Thiruchchikkaaran's Blog

போகும் வழியில் ….

Posted on: March 20, 2011


அன்புக்குரிய சகோதரர் திரு. சில்சாம் அவர்கள் தனது  தளத்திலே , நாம் அவருடன் நட்பு பாராட்டுவது பற்றிக் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அவருக்கு நம்முடைய மனப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41783951&p=3

நான் மட்டும் அல்ல, இங்கே சகோதரர்கள் திருவாளர்கள்   தனபால் , மணியன், சதீஷ் (எ) சிவனடியான் … உள்ளிட்ட பலரும் நண்பர் சில்சாமுடன் கண்ணியமாகவே கருத்து பரிமாற்றம் செய்தனர் என்பதையும் அவர் நினைவில் வைத்திருக்கக் கூடும்.

எனவே இந்தப் பாராட்டு அனைவருக்கும் வழங்கப் பட்ட ஒன்றாகவே கருதுகிறோம். இன்னும் சொல்லப் போனால் கடந்த ஓரிரு மாதங்களாக சகோதரர் சில் சாமும் பிற மதங்களுடன் ஓரளவுக்கு சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதாகவே நாம் கருதுகிறோம். அந்த வகையில் அவரும் பாராட்டுக்கு உரியவரே.

கடந்த சில வாரங்களாக அவர் விவிலிய அடிப்படையிலான வேறு சில பிரிவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த கருத்து மோதல் தனி மனித தாக்குதலாக மாறி விட்டது வருத்தத்துக்கு உரிய ஒன்று.

இது எனக்கு வருத்தையே ஏற்படுத்தியது, இதைப் பற்றி நம்முடைய தளத்திலே எழுதி சகோ சில்சாமுக்கு வருத்தத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்க்காகவே இதைப் பற்றி எழுதாமல் இருந்தோம்.

இது பற்றி நான் விவரமாக இங்கே எழுத போவதில்லை. ஏனெனில் மோதலை, பூசலை , தனி மனித தாக்குதலை நாம் விவரித்து எழுதி ஆகப் போவது ஒன்றுமில்லை. நட்பை, அன்பை, நல்லிணக்கத்தைப் பற்றி விவரித்து எழுதினால் அதனால் அனைவருக்கும் நல்லது.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், மோதலுக்கு காரணம், பிடிவாதமும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமையும். நல்லிணக்கத்துக்கு அடிப்படை மற்றவரின் உணர்வுக்கு மதிப்பளிப்பது.

எனவே நாம் சகோதரர் சில்சாமுக்கு நாம் அவருடைய நண்பர் என்ற முறையிலே கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் தயவு செய்து நல்லிணக்கப் பாதைக்கு, விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு வாருங்கள் என்றார். இந்தக் கோட்பாடு இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று என்பதை சகோ சில்சாமும் நன்கு அறிவார். ஒருவர் ஒரு மைல் தூரம் தன்னுடன் வற்புறுத்தினால் அவனுடன் இரண்டு மைல் தூரம் போ என்றார் இயேசு கிறிஸ்து. இப்போது சகோ சில்சாமாக இருந்தாலும் சரி , அவருடன் வாதத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் சரி மற்றவரை தன்னுடன் வர வற்புறுத்தும் வகையிலேயே வாதத்தில் ஈடுபட்டனர்.

முடிக்கு முன் சகோதரர் சில்சாம் நானும் , கூட்டாஞ்சோறு தளமும் ஜெஹோவாவைத் தூஷிப்பதாகவும் எனவே ஜெஹோவா வுக்கு முக்கியத்துவம் குடுப்பவர்கள் எங்களிடம் வாதிடலாம் என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். சகோ சில்சாம் அவர்களுக்கு நம் தளத்தின் சுட்டியைக் கொடுக்கலாம் , அவர்கள் நம் தளத்திற்கு வந்த வாதாடலாம். ஆனால் நாம் ஜெஹோவாவை நாம் தூஷிக்கிரோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நல்லிணக்க அடிப்படையில் இஸ்ரவேலர்களுடன் சேர்ந்து ஜெஹோவா வழிபாட்டில் பங்கெடுக்க நாம் தயார். உலகில் எல்லோரும் யூதர்களை விரட்டி அடித்த போது, தஞ்சம் கொடுத்தவர்களும் அவர்களைப் படுகொலை செய்தபோது, இந்தியா தன்னிடம் வந்த இஸ்ரேலிய மக்களை கடைசி வரையில் பாதுகாத்து, கண்ணியமாக நடத்தியதோடு அவர்களின் மத வழிபாட்டுக்கும் முழு சுதந்திரம் அளித்தது.

ஆனால் ஜெஹோவா இன அழிப்பு செய்யச் சொல்லி திட்டம் தீட்டிக் கொடுத்து உதவி செய்ததாக தூசனை செய்தது யார்? இதை எல்லாம் நாமா எழுதி வைத்தோம்? ஜெஹோவா ஜோஷ்வாவிடம் சொல்லி சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்கரித்து அவரகளின் இடத்தைப் பிடித்துக் கொள்ள சொன்னதாக எழுதி வைத்து யார்? நாமா இதை எல்லாம் எழுதி வைத்தோம்?

கடவுள் என்றால் அன்பானவர் , உலகில் எல்லோரையும் குழந்தையாக கருதுபவர் என்கிற மக்களின் எண்ணத்துக்கு  மாறாக , கடவுள் என்ற கான்செப்டுக்கே தூஷனையாக இனவாத , இனப் படுகொலையாலராக ஜெஹோவாவை தூசனை பண்ணி எழுதி வைத்து யார்? அது அப்படி தான், அது புனிதம் தான், இப்பவும் அப்படித்தான் பண்ணுவாங்க என்று பிரச்சாரம் செய்பவர்கள் தானே  உண்மையில் ஜெஹோவாவை தூஷிப்பவர்கள்.

எனவே நம்முடைய போராட்டம் கோட்பாடுகளுடன் தான் , இனப் படுகொலை செய்து அந்த இடங்களைப் பிடுங்கி கொள்ளச்  சொல்வது, பிற மத வழிபாட்டுத் தளங்களை இடிக்கச் சொன்னது -இவற்றை எல்லாம் உண்மையில் சொன்னது ஜெஹோவாவா- அவர் பெயரால் இவர்களாக செய்து விட்டு சொல்லி விட்டார்களா என்பது நமக்கு தெரியாது!

இனப் படுகொலையை புனிதப் படுத்தும் , மத வெறியை ஒத்துக் கொள்ளச் சொல்லும் அபாயத்தை  சுட்டிக் காட்டி மக்களை நாகரீகப் பாதைக்கு அழைத்து வர நாம் தயங்க வேண்டியதில்லை. சகோ சில்சாம் அவருடன் கருத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட நண்பர்களுக்கு நம்முடைய தள முகவரியை தரலாம்.

கடைசியாக நாம் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், மத சகிப்புத் தன்மை அழிப்புக்கு எதிரான நம்முடைய நல்லிணக்கப் பாதையைப் புரிந்து கொள்ளாத சில நண்பர்கள், அவர்களின் சகிப்புத் தன்மை அழிப்புக் கோட்பாடுகளை கரை சேர்க்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளுகின்றனர். இந்து மதத்தை தோலுரித்துக் காட்டப் போவதாகவும், வழக்கம் போல .. இது மதம் உண்மை  இல்லாத மதம்.. நான் சொல்லும் மதம் மாத்திரமே உண்மை என்பதாக சொல்லும் மத வெறிப் பாதையில் இறங்கியுள்ளனர்.  இந்து மதம் தான் மத வெறிக்கு குறுக்கே நிற்கிறது என்கிற முடிவுக்கே இவர்கள் வந்து விட்டனர் போலும். இந்து மதம் இருக்கிறவரை இந்தியாவில் மத வெறி விடத்தை முழுமையாகப் பாய்ச்ச முடியாது என்கிற எண்ணம் இவர்களுக்கு வந்து விட்டது போல எழுதுகின்றனர். இந்து மதம் உண்மை அல்ல   என்பதையும் , இவர்கள் சொல்லும் மார்க்கம் உண்மை என்பதையும் சென்னை ஐ. ஐ.டி யில் இவர்கள் நிரூபித்துக் காட்டுவார்களா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இந்து மதத்தைப்  பத்தி எழுதினா, இவங்க மத வெறி பரப்புரையை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயல்பாட்டில் இருந்து ஓடி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு சிறிது நேரம் மகிழ்வதானால் மகிழுங்கள். ஆனால் இந்தியாவில்  மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை நிலை நாட்ட முயலும் முயற்சியை நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: