Thiruchchikkaaran's Blog

இராமரின் கோட்பாடுகளுக்கும் , இயேசுவின் கோட்பாடுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் – பகுதி- 1!

Posted on: March 20, 2011


     

” உன்னுடைய தந்தை எனக்கு இரண்டு வரங்களைத் தருவாதகச்  சொல்லி இருக்கிறார். ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டியது உன்னாலேயே  கூடும். அவற்றை நிறைவேற்றுவதாக நீ வாக்குறுதி அளித்தால் நான் அவற்றை உனக்கு சொல்லுவேன்”  என்றார் கைகேயி இராமனிடம். 

“‘நிச்சயம் நிறைவேற்றுவேன், அவை என்ன என்று தயங்காமல் சொல்லுங்கள்”‘ என்றார் இராமர்.

“பரதன் பாட்டபிசேகம் செய்து கொண்டு அரியணை ஏறி அரசனாக வேண்டும். நீ 14 ஆண்டுகள் காட்டிலே வனவாசம் பூண  வேண்டும், இவையே நான் கேட்ட வரங்கள்”‘ என்றார் கைகேயி.

 முகத்திலே புன் முறுவலுடன் இராமர் பதிலுக்கு ” தாயே, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் அதற்காகவே நான் அதை செய்வேன், இதை நீங்கள் வரமாகக் கோரிப் பெற  அவசியம்  கூட இல்லை”‘ என்றார்.

தன்னுடைய மகன் பரதன் அரியணை ஏற வேண்டும் என்கிற ஆசையில் கைகேயி இராமருக்கு நேர இருக்கும் கஷ்டத்தை இலட்சியம் செய்யவில்லை. ஆனால் இராமரோ மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் இன்னலை ஏற்க தயாராக இருந்தார்.

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரச் சொன்னால் அவனுடன் இரண்டு மைல் தூரம் போ என்றார் இயேசு.

christ-carrying-cross

என்னைப் பின்பற்ற விரும்புகிறவன் தன்னை மறுத்து தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றி வரட்டும் என்றார் இயேசு!

இவ்வாறாக இராமர் எப்படி வாழ்ந்தாரோ அந்தக் கோட்பாடுகளை இயேசு பிரச்சாரம் செய்து இருப்பதை அறியலாம்.

Advertisements

4 Responses to "இராமரின் கோட்பாடுகளுக்கும் , இயேசுவின் கோட்பாடுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் – பகுதி- 1!"

இப்படி எல்லா மதத்திலுள்ள பல நல்ல விஷயங்களை வெளிக்கொணரணும்..

மதங்கள் சரியில்லனு ஒதுக்கிட்டு போய்விட முடியாது.. மனிதத்தனமை சகிப்புத்தன்மை , பொறுமை வளர நல்ல துணை மதம்..

உங்களை போலே எல்லோருடைய கண்ணோட்டமும், ஒப்பிடும் அமைந்து விட்டால் சமய நல்லிணக்கம் சாத்தியமாகும் சகோ திருச்சி அவர்களே.
ஆனால் குதர்க்கவாதிகளுக்கு மாற்றான் வீட்டு மல்லி மட்டும் மணம் இல்லாததாக தான் தெரியும். அவர்களின் அறியாமை நீங்கிட அந்த ராமனும், ஏசுவும் சேர்ந்து அருள் புரியட்டும்

Many thanks for the comments of jmms & Sivanadiyan

இயேசு சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் அவருடைய சிஷ்யர்கள் யார் அவரைப் பின்பற்றுகிறார்கள். எல்லோரும் மேடையில் பிரசங்கம் செய்வதோடு சரி. அத்தனை அயோக்கியத்தனங்களும் செய்கிறார்கள். பின் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ அரசு அதிகாரி லஞ்சம் வாங்குவதில் கெட்டிக்காரர். அதற்காக பல குறுக்குவழிகளை கடைபிடிப்பார். அவர் சொல்லும் ஒரு அற்புத வார்த்தை. என்றைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்று காத்திருப்பேன். அன்று என் பாவத்தை எல்லாம் அறிக்கை செய்துவிடுகிறேன்.
இயேசு காசையோ அப்பத்தையோ பையில் வைத்துக்கொள்ளாதே என்கிறார். இதை பின்பற்றும் ஒரே ஒரு நபரைக் காட்ட முடியுமா?. கிறிஸ்துவினால் தன்னைப் பின்பற்றும் ஒரு சீடனைக் கூட உருவாக்க முடியவில்லையா? ஆனால் இந்து சன்யாசிகள் வாழ்ந்து காட்டுகிறார்கள். தங்களை பின்பற்றக்கூட சொல்வதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: