்று சொல்லி நம்மால முடிஞ்ச அளவுக்கு இராமருக்கு கேட்ட பெயர்  உண்டாக்க டிரை பண்ணினோம் என்று சந்தோசப் பட்டுக் கொள்வார்கள்.

எந்த ஒரு மதத்தையும் வெறுப்புணர்ச்சி இல்லாமல் அதன் நோக்கம் , குறிக்கோள் வழி முறை என்ன என்பதை அறிய விரும்பும் நடுநிலை ஆராய்ச்சியை  மேற்கொண்டால் இதை எல்லாம் விடாமல் இந்த தெய்வங்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.

ஏனெனில் இவர்களை ஆராய்ச்சி நடுநிலை ஆரய்ச்சி அல்ல, இந்து மதக் கடவுள்கள் கெட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதுதான் இவர்களின்  நோக்கம்.

(தொடரும்)

Advertisements

6 Responses to "கடவுள் இனப் படுகொலை செய்தார் என்ற கோட்பாட்டை வைத்துக் கொண்டால் தப்பில்லை. ஆனால் கடவுள் இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்டார் என்று கோட்ப்பாட்டை வைத்துக் கொள்ள கூடாது! – பகுதி- 1"

தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. ஏதோ அவர்கள் மதத்தில்தான் சகோதரத்துவம் நிரம்பி வழிகிறது என்பார்கள். ஆனால் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக சண்டைபோடுகிறார்கள். ஐயப்பன் கோவிலில் ஜாதி, மத பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடுவதை கண்கூடாக பார்க்கிறோம். ஒருசமயம் கிருஷ்ணர் எந்த கோபியருடன் இருக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக நாரதர் ஒரு கோபியர் வீட்டுக்கு சென்றார். அங்கே கிருஷ்ணர் அவரை அன்புடன் வரவேற்றார். மற்றொரு கோபியர் வீ்ட்டுக்கு சென்றார். அங்கேயும் அவரை அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதுபோல் வரவேற்றார். இப்படி அனைத்து கோபியர்களின் இல்லங்களிலும் கிருஷ்ணர் இருப்பதைக் கண்டார். தாங்கள் கூறியதுபோல் இறை தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் குறைகூறக்கூடாது.

திரு. இராஜா, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. கோபிகளின் அன்பை இந்துக்கள் பலர் கூட சரியாகப் புரிந்து கொள்வதில்லை என்பதை விளக்கி சுவாமி விவேகானந்தர் மிகச் சிறந்த சொற்பொழிவை சென்னையிலே ஆற்றி உள்ளார்.

https://thiruchchikkaaran.wordpress.com/2011/03/18/lord-krishna-2/

எனக்கு தெரிந்து உலகில் உள்ள மதங்கள் எல்லாமே பெண்களை விலக்கியே வைத்துள்ளன. எந்த மதத்திலும் பெண் தெய்வங்கள் இல்லை. கிருத்துவத்தில் மேரி பெண் என்றாலும், அவருக்கும் ஒரு லிமிட்டேஷன் (‘Virgin’ Mary).

நம் கலாச்சாரத்தில் தான் குடும்பம் ஒரு கோவில் என்று உணர்த்த கடவுள்கள் குடும்பத்துடன் காட்சியளிக்கின்றனர். சிவன் + பார்வதி, விஷ்னு + மகாலட்சுமி, பிரம்மா + சரஸ்வதி போல…இந்து மதத்தில் பெண்களையே முன்னிருத்துகின்றன. சக்தியாக. சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பன போன்றவை….

வாங்க சீனு சார், மிக முக்கிய கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். இந்துக்கள் வணங்கும் தெய்வம் எல்லாம் குடும்ப தெய்வங்களாக கனவான மனைவி, அண்ணன், தம்பி, குழந்தை குட்டியுடன் காட்சி அளிக்கின்றன. குடும்பத்தில் மனஸ்தாபப் பட்டு பட்டு பிரிந்து செல்பவன் கூட கோவிலுக்குப் போனால், தன குடும்ப நினவு வந்து குடும்பத்துடன் செரவேண்டியபடி ஆகிறது. இது தனிக் கட்டுரையாக விளக்க வேண்டிய ஒன்று.

எங்கு எங்கள் வழிமுறை மட்டுமே சிறந்தது நீங்களும் எம் முறையை தான் பின்பற்ற வேண்டும்,உங்கள் வழிபடு முறைகள் தவறானவை என்ற எண்ணம் இருக்கிறதோ அங்கேயே அடக்குமுறைக்கான சிந்தனைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது,மேலும் இந்த சிந்தனை கொண்டோர் சமுக நல்லிணக்கத்திற்கு எதிரான செயல் பாடுடையவர்கள்.அவர்களின் கை உயரும்போது அல்லது வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் மற்றவர் மீதான அடக்கு முறை தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் அந்த சிந்தனையாளர்கள்,
எல்லோரும் ஒரே மதமாக ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு கொடூரமாக கொலை செய்த காட்சி வலைதளங்களில் எல்லோரும் கண்டிருப்பீர்கள். இதுதான், தான் செயல்படும் வழிமுறையே சிறந்தது என்ற எண்ணத்தின் உச்சகட்ட கொடூரம்.

மதம் வெறும் படகே,வழிபாடு முறை வெறும் துடுப்பே,அடையும் இலக்கே
ஆண்டவன்,இங்கே ஆடும் கூத்தெல்லாம் நிலையானது அல்ல என உணர்ந்தவர் சமய நல்லிணக்கத்தை.மனித நேயத்தை விரும்புவர்.

////எல்லோரும் ஒரே மதமாக ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு கொடூரமாக கொலை செய்த காட்சி வலைதளங்களில் எல்லோரும் கண்டிருப்பீர்கள். இதுதான், தான் செயல்படும் வழிமுறையே சிறந்தது என்ற எண்ணத்தின் உச்சகட்ட கொடூரம்.////

எல்லோரும் உள்ள ஒரு நாட்டில் ஒரே மதமாக ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு கொடூரமாக கொலை செய்த காட்சி வலைதளங்களில் எல்லோரும் கண்டிருப்பீர்கள். இதுதான், தான் செயல்படும் வழிமுறையே சிறந்தது என்ற எண்ணத்தின் உச்சகட்ட கொடூரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: