Thiruchchikkaaran's Blog

கிறிஸ்தவம் என்பது என்ன ? பகுதி – 1!

Posted on: March 21, 2011


இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்து விட்டு நாம்  இயேசு பிரானை குற்றம் சொல்லப் போகிறோம் என்று யாராவது எதிர்பார்த்தால்-  இயேசு பிரானை குற்றம் சொல்ல அல்ல, கனம் செய்யவே இந்தக் கட்டுரையை எழுதுகிறோம் என்பதை முதலிலே சொல்லுகிறோம்.

இந்த தலைப்பிலே நாம் ஒரு கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறோம்   என்றால் அதற்கு காரணம்,  இயேசு பிரான் உண்மையில் ஸ்தாபிக்க  விரும்பிய மதம் என்ன என்பதை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!

இன்றைய தினம் இந்தியாவிலே இயேசு கிறிஸ்துவின் பெயரால் செய்யப் படுவது மதப் பிரச்சாரம் என்பதை விட, மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரமாகவே இருக்கிறது.

இவர்கள் இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்கிறார்களா என்று பார்த்தால், இவர்கள் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் , யார் யாரோ சொன்னதை  எல்லாம் இயேசு கிறிஸ்துவின் பெயாராலே இங்கே பரப்புகிறார்கள்!

இங்கே இயேசு கிறிஸ்துவின் பேரால் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் சொல்லும் மேற்கோள்கள், அப்போஸ்தலர் எனப்படும் திரு.  பவுல் போன்றவர்கள் சொன்னவையாகவோ, அல்லது திருவாளர்கள் தாவீது  , ஜோஷுவா, மோசஸ் …. போன்றோர் சொன்னவையாகவே இருப்பதைக் காணலாம்.

பெரும்பாலனா பிரச்சாரகர்கள்  இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை அதிகமாக மேற்கோள் காட்டுவதில்லை.

காரணம் என்ன வென்றால்,  இவர்களுக்கு  பிரச்சார உத்திகளை வகுத்து தரும் மேலை நாட்டவர்கள் பலருக்கு இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகள் ஒத்துக் கொள்ளாத நிலைமை  உள்ளது. அதே மன நிலையை நம்ம வூர் பிரச்சாரகர்களும் அடைந்து விடுகின்றனர்!

உதாரணமாக மனைவியைக் கை விடாமல் ,  விவாகரத்து செய்யாமல் அவளுடன்  நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இயேசுவின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று. இந்தக் கோட்பாட்டை இன்றைக்கு எந்த ஒரு பிரிவின் தலைவராவது முக்கியக் கோட்பாடாக  பிரச்சாரம் செய்கிறாரா?  பெண்கள் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்பதையும், ஆண்கள் உடல் உறவின் போது தடுப்பு சாதனம் அணியக் கூடாது என்பதையும் முக்கிய போதனையாக கத்தோலிக்கர்கள் சொல்லுகின்றனர். கத்தோலிக்க தலைவரான போப்பாணவர் மனைவியை விவாகரத்து செய்பவன் இயேசு  கிறிஸ்துவின் கோட்பாட்டுக்கு விரோதமாக செய்கிறான் என்றோ, நீங்கள் யாரும் விபச்சாரம் செய்யாதீர்கள் என்பதையோ முக்கிய பிரச்சாரமாக வலியுறுத்தி மக்களுக்கு  சொல்கிறார்களா?

வேறு பிரிவின் முக்கியப் பிரச்சாரகர்கள் யாரவது இந்தக் கருத்தை முக்கியக் கோட்பாடாக மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்களா?

அப்படி சொன்னால் மேலை நாட்டு மக்கள் இவர்களைப்  பார்த்து சிரிப்பது மட்டும் அல்ல, உங்கள் இயக்கங்களில் உள்ள மேலை நாட்டவர்  எத்தனை பேர் இந்தக் கோட்பாட்டை பின்பற்றுகின்றனர் நீ இதை சொல்றியா என்று சந்தி சிரிக்கும் நிலையே உள்ளது.

சரி, இந்தியாவிலாவது இவர்கள் இந்தக் கருத்துக்களை சொல்கிறார்களா என்று பாருங்கள்,  இந்தியாவிலே நீங்கள் சந்திக்கும் மதப் பிரச்சாரகர்கள் முக்கிய கோட்பாடாக – முக்கிய நிபந்தனையாக – சொல்வது பிற மதங்களை எல்லாம் கண்டித்து, இகழ்ந்து வெறுக்க வேண்டும், அவர்கள்  தெய்வங்கள் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என்பதுதான்.

இன்னும் சொல்லப் போனால் இவர்களில் பலரும் விவாகரத்துக்கு நேர்முக, மறைமுக ஆதரவு தருவதை காண்கிறோம். நம்முடைய தளத்திலே விவாகரத்து செய்ய வேண்டாம் என்ற போது சில பிரச்சாரகர்கள் வெகுண்டு எழுந்து ஆ, அவன் உடம்பில பேட் ஸ்மல் அடிக்குது , அவனை பைவ் ஸ்டார் ஹோட்டல் காரன் உள்ளாரேயே உட மாட்டங்கிறான், அந்தளவுக்கு அவனுக்கு தோல் வியாதி , அவன் கூட அந்தப்   பொண்ணு  எப்படி சேர்ந்து வாழ முடியும்?என விவாகரத்துக்கு வக்காளத்து வாங்கிறார்கள்! திருமணத்துக்கு முன் அதே ஆணுடன்  சேர்ந்து பார்க், பீச் என்று செல்கிறார்கள். ஹோட்டல் சிப்பந்திக்கு தெரிந்த உடல் நாற்றம் அருகில் அமர்ந்து உணவருந்திய இவருக்கு தெரியவில்லையா? திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் உடல் நாற்றமாகி விட்டதா?

இவர்களால் உண்மையில் இயேசுவின் பாதையில் செல்ல இயலவில்லை, இவர்களால் செய்யக் கூடியது என்னவென்றால் மத வெறியைப் பரப்புவதுதான் , அது எளிய வேலை, நீ என்ன செஞ்சாலும் ஓகே , பிற மதங்களை கண்டித்து , வேறு எந்த மதமும் இல்லாமல் செய்தா போதும், எல்லாரையும் மிரட்டி நாம் சொல்லுற கடவுளை கும்பிட சொல்லு, இல்லேன்னா எரி நரகம் என்று சொல்லு என்கிற சுளுவான ரூட்டிலே இவர்கள் போகிறார்கள்.

நான் சில மேலை நாட்டை சேர்ந்த சில பிரச்சாரகர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து இருக்கிறேன்,  அவர்களிடம் மனைவியைப் பிரியாதே, விபச்சாரம் செய்யாதே என்றால் அதெல்லாம் முக்கியமில்லை என்கிற ரூட்டிலே பேச்சை மாறுவார்கள், இன்னும் நாம் தெளிவாக சொன்னால், எனக்கு பைபிள் தெரியாதா என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் நமது இந்தியப் பிரச்சாரகர்கள் எடுத்த எடுப்பிலேயே திட்ட ஆரம்பித்து விடுகின்றனர். மேலை நாட்டினர் கொஞ்சம் நாசூக்கு பார்ப்பார்கள். மற்றபடி வித்யாசம் இல்லை.

எனவே இவர்கள் இயேசு வின் பேராலே எதை எதையோ சொல்லி மத வெறியை பரப்புவதாலே  இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கருத்துக்களை இந்தியர்களுக்கு  எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இதே இங்கே இயேசு கூறியதாக சொல்லப் பட்டதை தடிப்பு எழுத்திலே  போடுகிறோம், இதைப் படியுங்கள்.

மத்தேயு அதிகாரம் 5

27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.

32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

அன்புக்குரிய நண்பர்களே, எந்த ஒரு மதப் பிரச்சாரகராவது இதை உங்களிடம் சொல்லி இருக்கிறாரா? ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய ஒலி பெருக்கிகளில் அவரகள் கூறும் போதனைகளில் மேலே கூறிய வசனங்கள் இடம் பெற்று இருக்கிறதா?    நீங்கள் தெருவில் போகும் போதும், பஸ்ஸில் பயணிக்கும் போதும் உங்கள் கைகளில் மதப் பிரச்சாரத் துண்டுப் பிரசுரங்களை உங்களிடம் தருகிறார்கள் அல்லவா, அவற்றில் இந்த வசனங்கள் உள்ளனவா? சற்று சிந்தித்துப் பாருங்கள்!

இந்தியப் பிரச்சாரகர்கள் இந்திய மக்களிடம் போய், “நீங்கள் மனைவியை விட்டு பிரியாதீர்கள்” என்று சொன்னால், அவரகள பதிலுக்கு சிரித்து விட்டு,  “தம்பி, எங்க அப்பன், பாட்டன், முப்பாட்டன் யாருமே மனைவியை விவாகரத்து செய்வது பற்றி நினைத்துக் கூடப் பார்த்தது இல்லையே, இப்ப நான் மட்டும் எம் பொண்டாட்டிய விவாகரத்து செய்யவா போறேன்”, என்று சொல்வார்கள்.

எனவே இவர்கள் இயேசு கிறிஸ்துவின் கொள்கையை பிரச்சாரம் செய்ய வேண்டிய இடம் எது, எங்கே மனைவிய விவாக ரத்து செய்வது சரவ சாதாரணமாக நடக்கிறதோ அங்கே- மேலை நாடுகளில், ஆனால் அவரகளை இயேசு கிறிஸ்துவின் பாதையில் திருப்புமளவுக்கு இவர்களுக்கு நம்பிக்கை இல்லை!

நான் உங்களுக்கு  சொல்லிக் கொள்வது என்னவென்றால், யாராவது உங்களிடம் வந்து, நீங்கள் வணங்கும் தெய்வங்களை  இகழ்ந்து,  மதவெறியைப் பரப்ப வந்தால் அவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்கள் உங்கள் தெய்வங்களை  இகழ்வார்கள். ஆனால் நீங்கள் எந்த தெய்வத்தையும் இகழ வேண்டாம்.  நீங்கள் எல்லா தெய்வங்களையும் வழிபடுங்கள். நீங்கள் அம்மன் கோவிலுக்கு முப்பது நாள் போனால் , சர்ச்சுக்கு ஒரு நாளாவது போங்கள். ஐயப்பன் கோவிலுக்கு ஐம்பது நாள் போனால மசூதிக்கு  ஒரு நாளாவது  போங்கள். பாரசீகரின் கோவிலுக்குப் போங்கள், புத்த விகாரங்களுக்குப் போங்கள்… எதையுமே வெறுக்க வேண்டாம், எல்லாவற்றிலும் உள்ள ஆக்கபூர்வமான கோட்பாடுகளை முதலில் அணுகுவோம். இப்படி இருந்தால் இந்தியாவில் மத நல்லிணக்கம் கெடாமல் பாதுக்காக்கப் படும்.  உலகிற்கே மத நல்லிணக்கத்தைப் போதிக்க வேண்டிய பொறுப்பும், வாய்ப்பும், தகுதியும், தத்துவமும் உள்ள நாடாக இந்தியா இருப்பதை  நாம் மறந்து விட வேண்டாம். நம்மையும் மத வெறியர் ஆக்குவதன் மூலம் , உலகில் எல்லோரையும் மத வெறியர் ஆக்க விரும்பவோருக்கு நாம் வாய்ப்பளிக்கக் கூடாது.

Title: கிறிஸ்தவம் என்பது என்ன- part 1 ?

Advertisements

7 Responses to "கிறிஸ்தவம் என்பது என்ன ? பகுதி – 1!"

Brother thiruchi sir,

Excellent article.waiting for next post.
thank you.

தனபால் சார், வாருங்கள், நலமா?

உண்மையில் இயேசுபிரானின் அத்தனை வார்த்தைகளும் எழுதப்படாமல் போனது, எழுத்தப்பட்டவைகளில் பல அழிந்துவிட்டதாக தெரிகிறது.. மிஞ்சி இருப்பது. அவரது சீடர் நால்வரின் எழுத்துக்கள் மூலாம் வெளிப்பட்ட உண்மை மாத்திரமே.. ஆனால் இயேசுவைப் போல சீரிய சிந்னை உடைய மனிதர் மேற்குலகில் தோன்றியது இல்லை எனலாம்.. அவ்வளவு முற்போக்குச் சிந்தனை வாதி …. அவரின் உண்மையான குறிக்கோள் கிருத்துவத்தில் நிறைவேறா விட்டாலும், அது முற்றிலும் அழியாமல் தக்க வைத்ததுக்கும் கிருத்துவமே காரணம்.. உண்மை பெரும்பாலான பிரச்சார்கர்கள் சுயநலம் சார்ந்தவர்கள் ஆனால் சேற்றின் நடுவே செந்தாமரையாக சில நல்ல உள்ளங்கள் பலர் இருக்கத் தான் செய்கின்றனர்.

//இந்தியாவிலே நீங்கள் சந்திக்கும் மதப் பிரச்சாரகர்கள் முக்கிய கோட்பாடாக – முக்கிய நிபந்தனையாக – சொல்வது பிற மதங்களை எல்லாம் கண்டித்து, இகழ்ந்து வெறுக்க வேண்டும், அவர்கள் தெய்வங்கள் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என்பதுதான்//

அன்புக்குரிய திரு.இக்பால் அவர்களே, வணக்கம், என்னை மன்னியுங்கள், நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தில் சில பகுதிகள் எடிட் ஆகி விட்டன. அவை தவறுதலாக எடிட் ஆகி விட்டன. அவற்றை மீண்டும் ரெடிரைவ் செய்ய முயன்றேன். இயலவில்லை. அதன் நகல் உங்களிடம் இருக்குமானால் அனுப்புங்கள், முழுதுமாக பிரசுரிக்க இயலும். மீண்டும் என் வருத்தத்தை தெ ரிவித்துக் கொள்கிறேன்.

good thirchi bro, expecting next post

வாங்க, சிவனடியான் அவர்களே , உங்கள் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

Brother Thiruchi sir,

I am fine sir.and I hope the same.i red all your posts in my mobile.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: