Thiruchchikkaaran's Blog

மதத்தின் பெயரால் நடக்கும் சமூக சீரழிவுகளை எடுத்து எழுதலாம் ………

Posted on: March 22, 2011


அன்புக்குரிய சகோதரர்  இக்பால்   செல்வன் அவர்கள் நம் தளத்தில் வந்த கட்டுரையான-ஆதாம், ஏவாள் பழம் பறித்து  சாப்பிட்டதற்காக நம்மை பாவி  என்று இகழ்வது  எப்படி சரியாகும்? – க்கு பின்னூட்டமாக தன கருத்தை பதிவிட்டு இருந்தார். அந்தப் பின்னூட்டத்தையும் அதற்க்கு நாம் அளித்த பதிலையும் கட்டுரையாக தருகிறோம்.  

//உண்மை தான், சில மத நம்பிக்கைகளை கேள்வி எழுப்பும் போது கோமாளித்தனமாகத் தான் இருக்கும்.. இதற்கு அக்கால மக்களின் நம்பிக்கைகள் தான் காரணம்.. குறிப்பாக இந்து மதத்தில் விநாயகர் கதை, வராக கதை யாவும் நேரடியாக பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும் ஆனால் அவற்றின் உள் சூட்சுமத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அதே போலத் தான் ஆதாம் ஏவாள் கனி பாவம் என்பது எல்லாம் உள் சூட்சுமத்தை தாங்கி வருபவை. மனித அறிவு வளர்சசி இயற்கையான வாழ்வுமுறையை மாற்றி விட்டது இதனைத் தான் பாவம் என்கிறார்களோ என்னவோ… இப்படியான பதிவுகள் தேவையற்றவை எனத் தோன்றுகிறது. நல்லபடியான பதிவுகளை எழுதலாம் .. அல்லது மதத்தின் பெயரால் நடக்கும் சமூக சீரழிவுகளை எடுத்து எழுதலாம் …………//

அன்புக்குரிய இக்பால் செல்வன்,

சமூகத்தின் நன்மைக்காகவே இதை எழுதுகிறோம்.

எந்த மதத்தையும் வெறுக்காமல் இருப்பவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பிரிவைத் தவிர, உலகின் பிற மதப் பிரிவுகளை எல்லாம் வெறுத்து கண்டிக்கும் படி பிரச்சாரம் செய்வது, மத சகிப்புத் தன்மையை அடிப்படை குணாதிசயமாகக் கொண்ட இந்திய சமூகத்துக்கு ஏறப்பட்டு இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல்.

இந்த மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரம் மெதுவாக செலுத்தப் படுகிறது. ஆனால் இதைப் பலர் உணர ஆரம்பித்து விட்டனர். இந்தக் கட்டுரைக்கு பதிலோ விளக்கமோ அளித்தால் நன்றாக இருக்கும். இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை விநாயகர், வாராக அவாதாரம் இவற்றால் சமூகத்துக்கு என்ன பிரச்சினை?

எந்த இந்து மதப் பிரச்சாகராவது சர்ச்சுக்கு செல்லுபவர்களை இடை மறித்து இயேசு பொய்த் தேவன், அதனால் அவரைத் தொழாதீர்கள் என்று சொல்கிறார்களா?

எந்த ஒரு முஸ்லீமாவது, சீக்கியராவது , இந்துவாவது ஒருவரை அணுகி நீங்கள் பாவி என்று சொல்கிறார்களா?

இயேசுவின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்றால் அடுத்தவருக்கு உதவுங்கள், நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழுங்கள் , பிறருக்கு விட்டுக் கொடுங்கள் பிறரின் தவறுகளை மன்னியுங்கள் … என்று சொல்லி பிரச்சாரம் செய்யலாமே.

இயேசுவை கடவுளாக வழி படுங்கள் என்றால் வழி பட்டு விட்டுப் போகிறார்கள். அதை விடுத்து மற்ற மதங்களின் தெய்வங்களை இகழ்ந்து, வெறுப்புணர்ச்சியை தூண்டுவது ஏன்?

ஒருவனைத் திருடினால் அவனைத் திருடன் ன்று சொல்லலாம். ஆனால் சும்மா இருப்பவனை பாவி என்று அழைப்பதால் மனம் வருத்தப் படுகின்றனர், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! அதற்காகத் தான் எழுதுகிறோம்.

இன்றைக்கு வேளாங்கண்ணி மேரி மாதா கோவில் திருவிழாவில் கத்தோலிக்கர் அல்லாத வேறு யாரவது கலந்து கொள்கிறார்களா என்றால் அது இந்துக்கள தானே. புராடஸ்டன்டு பிரிவினர் கலந்து கொள்கிறார்களா? அவர்களைக் கலந்து கொள்ள சொல்லி நாம் கட்டாயப் படித்தவில்லை. ஆனால் நம்மிடம் வந்து மேரியைக் கும்பிடாதீங்க என்கிறார்கள். ஒரு இந்து கத்தோலிக்கருடன் மத நல்லிணக்கமாக இருப்பதைக் கெடுக்கும் விதமாக இருக்கிறது இவர்களின் செயல்பாடு.

 நாங்கள் இஸ்லாத்துடனும் நல்லிணக்கம் பேணுவோம். தொழுகையில் பங்கெடுப்போம், நோன்பு நோற்போம். ஆனால் எந்த ஆதாரமும் நிரூபணமும் இல்லாமல் எல்லா மதமுமே தவறு நான் சொல்லும் மார்க்கம் மட்டுமே சரி என்று என்று இவர்கள் மத வெறியை எங்களிடம் கொட்டி அப்பாவி மக்களின் மத நல்லிணக்க எண்ணத்தை கெடுத்து, மத சகிப்புத் தன்மையை அழிக்கும் விதமாக செயலபடுவது இன்றைக்கு சமூகம் சந்திக்கும் அபாயங்களில் ஒன்று.

இது மதத்தின் பேரால் நடக்கும் சமூக சீரழிவு தான், சீரழிவு மட்டுமல்ல, மிகப் பெரிய அபாயம்!

Advertisements

3 Responses to "மதத்தின் பெயரால் நடக்கும் சமூக சீரழிவுகளை எடுத்து எழுதலாம் ………"

அன்புள்ள திருச்சிக்காரரே
மிகவும் அருமையாக உண்மையைக்கூறியுள்ளீர்கள். இந்த இரு ஆபிரகாமிய மதங்கள் தான், ஏதோ அவர்கள் வணங்கும் அல்லாவும் ஏசுவும் உண்மையான தெய்வம் போலவும் மற்றவர்கள் எல்லாம் சாத்தானை வணங்குவது போலவும் கருதிக்கொண்டு தீமையை (பிற மத வழிபாட்டை) நன்மையால் (அவர்களின் வழிபாட்டால்) அழிக்க முயற்சிப்பதாக மத துவேஷத்தை வளர்க்கிறார்கள். எவன் எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? நல்லவனாக இருந்தால் போதாதா? என்று இவர்களால் இருக்க முடியாது. அவர்களின் புனித நூல்களில் இதற்கு துணையாக இருக்கும் சில வசனங்களை வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். வேறு எந்த மதத்தவர்களும் இதுபோல் செயல்படுவதில்லை. மதநல்லிணக்கத்தின் தடையாக இருப்பது இதுவே. உங்கள் கட்டுரையால் சிலர் திருந்தினால் அதுவே ஒரு வெற்றிதான். பாராட்டுக்கள்.

a beautiful article to read everyone

http://www.jeyamohan.in/?p=11930

/////கிறிஸ்தவம் இஸ்லாம் போன்றவை மதங்கள். கத்தோலிக்கசபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சணியசேனை, லுத்தரன் சபை போன்றவை அதன் கிளைகள்.

பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை (edited) வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

நான் வாழும் சூழலில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. என் அண்டைவீட்டார்கூட அவர்கள்தான். இந்த அமைப்புகள் இவற்றின் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கின்றன. அவர்களை மீளமுடியாத ஒரு சுழலில் சிக்க வைத்துவிடுகின்றன. அவற்றின் வழிமுறைகள் தீவிரமானவை, ஆபத்தானவையும்கூட.

முதலில், அவை அவர்களை பிறரிடமிருந்து விலக்குகின்றன. சமூக வாழ்க்கையை முற்றாக தடைசெய்கின்றன. பிறரைச் சாத்தானின் படைகளாகச் சித்தரிக்கின்றன. என் அண்டைவீட்டில் பத்து வருடங்களாகக் குடியிருக்கும் பெண்மணியின் குழந்தைகள் இன்று வரை என் குழந்தைகளுடன் ஒரு சொல் கூடப் பேசியதில்லை. விளையாடியதில்லை. பேசுவது பாவம். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் மாலை பாவமன்னிப்பு கோரவேண்டும். பத்துவருடம் முன் என் மகன் ஒரு சொல் பேசியதற்கு அந்த அம்மையார் வந்து மனறாடினார் ‘என் மகனை பாவத்தில் ஆழ்த்தவேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள்’ என்று.

ந்த மதக்குழுமத்தின் நூல்கள் தவிர பிற எதையும் வாசிப்பது தடை செய்யப்படுகிறது. பிற கருத்துக்களில் இருந்து முற்றாக அவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் மூடிய கருத்துச்சூழல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒற்றை நோக்கை உடைக்கும் எதையுமே அவர்கள் அறிவதில்லை.//// – jeyamohan

//////////இந்த வழிமுறைகள் உலகமெங்கும் நெடுநாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நுணுக்கமாகப் பயிலப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டவை. மேலைநாடுகளில் இவர்களை கண்காணிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வழிகள் உள்ளன. இங்கே இந்தியாவில் சிறுபான்மைச் சட்டங்களால் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

உள்ளே செல்பவர்களுக்கு இவர்கள் சொல்லும் கருத்துக்களில் முதன்மையானது இன்ப மறுப்பு. எல்லாவகையான கேளிக்கைகளும், கலைகளும், பிற இன்பங்களும் பாவத்தால் ஆனவை என்கிறார்கள். எந்த அளவுக்கு இன்பத்தை மறுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையாகிறார்கள். எந்த அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேம்படுத்தப்படுகிறார்கள்

ஆகவே இன்பங்கள் சார்ந்த குற்ற உணர்ச்சியை ஆழமாக உருவாக்குகிறார்கள். உடைகள் அணிவது, நகைகள் அணிவது , உண்பது , காதலிப்பது, புணர்வது எல்லாமே பாவமாக ஆக்கப்படுகின்றன. சொல்லப்போனால் பிரார்த்தனை செய்வதும் மதத்தை பரப்புவதும் மட்டுமே பாவமல்லாத செயல்கள். பிற அனைத்துமே பாவங்கள், தூயமைப்படுத்திக்கொள்ள வேண்டியவை.///////// – jeyamohan

//இவர்களின் கடவுள் கருணையே உருவான ஏசுவோ மாதாவோ அல்ல. யெகோவா போன்ற பழிவாங்கும் கோபம் மிக்க பாலைவனத்தெய்வம்தான்.//

///இவர்களின் வழிபாட்டுமுறை மிக ஆபத்தான மூளைச்சலவை. அது சர்ச்சுகளில் வழக்கமாக நிகழும் சொற்பொழிவு, கூட்டுப்பாடல், பிரார்த்தனை மற்றும் சில சடங்குகள் என்ற வடிவில் நிகழ்வதில்லை. கொடூரமான ஒரு கூட்டு மனவசியம் அது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை பிறருக்குச் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த குழுவில் சேரும் புதிய ஒருவர் மிக எளிதில் அந்த மனவசியத்துக்கு ஆளாகிறார்.
////

/////////இவர்களின் வழிபாட்டுமுறை சமன்குலைக்கக்கூடிய உச்சகட்ட ஒலிகளால் ஆன இசையுடன் கூடியது. பெரிய நிகழ்ச்சிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளி அமைப்புகள் கையாளப்படுகின்றன. சீரான தாளமும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் ஒரேவகையான சொற்களும் சேர்ந்து எளிதில் கூட்டு மனவசியத்தை உருவாக்குகின்றன. உச்சகட்ட உணர்ச்சிகளைச் செயற்கையாக உருவாக்கும் கூச்சல்களும் அழுகையொலிகளும் ஆவேசக்கூத்தாட்டங்களும் சேர்ந்து எளிய மனங்களை ஆட்கொள்கின்றன.

’அற்புத’ங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் அற்புதங்களை அறிக்கையிடவேண்டியிருக்கிறது. அற்புதங்களை அறிக்கையிடாதவர்கள் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற நிலை உருவாவதால் அனைவருமே சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.

கூட்டுவழிபாடுகளின் தூபங்களில் பலவகையான பிரமையூட்டும் மருந்துகளை இவர்கள் பயன்படுத்துவதாக அமெரிக்க கத்தோலிக்க சபை பலமுறை குற்றம்சாட்டியுள்ளது/////////

– இப்படி நிறையச் சொல்லுகிறது ஜெயமோகனின் இந்த மிக அழகான கட்டுரை.

////இவர்கள் மருத்துவமனைகளில்தான் தென்படுவார்கள். மனம் உடைந்து ஆதரவு தேடும் நிலையில் இருக்கும் நோயாளிகளை அணுகி உங்களுக்காக பிரார்த்தனைசெய்யலாமா என்பார்கள். ஓரிரு தடவை பிரார்த்தனை செய்து நெருக்கமான பின்னர் நோயாளியிடம் ’ஓர் அற்புதம் நிகழவிருக்கிறது, நீங்கள் மனம் திரும்பினால் போதும்’ என்பார்கள். காரணம் அந்த நோயாளிகளே அற்புதத்தைத்தான் உள்ளூர எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் நோயாளிகளின் உறவினர்களிடம் ’ஒரு மரணம் நிகழப்போகிறது’ என்பார்கள். காரணம் அவர்கள் அதைத்தான் உள்ளூர அஞ்சிக் கொண்டிருப்பார்கள். மிக நுட்பமாக மென்மையாக வலை விரியும். ’நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், நாங்களே பிரார்த்தனை செய்கிறோம்’ என்பார்கள். பின்னர் ’நீங்களும் செய்யுங்கள்’ என்பார்கள். ’நீங்கள் நம்பாததனால் கடவுள் கோபம் கொண்டிருக்கிறா’ர் என்பார்கள். ’உங்களுடைய தயக்கத்தால் ஒரு மரணம் நிகழவிருக்கிறது’ என்பார்கள். ’உங்களுக்கு வேண்டியவரின் மரணத்துக்கு நீங்களே காரணம்’ என்பார்கள். படிப்படியாக இந்த உணர்வுத் தாக்குதல் நிகழும்.

அவர்களின் அச்சத்தை நம் தர்க்கம் எவ்வளவு நிராகரித்தாலும் ஆழ்மனம் அதை பற்றிக்கொண்டு அதிலேயே ஒட்டியிருக்கும். அந்த அச்சம் நிறைந்த மனநிலையில் எதிர்மறையாக எது நிகழ்ந்தாலும் மனம் அதை பற்றிக்கொள்ளும். அது கடவுளின் தண்டனையா என்று பீதிகொள்ளும். அந்த பீதியை முகத்திலேயே வாசித்து ’இன்னும் பெரிய தண்டனை வரப்போகிறது’ என்பார்கள். ஓர் எல்லையில் அந்த மனம் முறியும். பறவை வலையில் சிறகற்று விழும்///////

ஆக இப்படி பலவீனர்களை வீழ்த்தி மதம் மாற்றியே கருனைக்கடலை பரப்பும் பொய்யை நிகழ்த்தி வருகிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: