Thiruchchikkaaran's Blog

ஆதாம், ஏவாள் பழம் பறித்து சாப்பிட்டதற்காக நம்மை பாவி என்று இகழ்வது எப்படி சரியாகும்? கிறிஸ்தவம் என்பது என்ன? பகுதி – 2 !

Posted on: March 21, 2011


ஹலோ ஆதாமின் பாவம்  இந்த உலகத்தில் எல்லோரின் மேலும் இருக்கிறது, நீ ஒரு பாவி, இது எங்கள் மத நம்பிக்கை, அதுனால நாங்க சொல்லுறோம் புரியுதா?

 ஹலோ பிரதர்,  அப்படி சொல்லித்தான் ஆகனும்னா உங்க மத நம்பிக்கையில நல்ல விசயங்களா  சொல்லுறதுன்னா சொல்லுங்க, இல்லேன்னா விடுங்க!  சும்மா மத நம்பிக்கைங்கிற பேர்ல எல்லோரயும் அசிங்கமா திட்டுவது சரியா பாஸ்?  

ஹலோ, எங்கள் மதத்தைப் பரப்ப எங்களுக்கு உரிமை இருக்கு!

ஆனால் எங்களை பாவி என்று அசிங்கமா திட்ட உங்களுக்கு உரிமை இல்லை, மத சகிப்புத் தன்மையை கெடுத்து மத வெறியை உருவாக்குவதற்கும் உரிமை இல்லை.  

               

அப்ப, நாங்க எப்படி எங்க மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியும்?

அட, ஒருத்தரை பாவி அப்படின்னு திட்டுவதுதான் மதக் கோட்பாடை பாலோ பண்ணும் முறையா, அப்ப இதே கோட்பாடு உடையவங்களைப் பார்க்கும் போது, உங்க வழிபாட்டு தலத்திலோ, நிகழ்ச்சிகளிலோ உங்களுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் பாவினும் திட்டிக்கங்க, இல்லை எப்படி வேணும்னாலும் திட்டிக்கங்க, அது கூட வேணாம்கறது தான் நமது கருத்து, ஆனால் பாவின்னு திட்ட  நீங்க இவ்வளவு துடிக்கும் போது நான் என்ன சொல்ல முடியும்? ஆனால்  என்னை  திட்டக் கூடாது!

ஹலோ உங்கள் நன்மைக்காகவே சொல்லுகிறோம், உங்களைக்  காப்பாற்றவே சொல்கிறோம். உங்களுக்கு நற்செய்தி அளிக்கவே வந்திருக்கிறேன்.

என்ன நற்செய்தி?

ஆதாமின் பாவம் எல்லோர் மேலும் இருக்கிறது…..

இது நற்செய்தியா?

இருப்பா, அவசரப் படுறியே, உனக்கு இரட்சிப்பு காத்திருக்கிறது!இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டால் உங்க‌ள் மேல் உள்ள‌ பாவ‌ம் க‌ழுவ‌ப் ப‌ட்டு விடும்.

File:Lucas Cranach the Elder-Adam and Eve 1533.jpg

                             

                             

ஹலோ  பிரதர், நீங்க எதுக்கு இதுல இயேசுவை எல்லாம் இழுக்கறீங்க, இயேசுவை நாங்கள் உண்மையாக நேசிக்கிறோம், அவர் எங்கள் நண்பர், நல்லாசான், இதயம் கவர்ந்தவர், அவரைக் கடவுளாக கருதி வழிபடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என்று பலமுறை சொல்லி  விட்டோம். அவரை எங்களுக்கு மிக நன்றாகத்  தெரியும், சும்மா அவர் பேரை சொல்லி எங்களை பயமுறுத்தாதே!  

இயேசு மேல மதிப்பு வச்சுரிக்கீங்க, ஆனால் ஆதாம் பழம் பறித்து சாப்பிட்டாதால் நாம் எல்லோரும் பாவி ஆகி விட்டோம் என்பதை ஒத்துக்க மாட்டேங்கறீங்க.
 
பிரதர், மொத‌ல்ல‌ என‌க்கு ஒன்னு தெரிஞ்சாக‌னும், “ஆதாம் பழம் பறிச்சு சாப்பிட்டதால் இந்த உலகத்தினர் எல்லோரும் பாவியாகி விட்டனர்” என்று இயேசுபிரான் சொல்லியதாக இருக்கிறதா?
 
நான் சொல்லுறேன், பவுல் அடிகள் சொல்லி இருக்கார்.
 
இயேசு சொல்லி இருக்காரா அதை சொல்லு!
 
ச‌ரி அப்ப‌ இயேசு எதை சொன்னாலும் நீ ஒத்துக்க‌ த‌யாரா?
 
 அது இன்னொரு விட‌ய‌ம், இயெசுவோ, சாக்ர‌டீசொ, ச‌ங்க‌ராச்சாரிய‌ரோ, அல்ல‌து “க‌ட‌வுளோ”, யார் சொன்னதாக எங்க‌ளிட‌ம் ஒரு க‌ருத்து வ‌ந்தாலும்,அதை ஆராய்ந்து பார்ப்ப‌துதான் எங்க‌ள் வ‌ழி! யாருக்கும் பிளாங்க‌ட் அப்ரூவ‌ல் கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.
 
ஆனால் நீ சொல்லுர‌து இயேசு கிரிஸ்து சொன்ன‌தாக உள்ள‌தையா,  அல்ல‌து நீயாக‌  இங்க‌ மொக்கை போடுரியானு தான்  கேக்கிரோம்.

(தொடரும்)

Advertisements

27 Responses to "ஆதாம், ஏவாள் பழம் பறித்து சாப்பிட்டதற்காக நம்மை பாவி என்று இகழ்வது எப்படி சரியாகும்? கிறிஸ்தவம் என்பது என்ன? பகுதி – 2 !"

இதை இதை இதத்தான் நான் ரொம்ப நாலா எதிர்பார்த்தேன். அருமையான அவசியமான பதிவு.இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லாம மலுப்புராங்கோ சாமியோவ்.
பவுல் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது சாமி ஆனா எங்கோ ஒரு மூலையில் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆசாமி ஆப்பிள் தின்னது எப்படி நம்மமேல பாவமா வரும்

அன்புக்குரிய சிவனடியான்,

எங்கோ இருப்பவர் செய்தது மட்டும் அல்ல, உங்கள் வீட்டிலே உங்கள் அண்ணனோ, தாத்தாவோ பழம் பறித்து சாப்பிட்டால் கூட அதற்காக உங்களைக் குற்றப் படுத்த இயலாது. நீங்கள் இன்று பழம் பறித்து சாப்பிட்டால், அதற்காக முப்பது வருடம் கழித்து உங்கள் பேரனைக் குற்றப படுத்த இயலாது

சார்வாகன் சொன்னது…..

//விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூத மத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும் இணைத் திருமுறை புத்தகங்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.//

சுவனப்பிரியன் சொன்னது….

இறைவனால் அருள்பட்ட ஒரு வேதம் மனிதர்களின் கரம் புகுந்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளது.

‘பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றித் திரிந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்’ – (மத்தேயு 4:23)

‘ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்’ – (மாற்கு1:14)

யார்யாருடைய புத்தகங்களை எல்லாம் வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம், ஏசு நாதர் மக்களுக்கு பிரசிங்கித்த ‘தேவனுடைய சுவிசேஷம்’ அதாவது முகமது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனைப் போன்ற ‘இன்ஜில்’ வேதத்தை பைபிளில சேர்க்கவில்லை? அந்த பிரசங்கங்களை என்ன செய்தது கிறித்தவ உலகம்? அந்த வேதம் மட்டும் நம் பார்வைக்கு வரப் பெற்றால் முற்றிலும் அது குர்ஆனின் மறுபதிப்பாக இருக்கும். தற்போதுள்ள கிறித்தவ உலகத்தின் பல நம்பிக்கைகள் தகர்ந்து விடும் அபாயமும் இருக்கிறது.

சார்வாகன் சொன்னது….

/தேவனுடைய சுவிசேஷம்’ அதாவது முகமது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனைப் போன்ற ‘இன்ஜில்’ வேதத்தை பைபிளில சேர்க்கவில்லை? /

வணக்கம் நண்பரே,

நீங்கள் கூறுவது குரானில் குறிப்பிடப் படும் இஞ்சீல் என்பது கிறித்தவர்கள் வேதமான புதிய ஏற்பாடு அல்ல என்பதுதான்.இது மிகவும் ஆய்வு செய்து கருத்து கூற வேண்டிய விஷயம். ஆதலால் இப்போது சரி,தவறு என்று கூற முடியாது.

நீங்கள் இதனை வரலாற்று ஆதாரங்களுடன் பதிவிட்டால் நலம்.பதிவிட்டதும் படித்து கருத்து கூறுகிறேன்.

வருகைக்கும்,கருத்து பதிவுக்கும் நன்றி.

உண்மை தான், சில மத நம்பிக்கைகளை கேள்வி எழுப்பும் போது கோமாளித்தனமாகத் தான் இருக்கும்.. இதற்கு அக்கால மக்களின் நம்பிக்கைகள் தான் காரணம்.. குறிப்பாக இந்து மதத்தில் விநாயகர் கதை, வராக கதை யாவும் நேரடியாக பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும் ஆனால் அவற்றின் உள் சூட்சுமத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அதே போலத் தான் ஆதாம் ஏவாள் கனி பாவம் என்பது எல்லாம் உள் சூட்சுமத்தை தாங்கி வருபவை. மனித அறிவு வளர்சசி இயற்கையான வாழ்வுமுறையை மாற்றி விட்டது இதனைத் தான் பாவம் என்கிறார்களோ என்னவோ… இப்படியான பதிவுகள் தேவையற்றவை எனத் தோன்றுகிறது. நல்லபடியான பதிவுகளை எழுதலாம் .. அல்லது மதத்தின் பெயரால் நடக்கும் சமூக சீரழிவுகளை எடுத்து எழுதலாம் …………

அன்புக்குரிய இக்பால் செல்வன்,

சமூகத்தின் நன்மைக்காகவே இதை எழுதுகிறோம்.

எந்த மதத்தையும் வெறுக்காமல் இருப்பவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பிரிவைத் தவிர, உலகின் பிற மதப் பிரிவுகளை எல்லாம் வெறுத்து கண்டிக்கும் படி பிரச்சாரம் செய்வது, மத சகிப்புத் தன்மை யை அடிப்படை குணாதிசயமாகக் கொண்ட இந்திய சமூகத்துக்கு ஏறப்பட்டு இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல். இந்த மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரம் மெதுவாக செலுத்தப் படுகிறது. ஆனால் இதைப் பலர் உணர ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கட்டுரைக்கு பதிலோ விளக்கமோ அளித்தால் நன்றாக இருக்கும். இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை விநாயகர், வாராக அவாதாரம் இவற்றால் சமூகத்துக்கு என்ன பிரச்சினை?

எந்த இந்து மதப் பிரச்சாகராவது சர்ச்சுக்கு செல்லுபவர்களை இடை மறித்து இயேசு பொய்த் தேவன், அதனால் அவரைத் தொழாதீர்கள் என்று சொல்கிறார்களா?

எந்த ஒரு முஸ்லீமாவது, சீக்கியராவது , இந்துவாவது ஒருவரை அணுகி நீங்கள் பாவி என்று சொல்கிறார்களா?

இயேசுவின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்றால் அடுத்தவருக்கு உதவுங்கள், நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழுங்கள் , பிறருக்கு விட்டுக் கொடுங்கள் பிறரின் தவறுகளை மன்னியுங்கள் … என்று சொல்லி பிரச்சாரம் செய்யலாமே.

இயேசுவை கடவுளாக வழி படுங்கள் என்றால் வழி பட்டு விட்டுப் போகிறார்கள். அதை விடுத்து மற்ற மதங்களின் தெய்வங்களை இகழ்ந்து, வெறுப்புணர்ச்சியை தூண்டுவது ஏன்?

ஒருவனைத் திருடினால் அவனைத் திருடன் ன்று சொல்லலாம். ஆனால் சும்மா இருப்பவனை பாவி என்று அழைப்பதால் மனம் வருத்தப் படுகின்றனர், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! அதற்காகத் தான் எழுதுகிறோம்.

இன்றைக்கு வேளாங்கண்ணி மேரி மாதா கோவில் திருவிழாவில் கத்தோலிக்கர் அல்லாத வேறு யாரவது கலந்து கொள்கிறார்களா என்றால் அது இந்துக்கள தானே. புராடஸ்டன்டு பிரிவினர் கலந்து கொள்கிறார்களா? அவர்களைக் கலந்து கொள்ள சொல்லி நாம் கட்டாயப் படித்தவில்லை. ஆனால் நம்மிடம் வந்து மேரியைக் கும்பிடாதீங்க என்கிறார்கள். ஒரு இந்து கத்தோலிக்கருடன் மத நல்லிணக்கமாக இருப்பதைக் கெடுக்கும் விதமாக இருக்கிறது இவர்களின் செயல்பாடு. நாங்கள் இஸ்லாத்துடனும் நல்லிணக்கம் பேணுவோம். தொழுகையில் பங்கெடுப்போம், நோன்பு நோற்போம்.

ஆனால் எந்த ஆதாரமும் நிரூபணமும் இல்லாமல் எல்லா மதமுமே தவறு நான் சொல்லும் மார்க்கம் மட்டுமே சரி என்று இவர்கள் மத வெறியை எங்களிடம் கொட்டி அப்பாவி மக்களின் மத நல்லிணக்க எண்ணத்தை கெடுத்து, மத சகிப்புத் தன்மையை அழிக்கும் விதமாக செயலபடுவது இன்றைக்கு சமூகம் சந்திக்கும் அபாயங்களில் ஒன்று. இது மதத்தின் பேரால் நடக்கும் சமூக சீரழிவு தான், சீரழிவு மட்டுமல்ல, மிகப் பெரிய அபாயம்.

இயெசுவோ, சாக்ர‌டீசொ, ச‌ங்க‌ராச்சாரிய‌ரோ, அல்ல‌து “க‌ட‌வுளோ”, யார் சொன்னதாக எங்க‌ளிட‌ம் ஒரு க‌ருத்து வ‌ந்தாலும்,அதை ஆராய்ந்து பார்ப்ப‌துதான் எங்க‌ள் வ‌ழி! //

அதே தான்,..

இன்று என் பதிவும் இதுபோலத்தான்..

http://punnagaithesam.blogspot.com/2011/03/karthik-llk.html

எவனோ எப்போதோ பழம் பறித்து சாப்பிட்ட பாவம் நமக்கு வராது என்றால், எப்போதோ எம் முன்னோர்கள் நாலாம் வருணமாக இருந்தது மட்டும் இப்போதும் எப்படித் தொடரும்? கிறிஸ்துவத்தைக் கேள்வி கேட்குமுன் ஒரு இந்துவாக, இது போல் சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்புக்குரிய திரு. விஜயகோபால சாமி அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இந்து மதம், அது பின்பற்றப் படும் விதம் பற்றி விமரிசித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். சாதீயத்தை ஆதரிக்கவில்லை. சமத்துவத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இருக்கிறோம். எந்த ஒரு இந்தியரையும், அவர் எனது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவரை வணங்க நான் தயங்குவதில்லை. இந்திய சமுதாயம் சாதீய வாரியாகப் பிளவு பட்டு இருந்ததால், இந்து மதமும் அந்த சமுதாய முறைக்கு உற்பட்டே பின்பற்றப் பட்டது.

இப்போது இந்தியாவில் சாதீயக் கட்டுப்பாடுகள் உடைவைதை பயன்படுத்தி இந்து மதமும் தன்னுடைய ஒளிக் கற்றை களை அனைவரின் மீதும் பாய்ச்சி வருகிறது. எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அதே இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, தனக்கு அருகில் நின்று கும்பிடுபவன் எந்த சாதி என்று நினைப்பதும் இல்லை.

இப்படி இந்து மதம் அதன் இயல்பின் படியே சுதந்திரமாக யாரும் தங்கள் கருத்துக்களை முன் வைக்கவும், அனைவரும் பங்கு பெரும் ஜனநாயக மதமாகவும் முழுமையாக மலர்ந்து வருகிறது.

இந்து மதத்தை மீண்டும் சாதீயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எவ்வகையான முயற்சியையும் எதிர்க்கிறோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/18/priets-from-all-sects/

https://thiruchchikkaaran.wordpress.com/2010/11/23/sreerangam-protest-against-pattar/

https://thiruchchikkaaran.wordpress.com/2010/11/29/temple-and-pooja/

பிறப்பு அடிப்படையில் வர்ணம் இருப்பதாக இந்து மத்தில் சொல்லவில்லை என என்னால் உறுதியாக சொல்ல முடியும். குணங்களின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலுமே வேறுபாடுகள் உருவாவதாக தெளிவாக சொல்லி உள்ளனர். இதையே வள்ளுவரும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா , செய்தொழில் வேற்றுமையான் என்றார்.

பிறப்பு அடிப்படையில் வர்ணம் இருப்பதாக இந்து மத்தில் சொல்லவில்லை என என்னால் உறுதியாக சொல்ல முடியும். குணங்களின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலுமே வேறுபாடுகள் உருவாவதாக தெளிவாக் சொல்லி உள்ளனர். இதையே வள்ளுவரும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா , செய்தொழில் வேற்றுமையான் என்றார். நல்ல முறையில் தொழில் செய்பவர், நல்ல குணங்களை உடையவர் எல்லோராலும் மதிக்கப் படுகின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு கேசை மூடும் காவலைரையோ, அசிங்கத்தில் ஈடுபடும் அரச்சகரையோ யாரும் மதிப்பதில்லை. எனவே ஒருவர் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள முடியும், இதை எல்லாம் நாம் முன்பே பிற தளங்களில் விவாதித்து இருக்கிறோம். ஒரு மனிதரை மரியாதை செய்வது இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று.

சமத்துவ, நாகரிக சமுதாய அமைப்பின் நோக்கின் அடிப்படையில் நான் இந்த உலகில் எந்த ஒரு மனிதரையும் பாத பூஜை செய்து அவருக்கு வணக்கம் செலுத்த தயார். ஏனெனில் இந்த உலகில் எந்த ஒரு மனிதனும் கெட்டவனோ , பாவியோ , தாழ்ந்தவனோ அல்ல, அவர் கேட்கும் பேச்சுக்கள் , அவர் வளரும் சூழ்நிலை , அவர் படிக்கும் நூல்கள், அவருக்கு கிடைத்த நட்பு… இவையே ஒருவரை மாற்றுகின்றன என்கிற கருத்தை நாம் பல முறை சொல்லி வருகிறோம்.

எறையூரில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இரண்டு சமூகப் பிரிவினரைடையில் சண்டை மூண்டு, இருவர் இறந்து விட்டது நினைவிருக்கலாம். . சகோதரர் ராம் தளத்தில் கல்லறையில் பாகுபாடு காட்டி தீண்டாமை சுவர் எழுப்பியதை உடைத்ததை பற்றி பதிவு இட்டு இருக்கிறார். எந்த மதத்திலும் சாதி வேண்டாம், சமத்தவம் மலரட்டும் என்றே சொல்கிறோம். சமத்துவ சமுதாயத்தை முன்னிறுத்தும் நாம் சாதியக் பாகுபாட்டு குறியீடுகளை ஆதரிக்கவில்லை. அவற்றை பின்னூட்டத்தில் இணைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி மத வெறி விடத்தை இங்கே பாய்ச்சுவதை ஆதரிக்க இயலாது.

கிறிஸ்தவமோ… யூதாமோ,… பவத்தாமோ…. இந்து மதமோ…. எந்த மதமாக இருந்தாலும் சரி, அதைப் பரப்புவதாக் சொல்லிக் கொண்டு, இந்தியாவின் அடிப்படைப் பண்பான மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்ப வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்.

திருச்சிக்காரன்!

//இந்தக் கட்டுரைக்கு பதிலோ விளக்கமோ அளித்தால் நன்றாக இருக்கும். இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை விநாயகர், வாராக அவாதாரம் இவற்றால் சமூகத்துக்கு என்ன பிரச்சினை?//

//, இயெசுவோ, சாக்ர‌டீசொ, ச‌ங்க‌ராச்சாரிய‌ரோ, அல்ல‌து “க‌ட‌வுளோ”, யார் சொன்னதாக எங்க‌ளிட‌ம் ஒரு க‌ருத்து வ‌ந்தாலும்,அதை ஆராய்ந்து பார்ப்ப‌துதான் எங்க‌ள் வ‌ழி!//

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.’ -அதர்வண வேதம் 32:3

‘அந்த ஆதி பகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களில்லை. அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல.’- பகவத் கீதை 10:14

‘யார் அசம்பூதியை(இயற்கையை) வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்’-அதர்வண வேதம் 40:9

விநாயக வராக அவதாரங்கள் இந்து மத வேத கருத்துக்களின் படி தவறல்லவா! எப்படி இஸ்லாத்தில் இல்லாத தர்ஹாக்கள் சில இஸ்லாமியரிடத்தில் வணக்கமாக குடி கொண்டிருக்கிறதோ அதே போன்று தான் இந்து மத சிலை வணக்கங்களும், கிறித்தவர்களின் ஏசு, மேரி, பரிசுத்த ஆவி வணக்கங்களும். இந்து, கிறித்தவம், இஸ்லாம் மூன்று மத வேதங்களுமே இறைவனுக்கு இணையாக படைப்புகளை வணங்குவதை தடை செய்கின்றன. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

சுவனப் பிரியன் அவர்களே, வருக, அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்து மதத்தில் யார் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் கும்பிட்டுக் கொள்ளலாம். உருவம் இல்லாத நிலையையும் வழிபட்டுக் கொள்ளலாம். உருவத்திலும் வழி பட்டுக் கொள்ளலாம். யாரயும் வழி படாமலும் இருக்கலாம். எந்தக் கடவுளையும் கும்பிடாமல் இருந்தால் அது தப்பு என்றோ, தண்டிக்கப் படவே என்றோ இந்து மதம் சொல்லவில்லை. இந்து மதம் சிலை வணக்கத்தை செய்யக் கூடாது என்று கண்டிக்கவில்லை. சிலை வணக்கம் செய்வதை தடுக்கவும் இல்லை!

புத்த மதம் கடவுள் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. புத்த மதம் இந்த உலகில் முக்கிய மதம் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். சீன அரசு தடை இல்லா மத வழிப்பாட்டை அனுமதித்தால் உலகில் அதிகம் பேரால் பின்பற்றப் படும் மதமாக பவுத்தமாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை.

கிறிஸ்துவத்தின் கடவுள் கோட்பாடு பற்றி நான் சொல்ல விருமபவில்லை. நம்முடைய அன்புக்குரிய நண்பர்கள் சிலர் அது பற்றி பெரிய விவாதத்தில் ஈடுபட்டு, ஜெஹோவா தான் ஒரே தேவனா, திரித்துவம் சரியா, இயேசு தொழப்ப படவேண்டிய தேவனா என்று எல்லாம் பெரிய சர்ச்சையில் ஈடபட்டு இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றன. நான் வெந்த புண்ணில் வேல பாய்ச்ச விரும்பவில்லை.

இஸ்லாம் ஓரிறைக் கொள்கை உடையது என்பது தெரிந்ததே.

சிலை வணக்கத்தில் உங்களுக்கு அப்படி என்ன வெறுப்போ எனக்கு தெரியவில்லை. நீங்கள் முகமது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கோட்பாட்டை சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. அவர் காலத்திலேயே பெரும்பாலனா அரேபியர்கள் பண்பற்ற நிலையில், முரட்டுத் தனமாகவும், கட்டுப்பாடற்ற போக்கையும் கடைப் பிடித்து வந்தனர். முகமது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு கட்டுப்பாட்டை தரும் வகையிலே ஒரு மார்க்கத்தை உருவாக்கினார். அந்த மார்க்கத்தில் சேராதவர்கள் பண்பற்ற நிலையிலே தொடர்ந்து இருந்ததால் சிலை வணக்கம் செய்பவர்கள் ஹராமி என்று கருதப் பட்டு விட்டனர். நீங்கள் இந்தியர் தானே. இந்தியாவிலே உங்களை சுற்றி வாழ்வோர் , சிலை வணக்கம் செய்பவர்கள் பண்பற்ற வர்களா, நீங்களே சொல்லுங்கள், உலகில் உள்ள மக்களிலே இந்தியர்கள் எந்த அளவுக்கு நியாமாகவும் பண்புடனும் வாழ்கின்றனர். அரசியலை விடுங்கள், சாதாரண மக்களைப் பாருங்கள். அவர்கள் சிலை வணக்கம் செய்வதால் என்ன கெட்டுவிட்டது?

நாம் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கிய விடயம், நீங்கள் சக இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதில் ஈடுபட விருப்பம் உள்ளவரா, அல்லது எங்கள் மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்று மத சகிப்புத் தன்மை அழிப்பில் பங்கெடுக்கப் போகிறீர்களா என்பதுதான்.

அலைக்கும் சலாம்! திருச்சிக்காரன்!

//இந்து மதம் சிலை வணக்கத்தை செய்யக் கூடாது என்று கண்டிக்கவில்லை. சிலை வணக்கம் செய்வதை தடுக்கவும் இல்லை!//

வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1

கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)

தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)

யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)

மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103

ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்கு வேத புத்தகத்திலிருந்தே ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். இதை மறுத்தால் சிலை வணக்கம் புரிவதற்கு அதே வேத புத்தகங்களிலிருந்து ஆதாரத்தைத் தாருங்கள்.

//நாம் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கிய விடயம், நீங்கள் சக இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதில் ஈடுபட விருப்பம் உள்ளவரா, அல்லது எங்கள் மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்று மத சகிப்புத் தன்மை அழிப்பில் பங்கெடுக்கப் போகிறீர்களா என்பதுதான்.//

மேலே சுட்டிக் காட்டியிருக்கும் அனைத்து மதங்களின் கருத்துக்களும் பல தெய்வங்களை வணங்குவதை விட்டும் தடுக்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் நமது முன்னோர்களின் பண்பாடு. எனவே அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று அன்போடு விளக்குவது ஒரு இந்திய சகோதரனின் எதிர்பார்ப்பு. அதற்கு இறைவன், கடவுள்,பிரம்மா, கர்த்தர்,பிதா, அல்லாஹ் என்று எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதே!

அன்புக்குரிய சுவனப்பிரியன் அவர்களே,

ரிக் வேதத்தில் முதல செய்யுளே அக்னி மீலே புரோகிதம் எனத் துவங்கி அக்கினியை வணங்கும் பாடல். தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய முதல் ஒலிப் பதிவிற்கு மாக்ஸ் முல்லரை அழைத்த போது அவர் சொன்னதும் இதே வார்த்தைகள் தான். நீங்கள் சொன்ன ஆறாம் அத்தியாயம் முழுவதும் இந்திரனை வணங்குவதாக உள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளதாக உள்ளது இந்து மதத்திலே. முந்தி முந்தி வினாயகரே , முப்பத்து முக்கோடி தேவர்களே, வந்து வந்தென்னைக் காருமையா என்ற கரகாட்டக் காரன் படப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.

எல்லாமே மாயை ஒன்றே ஒன்றான பொருள் தான் உள்ளது, மற்றது எல்லாம் தோற்றமே என்கிறார் ஆதி சங்கரர். அந்த ஒன்றும் நீயேதான், நீ அழிவற்றவன். நீயே கடவுள் , அந்த நிலையை அறியாமல் மயக்கத்தில் இருப்பதால் துயரப் படுகிறாய். உன்னுடைய உண்மை நிலையை அறிய உருவமற்ற நிலையையோ, உருவமுள்ள நிலையையோ வணங்கிக் கொள்ளலாம். என்கிறார்.

தான் கடவுளே என்றும் கடவுளானே தானே மனிதனாக அவதாரம் எடுத்து வந்ததாகவும் இந்த உலகத்தில் சொல்லிக் கொண்ட ஒரே ஒருவரான கிருஷ்ணர், தான் உருவமற்ற நிலையிலும், இருப்பதாக சொல்கிறார் மிகப் பெரிய விஸ்வ ரூப நிலையிலும் இருப்பதாக காட்டுகிறார் உண்மையை உணர்ந்தவன் என்னையே அடைகிறான்( நானாகவே ஆகி விடுகிறான்) என்கிறார். இந்து மதத்தின் தத்துவங்கள் மிக ஆழமானவை. அவற்றை நாம் விவாதித்துக் கொள்ளலாம்.

சிம்பிளாக சொல்வதென்றால் பாஷா என்றோ, படையப்பா என்றோ, சிவாஜி என்றோ யாருமே இல்லை. ஆனால் பாஷாவாக , படையப்பாவாக , சிவாஜியாக … எல்லாமுமாக இருப்பது ரஜினி ஒன்றுதான். ரஜினி தான் உண்மை. ஆனால் பாஷாவும் ரஜினிதான், படையப்பாவும் ரஜினிதான்… . படையப்பா, பாஷா இவை எல்லாம் இல்லை என்றால் ரஜினி வெறும் கண்டெக்டர் மாத்திரமே என்கிறதும் மறுக்க முடியாத உண்மையே. முன்பெல்லாம் இதயக்கனி எம்.ஜி. ஆர் ரசிகர் மன்றம், உரிமைக் குரல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்றெல்லாம் இருந்ததாம். எல்லாமே எம்.ஜி. ஆர் தான். ஆனால் எங்கக் வீட்டுப் பிள்ளை எம். ஜி. ஆரை சிலர் அதிகமாக ரசிக்கிறார்கள். அதைப் போலதான் இந்து மதமும்.

இப்போது முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடிக்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான். உங்களுக்கு உருவமற்ற கோட்பாட்டின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, அதே அளவுக்கு கடவுள் உருவமும் எடுக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை இந்துக்களுக்கு இருக்கிறது. உங்களை உருவங்களை வணங்க சொல்லி கட்டாயப் படுத்தவில்லை ஆனால் பிற மதத்தினர் உருவங்களை வணங்குவதை உங்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இன்னும் புத்த மதம் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறோம், பிற மதத்தினர் யங்கள் கோட்பாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய வேண்டுமா? அது நாகரீகமா? முன்பெல்லாம் இந்துக்கள் தங்களின் கடவுளை இகழ்ந்தால் சும்மா போவார்கள், இப்ப அவர்களும் சிலிர்த்து சீர ஆரம்பித்து விட்டார்கள்.

இருப்பது இரண்டே வழி. ஒன்று நீங்கள் கடவுளாக வணக்குபவரை நீங்கள் எப்படி மதிக்கிரீர்களோ அதே போல தான் மற்ற மதத்தவரும் அவர்கள் கடவுளாக வணங்குபவரை மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி நல்லிணக்கத்தில் இணைந்து வாழ்வது. இல்லை என்றால் சகிப்புத் தன்மை இன்மையால் உருவான வெறுப்புணர்ச்சியால் உந்தப் பட்டு மோதல் போக்கை கடைப் பிடிப்பது!

இரண்டும் இல்லை என்றால் வெறுமனே சாப்பீட்டு தூங்கி வேலையைப் பார்ப்பது.
மத வெறி உடைய கடவுள் நம்பிக்கையாளனை விட வெறுப்புணர்ச்சி இல்லாத நாத்தீகனாக இருப்பதே நல்லது. அவனால் யாருக்கும் ஆபத்து இல்லை.

திருச்சிக்காரன்!

//முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளதாக உள்ளது இந்து மதத்திலே. முந்தி முந்தி வினாயகரே , முப்பத்து முக்கோடி தேவர்களே, வந்து வந்தென்னைக் காருமையா என்ற கரகாட்டக் காரன் படப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.//

//சிம்பிளாக சொல்வதென்றால் பாஷா என்றோ, படையப்பா என்றோ, சிவாஜி என்றோ யாருமே இல்லை. ஆனால் பாஷாவாக , படையப்பாவாக , சிவாஜியாக … எல்லாமுமாக இருப்பது ரஜினி ஒன்றுதான். ரஜினி தான் உண்மை. ஆனால் பாஷாவும் ரஜினிதான், படையப்பாவும் ரஜினிதான்… . படையப்பா, பாஷா இவை எல்லாம் இல்லை என்றால் ரஜினி வெறும் கண்டெக்டர் மாத்திரமே என்கிறதும் மறுக்க முடியாத உண்மையே. முன்பெல்லாம் இதயக்கனி எம்.ஜி. ஆர் ரசிகர் மன்றம், உரிமைக் குரல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்றெல்லாம் இருந்ததாம். எல்லாமே எம்.ஜி. ஆர் தான். ஆனால் எங்கக் வீட்டுப் பிள்ளை எம். ஜி. ஆரை சிலர் அதிகமாக ரசிக்கிறார்கள். அதைப் போலதான் இந்து மதமும்.//

இறைவனை எந்த முறையில் வணங்க வேண்டும் என்று கேட்டால் ரஜினி என்ற கூத்தாடியைக் கொண்டு வருகிறீர்கள். இது நிழல் நான் கேட்பது நிஜத்தை. உங்கள் வாதப்படியே வருவோம் பாட்சாவாகவும் படையப்பாவாகவும் ரஜினி எப்படி உருவாகிறார்? படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதால் பாட்சாவாக மாறினார். கே.எஸ் ரவிக்குமார் சொன்னதால் படையப்பாவாக மாறினார். அதே போல் இந்த உலகையும் உங்களையும் என்னையும் படைத்த டைரக்டரான இறைவன் என்ன சொல்கிறானோ எப்படி வணங்க வேண்டும் என்று சொல்கிறானோ அதன்படிதானே நம் வணக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்? சிலை வணக்கத்துக்கு இன்னும் நீங்கள் வேதங்களிலிருந்து பதில் தரவில்லை.

தேவர்கள் எனப்படுவோர் முகமது நபிக்கு குர்ஆனை கொண்டு வந்ததாக நம்பப்படும் ஜிப்ரயீல் என்ற வானவரை ஒத்தவர்கள். இவர்களை நாம் எப்படி கடவுளாக வணங்க முடியும? பரிசுத்த ஆவி என்று கிறித்தவர்கள் இவரையும் விட்டு வைக்காமல் கடவுள் அந்தஸ்தை கொடுத்து விட்டனர்.

//இப்போது முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடிக்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான்.//

• “எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்”. (ஆதாரம்: அபூதாவூத்)

• “எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்”. (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

• “எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்”. (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)

ஒரு இஸ்லாமியனுக்கு மற்ற சமயத்தவரோடு சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ள இஸ்லாமே வழி வகுக்கிறது. இந்த கேள்விகளை மோடி வகையறாக்களிடம் சென்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும் சுவனப்பிரியன்,

பாட்சா, படையப்பா …. உதாரணம்… அது ஒரு உதாரணம் மாத்திரமே. ரஜினி படையாப்பாவாக, பாட்சாவாக வருகிறார்… என்பதை- கடவுள் பல அவதாரங்களாக வருகிறார் என்று இந்து மதக் கோட்பாட்டுக்கு உதாரணமாக சொன்னோம். சில நடிகர்கள் தாங்களே நடித்து தாங்களே டைரக்சனும் பண்ணிக் கொள்கிறார்கள் அதைப் போல கடவுள தானே எல்லாவற்றையும் செய்வதாகவும் கருதிக் கொள்ளலாம்.

//இறைவனை எந்த முறையில் வணங்க வேண்டும்//

அவரவர் விரும்பும் முறையில் வணங்கிக் கொள்ளலாம். இந்துக்கள் பூ , கனி, நீர் , இலை ஆகியவற்றை படைத்து வழிபடுகின்றனர். கத்தோலிக்கர் மெழுகு வர்த்தி ஏற்றுகின்றனர். புத்தர்கள் சில வகையான வழிபாடுகளையும் , தியானங்களையும் செய்கின்றனர். இஸ்லாமியரின் வழிபாட்டு முறை உங்களுக்கு தெரிந்ததே. அவரவர்கள் அவரவர் விரும்பும் வழியில் வணங்கிக் கொள்ளுகின்றனர். இதிலே மற்றவருக்கு என்ன கோராமை? இன்னொருவரின் மென்னியைப் பிடித்து அப்படி வணங்கக் கூடாது, இப்படித்தான் வணக்க வேண்டும் என கட்டளைகள் போட்டு நிர்ப்பந்தப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்!

//சிலை வணக்கத்துக்கு இன்னும் நீங்கள் வேதங்களிலிருந்து பதில் தரவில்லை. //

சிலை வணக்கம் செய்யக் கூடாது என்று எந்த வேதத்திலாவது போட்டிருக்கிறதா?

சிலை வணக்கம் செய்வது தவறு என்று எந்த வேதத்திலாவது புரோஹிபிட் செய்து இருப்பதாக உங்களால் காட்ட முடியுமா?

சிலை வணக்கம் செய்தால் நரகத்துக்க்ப் போவாய் என்று எந்த வேதத்திலாவது சொல்லி இருக்கிறதா? சரியாக மேற்கோள் காட்டி சொல்லுங்கள்.

//தேவர்கள் எனப்படுவோர் முகமது நபிக்கு குர்ஆனை கொண்டு வந்ததாக நம்பப்படும் ஜிப்ரயீல் என்ற வானவரை ஒத்தவர்கள். இவர்களை நாம் எப்படி கடவுளாக வணங்க முடியும? பரிசுத்த ஆவி என்று கிறித்தவர்கள் இவரையும் விட்டு வைக்காமல் கடவுள் அந்தஸ்தை கொடுத்து விட்டனர்.//

தேவர்களோ, ஜிப்ராயிலோ, பரிசுத்த ஆவியோ, … யாரவாது எதையாவது கடவுள் என்று கருதி வழிபட்டு விட்டு போகட்டுமே … அவரகள் அமைதியாக வழிபட்டுக் கொண்டால் போதுமானது. இதிலே இதைக் கும்பிடு அதைக் கும்பிடாதே என்று ஆராவரம் எதற்கு. இல்லை என்றால் ஒன்று செய்யுங்கள் .. இதை நான் பலமுறை எழுதி விட்டேன், … இவர் மட்டும் தான் கடவுள் , இவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று பலரும் பிறரை நிரப்பந்தப் படுத்துகிறார்களே, பேசாமல் ஒன்று செய்யலாமே , வானத்திலே ஆறு மாதம் – மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளிரும்படி செய்தல் , எந்த பிரிவினர் தாங்கள் குறித்த காலத்தில் அப்படி நடைபெறும்படி செய்தால் உலகில் மற்ற எல்லோரும் அந்தப் பிரிவினர் சொல்வதை அப்படியே கேட்பார்கள்!

சகிப்புத் தன்மை என்பது இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், அதற்க்கு நன்றி செலுத்துகிறோம், சகிப்புத் தன்மையை நெஞ்சிலே வையுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். சகிப்புத் தன்மை இருக்கிறது என்றால் சிலை வணக்கம் செய்வோரையோ, தேவர்களை வணக்கம் செய்வோரையோ, இயேசுவை வணக்கம் செய்வோரையோ பார்த்து உங்கள் ஆவேசமோ, மனத் தாங்கலோ வரவேண்டியதில்லை. சகிப்புத் தன்மை என்பது மனப் பூர்வமாக இருக்க வேண்டும். எல்லோரும் இப்படிதான் வழி பட வேண்டும், இதைதான் வழிபட வேண்டும் என்று நினைப்பது எப்படி சகிப்புத் தன்மையாகும்? வேண்டா வெறுப்பாக சகிப்புத் தன்மையை வைத்திருப்பது- வாய்ப்பு கிடைக்கும் போது பிற மதங்களை விரட்டி விட்டு நம் மதத்தை மட்டுமே நிலை நிறுத்த வேண்டும் என்கிற தன்மையை கொண்டு வந்து விடும்.

மோடி பற்றி தனியாக பின்னூட்டம் இடப் படும்,

குஜராத்திலே நடந்த இனக் கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேலான இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இறந்தது நெஞ்சை குதறும் சமபவம். ஒரு இஸ்லாமிய சகோதரர் தாக்கப் பட்டது, என்னுடைய சொந்த சகோதரர் தாக்கப் பட்டது போலவே நான் கருதுகிறேன். .

இஸ்லாமியப் பெண் உட்பட உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் ஒரு இந்து சகோதரியாக கருத வேண்டும், சீதையாகவே எண்ணி மதிக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் கற்பழிக்கப் படுவதையோ, எந்த ஒரு அப்பாவியும் தாக்கப் படுவதையோ – அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி- சீதையோ, இராமனோ, இலக்குவனோ , அனுமனோ ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள், ஒப்ப மாட்டார்கள் என்பது எல்லா இந்துவுக்கும் தெரியும்!

ஆனால் அஹிம்சை கொள்கையை கடைப் பிடித்து வவந்த இந்துக்களிடத்திலே இப்போது பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணாம் வலுப் பெறுவதாக கருதலாம். குஜராத்தில் இறந்த அப்பாவி முஸ்லீம்களின் கொலையை நியாயப் படுத்த முடியாது. நான் முஸ்லீமாக இருந்திருந்தால் , இறந்தது என் தம்பியாக இருந்திருந்தால் … என்றே நான் யோசித்துப் பார்க்கிறேன்.

குஜராத் இனப் படுகொலைகளுக்கு காரணமான கலவரங்களுக்கு மூலக் காரணம் கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வே. அதில் இந்துக்கள் இறந்து விட்டனர். இந்த நிலையில் யார் முதல்வராக இருந்திருந்தாலும் கலவரம் நடக்காமல் மக்கள தினமும் வேலைக்கு சென்று வருவது போல் சென்று வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா. இஸ்லாமியர் ஒருவர் முதல்வராக இருந்திருந்தாலும் கலவரம் நடந்து இருக்கும் என்றே கருதலாம். . மோதி முழு முயற்சியுடன் கலவரத்தைக் கட்டுப் படுத்த முயன்றாரா என்பதே கேள்வி. மோதி கலவரம் நடக்கட்டும், என்று நடக்க விட்டு விட்டார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப் படுகின்றன.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த முதல் அமைச்சர் என்று வெளிடும் அளவுக்கு மோதி மிகப் பெரிய ஆளாகி விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சமபவம் நடக்காவிட்டால் பி. சே.பி கட்சியில் நடக்கும் பதவி சண்டையில் மோதி காணாமல் போய் இருப்பார். எத்தனையோ முதல்வர் , கேசு பாய் பட்லா… பேர் கூட நினைவில்லை. மோதியைப் போன்றவர்கள் இன்றைக்கு இந்தியாவில் பிரபலமாக , வலுப் பெற, வளர்ச்சி அடையக் காரணம் பிற மதங்களை சகித்துக் கொள்ள இயலாத , பிற மதங்களுடன் மோதல் போக்கை கடைப் படிக்க விரும்பும் சில பல அடிப்படை வாத இஸ்லாமியர்களே. இந்தியாவிலே சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் இந்துக்கள் கோவிலுக்கு போவதையோ, சிலை வழிபாடு செய்வதையோ வெறுப்பதோ திட்டுவதோ கண்டிப்பதை இல்லை. காபிர் … என்று சொல்வதும் இல்லை. முமபையிலோ எத்தனை பாராசீக மதத்தவர் வாழ்கின்றனர். அவர்களுக்கு யாரும் தொல்லை குடுப்பது இல்லை. அவர்களாலும் யாருக்கும் தொல்லை இல்லை.

திம்மியாக இருப்பவன் பரம ஏழையாக இருந்தாலும் அவன் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பது சரிதான் என்று எவ்வளவு தூரம் வாதாடுகிறார்கள். யோவ், திருச்சி இவங்க கிட்ட போய் நல்லிணக்கம் பேசுறியே , போய்யா என்கிற ரீதியில் நம்மைப் பார்த்து பதிவர்கள் நகைக்கிறார்கள்.

இந்தியாவில் மோதிக்கள் வலுப் பெற , வளர்ச்சியடைய உங்களைப் போன்றவர்கள் கணிசமாகப் பங்களிக்கிறீர்கள். உங்களுக்கு சரியான பங்காளியாகவே மோதி இருக்கிறார்.

திருச்சிக்காரன்!

//அவரவர் விரும்பும் முறையில் வணங்கிக் கொள்ளலாம். இந்துக்கள் பூ , கனி, நீர் , இலை ஆகியவற்றை படைத்து வழிபடுகின்றனர். கத்தோலிக்கர் மெழுகு வர்த்தி ஏற்றுகின்றனர். புத்தர்கள் சில வகையான வழிபாடுகளையும் , தியானங்களையும் செய்கின்றனர். இஸ்லாமியரின் வழிபாட்டு முறை உங்களுக்கு தெரிந்ததே. அவரவர்கள் அவரவர் விரும்பும் வழியில் வணங்கிக் கொள்ளுகின்றனர். //

கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)

‘யார் அசம்பூதியை(இயற்கையை) வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்’-அதர்வண வேதம் 40:9

இவ்வளவு தெளிவாக இந்து மதம் சொல்லும் போது ‘ஏன் சிலைகளை வணங்கக் கூடாது என்று கேட்கிறீர்கள். ஒன்று இந்த வேதங்களை நாங்கள் நம்பவில்லை என்று நீங்கள் அறிவிக்க வேண்டும். அல்லது நாங்கள் பின் பற்றும் இந்த சிலை வணக்கம் எங்களின் சொந்த கண்டு பிடிப்பே. இதற்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவிக்க வெண்டும்.

//இதிலே மற்றவருக்கு என்ன கோராமை? இன்னொருவரின் மென்னியைப் பிடித்து அப்படி வணங்கக் கூடாது, இப்படித்தான் வணக்க வேண்டும் என கட்டளைகள் போட்டு நிர்ப்பந்தப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்!//

இஸ்லாமிய கிறித்தவ யூத நம்பிக்கையின்படியும், அறிவியல் அறிஞர்களின் கூற்றுபடியும் ஆதியில் இருவர் உருவாகி(ஆதாம், ஏவாள்) பின்னர் பல்கி பெருகியவர்களே நீங்களும் நானும். அந்த வகையில் நாம் அனைவரும் சகோதரர்கள் ஆகிறோம். இவற்றில் ஒரு சாரார் சிறந்த வழிபாட்டில் திளைத்திருக்க மற்றொரு சாரார் சிலைகளை வணங்கிக் கொண்டு தீண்டாமையையும் கற்பித்துக் கொண்டு இருந்தால் அந்த சகோதரனுக்கு எடுத்து சொல்ல வேண்டியது மற்றொரு சகோதரனின் கடமையல்லவா? இந்து மதம் இதை எல்லாம் தடை செய்துள்ளது என்பதை விளக்குவதும் ஒரு சகோதரனின் கடமை அல்லவா?

எனது அரபி நண்பர் ஒரு நாள் என்னிடம் அரபு தினசரி ஒன்றை கொண்டு வந்து காண்பித்தார். அதில் ஒரு இந்து நண்பர் எலியின் சிலையை மிகவும் பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்ததை காண்பித்து ‘உங்கள் நாட்டை காப்பாற்றும் கடவுள் இவர்தானா?’ என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லி அவனை சமாளிக்க வேண்டியதாகி விட்டது. அறிவியலில் நமது நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டது. வல்லரசாக மாறவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நமக்கு இறைக் கொள்கையில் மாத்திரம் ஏன் இந்த பின்னடைவு? என்று நான் ஆதங்கப்படக் கூடாதா?

சுவனப் பிரியன் அவர்களே,

நீங்கள் மேற்கோள் காட்டும் போது அப்படியே அச்சு அசலாக மேற்கோள் காட்டுவதுதான் சிறந்தது.

நாங்கள் இங்கே பைபிளையோ, குர் ஆனையோ
மேற்கோள் காட்டும் போது அப்படியே அச்சு அசலாக வரிக்கு வரி , வார்த்தைக்கு வார்த்தை , எழுத்துக்கு எழுத்து சரியாக மேற்கோள் காட்டுகிறோம்.

கேநோபநிசத்தில் சொல்லப் பட்டுள்ளது என்ன?

That which is not seen by the eye, but by which the eye is able to see: know that alone to be the Brahman, not this which people worship here.

கண்ணால் காண முடியாதது, நம் கண்களைக் காணும்படி செய்வது எதுவோ அதுவே பிரம்மம் , இங்கே நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பது அல்ல.

இப்படி தெளிவாக எழுதுவதுதானே சரி ! அதை விட்டு படைத்த இறைவன், என்று எல்லாம் கொஞ்சம் கலந்து விடுவது எதற்கு? படைத்தவன், creation, creator, கடவுள் என்று எதுவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.

இந்து மதக் கோட்பாட்டின் படி படைப்பு வேலையை செய்வது பரமேஸ்வரன் எனப் படும் கடவுள் அல்ல, பிரம்மா என்பவர் படைப்பவர் ஆக சொல்லப் பட்டு உள்ளது !

பிரம்மம் என சொல்லப் படுவது வேறு, பிரம்மா என்பவர் வேறு!

சுவனப் பிரியன்,

//இஸ்லாமிய கிறித்தவ யூத நம்பிக்கையின்படியும், அறிவியல் அறிஞர்களின் கூற்றுபடியும் ஆதியில் இருவர் உருவாகி(ஆதாம், ஏவாள்) பின்னர் பல்கி பெருகியவர்களே நீங்களும் நானும். அந்த வகையில் நாம் அனைவரும் சகோதரர்கள் ஆகிறோம். //

ஆதாம் , ஏவாள் வழி வந்ததால் சகோதரர என்னும் கோட்பாட்டை உடைய யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மார்க்கங்களைப் பின்பற்றும் அன்பு சகோதரர்களே, மோசஸ் , ஜோஷுவா, காலம் தொடங்கி அன்பு சகோதர கானானிய, எத்தூசிய, எபூசிய…சகோதரரை இன அழிப்பு செய்து, தாவீது காலத்தில் சகோதரர் கோலியாத்தை முறியடித்து, பிறகு சிலுவைப் போர்கள் காலத்தில் கிறிஸ்துவ மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரரும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரரும், யூத மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரரும் யார் மார்க்கம் இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நிகழத்திய குருசெடு மதப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. இப்போதும், ஈராக் போர் குருசெடு போர் என புஷ் போப்பிடம் கூறுகிறார். யூத மத சகோதர இஸ்ரவேலர்களும், இசலாமிய மத பாலஸ்தீனியர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இப்படிப் பட்ட ஆதாம் வழி சகோதரத்துவம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது.

இந்தியாவில் உங்கள் தொழுகையில் நாங்கள் கலந்து கொள்கிறோம், உங்கள் நோன்பில் பங்கெடுக்கிறோம் , உங்கள் சர்ச்சுக்கு நாங்கள் வருகிறோம், யாரும் தாக்கப் படக் கூடாது என்று சொல்பவர்களின் சகோதரத்துவம் உங்களுக்குப் பிடிக்காததில் ஆச்சரியமில்லை.

//இவற்றில் ஒரு சாரார் சிறந்த வழிபாட்டில் திளைத்திருக்க மற்றொரு சாரார் சிலைகளை வணங்கிக் கொண்டு தீண்டாமையையும் கற்பித்துக் கொண்டு இருந்தால் அந்த சகோதரனுக்கு எடுத்து சொல்ல வேண்டியது மற்றொரு சகோதரனின் கடமையல்லவா?//

எது சிறந்த வழிபாடு, மற்றவரின் வழிபாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை வைத்துக் கொண்டு வழிபடுவது சிறந்த வழிபாடா? அல்லது பிறரின் வழிப்பாட்டை வெறுக்காமல், தான் அமைதியாக வழிபாடு நடத்துவது சிறந்த வழிபாடா?

நீங்கள் இப்படிக் கூட எழுதலாம். பிற மதங்களை கண்டித்து வேரறுக்க துடிக்கும் மிகச் சிறந்த வீராவேச கோட்பாடுகளை வைத்துக் கொண்டிருக்க இன்னொரு சாரார் மத சகிப்புத் தன்மை , மத நல்லிணக்கம் என்று கோழைகள் போல எழுதிக் கொண்டிருக்கும் சிறுமை சரியா என்று கூட எழுதாலாம்

//எனது அரபி நண்பர் ஒரு நாள் என்னிடம் அரபு தினசரி ஒன்றை கொண்டு வந்து காண்பித்தார். அதில் ஒரு இந்து நண்பர் எலியின் சிலையை மிகவும் பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்ததை காண்பித்து ‘உங்கள் நாட்டை காப்பாற்றும் கடவுள் இவர்தானா?’ என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லி அவனை சமாளிக்க வேண்டியதாகி விட்டது.//

சுவனப் பிரியன் , நமது அன்புக்குரிய அரேபிய சகோதரரிடம் என் சார்பாக ஒரு விளக்கத்தை அளிக்குமாறு கோருகிறேன். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள், இந்தியாவில் எலியைக் கும்பிடுகிறார்கள், பறவைகளைக் கும்பிடுகிறார்கள், குரங்குகளைக் கும்பிடுகிறார்கள் என்று சொல்லுங்கள். அவர் சிரிப்பார் .

அப்போது அவரிடம் சொல்லுங்கள்.எந்த விதக் காரணமும் இல்லாமல் ஒருவனைக் குருடனாகவும் , ஏழையாகவும் இன்னொருவனை பணக்காரனாகவும் சௌந்தர்யவானாகவும் படைக்கும் நியாயமற்றவராக கடவுளை சித்தரிக்கும் கோட்பாடை வைத்துக் கொண்டிருக்கும் போது,

இந்த உலகத்தில் இத்தனை பாதகங்கள் நடை பெறும்போது வானுலகில் இருந்து அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவராக கடவுளை சித்தரிக்கும் கோட்பாடை வைத்துக் கொண்டிருக்கும் போது,

அப்பாவியான ஒரு பெண்ணை ஏமாற்றித் தூக்கி சென்ற ஒரு காமக் கொடூர சர்வாதிகாரியிடம் இருந்து அவளை விடுவிக்க, எந்த வித பிரதிபலனும் எதிரபாராமல், சுயநலமற்று போராடி அவளின் துன்பம் துடைக்க உதவுவதற்காக கடவுள் குரங்கு வடிவில், பறவை வடிவில் வந்ததாக கடவுள் கோட்பாடை வைத்துக் கொள்வது மிகச் சிறந்த கோட்பாடே என இந்தியர்கள் சொல்லுகிறார்கள் என சொல்லுங்கள்.

உங்கள் அரேபிய நண்பருக்கு என் அன்பையும் ஸலாமையும் சொல்லுங்கள்.

உங்களுக்கு என் நன்றி.

திருச்சிக்காரன்!
//சிலை வணக்கம் செய்யக் கூடாது என்று எந்த வேதத்திலாவது போட்டிருக்கிறதா?
சிலை வணக்கம் செய்வது தவறு என்று எந்த வேதத்திலாவது புரோஹிபிட் செய்து இருப்பதாக உங்களால் காட்ட முடியுமா?
சிலை வணக்கம் செய்தால் நரகத்துக்க்ப் போவாய் என்று எந்த வேதத்திலாவது சொல்லி இருக்கிறதா? சரியாக மேற்கோள் காட்டி சொல்லுங்கள். //

‘நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் என்ன?’ என்று ஆபிரஹாம் தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னொர்கள் இவற்றை வணங்கக் கண்டோம’ என்று அவர்கள் கூறினர். ‘நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’ என்று அவர் கூறினார்.-குர்ஆன் 21:54
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை- யோவான் 1:18
‘யா இக் இத் முஸ்திஇ’-‘வணக்கத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே’
‘ஏகம் ஏவம் அத்விதியம்’ ‘அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை’
-ரிக் வேதம் 6:45:16

‘அவன் ஆதி தேவன்: பிறவாதவன்’
-பகவத் கீதை,10:12

‘அவன் மஹாத்மா. காணுதற்க்கறியவன்’
-பகவத் கீதை 7:19

‘அர்ஜூனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும்இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்’
-பகவத் கீதை 7:24,25,26

‘யார் பெரும்பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகத்தில் இருப்பான்’
-ரிக் வேதம் 4:5:5

இறைவன் ஒருவன்தான்: அவனுக்கு இணையாக யாரையும் வணங்கக் கூடாது. அப்படி இந்த கட்டளைக்கு மாற்றமாக வேறெதனையும் வணங்கினால் நரகில் கொண்ட செல்லப்படுவான் என்று அனைத்து வேதங்களுமே சொல்வதை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறேன்.

இதற்கு மாற்றாக சிலையை வணங்கும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை இந்து மத வேதங்களிலிருந்து எடுத்துத் தாருங்கள்.

சுவனப் பிரியன்,

நீங்கள் இந்து மதம் சிலை வணக்கத்தை ஒத்துக் கொள்கிறதா என்று ஆரம்பித்து, ரிக் வேதம் என்று எழுத ஆரம்பித்ததால், நாம் இந்த விவாதத்தில் வேதம் என்று குறிப்பிடுவது ரிக், யசூர், சாமம், அதர்வணம் ஆகியவையே. இந்து மதம் சிலை வணக்கத்தை அங்கீகரிக்கிறதா என்கிற விவாதத்தில் நீங்கள்

ஆபிரஹாம் சொன்னதையோ, குர் ஆன் சொன்னதையோ மேற்கோள் கட்டுவது ஏன்? கீதை, வேதங்களில் இருந்து ஆதாரம் கொடுப்போம்.

‘////அவன் ஆதி தேவன்: பிறவாதவன்’
-பகவத் கீதை,10:12////
10 -12 ,13 ஸ்லோகங்கள் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறும் வார்த்தைகளாக உள்ள்ளது

‘///////அவன் மஹாத்மா. காணுதற்க்கறியவன்’
-பகவத் கீதை 7:19

‘அர்ஜூனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும்இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்’
-பகவத் கீதை 7:24,25,26///////

ஐயா சுவன பிரியன் அவர்களே,

நீங்கள் மேற்கோளில் கொடுத்திருக்கும் கீதையில் கீதையின் ஆசிரியன் கிருஷ்ணனே தான் கடவுள் என்பதை தெளிவாகவே கூறிகொள்கிறான்.மேலும் நீங்கள் கொடுத்திருக்கும் அர்த்தங்களை உங்களுக்கு கற்பித்தவர் யாரோ ஒரு அவசர குடுக்கை என நினைக்கிறேன்,நீங்களே அந்த குறிப்பிட்ட ஸ்லோகங்களின் விளக்கங்களை தமிழில் முழுவதுமாக படித்து பாருங்கள் அந்த கிருஷ்ண பரமாத்மா சொல்ல வருவது உங்களுக்கு புரியும். உங்களுக்கு பிடித்த கருத்துகளை திரித்து விட்டுக்கொண்டு கூறாதீர்கள்.
சிலை வழிபாடு தவறு குற்றம் என்று ஒரு வரிகூட இல்லை நான் படித்த தமிழ் உரையிலும் நீங்கள் கொடுத்துள்ள வரிகளிலும்.
/////யார் பெரும்பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகத்தில் இருப்பான்’
-ரிக் வேதம் 4:5:5 //////

இதில் எங்கே சிலைவழிபாடு கூடாது என்று உள்ளது

////ஏகம் ஏவம் அத்விதியம்’ ‘அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை’
-ரிக் வேதம் 6:45:16 //////

அவன் ஒருவன் என்உள்ளதே ஒழிய உருவம் இல்லாதவன் என்று இல்லையே..

அன்புக்குரிய திரு. சிவனடியான் அவர்களே,

கீதையில் விஸ்வ ரூப தர்சன யோகம் சாப்டரில் 55 சுலோகங்கள் உள்ளன. அவற்றில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் உருவ வழிப்பாட்டுக்கு இந்து மத்தில் எந்த தடையும் இல்லை, என்பதை காட்டுவதாகும்.

உங்களால் முடியுமானால் அவற்றை மேற்கோ ள் காட்டலாம். மேற்கோள் காட்டி எழுதுவதுதான் உண்மையை தெளிவாக விளக்குவதாகும்.

உங்கள் கடவுளானவர் சொர்கத்தில் உள்ளார் தானே அங்கே அவர் உருவமுடன் உள்ளாரா? அல்லது உருவமற்று உள்ளாரா?
அங்கும் அவர் உருவமற்றவர் எனில் அவரை நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அல்லது அங்கே அவர் ஒரு உருவத்துடன் இருந்து ஆட்சி புரிந்தால் அங்கு உருவுடன் இருப்பவரை இங்கும் உருவுடன் வணங்குவது என்ன தவறு?
இந்துக்களில் பலர் உருவமற்ற ஜோதியாகவும் அந்த ஜோதியுமற்ற ஏகாந்த நிலையாகவும் உணர விழைபவர்கள், உணர்ந்தவர்கள் உண்டு. அவர்கள் என்றும் உருவ வழிபாட்டினரை குறை சொன்னதோ தவறென்று சொன்னதோ இல்லை,உருவ வழிபாட்டில் இறைநிலை உணர்ந்தவர்களும் உண்டு அவர்களும் ஒரு போதும் உருவமற்ற வழிபாட்டினருடன் சண்டை இட்டதும் இல்லை..
சித்தம் தெளிந்தொர்க்கு சீவனே சிவலிங்கம் என்று கூட உள்ள இந்துக்கள் உண்டு (இது திருமூலர் வாக்கு,தமிழ்வேதம் )
இந்த அளவு இறைவனை உணர்ந்தவர்களும் பிற முறைகளை தூற்றியதில்லை.தங்கள் முறையே சிறந்தது என்று சண்டை இட்டதில்லை.

/////இஸ்லாமிய கிறித்தவ யூத நம்பிக்கையின்படியும், அறிவியல் அறிஞர்களின் கூற்றுபடியும் ஆதியில் இருவர் உருவாகி(ஆதாம், ஏவாள்) பின்னர் பல்கி பெருகியவர்களே நீங்களும் நானும். அந்த வகையில் நாம் அனைவரும் சகோதரர்கள் ஆகிறோம்//////
மன்னிக்கவும் சின்னத்திருத்தம் இஸ்லாமிய கிறித்தவ யூத நம்பிக்கையின்படி மட்டுமே ஆதியில் இருவர் உருவாகி(ஆதாம், ஏவாள்) பின்னர் பல்கி பெருகியவர்கள். அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி மாணிக்கவாசகர் கூற்றான புல்லாகி, பூடாய் புழுவாய் மராமாகி பரிணாம அறிவியல் வருகிறது.
நீங்களும் நாங்களும் சகோதரர்கள் என்பது உங்கள் மூதாதையாரும் இந்த நாட்டிலேயே இங்கே உள்ள மரபில் வாழ்ந்தவர் என்பதால்.
மற்ற நாட்டினர் எல்லாம் சக மனிதர் என்ற அடிப்படையில் சகோதரர் ஆவார்கள்

ஏவம் சதத-யுக்தா யே பக்தாஸ்-த்வாம் பர்யுபாஷதே
யே சப்யாக்ஹ்சார-மவ்யக்தாம் தோஷம் கே யோகவித்தமா-12 -1

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் நீங்கள் கூறியபடி ஒருசாரர் உங்களிடம் ஒப்பற்ற பக்தி கொண்டு உங்களை சரணடைந்து உங்களிலேயே ஒன்றிணைந்து உங்களை நன்கு உபாசிக்கிறவர்களாக இருக்கின்றனர் என்றால் மற்றொரு சாரார் உங்களை சரணடையாமல் தன்னிச்சையாக தன்னம்பிக்கையுடன் அதே அழியாத, புலனுக்கெட்டாத வடிவத்தை உபாசிக்கிறவர்களாக ருக்கிறார்கள் இந்த இருவரில் பக்தர்களில் அதி உத்தமமான யோகி யார்?

கிருஷ்ணன் பதில் கூறுகிறான்
மய்யாவேஷ்ய மனோ யே மாம் நித்யயுக்த உபாசதே
ச்ரத்தாய பரயோபேதாஸ்-தே மே யுக்ததமா மதா: 12 -2
என்னிடம் மனத்தை ஒருமுகப்படுத்தி (எப்படி ஒருமுகப்படுத்துவது? அவன் உருவத்தில்தான் )எப்பொழுதும் என்னிலே லயித்து, பரம வடிவத்துடன் இணக்கத்தக்க சிறந்த சிரத்தையோடு எந்த பக்தர்கள் என்னை உபாசனை செய்கிறார்களோ அவர்களை யோகிகளிலேல்லாம் சிறந்த யோகியாக நான் கருதுகிறேன்.

ஏவம் (இவ்வாறு)

சதத-யுக்தா (எப்போதும் உறுதியான மாறாத மனமுடையவராய்)

யே பக்தாஸ்- (எந்த பக்தர்கள்)

த்வாம் பர்யுபாஷதே (உன்னை நன்கு உபாசிக்கிரார்களோ )

யே சா ப்யக்யக்ஷர மவ்யக்தாம்- மேலும் (எவர்கள் பொறிகளுக்குப் புலனாகாத உருவமற்ற அக்ஷரப் பொருளை உபாசிக்கின்றனரோ-)

தோஷம் கே யோகவித்தமா- அவ்விரு வகையினருள் எவர்கள் யோகத்தை நன்கு உணர்ந்தவர்கள் ?

12 -1

இவ்வாறு எப்போதும் உறுதியான மாறாத மனமுடையவராய் எந்த பக்தர்கள் உன்னை நன்கு உபாசிக்கிரார்களோ மேலும் பொறிகளுக்குப் புலனாகாத உருவமற்ற அக்ஷரப் பொருளை உபாசிக்கின்றனரோ அவ்விரு வகையினருள் எவர்கள் யோகத்தை நன்கு உணர்ந்தவர்கள்

மய்யாவேஷ்ய மனோ யே மாம் நித்யயுக்த உபாசதே
ச்ரத்தாய பரயோபேதாஸ்-தே மே யுக்ததமா மதா: 12 -2
என்னிடம் மனத்தை ஒருமுகப்படுத்தி (எப்படி ஒருமுகப்படுத்துவது? அவன் உருவத்தில்தான் )எப்பொழுதும் என்னிலே லயித்து, பரம வடிவத்துடன் இணக்கத்தக்க சிறந்த சிரத்தையோடு எந்த பக்தர்கள் என்னை உபாசனை செய்கிறார்களோ அவர்களை யோகிகளிலேல்லாம் சிறந்த யோகியாக நான் கருதுகிறேன்.

12-3,4 என்னினும் எல்லாவிடத்தும் சம புத்தியுடையவரகளாய் , புலனடக்கம் உடையவர்களாய் சொல்லுக்கு அடங்காதத , கண்ணுக்கு எட்டதாகவும், மனதுக்கு எட்டாததாகவும், மாறுதலா ற்ற தாகவும் , நிலையாகவும் உள்ள அலயாயப் பொருளை யார் நன்கு தியானிக்கிறார்களோ, எல்லா உயிரக்ளின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகின்றனர்.

Thus The Lord Krishna does not disappoint those who worship his shapeless form, provided they think good for all livings- Thus said in Bagavath Geetha ( Verses Of the God) , Hindu Sacred text!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: